நடிகர் கமல்ஹாசனுக்கு பிரான்ஸ் நாட்டின் செவாலிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
காவிரியில் இந்து இந்த ஆண்டு தண்ணீர் திறக்காததை எதிர்த்து தமிழக அரசு நாளை உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்ய உள்ளது.
தலைமைச் செயலக வளாகத்தில் போட்டி சட்டசபை கூட்டம் நடத்திய ஸ்டாலின் உள்ளிட்ட 40 எம்எல்ஏக்கள் மீது போலீசார் வழக்கு பதிவு : இதைத் தொடர்ந்து தி.மு.க. தலைவர் கருணாநிதி இல்லத்தில் அவர் தலைமையில் அவசர ஆலோசனை நடைபெற்றது.
இலங்கை கடற்படையால் சிறைப்பிடிக்கப்பட்டு உள்ள தமிழக மீனவர்களின் படகுகளை தற்போது விடுவிக்க இயலாது - இலங்கை அமைச்சர் மகிந்த அமரவீரா.
காஷ்மீரில் நடத்தப்பட்ட என்கவுன்டரில் 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை.
2014ல் நூற்றுக்கணக்கான ராணுவ வீரர்களை கொன்ற ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் 36 பேரை தூக்கிலிட்டது ஈராக் அரசு.
காவல்துறை மானியக்கோரிக்கையில் எதிர்கட்சிகள் பங்கேற்க கூடாது என்பதற்காக திட்டமிட்டு இடைநீக்கம் நாகர்கோவிலில் திருமண விழாவில் முக.ஸ்டாலின் பேச்சு.
துருக்கி நாட்டில் திருமண விழா ஒன்றில் நடந்த தற்கொலைப்படை தாக்குதலில் பலி எண்ணிக்கை 50-ஆக உயர்ந்துள்ளது என காஜியண்டெப் கவர்னர் தகவல்.
ஒகேனக்கலில் 7500கன அடி நீர் வரத்து அதிகரித்ததால் பரிசல் ஓட்ட மாவட்ட நிர்வாகம் தடை விதிப்பு.
தமிழக அரசின் ஆக்கபூர்வமான பணிகளையும் பொதுமக்களிடம் உடனுக்குடன் கொண்டு செல்வதற்கு வசதியாக தமிழக செய்திமக்கள் தொடர்புத் -துறை தனியாக புதிய பேஸ்புக் பக்கம் ஒன்றை தொடங்கியுள்ளது.
தமிழகத்தில் வரும் அக்டோபர் மாதம் நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தல்களுக்கு தேர்தல் நடத்தும் அலுவலர்கள் நியமனம் -மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
அடுத்த 3 ஆண்டில் நாடு முழுவதும் 50 விமான நிலையங்கள் அமைக்கப்படும் - திருச்சி விமான நிலையத்தில் விமான போக்குவரத்து அமைச்சர் கஜபதி ராஜு பேட்டி.
மத்தியபிரதேச மாநிலம் மன்ட்சாரில் பலத்த மழை சாலை வழி பயணங்களையும் தவிர்க்குமாறு வானிலை மையம் எச்சரிக்கை.
சோமாலியா நகரில் அருவேறு இடங்களில் குண்டுவெடித்ததில் சுமார் 10க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
பல்வேறு நிகழ்வுகளில் உயிரிழந்த 14 காவலர்கள் குடும்பங்களுக்கு தமிழக முதல்வர் நிதியுதவி.
திருத்தணி அருகே காவேரிராஜபுரம் கிராமத்தில், மர்ம காய்ச்சலுக்கு நான்கு குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்துள்ள சம்பவத்தை தொடர்ந்து, அப்பகுதிக்கு தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.
பஞ்சாபைச் சேர்ந்த தேசிய அளவிலான கைப்பந்து வீராங்கனை பூஜா. ஒரு காய் வியாபாரியின் மகளான அவர், திடீரென தற்கொலை. தன் பயிற்சியாளரே தற்கொலைக்குக் காரணம் என பிரதமர் நரேந்திர மோடிக்குக் கடைசியாகக் கடிதம் எழுதியுள்ளார் பூஜா.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக