28/08/2016 இரவு செய்திகள் - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

28/08/2016 இரவு செய்திகள்

      

📻📡📻📡📻📡📻📡📻📡📻

📻📻📻📻📻📻📻📻📻📻📻

📻காரணைப்
புதுச்சேரியில் காயங்களுடன் இறந்து கிடந்த புள்ளி மான்: மீண்டும் சிறுத்தை நடமாட்டம்? மக்கள் பீதி

கூடுவாஞ்சேரி: காரணைப்புதுச்சேரியில் ரத்தக்காயங்களுடன் புள்ளிமான் இறந்துகிடந்தது. சிறுத்தை அடித்துக்கொன்றிருக்கலாம் என்பதால் மக்கள் பீதி அடைந்துள்ளனர். 

www.sivakasiteacherkaruppasamy.com

📻அடையாறு மேம்பாலம் மீது மோதி டேங்கர் லாரி கவிழ்ந்து விபத்து

வேளச்சேரி: அடையாறு மேம்பாலம் மீது டேங்கர் லாரி மோதி கவிழ்ந்தது. லாரியிலிருந்து ஆயில் கொட்டியதால் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சென்னை தண்டையார்பேட்டையை சேர்ந்தவர் வரதராஜன் (38). இவர், மேடவாக்கத்தை அடுத்த சித்தாலப்பாக்கத்தில் தனியார் ஆயில் கம்பெனியில் டேங்கர் லாரி டிரைவராகப் பணியாற்றி வருகிறார். இந்நிலையில், துறைமுகத்தில் இருந்து சுத்திகரிக்கப்படாத ஆயிலை இன்று விடியற்காலை 3 மணியளவில் டேங்கர் லாரியில் ஏற்றிக்கொண்டு மேடவாக்கம் நோக்கி கிளீனருடன் வரதராஜன் சென்று கொண்டிருந்தார்.

அடையாறு மலர் மருத்துவமனை அருகே அதிகாலை 4 மணிக்கு லாரி வந்தபோது, பின்னால் வந்த பைக் குறுக்கே புகுந்தது.

இதில் வரதராஜன் நிலைதடுமாறினார். அப்போது, அவரது கட்டுப்பாட்டை இழந்து மேம்பால தடுப்பின் மீது லாரி பயங்கரமாக மோதி தலைக்குப்புற கவிழ்ந்தது. இதனால் டேங்கர் லாரியில் ஏற்றி வந்த சுத்திகரிக்கப்படாத ஆயில் சாலை முழுவதும் கொட்டி பரவியது. வரதராஜனும் கிளீனரும் லேசான காயத்துடன் தப்பினர். 

📻செல்பியால் விபரீதம்: ஏரியில் மூழ்கி 3 மாணவிகள் பலி

மலேகான்: மகாராஷ்டிராவில் ஏரிக்கரையில் நின்று செல்பி எடுத்தபோது, ஏரியில் தவறி விழுந்து பள்ளி மாணவிகள் 3 பேர் நீரில் மூழ்கி பலியாகினர். 

📻இமாச்சலில் கார் பள்ளத்தில் விழுந்து விபத்து: 4 பேர் பலி

சிம்லா: இமாச்சலப் பிரதேச மாநிலம் சிம்லாவில உள்ள மண்டி என்ற பகுதியில் மலைப்பாதையில் சென்ற கார், சாலையை விட்டு விலகி 150மீ உயர பள்ளத்தில் விழுந்ததில் காரில் பயணம் செய்த 4 பேர் உயிரிழந்தனர்.

📻பெரியகுளத்தில் பரவும் டெங்கு: 8 வயது சிறுமி மருத்துவமனையில் அனுமதி

பெரியகுளம்: பெரியகுளம் ஸ்டேட் பேங்க் காலனியில் டெங்குவால் பாதிக்கப்பட்ட சிறுமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்

📻பெரியமேடு போலீஸ் நிலையத்தில் கமிஷனர் டி.கே.ராஜேந்திரன் திடீர் ஆய்வு

சென்னை போலீஸ் கமிஷனர் டி.கே.ராஜேந்திரன் ரகசியமாக சென்று போலீசாரின் ரோந்து பணியையும், திடீரென்று போலீஸ் நிலையங்களுக்கு சென்று போலீசாரின் நடவடிக்கையையும் பார்வையிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார்.

இந்நிலையில் கமிஷனர் டி.கே.ராஜேந்திரன் நேற்று காலை 9.45 மணியளவில் பெரியமேடு போலீஸ் நிலையத்துக்கு சென்றார். அங்குள்ள அறைகள், சுற்றுப்புற பகுதிகளை பார்வையிட்டார். போலீஸ் நிலையத்தில் பதிவான வழக்குகளை பார்வையிட்டு, அவற்றின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்தார்.

📻கோடாலியால் வெட்டி மனைவி, மகன் கொலை: கணவர் கைது

கோடாலியால் வெட்டி மனைவி, மகனை கொலை செய்த நபரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

கர்நாடக மாநிலம் சிக்பள்ளாபூரு மாவட்டம் 

📻நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பட்டா கோரி போராட்டம்

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குடியேறி 10 பேர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இலங்கையில் இருந்து தாயகம் திரும்பியோரின் 33 வீட்டுமனைப் பட்டா ரத்தானது. இதனையடுத்து வீட்டுமனைப் பட்டாவை மீண்டும் வழங்கக்கோரி தாயகம் திரும்பியோர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

📻ரூ.50 லட்சம் நிதி: அரியானா அமைச்சரால் சர்ச்சை

சண்டிகர்: டேரா சச்சா சவுதா அமைப்பிற்கு ரூ.50 லட்சம் வழங்கிய அரியானா மாநில அமைச்சர் அனில் விஜ் நடவடிக்கை காரணமாக சர்ச்சை கிளம்பியுள்ளது.

📻பட்டுக்கோட்டையில் போலீஸ் நிலையத்தில் கைதி மர்ம மரணம்

தஞ்சை மாவட்டம் பேராவூரணி அருகே உள்ள ஏனாதி கரம்பை பகுதியை சேர்ந்தவர் ரவிக்காந்தி (37). இவரை கடந்த 26-ந் தேதி திருட்டு வழக்கு தொடர்பாக பேராவூரணி போலீசார் விசாரணைக்கு அழைத்து சென்றனர்.

இந்த நிலையில் நேற்று இரவு பட்டுக்கோட்டைக்கு கொண்டு வரப்பட்டு போலீஸ் நிலையத்தில் அடைக்கப்பட்டு இருந்தார். இன்று காலை அவர் மர்மமான முறையில் இறந்தார். இதனால் ரவிக்காந்தி உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் போலீசார் அடித்ததால் தான் இறந்ததாக குற்றம் சாட்டினர்.

www.sivakasiteacherkaruppasamy.com
📻திருத்துறைப்பூண்டியில் சித்தராமையா உருவ பொம்மை எரிக்க முயற்சி

திருத்துறைப்பூண்டி அண்ணா சாலை அருகில் தமிழக தேவேந்திர குல மக்கள் எழுச்சி இயக்கத்தின் மாநில தலைவர் சிங்கை சரவணசோழன் தலைமையில் கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா உருவ பொம்மை எரிக்க முயற்சி செய்தனர்.

அதற்குள் பாதுகாப்புக்கு நின்ற திருத்துறைப்பூண்டி இன்ஸ்பெக்டர் அமுதாராணி, சப்-இன்ஸ்பெக்டர் ராமராஜ் மற்றும் ராஜ்குமார் உள்ளிட்டோர் உருவ பொம்மை எரிக்க விடாமல் தடுத்து 10-க்கும் மேற்பட்டடோரை கைது செய்தனர்.

📻மர்மக் காய்ச்சலால் மேலும் ஒரு சிறுவன் பலி

திருவள்ளூர் மாவட்டத்தில் மர்மக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட மேலும் ஒரு சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

திருவள்ளூர் மாவட்டம் பொதட்டூர்பேட்டையைச் சேர்ந்த தேவன் என்பவரது மகன் சீனிவாசன் மர்மக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டார். அப்பகுதி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அச்சிறுவனுக்கு, காய்ச்சல் குணமாகாததால் திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

மேலும், காய்ச்சல் தீவிரமடைந்ததால் சீனிவாசன் மேல்சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

இந்நிலையில், சிகிச்சை பலனின்றி சிறுவன் சீனிவாசன் உயிரிழந்தார். 

📻ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகள்-பாதுகாப்பு படையினர் இடையே துப்பாக்கிச்சண்டை

பாரமுல்லா: ஜம்மு காஷ்மீர் மாநிலம் பாரமுல்லா மாவட்டத்தில் உள்ள சுல்தான் போரா பகுதியில் தீவிரவாதிகளுக்கும்-பாதுகாப்பு படையினருக்கும் இடையே கடும் துப்பாக்கிச்சண்டை நடைபெற்று வருகிறது. ஒன்று அல்லது 2 தீவிரவாதிகள் மறைந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

📻இந்திய அணி 'பவுலிங்'

லாடர்ஹில்: வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான இரண்டாவது 'டுவென்டி-20'யில் இந்திய அணி 'பவுலிங்' செய்கிறது.

இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் அணிகள் அமெரிக்காவில் இரண்டு போட்டிகள் கொண்ட 'டுவென்டி-20' தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டியில் இந்திய அணி வீழ்ந்தது. இரு அணிகள் மோதும் 2வது போட்டி இன்று நடக்கிறது. 'டாஸ்' வென்ற இந்திய அணி கேப்டன் தோனி 'பவுலிங்' தேர்வு செய்தார்.

📻நண்பர்களின் மது விருந்து கொலையில் முடிந்தது!

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் போலீஸ் லிமிட்டில் உள்ளது சுங்கபுரம். இந்த கிராமத்தை சேர்ந்தவர் நாகராஜன். இவருடையை நண்பன் பாலாஜி. நாகராஜ் லாரி டிரைவராகவும், பாலாஜி அதே லாரியில் கிளீனராகவும் இருந்து வருகிறார். நேற்று நாகராஜ் வீட்டில் மதுவிருந்துக்கு ஏற்பாடு செய்து நாகராஜுடன் பாலாஜியும் சேர்ந்து மது அருந்தினார். போதையில் இருவருக்கு வாக்கும்வாதம் ஏற்பட்டது. அது கைகலப்பாக மாறியது. அக்கம் பக்கத்து வீட்டினர் இருவரின் சண்டையை சமாதானம் செய்து இருவரையும் பிரித்து வைத்தனர். ஆனாலும் ஆவேசம் அடங்காத நாகராஜ், பாலாஜியை வெட்டியே தீருவது என்று அரிவாளுடன் விடிய விடிய அலைந்தார்.

அதே ஊர் பெருமாள் கோவில் எதிரே பாலாஜி நின்றுகொண்டிருந்தார். அப்போது பாலாஜியை நோக்கி நாகராஜ் ஆவேசமாக அரிவாளுடன் சென்றார். ஆனால், அரிவாளைப்பிடுங்கி நாகராஜை வெட்டினார் பாலாஜி. இதில் நாகராஜ் பலியானார். நாகராஜ் தாயார் முத்துலட்சுமி புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து தலைமறைவாக இருந்த பாலாஜியை கைது செய்தனர்.

நண்பனையே ஏன் கொன்றாய் என்று போலீசார் கேட்டதற்கு, ''நாகராஜ் காதலித்து வந்த பெண் திடீரென்று ஒருநாள் இறந்துபோனார். இதற்கு காரணம் நாகராஜ் என்று அந்த பெண்ணின் குடும்பத்தார் கருதுகின்றனர். அந்தப்பெண்ணின் உறவுப்பெண்ணை நான் காதலித்து வந்தேன். நாகராஜ் நண்பன் என்பதால் எனக்கு பெண் தர மறுத்தனர். இதை மது அருந்தியபோது பேசிக்கொண்டிருந்தபோது தான் பிரச்சனை வந்தது'' என்றான்.

📻ஆத்தூர் அருகே கார் மோதி மனைவி கண் முன்னே கணவன் பலி

ஆத்தூர்: இருசக்கர வாகனம் மீது கார் மோதி விபத்திற்குள்ளானதில் மனைவி கண் முன்னே கணவர் உயிரிழந்தார். இந்த விபத்தில் 2 பேர் காயமடைந்தனர். ஆத்தூர்-கள்ளக்குறிச்சி சாலையில் சாமியார் கிணற்றில் இருசக்கர வாகனம் மீது கார் மோதி விபத்தில் சிக்கியது.

📻ஹெல்மெட் போடாமல் வேன் ஓட்டியதால் வழக்கு!

திண்டுக்கல்: சரக்கு வேன் ஓட்டி வந்த ஓட்டுநர் மீது ஹெல்மெட் போடவில்லை என திண்டுக்கல் போலீஸ் வழக்கு பதிந்துள்ளது. கரூர் மாவட்டம் காந்தி கிராமத்தைச் சேர்ந்த முத்துச்செல்வன் வேனில் திண்டுக்கல் சென்றார். வேனை மடக்கிய எரியோடு போலீசார் ஹெல்மெட் போடவில்லை என முத்துச்செல்வன் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். 

📻தகனம் செய்யும்போது தேனீக்கள் கொட்டியதால் சடலத்தை போட்டுவிட்டு அலறியடித்து ஓட்டம்: 25 பேர் படுகாயம்

திருப்பத்தூர்: வாணியம்பாடி அருகே சடலத்தை தகனம் செய்யும்போது தேனீக்கள் கொட்டி தீயணைப்பு வீரர்கள் உட்பட 25 பேர் படுகாயம் அடைந்தனர். 

📻பலி எண்ணிக்கை 68 ஆக உயர்வு: காஷ்மீரில் 50 நாட்களாக தொடரும் வன்முறை

ஸ்ரீநகர்: காஷ்மீரில் 50 நாட்களாக வன்முறை தொடர்கிறது. நேற்று நடந்த கலவரத்தில் வாலிபர் ஒருவர் உயிரிழந்தார். இதையடுத்து பலியானோர் எண்ணிக்கை 68 ஆக உயர்ந்துள்ளது. 

📻தமிழ்முரசு செய்தி எதிரொலி: சாலை தடுப்பில் தூண்கள் அமைப்பு

ஊத்துக்கோட்டை: தமிழ் முரசு செய்தி காரணமாக சாலை தடுப்புச்சுவர் உடைந்த பகுதியில் தூண்கள் அமைக்கப்பட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டையில் இருந்து ஜனப்பசத்திரம் முதல் சூளைமேனி வரை 4 வழிச்சாலை அமைக்கப்பட்டுள்ளது. இதன் நடுவில் தடுப்புச்சுவர் உள்ளது. ஆனால் தடுப்புச்சுவர் ஊர் பகுதியில் அமைக்கப்படாததால் மக்கள் சாலையை கடக்கும்போது அடிக்கடி விபத்து நடந்தது. அந்த பகுதியில் தடுப்புச்சுவர் அமைக்க வேண்டும் என்று மக்கள் கூறிவருகின்றனர்.

கடந்த 13ம் தேதி அரியம்பாக்கம், 20ம் தேதி தண்டலம் பகுதியில் தடுப்புச்சுவர் மீது லாரி மோதி கவிழ்ந்தது. தடுப்புச்சுவரும் உடைந்தது. உடைந்த பகுதியில் தடுப்புச்சுவர் அமைக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

இதுசம்பந்தமாக தமிழ் முரசு நாளிதழில் செய்தி வெளியானது. 
இந்த நிலையில், கடந்த சில நாட்களாக தடுப்புச்சுவர் உடைந்துபோன பகுதியில் பெரிய தூண்கள் அமைக்கப்பட்டுள்ளது. அதன் மீது கருப்பு, வெள்ளை வர்ணம் பூசப்பட்டுள்ளது.

📻சிங்கப்பூரில் ஜிகா வைரஸால் 41 பேர் பாதிப்பு

சிங்கப்பூர்: சிங்கப்பூரில் ஜிகா வைரஸ் நோயால் 41 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. அந்நாட்டின் தேசிய சுற்றுச்சூழல் அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சிங்கப்பூரில் ஜிகா வைரஸ் நோயால் 41 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுள் 34 பேர் குணமடைந்து உள்ளனர். மீதமுள்ள 7 பேருக்கும் தொடர் சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது

📻பிள்ளையார்பட்டியில் விநாயகர் சதுர்த்தி பெருவிழா: கொடியேற்றத்துடன் துவக்கம்

திருப்புத்தூர்: பிள்ளையார்பட்டி கற்பகவிநாயகர் கோயிலில் சதுர்த்தி பெருவிழா நேற்று காலை கொடியேற்றத்துடன் துவங்கியது.

📻வேளாங்கண்ணியில் நாளை கொடியேற்றம்!

வேளாங்கண்ணி ஆரோக்கியமாதா ஆண்டு திருவிழாவின் கொடியேற்றம் நாளை நடைபெறுகிறது.இத்திருவிழாவில் சுமார் 10 லட்சம் பக்தர்கள் கலந்துகொள்வார்கள்.அங்கு பலமான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.


📻ஊழல் குற்றச்சாட்டு: வராகி மீது சீறும் விஷால்!

நடிகர் சங்கத்தில் ₹3 கோடி அளவுக்கு ஊழல் நடந்துள்ளதாக பத்திரிக்கையாளர் வராகி குற்றம் சாட்டியிருந்தார்.இது ஆதாரமற்ற புகார் என விஷால் தெரிவிக்கிறார்.நடிகர் சங்கக் கணக்கேடு அலுவலகத்தில் உள்ளது; அதை நடிகர்கள் யாரும் வந்து பார்க்கலாம் எனவும் தெரிவித்துள்ளார்.

📻கோவையில் தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம்!

சிறுவாணி அணையில் கேரள அரசு அணை கட்டும் திட்டத்தை கையில் எடுத்துள்ளது.இதை கண்டித்து தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடக்குமென கருணாநிதி அறிவித்துள்ளார்.செப்டம்பர் 3ம் தேதியன்று கோவை சிதம்பரம் பூங்காவில் இந்த கண்டன ஆர்ப்பாட்டம் நடக்கவுள்ளது.

📻திண்டுக்கல் ஐ லியோனி இறந்ததாக மீண்டும் வதந்தி!

தி.மு.க.வை சேர்ந்த நகைச்சுவை பட்டிமன்ற பேச்சாளர் ஐ லியோனி.இவர் நேற்று சாலை விபத்தில் இறந்து விட்டதாக தகவல் பரவியது.இந்நிலையில் அவர் தான் நலமாக உள்ளதாக பேட்டி அளித்துள்ளார்.தனக்கு எவ்வித விபத்தும் ஏற்படவில்லை என கூறியுள்ளார்.(இது நாலாவது முறை)

📻துருக்கியில் பயங்கர குண்டுவெடிப்பு: 11 போலீஸ் பலி!

துருக்கு அரசுக்கும் குர்து இன போராளிகளுக்கும் இடையே பெரும் போர் நிலவுகிறது.மறுபுறம் அங்கு ஐ.எஸ். தீவிரவாதிகளும் ஊடுருவி, தாக்குதல் நடத்தி வருகின்றனர்.தினமும் அங்கு வன்முறைகளும், கலவரங்களும் வெடித்த வண்ணம் உள்ளன.இன்று நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலில் 11 போலீசார் கொல்லப்பட்டனர்.

📻 50 லட்சம் டன் தாது மணல் கடத்தல்: வைகுண்டராஜன் மீது புகார்!

தொழிலதிபர் வைகுண்டராஜன் மீது அவரது சகோதரர் குமரேசன் குற்றம் சாட்டியுள்ளார்.சட்டவிரோத முறையில் 50 லட்சம் டன் தாது மணல் வெளிநாடுகளுக்கு கடத்தியிருப்பதாக தெரிவித்துள்ளார்.அதற்கான ஆதாரங்களை நீதிமன்றத்தில் அளிக்க உள்ளதாகவும் அவர் கூறியிருக்கிறார்

📻ஜெர்மனில் பாகிஸ்தானுக்கு எதிராக போராட்டம்!

பலுசிஸ்தானிலும் அத்துமீறி அட்டகாசங்களை அரங்கேற்றி வருகிறது பாகிஸ்தான்.அங்குள்ள ஆதரவாளர்கள் தொடர்ந்து பாகிஸ்தானுக்கு எதிராக போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.இதை சர்வதேச பிரச்சினையாக்கும் விதமாக ஜெர்மனில் பாகிஸ்தானுக்கு எதிரான போராட்டம் நடந்துள்ளது

📻ஒலிம்பிக் வீராங்கனைகள் குறித்து மோடி பெருமிதம்!

'மன் கீ பாத்' ரேடியோ உரையில் பிரதமர் மோடி பேசியதாவது:ரியோ ஒலிம்பிக்கில் பதக்கம் வென்று இந்தியாவை கவுரவப்படுத்தியுள்ளனர் நம் வீராங்கனைகள்.யாரும் நாம் குறைந்தவர்கள் அல்ல என நமது மகள்கள் நிரூபித்துக் காட்டிவிட்டனர்.

📻சென்னையில் பத்திரிக்கையாளர்கள் ஆர்ப்பாட்டம்!

தமிழக அரசின் தலைமை செயலகத்தில் புதிய கெடுபிடிகள் விதிக்கப்பட்டன.காவல்துறை மானிய கோரிக்கை நாளில் பத்திரிக்கையாளர்கள் அனுமதிக்கப்படவில்லை; அலைகழிக்கப்பட்டனர்.இதை கண்டித்து இன்று பத்திரிக்கையாளர் சங்கத்தின் சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

📻 ஜெயலலிதா என்ன நினைக்கிறார் தெரியுமா? துரைமுருகன் 'டாக்'

விழுப்புரம் தி.மு.க. பொதுகூட்டத்தில் சட்டசபை எதிர்க்கட்சி துணைத் தலைவர் துரைமுருகன் பேசினார்.ஜெயலலிதா சட்டசபையில் எதிர்க்கட்சியே இருக்கக்கூடாது என நினைத்துக்கொண்டிருப்பதாக கூறினார்.எதிர்க்கட்சி இல்லையென்றால் ஜனநாயகமே இல்லை என அவர் குறிப்பிட்டார்.

📻பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரிலிருந்து, ஜம்மு உள்ளிட்ட பகுதிகளில் அகதிகளாக தங்கும் மக்களுக்காக ரூ.2000 கோடியில் சிறப்பு திட்டத்தை அறிவிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

📻சிரியாவில் துருக்கி ராணுவம் நடத்திய வான்வெளித் தாக்குதலில் 25 குர்தீஷ் தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளதாக உள்ளூர் ஊடகங்கள்  தகவல் தெரிவித்துள்ளன.

📻மதுராந்தகம் அருகே அரிசி ஆலையில் கொத்தடிமைகளாக தவித்த 5 பேர் மீட்பு: உரிமையாளர் மீது போலீஸில் புகார்

📻சென்னை: திருட்டு டிவிடி விவகாரத்தில் ஈழத் தமிழர்கள் குறித்த இயக்குநர் சேரன் பேச்சுக்கு நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அத்துடன் பொதுவெளியில் சேரன் வருத்தம் தெரிவிக்க வேண்டும் என்றும் சீமான் வலியுறுத்தியுள்ளார்.

📻சால்ட் லேக் சிட்டி, அமெரிக்கா: அமெரிக்காவில் படகு இல்லத்திலிருந்து விழுந்த தனது 2 வயது மகனை மீட்டு அவனைத் தூக்கி் பிடித்தபடி நீரில் தத்தளித்த தாய், சில நிமிடப் போராட்டத்திற்குப் பின்னர் நீரில் மூழ்கி் பலியானார். அவரது மகன் பத்திரமாக மீட்கப்பட்டான். அமெரிக்காவின் கொலராடோவைச் சேர்ந்தவர் 35 வயதான செல்சி ரஸ்ஸல். இவருக்கு இரு குழந்தைகள் உள்ளனர்.

📻சென்னை: நடிகர் சூரி தனது 39வது பிறந்தநாளை உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் படப்பிடிப்பில் கொண்டாடினார். உதயநிதி ஸ்டாலின் எழில் இயக்கத்தில் நடித்து வருகிறார். இன்னும் பெயரிடப்படாத அந்த படத்தில் அவருக்கு ஜோடியாக கேத்ரீன் தெரஸா நடிக்கிறார். படத்தில் சூரியும் உள்ளார்.  இந்நிலையில் சனிக்கிழமை சூரி தனது 39வது பிறந்தநாளை படப்பிடிப்பு தளத்திலேயே கேக் வெட்டி கொண்டாடினார்

📻பெங்களூருக்கு சுற்றுலா செல்வது போல் நடித்து வாடகைக் காரைக் கடத்திய சேலம் அம்மாபேட்டையைச் சேர்ந்த ஐந்து இளைஞர்களைப் போலீசார் கைது செய்துள்ளனர். தாக்குதலுக்கு ஆளான கார் டிரைவர் போலீசில் அளித்த புகாரின் அடிப்படையில் விரைந்து செயல்பட்டு இந்தக் கொள்ளையர்களைப் போலீசார் கைது செய்தனர். போலீசாரிடம் அவர்கள் அளித்த வாக்குமூலத்தில் அதிக பணம் சம்பாரிக்க வேண்டும் என்ற ஆசையில் இவ்வாறு காரைத் திருடியதாக' தெரிவித்துள்ளனர்.

📻பெரியகுளம்  கும்பக்கரை அருவியில் வழுக்க பாறை பகுதியில்  சென்று குளித்தவர்  நீரில் மூழ்கி பலி.

📻📡📻📡📻📡📻📡📻📡📻

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here