📡🌏காலை செய்திகள்🌏📡
📡🌏24\08\16🌏📡
📡🌏📡🌏📡🌏📡🌏📡🌏📡
http://www.sivakasiteacherkaruppasamy.blogspot.com
🌏🌏🌏🌏🌏🌏🌏🌏🌏🌏🌏
🌏நத்தம் அருகே லாரி கவிழ்ந்து 3 பேர் சாவு
திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகே செவ்வாய்க்கிழமை அதிகாலை லாரி கவிழ்ந்ததில், ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 3 பேர் உயிரிழந்தனர்.
🌏கருணாநிதிக்கு விடுக்கும் சவால் அர்த்தமற்றது
சட்டப்பேரவைக்கு வந்து அமரும் வகையில் திமுக தலைவர் கருணாநிதிக்குப் போதுமான இருக்கை வசதி செய்து கொடுக்காமல், முதல்வர் ஜெயலலிதா சவால் விடுவதில் அர்த்தமில்லை என்று மாநிலங்களவை திமுக குழு தலைவர் கனிமொழி கூறினார்.
🌏இடைநீக்க விவகாரம்: தேவைப்பட்டால் ஆளுநரைச் சந்திப்போம்
திமுக உறுப்பினர்கள் 79 பேர் இடைநீக்கம் செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக தேவைப்பட்டால் ஆளுநர் கே.ரோசய்யாவைச் சந்தித்து முறையிடுவோம் என்று எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
🌏கற்றல் குறைபாடுடைய மாணவர்களுக்கு கருணை அடிப்படையில் தேர்ச்சி: உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல்
கற்றல் குறைபாடுடைய மாணவர்களை கருணை அடிப்படையில் தேர்ச்சி பெற வைக்கலாம் என்று மகாராஷ்டிர மாநில உயர் நிலை மற்றும் மேல்நிலைக் கல்வி வாரியத்துக்கு மும்பை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
🌏ரூ.3,000 கோடி மதிப்பு கடல் உணவை ஏற்றுமதி செய்ய ஒடிஸா இலக்கு
நடப்பு நிதியாண்டில் ரூ.3 ஆயிரம் கோடி மதிப்பிலான கடல் உணவு வகைகளை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய ஒடிஸா அரசு இலக்கு நிர்ணயித்திருக்கிறது.
🌏வெறிநாய்களைக் கொல்ல கேரள அரசு முடிவு
கேரள மாநிலத்தில் வெறிநாய்களின் தொல்லையைக் கட்டுப்படுத்த அவற்றைக் கொல்வதற்கு அந்த மாநில அரசு முடிவு செய்துள்ளது.
கேரளத்தில் 2.5 லட்சம் தெருநாய்கள் இருப்பதாகவும், கடந்த 2015-16-ஆம் ஆண்டில் மட்டும் ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் நாய்க்கடிகளால் பாதிக்கப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த இரு தினங்களுக்கு முன், அந்த மாநிலத்தின் கடலோர கிராமம் ஒன்றில் வெறிநாய்கள் கடித்துக் குதறியதில் 65 வயது முதியவர் ஒருவர் உயிரிழந்தார். அதையடுத்து, திங்கள்கிழமை நடைபெற்ற உயர்நிலைக் கூட்டத்தில் வெறிநாய்களைக் கட்டுப்படுத்துவதற்கு அவசர நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு முதல்வர் பினராயி விஜயன் உத்தரவிட்டார்.
🌏பத்திரிகை அலுவலகத்தில் நிருபர் குத்திக் கொலை
குஜராத்தி நாளிதழ் ஒன்றின் தலைமை நிருபரை பத்திரிகை அலுவலகத்துக்குள் நுழைந்த மர்ம நபர்கள் சிலர் கத்தியால் குத்திக் கொலை செய்தனர். இந்தச் சம்பவத்துக்கு தனிப்பட்ட விரோதம் காரணமாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
🌏பிகார், உ.பி.யில் வெள்ளப்பெருக்கு: 22 பேர் பலி; 23 லட்சம் பேர் பாதிப்பு
பிகாரிலும், உத்தரப் பிரதேசத்திலும் பெய்து வரும் கன மழை காரணமாக கங்கை உள்ளிட்ட நதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. பிகாரில் மழை, வெள்ளத்துக்கு 22 பேர் உயிரிழந்து விட்டனர்.
பிகாரில் தொடர்மழை காரணமாக கங்கை, கோசி, சோனே, புன்புன், பூரி கண்டக், காக்ரா ஆகிய நதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் 23.71 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
🌏காகித ஆலை இயந்திரத்தில் சிக்கி இளைஞர் சாவு
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அருகே காகித ஆலை அரவை இயந்திரத்தில் சிக்கி பிகார் இளைஞர் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார்.
🌏கிரானைட் கற்களை கொட்டி நிலம் ஆக்கிரமிப்பு: பிஆர்பி மீதான வழக்கு மாவட்ட நீதிமன்றத்துக்கு மாற்றம்
கிரானைட் கற்களை கொட்டி நிலத்தை ஆக்கிரமித்தது தொடர்பாக, பிஆர்பி கிரானைட் நிறுவன அதிபர் பழனிச்சாமி உள்ளிட்டோர் மீது தொடுக்கப்பட்ட வழக்கை மதுரை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்துக்கு மாற்றி மேலூர் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.
🌏தூத்துக்குடியில் மத்திய அரசு நிறுவன விஞ்ஞானி தூக்கிட்டுத் தற்கொலை
தூத்துக்குடி அருகே மத்திய அரசு நிறுவனத்தில் பணியாற்றி வந்த உதவி விஞ்ஞானி திங்கள்கிழமை இரவு தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.
🌏மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 9,308 கன அடியாக அதிகரிப்பு
மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு செவ்வாய்க்கிழமை காலை நொடிக்கு 9,308 கன அடியாக அதிகரித்துள்ளது.
கர்நாடக மாநிலத்தில் காவிரியின் நீர்ப் பிடிப்புப் பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக, அங்குள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. கர்நாடக அணைகளின் பாதுகாப்புக் கருதி காவிரியில் தண்ணீர் திறக்கப்படுகிறது. இதனால், திங்கள்கிழமை காலை மேட்டூர் அணைக்கு நொடிக்கு 7,988 கன அடி வீதம் வந்து கொண்டிருந்த நீர்வரத்து, செவ்வாய்க்கிழமை காலை நொடிக்கு 9,308 கன அடியாக அதிகரித்துள்ளது.
🌏95 விளம்பரப் பலகைகள் கட்டுமானத்துடன் அகற்றம்: மாவட்ட ஆட்சியர்
சென்னை மாவட்டத்தில் அனுமதி பெறாமல் வைக்கப்பட்ட 95 விளம்பரப் பலகைகள் கட்டுமானத்துடன் அகற்றப்பட்டுள்ளன என மாவட்ட ஆட்சியர் ரா. அழகுமீனா தெரிவித்துள்ளார்.
🌏தாய், மகளை கழுத்தறுத்து கொன்ற வழக்கில் விவசாயி கைது : மனைவி தூக்கிட்டுத் தற்கொலை
அரக்கோணம் அருகே தாய், மகளை கழுத்தை அறுத்துக் கொன்ற வழக்கில் விவசாயியை போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர். இதையடுத்து அவரது மனைவியான ஆசிரியை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
🌏வங்கி ஏடிஎம் மையத்துக்கு "சீல்': ஒப்பந்தத்தை புதுப்பிக்காததால் ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை
ரயில்வே துறையுடன் செய்துகொண்ட வருடாந்திர ஓப்பந்தத்தை புதுப்பிக்காததால் அரக்கோணம் ரயில் நிலைய வளாகத்தில் உள்ள ஸ்டேட் வங்கியின் ஏடிஎம் மையத்தை ரயில்வே நிர்வாகம் பூட்டி "சீல்' வைத்தது.
🌏கல்வி உதவித் தொகையை விரைந்து வழங்க வேண்டும்: கிறிஸ்துதாஸ் காந்தி
பட்டியல் இன மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகையை விரைந்து வழங்க வேண்டும் என்று அம்பேத்கர் கல்வி நூற்றாண்டு இயக்கத்தின் நிறுவனர் கிறிஸ்துதாஸ் காந்தி கூறினார்.
🌏44 காவல் துணைக் கண்காணிப்பாளர் பணியிட மாற்றம்: டி.ஜி.பி. உத்தரவு
தமிழக காவல்துறையில் 44 காவல் துணைக் கண்காணிப்பாளர்களைப் பணியிட மாற்றம் செய்து டி.ஜி.பி. அசோக்குமார் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டார்.
இது குறித்த உத்தரவு:
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி, தமிழக காவல்துறையில் அனைத்து நிலைகளிலும் இருந்த அதிகாரிகள் கடந்த மார்ச் மாதம் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். சட்டப்பேரவைத் தேர்தல் முடிந்த பின்னர், இந்த
அதிகாரிகள் படிப்படியாக மீண்டும் பணியிட மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர்.
இதில் ஐ.பி.எஸ். அதிகாரிகள் பெரும்பாலனோர் மீண்டும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுவிட்ட நிலையில், அதற்கு கீழ் நிலையில் உள்ள அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்படாமல் இருந்தனர்.
இந்தநிலையில் தமிழக காவல்துறையில் பணியாற்றும் 44 காவல் துணைக் கண்காணிப்பாளர்களை பணியிட மாற்றம் செய்து சட்டம் மற்றும் ஒழுங்கு டி.ஜி.பி.அசோக்குமார் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டார். இவர்களில் பெரும்பாலனோர் விருப்பத்தின் அடிப்படையிலும், சிலர் நிர்வாக வசதிக்காகவும் பணியிட மாறுதல் செய்யப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.
🌏கமல்ஹாசனுக்கு செவாலியே விருது: பொன்.ராதாகிருஷ்ணன் வாழ்த்து
செவாலியே விருது பெற்ற கமல்ஹாசனுக்கு மத்திய சலை, நெடுஞ்சாலை, கப்பல் போக்குவரத்து துறை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
🌏தனியார் மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கையில் சிக்கல்
தனியார் மருத்துவக் கல்லூரிகள், நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களின் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களில் மாணவர்களைச் சேர்ப்பதில் தொடர்ந்து சிக்கல் நீடித்து வருகிறது. இதன் காரணமாக தனியார் கல்லூரி நிர்வாகங்களும், மாணவர்களும், பெற்றோர்களும் பெரும் குழப்பத்தில் உள்ளனர்.
🌏சென்னைப் பல்கலை. ஒருங்கிணைப்புக் குழுவில் இடம் பெற வாய்ப்பு மறுப்பு: பேராசிரியர்கள் கடும் அதிருப்தி
சென்னைப் பல்கலைக்கழகத்தை நிர்வகித்து வரும் ஒருங்கிணைப்புக் குழுவில் இடம் பெற தங்களுக்குத் தொடர்ந்து வாய்ப்பு மறுக்கப்பட்டு வருவதால், பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.
🌏கோயில் திருவிழா: வேளாங்கண்ணிக்கு சிறப்பு ரயில்
வேளாங்கண்ணி மாதாக் கோயில் திருவிழாவை முன்னிட்டு சென்னை எழும்பூர், திருநெல்வேலி, திருவனந்தபுரத்தில் இருந்து சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
சென்னை எழும்பூர் - வேளாங்கண்ணி:
ரயில் எண் 06003:
செப்டம்பர் 5-ஆம் தேதி சென்னை எழும்பூரில் இருந்து இரவு 10.45 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 6.45 மணிக்கு வேளாங்கண்ணி சென்றடையும்.
ரயில் எண் 06004:
செப்டம்பர் 6-ஆம் தேதி வேளாங்கண்ணியில் இருந்து இரவு 10.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 7.20 மணிக்கு சென்னை எழும்பூர் வந்தடையும்.
இந்த ரயில் தாம்பரம், செங்கல்பட்டு, விழுப்புரம், திருப்பாதிரிப்புலியூர், சிதம்பரம், சீர்காழி, மயிலாடுதுறை, திருவாரூர், நாகப்பட்டினம் ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.
திருநெல்வேலி - வேளாங்கண்ணி சிறப்பு ரயில்
ரயில் எண் 06006:
செப்டம்பர் 4-ஆம் தேதி திருநெல்வேலியில் இருந்து பிற்பகல் 3.25 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 3.15 மணிக்கு வேளாங்கண்ணி சென்றடையும்.
ரயில் எண் 06005:
செப்டம்பர் 5-ஆம் தேதி வேளாங்கண்ணியில் இருந்து மாலை 5 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 4.35 மணிக்கு திருநெல்வேலி சென்றடையும்.
இந்த ரயில் வாஞ்சி மணியாச்சி, கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், அருப்புக்கோட்டை, மானாமதுரை, சிவகங்கை, தேவக்கோட்டை, காரைக்குடி, புதுக்கோட்டை, திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.
திருவனந்தபுரம் - வேளாங்கண்ணி சிறப்பு ரயில்
ரயில் எண் 06008: செப்டம்பர் 4-ஆம் தேதி திருவனந்தபுரத்தில் இருந்து இரவு 10.45 மணிக்கு புறப்பட்டு மறுநாள் பிற்பகல் 2 மணிக்கு வேளாங்கண்ணி சென்றடையும்.
ரயில் எண் 06007:
செப்டம்பர் 5-ஆம் தேதி வேளாங்கண்ணியில் இருந்து மாலை 6.15 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 7.30 மணிக்கு திருவனந்தபுரம் சென்றடையும். இந்த ரயில் நெய்யாத்தங்கரை, குழித்துறை, இரனியல், நாகர்கோயில், திருநெல்வேலி, வாஞ்சி மணியாச்சி, கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.
🌏நீதிபதிகள் நியமன விவகாரம்: தீவிரமடைகிறது நீதித் துறை - மத்திய அரசு மோதல்
நாடு முழுவதும் உயர் நீதிமன்றங்கள், உச்ச நீதிமன்றம் ஆகியவற்றில் நீதிபதிகளை நியமிக்கும் விவகாரத்தில் நீதித் துறைக்கும் மத்திய அரசுக்கும் இடையே நீடித்து வரும் பனிப்போர் தற்போது தீவிரம் அடைந்து வருகிறது.
🌏குஜராத் பேரவையில் அமளி: 50 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் இடைநீக்கம்
குஜராத் மாநில சட்டப்பேரவையில், தலித் விவகாரத்தை முன்னிறுத்தி அமளியில் ஈடுபட்ட காங்கிரஸ் எம்எல்ஏ-க்கள் 50 பேரை பேரவைத் தலைவர் ரமண்லால் வோரா செவ்வாய்க்கிழமை இடைநீக்கம் செய்தார்
🌏4 ஆண்டு ஒருங்கிணைந்த பி.எட். படிப்பு: முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு
நான்காண்டு ஒருங்கிணைந்த பி.எட்., படிப்பு அறிமுகப்படுத்தப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.
🌏வடகொரியா மீண்டும் அட்டூழியம்:நீர்மூழ்கி கப்பலில் ஏவுகணை சோதனை நடத்தியது
சீயோல்: கடலுக்கு அடியில் நீர்மூழ்கிகப்பல் மூலம் ஏவுகணை சோதனையை வடகொரியா நடத்தியுள்ளது. வடகொரியா அவ்வப்போது ஏவுகணை சோதனை மற்றும் அணு சோதனையை நடத்தி வருகிறது. இதற்கு ஐ.நா. கடும் கண்டனம் தெரிவித்தும் பொருளாதார தடை விதித்தும் வருகிறது.இந்நிலையில் தென்கொரிய எல்லையில் சின்போ என்ற வடக்கு கடற்கரை பகுதியில் கடலுக்கு அடியில் நீர்மூழ்கி கப்பல் மூலம் ஏவுகணையை ஏவி சோதனை நடத்தியதாக வடகொரியா ராணுவம் செய்தி வெளியிட்டுள்ளது.அந்நாட்டு நேரப்படி அதிகாலை 5.30 மணியளவில் இந்த சோதனையை வடகொரியா நடத்தியுள்ளது.
🌏சுங்கச்சாவடி கட்டணத்தை குறைக்க மத்திய அரசுக்கு தமிழகம் அழுத்தம் கொடுக்க வேண்டும்
சென்னை : தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் கட்டணம் உயர்த்தப்படாமல் இருந்த 21 சுங்கச்சாவடிகளுக்கு வரும் செப்டம்பர் மாதம் முதல் கட்டணத்தை உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இது மிகவும் கண்டிக்கத்தக்கது. சுங்கச்சாவடிகளில் கட்டண வசூலின் போது ஏற்படும் பிரச்னைகளால் பயணிகள் அவதிப்படுவதோடு, சரக்குகளும் உரிய நேரத்தில் சென்றடைவதில்லை.
எனவே, மத்திய அரசு உடனடியாக நாட்டில் உள்ள அனைத்துச் சுங்கச்சாவடிகளிலும் கட்டணம் வசூல் செய்யப்படும் முறையை அடியோடு நிறுத்த வேண்டும். மேலும் காலாவதியாகியுள்ள சுங்கச்சாவடிகளை காலம் தாழ்த்தாமல் அகற்றிட வேண்டும். தமிழகத்தில் வரும் செப்டம்பர் மாதம் சுங்கக்கட்டணத்தை உயர்த்துவதாக முடிவெடுத்திருப்பதை திரும்ப பெற வேண்டும்.
தமிழகத்தில் உள்ள சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூல் செய்யக்கூடாது என்பதை மத்திய அரசுக்கு தமிழக அரசு அழுத்தம் கொடுத்து தெரிவிக்க வேண்டும். இல்லையென்றால் தமிழக அரசே சுங்கக்கட்டணத்தை ஏற்க முன்வர வேண்டும்.
🌏கெல்லீசில் பரபரப்பு சிறார் இல்லத்தில் மீண்டும் பயங்கர மோதல்
சென்னை : சென்னை கெல்லீசில் உள்ள சிறார் இல்லத்தில் நேற்றிரவு மீண்டும் பயங்கர மோதல் ஏற்பட்டது. இதில் 11 இளம் குற்றவாளிகள் படுகாயம் அடைந்தனர்.
🌏டெல்லியில் வீட்டில் தீ விபத்து: தீயை அணைக்கும் முயற்சியில் வீரர்கள்
புதுடெல்லி: டெல்லியில், ஹவுஸ்காஸ் என்னும் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு மூன்று தீயணைப்பு வண்டிகளுடன் விரைந்து வந்த வீரர்கள் தீயை அணை
🌏ஜம்மு-காஷ்மீரில் இராணுவத்தினரால் நடத்தப்பட்ட மருத்துவ முகாம்
ஜம்மு-காஷ்மீர்: ஜம்மு-காஷ்மீர் மாநிலம், பூஞ்ச்சில் உள்ள உள்ளூர் மக்களுக்காக இந்திய இராணுவத்தினரால் மருத்துவ முகாம் நடத்தப்பட்டது. இந்த முகாமில் 600க்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டனர்.
🌏செல்போனில் உடைமாற்றும் காட்சி: பெண் டாக்டர் அதிர்ச்சி
பெண் டாக்டர்கள் உடைமாற்றும் அறையில் ரகசியமாக செல்போன் வைத்து வீடியோ எடுத்த வார்டுபாய் கைது செய்யப்பட்டுள்ளார்.
🌏ஓடும் காரில் பெண் ராணுவ அதிகாரி பலாத்காரம்; 4 பேருக்கு ஆயுள் தண்டனை அவுரங்காபாத் மோக்கா கோர்ட்
ராணுவத்தில் உயர் அதிகாரியாக பணியாற்றி வரும் பெண் ஒருவர், கடந்த 2010-ம் ஆண்டு ஏப்ரலில் தன்னுடைய கணவர் மற்றும் வீட்டு வேலைக்கார பெண்ணுடன் புனேயில் இருந்து பீட் மாவட்டம் பார்லியில் உள்ள கோவிலுக்கு காரில் சென்றார். அவர்களை பின்தொடர்ந்து வந்த கார் ஒன்று முன்னேறி சென்று வழிமறித்ததும் அதிர்ச்சி அடைந்தனர். காரில் வந்த 4 பேர் கொண்ட கும்பல், ராணுவ அதிகாரியும், அவரது வேலைக்கார பெண்ணும் அணிந்திருந்த தங்க நகைகளை கொள்ளையடித்தனர். தடுக்க வந்த அவரது கணவரை கண்மூடித்தனமாக தாக்கினர். பின்னர், தாங்கள் வந்த காரில், அந்த பெண் அதிகாரியை கடத்திச் சென்றனர்.
மேலும், ஓடும் காரில் வைத்து அவரை பாலியல் பலாத்காரம் செய்தனர். பின்னர், அவரை நிர்வாண கோலத்தில் சாலையில் போட்டு விட்டு தப்பிவிட்டனர்.
இந்த சம்பவம் குறித்து அகமத்நகர் மற்றும் பீட் மாவட்ட போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி, மறுநாளே இதற்கு காரணமான 4 பேரையும் கைது செய்தனர். வழக்கை விசாரித்த அவுரங்காபாத் மோக்கா கோர்ட் நீதிபதி எஸ்.எஸ்.கோசவி சமீபத்தில் தீர்ப்பு அளித்துள்ளார்.
ராணுவ பெண் அதிகாரியை கடத்தி கற்பழித்த குற்றத்துக்காக தீபக் (வயது 22), அபய் போரே (23), விஜய் (25) மற்றும் சுனில் (24) ஆகிய 4 பேருக்கும் ஆயுள் தண்டனையும், நகைகளை கொள்ளையடித்த குற்றத்துக்காக தலா ரூ.1 லட்சத்து 5 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பு கூறினார். இதைத்தொடர்ந்து, அவர்கள் ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.
🌏முன்னாள் துணைவேந்தர் கைது
கோவை அண்ணா பல்கலைக்கழகத்தின் முதல் துணைவேந்தராக ராதாகிருஷ்ணன் கடந்த 2008-2009-ம் ஆண்டு பதவி வகித்தார். அப்போது பல்கலைக்கழக வகுப்பறைகளுக்கு மேஜை, நாற்காலி வாங்க ஒப்புதல் அளிக்க ராதாகிருஷ்ணன் ரூ.40 ஆயிரம் லஞ்சம் கேட்பதாக லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்யப்பட்டது. இதையடுத்து கவர்னரிடம் அனுமதி பெற்று ராதாகிருஷ்ணன் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
🌏கலைஞர் சட்டமன்றம் செல்ல வேண்டும்: தமிழிசை சவுந்தரராஜன் பேட்டி
கலைஞர் சட்டமன்றம் செல்ல வேண்டும்: தமிழிசை சவுந்தரராஜன் பேட்டி
ஜெயலலிதாவின் சவாலுக்காக அல்ல. அனுபவசாலியான கலைஞர் சட்டமன்றத்துக்கு சென்று தங்கள் கட்சியினருக்கு வழிகாட்டுவது மட்டுமின்றி மக்களுக்கான சேவையை அவர் செய்ய வேண்டும் என்று தமிழக பா.ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.
🌏தாவூத் பாகிஸ்தானில் தான் உள்ளார்..! - இந்திய ஆதாரங்களை உறுதி செய்தது ஐ.நா.
நியூ யார்க்: மும்பை தொடர் குண்டு வெடிப்பில் முக்கியக் குற்றவாளியான நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிம், பாகிஸ்தானில் வசித்து வருவதாக இந்தியா அளித்த தகவல்களை ஐ.நா. அமைப்பு உறுதி செய்துள்ளது.
🌏2 நாள் பயணமாக ராஜ்நாத் சிங் இன்று காஷ்மீர் பயணம்: பதற்றத்தை தணிக்க மத்திய அரசு நடவடிக்கை
காஷ்மீருக்கு 2 நாள் பயணமாக செல்லும் ராஜ்நாத் சிங், அங்கு தொடரும் பதற்றத்தை தணிக்க பல்வேறு தரப்பினருடன் பேச்சுவார்த்தை நடத்துகிறார்.
🌏இருக்கை வசதி செய்யாமல் கருணாநிதிக்கு சவால் விடுவதா? - கனிமொழி
சென்னை: சட்டப்பேரவைக்கு வந்து அமரும் வகையில் திமுக தலைவர் கருணாநிதிக்குப் போதுமான இருக்கை வசதி செய்து கொடுக்காமல், முதல்வர் ஜெயலலிதா சவால் விடுவதில் அர்த்தமில்லை என்று கனிமொழி எம்.பி. தெரிவித்து உள்ளார்.
🌏தேசிய கீதம் பாடும்போது முதல்வருடன் செல்ஃபி எடுத்த காங்கிரஸ் பிரமுகர்
புதுச்சேரியில், பள்ளியில் நடந்த நிகழ்வில் தேசிய கீதம் பாடப்பட்டபோது முதல்வர் நாராயணசாமியுடன் இணைந்து காங்கிரஸ் பிரமுகர் செல்ஃபி (கைப்படம்) எடுத்ததால் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
🌏டெல்லியில் சிக்கன்குனியா, டெங்குவால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் உயர்வு
புதுடெல்லி: டெல்லியில் சிக்கன்குனியா மற்றும் டெங்குவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை கடந்த இரண்டு மாதங்களாக உயர்ந்துள்ளது. இதனையடுத்து மருத்துவமனைகளில் அனைத்து வசதிகளும் மற்றும் ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது என்று எம்ய்ஸ் மருத்துவர் ஒருவர் கூறியுள்ளார்.
🌏தாய்லாந்தில் கார் குண்டு வெடிப்பு: ஒருவர் பலி
தாய்லாந்த்: தாய்லாந்தில் உணவகத்திற்கு வெளியே நின்றுகொண்டிருந்த காரில் இருந்து குண்டு வெடித்ததில் ஒருவர் உயிரிழந்தார்
🌏ரியோவில் இருந்து நாடு திரும்பிய சாக்ஷி மாலிக்கு உற்சாக வரவேற்பு
புதுடெல்லி: ரியோவில் இருந்து நாடு திரும்பிய சாக்ஷி மாலிக்கு டெல்லி விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
🌏காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் அடுத்த மாம்பாக்கம் பகுதியில் லாரியும் தனியார் தொழிற்சாலை வேனும் நேருக்கு நேர் மோதி விபத்து வேனில் வந்த 20-பெண் தொழிலாளர்கள் படுகாயம் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதி இரவு பணியை முடித்து பெண் தொழிலாளர்கள் வீடு திரும்பும் போது விபத்து நடந்ததாக தகவல்.
🌏காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தனியார் தொழிற்சாலை நிறுவனங்களில் காவலாளிகள் ஓய்வூ எடுக்கும் நேரத்தை பயன்படுத்தி திருட முயன்ற தூத்துக்குடி மற்றும் அரியலூர் மாவட்டங்களை சேர்ந்த, ரவிசந்திரன், மணிவண்ணன், லோகநாதன், ஆகிய மூன்று பேர் கைது - ஒரகடம் காவல் துறையினர் நடவடிக்கை
🌏வேலூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த மாதனூர் தேசிய நெடு்ஞ்சலையில் மேபாலம்த்தில் அரசு பஸ் மீது கண்டெய்னர் லாரி மோதி விபத்து 10க்கும் மேற்பட்டோர் படுகாயம் லாரி தடுப்பு சுவர் உடைத்து கொண்டு மேபாலத்தில் இருந்து லாரி கவிழ்ந்தில் போக்குவரத்து பதிப்பு.
🌏டெல்லியில் 7 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்: 3 பேர் கைது
புதுடெல்லியில் உள்ள மாண்டவளி பகுதியில் 7 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார். பலாத்காரத்தால் பாதிக்கப்பட்ட சிறுமியை மீட்பு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளது. சிறுமியை பலாத்காரம் செய்த 3 பேர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
🌏மியான்மரில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 5.5 ஆக பதிவு
மியான்மர்-இந்திய எல்லைப் பகுதியில் நிலநடுக்கம் உணரப்பட்டது. இன்று காலை 7.11 மணிக்கு உணரப்பட்ட நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 5.5 ஆக பதிவாகியுள்ளது.
🌏ஆளும்கட்சி அறைகூவல், காவல்துறை கண்டிப்புக்கு பயப்படுகிற கட்சி திமுக அல்ல என்று தமிழக சட்டமன்றத்தில் ஜனநாயகம் படும்பாடு கண்டன பொதுக்கூட்டத்தில் திமுக தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.
🌏தங்கம் விலை பவுனுக்கு ரூ. 56 உயர்வு
சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை செவ்வாய்க்கிழமை பவுனுக்கு ரூ.56 அதிகரித்து, ரூ.23,872-க்கு விற்பனையானது.
சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள மாற்றத்தின் காரணமாக தங்கம்,
செவ்வாய்க்கிழமை
விலை நிலவரம் (ரூபாயில்)
ஒரு கிராம் தங்கம் 2,984
ஒரு பவுன் தங்கம் 23,872
ஒரு கிராம் வெள்ளி 49.10
ஒரு கிலோ வெள்ளி 45,890
🌏🌏🌏🌏🌏🌏🌏🌏🌏🌏🌏
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக