🔉🔉🔉🔉🔉🔉🔉🔉🔉🔉🔉
http://www.sivakasiteacherkaruppasamy.blogspot.com
🔊🔊🔊🔊🔊🔊🔊🔊🔊🔊🔊
🔊பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.3.38, டீசல் விலை லிட்டருக்கு ரூ.2.67 உயர்வு !
டெல்லி: பெட்ரோல் விலை லிட்டருக்கு 3.38 ரூபாயும், டீசல் விலை லிட்டருக்கு 2.67 ரூபாயும் உயர்த்தப்பட்டுள்ளன. இந்த புதிய விலை மாற்றம் இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வருவதாக எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.
🔉தங்கம் விலை சவரனுக்கு ரூ.104 சரிவு
சென்னை : தங்கம் விலை இன்று(ஆகஸ்ட் 31-ம் தேதி) சவரனுக்கு ரூ.104 சரிந்துள்ளது. சென்னை, தங்கம்-வெள்ளி சந்தையில் மாலைநேர நிலவரப்படி 22காரட் ஒருகிராம் ஆபரணத்தங்கத்தின் விலை ரூ.2,938-க்கும், சவரனுக்கு ரூ.104 சரிந்து ரூ.23,504-க்கும், 24காரட் 10கிராம் தங்கத்தின் விலை ரூ.31,420-க்கும் விற்பனையாகிறது.அதேசமயம் வெள்ளியின் விலை சிறிது உயர்ந்துள்ளது. ஒருகிராம் சில்லரை வெள்ளியின் விலை 10 காசுகள் உயர்ந்து ரூ.48.50-க்கும், பார்வெள்ளி கிலோவுக்கு ரூ.70 உயர்ந்து ரூ.45,320-க்கும் விற்பனையாகிறது.
🔊குழந்தையின் உயிரைப்பறித்த ஒரு ரூபாய்
சென்னையில் 5 மாத குழந்தை ஒரு ரூபாய் நாணயத்தை விழுங்கியதால் மூச்சு திணறி இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை, கோயம்பேடு பஜனை கோயில் தெருவை சேர்ந்தவர் பிரபு. இவரது மனைவி கீதா. பிரபு கூலி வேலை செய்து வருகிறார். இந்த தம்பதியின் 5 மாத குழந்தை தீட்ஷிதா. நேற்று வீட்டில் விளையாடிக் கொண்டு இருந்துள்ளார் தீட்ஷிதா. அப்போது தரையில் கிடந்த ஒரு ரூபாய் நாணயத்தை குழந்தை விழுங்கியது. மூச்சுவிட தீட்ஷிதா சிரமப்பட கீதாவுக்கு ஒன்றுமே புரியவில்லை.
அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். பின்னர் அங்கிருந்து எழும்பூரில் உள்ள அரசு குழந்தைகள் நல மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு தீட்ஷிதாவை பரிசோதித்த போது அவர் ஒரு ரூபாய் நாணயத்தை விழுங்கியிருந்தது தெரியவந்தது.
உடனடியாக அறுவை சிகிச்சை மூலம் நாணயத்தை எடுக்க முயற்சிகள் நடந்தன. ஆனால் அதற்குள் தீட்ஷிதா இறந்து விட்டாள்.
இதுகுறித்து கோயம்பேடு போலீஸார் விசராணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
http://www.sivakasiteacherkaruppasamy.blogspot.com
🔊ரோசையா ஓய்வு: மகராஷ்டிரா கவர்னர் தமிழகத்தையும் கவனிப்பார்! குடியரசு தலைவர் அறிவிப்பு!
புதுடெல்லி:
தமிழக கவர்னர் ரோசையாவின் பதவி காலம் இன்றுடன் முடிவடைவதால், அவருக்கு பதிலாக மகராஷ்டிரா கவர்னர் வித்யாசாகர் ராவ் தமிழகத்தை கூடுதலாக கவனிப்பார் என்று கூறப்பட்டு உள்ளது. இதற்கான உத்தரவை குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி வழங்கியுள்ளார்.
🔉ஒரு நாள் போலீஸ் காவலுக்கு பின் நீதிமன்றத்தில் பச்சமுத்து ஆஜர்
சென்னை: ஒரு நாள் போலீஸ் காவலுக்கு பின் எஸ்.ஆர்.எம்.குழுமத் தலைவர் பச்சமுத்து சைதப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். பச்சமுத்துவை ஒரு நாள் போலீஸ் காவலில் விசாரிக்க நேற்று சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றம் அனுமதி அளித்தது. ரூ. 75 கோடி மோசடி குறித்து கைது செய்யப்ப்பட்ட பச்சமுத்துவிடம் போலீஸ் விசாரணை நடத்தினர்.
🔉பஸ்களுக்கு விதிமுறை வேண்டாம்...தனியார் பள்ளிகளின் மனு மீதான விசாரணை ஹைகோர்ட்டில் ஒத்திவைப்பு
🔊மலைவாழ் பெண்கள் பாலியல் தொல்லை துரிதிர்ஸ்டவசமானது: பழங்குடியினர் ஆணையத் தலைவர்
டெல்லி: கடமலைக்குண்டு பகுதி மலைவாழ் பெண்கள் பாலியல் தொல்லைக்குள்ளானது துரிதிர்ஸ்டவசமானது என பழங்குடியினர் ஆணையத் தலைவர் கூறியுள்ளார். 13 வயது சிறுமி பாலியல் தொல்லைக்குள்ளானது வேதனையளிக்கிறது என ரவி தாக்கூர் கூறியுள்ளார். தேனி ஆட்சியர், எஸ்.பி ஆகியோரிடம் விசாரணை நடத்திய பின் அளித்த பேட்டியில் ரவி தாக்கூர் கவலை தெரிவித்துள்ளார்.
🔊குப்பை கிடங்கு பராமரிப்பு வழக்கு - நீதிபதி உத்தரவு
குப்பை கிடங்கு பராமரிப்பு தொடர்பாக 15 ஆண்டுகளுக்கு முன் எழில்நகர் நலச்சங்கம் சார்பாக தொடரப்பட்ட வழக்கு தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல் தலைமையிலான அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.
"தமிழ்நாடு மாசுக் கட்டுபாட்டு வாரியம் தாக்கல் செய்த அறிக்கையை பார்க்கும் போது, சுற்றுப்புற சூழல் விதிமுறைகளை சென்னை மாநகராட்சி முறையாக பின்பற்றவில்லை என தெரிகிறது.
மக்களுக்கு தேவையானவற்றை நிறைவேற்ற ஒரு ஆயுள் தண்டனை காலத்தை அவகாசமாக வழங்கினால் கூட போதாது. மேலும் சென்னை மாநகராட்சி ஆணையரை குப்பை கிடங்கின் அருகில் தங்க வைத்தால் தான் பொதுமக்கள் படும் வேதனை தெரியும்.
அப்படி அவர் தங்க விருப்பட்டால் அந்த வசதியை நீதிமன்றமே செய்து கொடுக்க தயாராக உள்ளது.
சுற்றுச்சூழல் விதிகளை பின்பற்றுவது தொடர்பாக கால அட்டவணையை சென்னை மாநகராட்சி தாக்கல் செய்ய வேண்டும். அந்த அட்டவணையில் எந்த மாதிரியான விதிகளை நிறைவேற்றப்பட்டுள்ளது, எவை நிறைவேற்றப்படவில்லை, எவ்வளவு காலத்தில் நிறைவேற்றப்படும் என்பதை மாநகராட்சி 3 வாரத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார்.
🔉பெசிக் குடுகோவ் இறந்துவிட்டதால் வெள்ளிப் பதக்கம் வாங்க யோகேஷ்வர் தத் மறுப்பு
🔉நாளை மறுநாள் பாரத் பந்த்.. 15 கோடி ஊழியர்கள் பங்கேற்பு.. எவையெல்லாம் முடங்கும்? எவை இயங்கும்?
டெல்லி: விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும், அனைத்து தொழிலாளர்களுக்கும் குறைந்தபட்ச மாத ஊதியமாக ரூ.15 ஆயிரம் வழங்க வேண்டும், முறைசாரா தொழிலாளர்களுக்கு சமூக பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்பவை உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து தொழிற்சங்கங்கள் செப்டம்பர் 2-ம் தேதி வேலை நிறுத்தத்தில் ஈடுபட அழைப்பு விடுத்துள்ளன.
வங்கி, இன்சூரன்ஸ் பணிகள் உட்பட நாடு முழுக்க அரசு மற்றும் தனியார் பணிகளில் 15 கோடி ஊழியர்கள் இந்த சங்கங்களை சேர்ந்தவர்களாக இருப்பதால் வேலை நிறுத்த பாதிப்பு பெருமளவில் இருக்கும் என கூறப்படுகிறது.
🔊ஐஏஎஸ் அதிகாரிகள் சஸ்பெண்ட் பின்னணியில் மின்வாரிய ஊழலா?
குறிப்பாக 'தினமலர்' இதழ், இவர் ஏன் சஸ்பெண்ட் செய்யப் பட்டார் என்று எழுதியுள்ளது. அது வருமாறு :-
'ஞானதேசிகன் மின் வாரியத் தலைவராக இருந்த போதுதான், 11 தனியார் நிறுவனங்களிடமிருந்து 3,330 மெகாவாட் மின்சாரத்தை, ஒரு யூனிட் 4.91 ரூபாய்க்கு வாங்க, 2013 அக்டோபர் மாதம் மின்வாரியம் ஒப்பந்தம் செய்தது.
இதற்கு உடனடியாக தமிழ்நாடு மின்சார ஒழுங்கு முறை ஆணையம் ஒப்புதல் வழங்கவில்லை. அந்த விலைக்கு மின்சாரம் வாங்கினால், மின் வாரியத்திற்கு, பல ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்படும் என்று தி.மு.க.
தலைவர் கருணாநிதி, தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் இளங்கோவன் உள்ளிட்டோர் குற்றம் சாட்டினர்.
கடந்த 2014 லோக் சபா தேர்தலின் போது மின்வாரியம், கேரளாவில் உள்ள என்.டி.பி.சி. எனப்படும், தேசிய அனல் மின் கழகத்திட மிருந்து, மின்சாரம் வாங்கியது. அதனுடன் நேரடி யாக ஒப்பந்தம் செய்யாமல், கேரள மாநில மின் வாரியத்திடம் ஒப்பந்தம் செய்ததால், ஒரு யூனிட் 10 ரூபாய்க்கு வாங்க வேண்டிய மின்சாரத்திற்கு மின்வாரியம் 16 ரூபாய் கொடுத்தது.
இதனால் மின் வாரியத்திற்கு 1,000 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகப் புகார் எழுந்தது. மேலும் ஜி.எம்.ஆர்., மதுரை பவர், சாமல்பட்டி, பிள்ளை பெருமாள் நல்லூர் ஆகிய நிறுவனங்களிடம் மின்சாரம் வாங்க ஒப்பந்தம் செய்யப்பட்டது. 2012 முதல் 2014 டிசம்பர் வரை ஒரு யூனிட் மின்சாரத்தை 12 ரூபாய்க்கு மேல் வாங்கியதால், பல ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டது.
சர்வதேசச் சந்தையில், ஒரு டன் நிலக்கரி விலை 3,600 ரூபாய் என்ற அளவில் இருந்த போது 2014 டிசம்பர் வரை மின் வாரியம் 5,400 ரூபாய்க்கு வாங்கியதால், பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டது. இவை அனைத்தும் அரசியல் குறுக்கீடுகளால் செய்யப்பட்டவை.
எனவே தற்போது ஞானதேசிகனை சஸ்பெண்ட் செய்துள்ள அரசு, சம்பந்தப்பட்ட அரசியல் புள்ளிகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று 'தினமலர்' எழுதியுள்ளது.
கடுமையான இந்த ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு ஜெயலலிதா அரசு அளிக்கின்ற பதில் என்ன?
🔊ஐஏஎஸ் அதிகாரிகள் ஞானதேசிகன், அதுல் ஆனந்த் சஸ்பெண்ட் ஏன்? காரணத்தை ஜெ. விளக்க கருணாநிதி வலியுறுத்தல்
சென்னை: தமிழக மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் ஞானதேசிகன் மற்றும் அதுல் ஆனந்த் ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டது ஏன் என்ற காரணத்தை வெளிப்படையாக முதல்வர் ஜெயலலிதா விளக்க வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி வலியுறுத்தியுள்ளார்.
🔉விதம் விதமான சாப்பாடு.. பிரமிக்க வைத்த காரைக்குடி உணவுத் திருவிழா!
காரைக்குடி: சிவகங்கை மாவட்டம் காரைக்குடி இராமநாதன் செட்டியார் நகராட்சி உயர்நிலைப்பள்ளியில் உணவுத் திருவிழா இன்று ( 31.08.2016) பிரமிக்கத்தக்க வகையில் மிகவும் சிறப்பாக கொண்டாடப்பட்டது.
விழாவிற்கு தேவகோட்டை மாவட்டக் கல்வி அலுவலர் மாரிமுத்து தலைமையேற்றார். காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக வரலாற்று துறைத்தலைவர் பேராசிரியர்.முனைவர் கிருஷ்ணமூர்த்தி அவர்கள் முன்னிலை வகித்தார். தலைமை ஆசிரியர் பீட்டர்ராஜா அனைவரையும் வரவேற்றார்.
கவிதா நர்சிங் ஹோம் உரிமையாளர் டாக்டர் ரமேஷ் உணவுத் திருவிழாவை துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார்.
🔉குசஸ்தலை ஆற்றில் சேதம் அடைந்துள்ள தடுப்பணையை சீரமைக்க விவசாயிகள் வலியுறுத்தல்
ஊத்துக்கோட்டை: குசஸ்தலை ஆற்றில் சேதம் அடைந்துள்ள தடுப்பணையை கட்டவேண்டும் என்று விவசாயிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
🔊லஞ்சப்புகாரில் வணிகவரித்துறை ஆய்வாளர் தவமணி கைது
விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூரில் வணிகவரித்துறை ஆய்வாளராக பணிபுரிந்து வருகிறார் தவமணி. அதே பகுதியைச்சேர்ந்த மக்காச்சோள பெருவியாபாரி பாண்டியன், தனது தொழில் சம்பந்தமாக கடை ஒன்றை அமைக்க அனுமதி கேட்டு தவமணியிடம் சென்றுள்ளார். அனுமதி தர 8 ஆயிரம் லஞ்சம் கேட்தால் தவமணி மீது விழுப்புரம் மாவட்ட லஞ்ச ஒழுப்புத்துறை போலீசாரிடம் புகார் கொடுத்துள்ளார் பாண்டியன்.
அந்தப்புகாரின் அடிப்படையில், இன்று பாண்டியன் லஞ்சம்ப்பணம் கொடுத்தபோது, தவமணியை கைது செய்தனர்.
🔊இனி நிம்மதியாக சாவேன்.. சிங்கூர் தீர்ப்பு குறித்து மம்தா பானர்ஜி மகிழ்ச்சி
கொல்கத்தா: 2006ம் ஆண்டு டாடா தொழிற்சாலைக்காக சிங்கூரில் இருந்து கையகப்படுத்தப்பட்ட நிலத்தை திரும்ப கொடுக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளதையடுத்து, இனி நிம்மதியாக சாவேன் என்றும், வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பு இது என்றும் மேற்குவங்க மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
🔉கழுத்தில் கத்தியை வைத்து கல்லூரி மாணவர்களின் செயின், செல்போன் பறிப்பு; ஒருவர் கைது
சென்னை: பைக்கில் சென்ற கல்லூரி மாணவர்களை தாக்கி நகை மற்றும் செல்போனை பறித்து சென்ற நபரை போலீசார் கைது ெசய்தனர். தப்பி ஓடிய மூன்று பேரை தேடி வருகின்றனர்.
🔉கரூர் மாணவி சோனாலி அடித்துக்கொலை: உடலை வாங்க உறவினர்கள் மறுப்பு
மதுரை: கரூரில் ஒருதலைக்காதல் சம்பவத்தில் அடித்துக்கொலை செய்யப்பட்ட மாணவி சோனாலியின் உடலை வாங்க உறவினர்கள் மறுப்பு தெரிவித்துள்ளனர்
🔊பேசாமல் உதசீனப்படுத்தியால் கொன்றேன்... சோனாலி கொலையாளி வாக்குமூலம்
கரூர்: என்னிடம் பேசாமல் என்னுடைய காதலை உதாசீனப்படுத்தியதால் ஆத்திரத்தில் சோனாலியை அடித்துக்கொன்றேன் என்று கரூரில் கல்லூரி மாணவியை அடித்துக்கொன்ற உதயகுமார் வாக்குமூலம் அளித்துள்ளான்.
🔊பச்சமுத்துவை நீதிமன்றக் காவலில் சென்னை புழல் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவு
சென்னை: விசாரணைக்குப் பின் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் எஸ்.ஆர்.எம். நிறுவனர் பச்சமுத்து ஆஜர் படுத்தப்பட்டார். அங்கு பச்சமுத்துவை நீதிமன்றக் காவலில் சென்னை புலால் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்
🔉மாலத்தீவு முன்னாள் அதிபருக்கு பிடிவாரண்ட்
கொழும்பு: மாலத்தீவு முன்னாள் அதிபருக்கு பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. மாலத்தீவு முன்னாள் அதிபர் முகம்மது நசீத் தீவிரவாத குற்றச்சாட்டின் அடிப்படையில் 13 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றார். சிறை தண்டனையை அந்நாட்டின் சுப்ரீம் கோர்ட் உறுதி செய்த நிலையில் முன்னாள் அதிபர் உடல் நல குறைவு காரணத்தை காட்டி லண்டனிற்கு மருத்துவ சிகிச்சை மேற்கொள்ள சென்றார். இருப்பினும் உடல் நிலை தேறிய போதிலும் மீண்டும் மாலத்தீவிற்கு திரும்பாமல் இங்கிலாந்தில் அரசியல் தஞ்சம் புகுந்தார். நஷீத் தற்போது இலங்கை தலைநகர் கொழும்பிற்கு வருகை தந்தார். இந்நிலையில் நசீத்தை கைது செய்து சிறையில் அடைக்க அரசு அனுமதி கோரியது. இதனை ஏற்ற கோர்ட் நசீத்தை கைது செய்ய வாரண்ட் பிறப்பித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.
🔉செலிபிரிட்டி கிரிக்கெட்டை தொடர்ந்து வருகிறது செலிபிரிட்டி பேட்மின்டன் போட்டி
சென்னை: நடிகர் சங்கம் நடத்திய செலிபிரிட்டி கிரிக்கெட் போட்டியை தொடர்ந்து செலிபிரிட்டி பேட்மின்டன் போட்டியும் நடைபெறவுள்ளது.
செலிபிரிட்டி பேட்மின்டன் லீக் சீசன் (CBL) என்ற பெயரில், நடிகர் சங்கம் பேட்மின்டன் போட்டியை சென்னை, பெங்களூரு, ஹைதராபாத் மற்றும் கொச்சி போன்ற இடங்களில் நடத்தவுள்ளது. இந்த போட்டிகளில் வெற்றி பெறுபவர்கள் மலேசியாவில் உள்ள கோலம்பூரில் நடக்கும் இறுதி போட்டியில் கலந்துகொள்வார்கள்.
தெலுங்கு நடிகர்கள், கன்னட நடிகர்கள் மற்றும் மலையாள நடிகர்களுடன் போட்டியிடு தமிழ் நடிகர்கள் போட்டியிடுகிறார்கள். நேற்று சென்னையில் நடைப்பெற்ற போட்டியாளர்களை அறிமுகப்படுத்தும் விழாவில், நடிகர் நாசர் சென்னை அணி சார்பாக விளையாடும் வீரர்களை அறிமுகப்படுத்தி வைத்தார்.
இந்த அணிக்கு சென்னை ராக்கர்ஸ் என்று பெயரிட்டுள்ளனர்.
சென்னை அணியின் கேப்டனாக ஆர்யாவும், அவருடன் பரத், பிரசன்னா, அபிநய் வட்டி, அமிதாஷ், முன்னா, சாந்தனு, வைபவ், காயத்ரி, இனியா, ரூபா மஞ்சரி ஆகியோரும் விளையாடவுள்ளனர். இந்த அணியின் விளம்பர தூதராக நடிகர் மாதவனும், ஊக்குவிப்பவராக நடிகை அமலா பாலும் நியமிக்கப்பட்டுள்ளனர். செப்டம்பர் 18-ல் இப்போட்டிகள் தொடங்கப்படவுள்ளது.
🔊டெல்லி துணை நிலை ஆளுநர் அதிகாரம் குறித்த தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் ஆம் ஆத்மி மேல்முறையீடு
டெல்லி: டெல்லி துணை நிலை ஆளுநர் அதிகாரம் குறித்த தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. டெல்லி நிர்வாக தலைவர் துணை நிலை ஆளுநர் தான் என உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. டெல்லி உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் ஆம் ஆத்மி கட்சி மேல்முறையீடு செய்துள்ளது.
🔊திருமணத்துக்காக கொள்ளையடித்த புதுமாப்பிள்ளை கைது
திருமணத்துக்காக கொள்ளையடித்த புதுமாப்பிள்ளை மற்றும் அவரது கூட்டாளியை போலீஸார் கைது செய்தனர்.
சென்னை பாரிமுனையில் பகுதியில் நேற்றிரவு ஏ.டி.எம். மையங்களுக்கு பணத்தை நிரப்ப வந்த வேன் பணத்துடன் கடத்தப்பட்டது. அதிரடியாக பூக்கடை துணை கமிஷனர் ஜெயக்குமார் தலைமையிலான போலீஸ் டீம் களமிறங்கி வேன் டிரைவர் ராஜேஷ், அவரது நண்பர் லிங்கம் ஆகியோரை கைது செய்தது.
அயனாவரத்தில் உள்ள தனியார் நிறுவனம் மூலம் ஏ.டி.எம் மையங்களுக்கு பணம் நிரப்பப்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் மூலம் பாரிமுனையில் உள்ள ஏ.டி.எம் மையங்களுக்கு நேற்றிரவு கொண்டு வரப்பட்டது. 50 லட்சத்துக்கும் அதிகமான பணம் வேனில் இருந்தது. குறுகிய சந்தில் இருந்த ஏ.டி.எம் மையத்துக்கு வேன் செல்ல முடியாததால் சாலையில் வேனை நிறுத்தினர்.
பின்னர் பலத்த பாதுகாப்புடன் பணம் ஏ.டி.எம் மையத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. இந்த சமயத்தில் பெரம்பூரை சேர்ந்த டிரைவர் ராஜேஷ் மட்டும் வேனில் அமர்ந்திருந்தார். அப்போது அவருக்கு ஒரு போன் அழைப்பு வந்தது. வேனை விட்டு இறங்கி ராஜேஷ் பேசினார். இந்த சமயத்தில் மின்னல் வேகத்தில் வேனை எடுத்த மர்ம நபர், அங்கிருந்து பறந்தார். ராஜேசும் திருடன், திருடன் என்று சத்தம் போட்டார். இதையடுத்து பாதுகாவலர்கள் அங்கு விரைந்தனர்.
இதுதொடர்பாக வடக்கு கடற்கரை போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக வேன் நம்பர் மற்றும் அடையாளம் அனைத்து போலீஸ் நிலையங்களுக்கும் வாக்கி டாக்கி மூலம் தெரிவிக்கப்பட்டு உஷார்படுத்தப்பட்டனர்.
இந்த சமயத்தில் ராயபுரம் பகுதியில் வேன் அனாதையாக நின்றது தெரியவந்தது. வேனை பறிமுதல் செய்த போலீஸார், தொடர்ந்து பணம் கொண்டு வந்த நிறுவன ஊழியர்களிடம் விசாரித்தனர். அப்போது டிரைவர் ராஜேஷ் மீது சந்தேகம் ஏற்பட்டது. அவரிடம் தனியாக போலீஸார் விசாரித்தனர். அவரது போனுக்கு வந்த அழைப்புகளையும் போலீஸார் ஆய்வு செய்தனர். அப்போது தான் கொள்ளையடிக்க திட்டம் திட்டியதே ராஜேஷ் என்பது போலீசுக்கு தெரியவந்தது. உடனடியாக ராஜேஷை கைது செய்தனர். தொடர்ந்து காரை கடத்திய ராஜேஷின் கூட்டாளி வியாசர்பாடியை சேர்ந்த லிங்கத்தையும் போலீஸார் கைது செய்து இருவரிடமிருந்து 26 லட்சம் ரூபாயை மீட்டனர்.
இதுகுறித்து போலீஸ் வட்டாரங்கள் கூறுகையில், "கைதான ராஜேஷ், பணம் நிரப்பும் நிறுவனத்தில் ஏற்கனவே வேலைப்பார்த்தவர். இப்போது சொந்தமாக வேன் ஓட்டி வருகிறார். பணம் சப்ளை செய்யும் நிறுவனத்தில் டிரைவர் இல்லாத சமயத்தில் அங்கு பணிக்கு செல்வார் ராஜேஷ். அப்படி தான் நேற்றும் வேலைக்கு சென்றுள்ளார். ராஜேஷின் சொந்த ஊர் திருவள்ளூர் மாவட்டம் சிறுனியம் கிராமம். 8ம் வகுப்பு வரை படித்த அவருக்கு வேன் வாங்கியதில் 4 லட்சம் ரூபாய் கடன் உள்ளது. மேலும் வரும் 3ம் தேதி சிறுனியத்தில் அவருக்கு திருமணம் நடக்கவுள்ளது. திருமணத்துக்கு தேவையான பணமும் கையில் இல்லை. இந்த சமயத்தில் லட்சக்கணக்கான பணத்தை பார்த்தவுடன், லிங்கத்தின் மூலம் அதை கொள்ளையடிக்க திட்டமிட்டுள்ளார். திருமணத்துக்கு 4 நாட்கள் உள்ள நிலையில் புதுமாப்பிள்ளை ராஜேஷ் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது" என்றனர்.
🔉திருச்சி அருகே கல்லூரி மாணவியை கத்தியால் குத்தி விட்டு விஷம் குடித்த வாலிபர்
திருச்சி: திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே கல்லூரி மாணவி மோனிஷாவுக்கு கத்திகுத்து ஏற்பட்டது. கொள்ளிடம் காவல் நிலையம் அருகே மாணவியை கத்தியால் குத்திய பாலமுருகன் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
தமிழகத்தில் ஒருதலைக்காதலால் இளம்பெண்கள் அடித்துக்கொலை செய்யப்படுவதும், வெட்டிக்கொல்லப்படுவதும் அதிகரித்துள்ளது. சென்னை சுவாதி, விழுப்புரம் நவீனா படுகொலைகளால் ஏற்பட்ட அதிர்ச்சி நீங்குவதற்கு முன்பாகவே கரூரில் பொறியியல் மாணவி சோனாலி கொடூரமாக அடித்துக் கொலை செய்யப்பட்டிருக்கிறார்.
அந்த அதிர்ச்சி சம்பவம் நீங்கும் முன்பாக இன்று காலையில் தூத்துக்குடியில் பள்ளி ஆசிரியை பிரான்சினா என்பவர் ஒருதலைக்காதலால் தேவாலயத்தில் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
காலை முதலே கொலை சம்பவங்கள் பற்றிய செய்திகள் இடம் பெற்று வரும் நிலையில் திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே மற்றொரு சம்பவம் அரங்கேறியுள்ளது. பிச்சாண்டார்கோவில் பகுதியை சேர்ந்த மோனிஷாவின் தாய் பாத்திமா இன்ஸ்பெக்டராக உள்ளார்.
இன்று மாலை 5 மணியளவில் மாணவி மோனிசா, சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த பாலமுருகன் என்பவர், மாணவியை கத்தியால் குத்திவிட்டு தன் கையில் இருந்த விஷத்தை குடித்து தற்கொலைக்கு முயற்சி செய்தார்.
இதனையடுத்து அங்கிருந்தவர்கள் மாணவி மோனிஷாவையும், கத்தியால் குத்திய பாலமுருகனையும் துறையூரில் உள்ள மருத்துவமனையில் சிகிக்சைக்காக அனுமதித்துள்ளனர்.
🔉அன்னைக்கு புனிதர் பட்டம்:
போப் ஆண்டவருக்கு சோனியா காந்தி வாழ்த்து
மறைந்த அன்னை தெரசாவுக்கு வாடிகனில் 4-ந் தேதி நடக்கிற கோலாகல விழாவில் புனிதர் பட்டம் வழங்கப்படுகிறது.
இது தொடர்பாக போப் ஆண்டவர் பிரான்சிஸ்க்கு சோனியா காந்தி எழுதியுள்ள கடித்ததில், ''அன்னை தெரசாவிற்கு வாடிகன் புனிதர் பட்டம் வழங்குவதை மிக்க மகிழ்ச்சியுடன் வரவேற்கிறேன். புனிதர் பட்டம் வழங்குவதன் மூலம் அன்னை தெரசா ஆற்றிய பணிகளை நீங்கள் அங்கீகரித்திருப்பதற்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
அன்பு, கருணை, மனித நேயம் என்ற வார்த்தைகளுக்கு இலக்கணமாக வாழ்ந்து மறைந்த அன்னை தெரசாவுக்கு செலுத்தப்படும் மரியாதை ஆகும்.
🔊நில மோசடி புகார் தொடர்பான விசாரணைக்கு காவல் நிலையத்தில் ரவிபச்சமுத்து நாளை ஆஜர்
சென்னை: நில மோசடி புகார் தொடர்பான விசாரணைக்கு காவல் நிலையத்தில் ரவிபச்சமுத்து ஆஜராகவுள்ளார். நாளை காலை 10 மணிக்கு சென்னை கோயம்பேடு காவல் நிலையத்தில் ரவிமுச்சமுத்திவிடம் விசாரணை மேற்கொள்ளப்படுகிறது. கோயம்பேட்டில் 8 ஏக்கர் நிலத்தை ரவி பச்சமுத்து அபகரித்துவிட்டதாக போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. டெய்சிராணி மற்றும் 5 பேர் கொடுத்த புகாரை அடுத்து ரவி பச்சமுத்து ஆஜராக போலீசார் சம்மன் அனுப்பினர்.
🔊வாக்குறுதிகளை நிறைவேற்ற எங்கே பணம்? அதிமுக விளக்கத்தில் அதிருப்தி தேர்தல் கமிஷன் கடும் கண்டனம்
புதுடெல்லி: அதிமுக தேர்தல் அறிக்கையில் அறிவித்த இலவச மொபைல் போன், ரூ.500 கிப்ட் கூப்பன் போன்றவற்றை ெகாடுப்பதற்கு எங்கிருந்து நிதி கிடைக்கும் என்பதற்கு அக்கட்சி அளித்த விளக்கத்தை ேதர்தல் கமிஷன் ஏற்கவில்ைல. நிதி ஆதாரத்தை காட்டாமல் வாக்குறுதிகள் அளித்ததற்கு அக்கட்சிக்கு கடும் கண்டனம் ெதரிவித்திருக்கிறது
🔉இல்லை எனாது ஈந்த சிறுவனுக்கு பெருமை சேர்த்த நெல்லை
திருநெல்வேலி: இதயம், கண்கள் உள்ளிட்ட உடல் உறுப்புகளை தமது இறப்பின் மூலம் தானம் வழங்கிய சிறுவன் அவினாஷின் பெயரை நெல்லையில் ஒரு சாலைக்கு பெயரிட்டு மாநகராட்சி தீர்மானம் நிறைவேற்றியது.நாகர்கோவில், கோட்டாறு வாகையடி தெருவை சேர்ந்தவர் சுவாமிநாதன். ஜவுளிக்கடை ஊழியர். மனைவி லதா, தனியார் மருத்துவமனை நர்ஸ். இவர்களது மகன் அவினாஷ் 12, கோட்டாறு அரசு பள்ளியில் ஏழாம் வகுப்பு பயின்றான். கடந்த 18ம் தேதி மாலையில் வினாஷ்,டியூசனுக்கு சைக்கிளில் சென்றபோது மோட்டார் சைக்கிள் மோதியதில் படுகாயமுற்றான்.மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு நான்கைந்து தினங்கள் ஆன பிறகும் னைவுதிரும்பவில்லை. மூளைச்சாவு அடைந்த சிறுவனின் உடல் உறுப்புகளை தானம் செய்ய பெற்றோர் முன்வந்தனர்.
நெல்லை தனியார் மருத்துவமனையில் ஆபரேசன் மூலம் இதயம், கண்கள், கிட்னிகள், கல்லீரல் ஆகிய ஆறு உறுப்புகள் சென்னை,திருச்சி,மதுரை உள்ளிட்ட இடங்களில் உள்ள 6 பேருக்கு பொருத்தப்பட்டு அவர்களுக்கு மறுவாழ்வு அளிக்கப்பட்டது.திருநெல்வேலி மாநகராட்சிக்கு உள்பட்ட என்.ஜி.ஓ.காலனி பகுதியில் மத்திய அரசின் பிராவிடன்ட் பண்ட் அலுவலகம் உள்ளது. அந்த சாலைக்கு 'அவினாஷ் சாலை' என பெயர் சூட்டும்படி அந்த பகுதிவாழ் மக்கள் நெல்லை மாநகராட்சி மேயர் புவனேஸ்வரியிடம் கோரிக்கை விடுத்தனர். அதன்படி நேற்று நடந்த மாநகராட்சி கூட்டத்தில் அனைத்து உறுப்பினர்களின் ஆதரவுடன் தீர்மானம் நிறைவேறியது. இதுகுறித்து மேயர் புவனேஸ்வரி கூறுகையில், உடல் தானத்தை வலியுறுத்தும் வகையில் சிறுவன் அவினாஷ் பெயரை சூட்டியுள்ளோம்.
🔉ஆம்புலன்ஸ் இல்லாததால் மீண்டும் ஒரு அவலம்... இறந்த தாயின் சடலத்தை 12 கிமீ பைக்கில் கொண்டு சென்ற மகன்
போபால்: ஆம்புலன்ஸ் வசதி இல்லாததால் மத்திய பிரதேச மாநிலத்தில் இறந்த தாயாரின் உடலை 12 கி.மீ பைக்கில் கொண்டு சென்ற அவல சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
🔊அமெரிக்க ஓட்டப்பந்தயத்தில் தங்க பதக்கம் வென்ற 100 வயது இந்திய பெண்
சண்டிகரை சேர்ந்த மன்கவுர் என்பவர் அமெரிக்காவில் உள்ள வான்கோவரில் முதியவர்களுக்கான ஓட்ட பந்தயத்தில் 100 மீட்டர் தூரத்தை 1 நிமிடம் அரை நொடியில் கடந்து சாதனை படைத்துள்ளார்.
100 வயதான இவர் அது மட்டும் இன்றி இப்போட்டியில் தங்க பதக்கமும் வென்றுள்ளார்.
🔊மாலத்தீவின் முன்னாள் அதிபர் முகமது நஷீத்துக்கு கைது வாரண்ட்
மாலத்தீவின் முன்னாள் அதிபர் முகமது நஷீத்துக்கு கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. மாலத்தீவில் முதல் முறையாக ஜனநாயக முறையில் தேர்வு செய்யப்பட்ட அதிபர் முகமது நஷீத்.
🔉ஈரோட்டில் விதிமீறி ஆலைகள்: மாயமாகும் பாசன வாய்க்கால்கள்
ஈரோடு: நீர்நிலைகள் அருகில் விதிமீறி ஆலைகள் கட்டப்பட்டுள்ளதால் கிளை வாய்க்கால்களில் தண்ணீர் செல்வது தடைபட்டும், சில பாசன வாய்க்கால்கள் மாயமாகியும் வருகின்றன. ஈரோடு மாவட்டத்தில் கீழ்பவானி, காலிங்கராயன் உள்ளிட்ட பாசன வாய்க்கால்கள் பெரும்பாலான இடங்களில் ஆக்கிரமிப்பில் சிக்கி உள்ளன. குறிப்பாக கிளை வாய்க்கால்கள் மற்றும் கிளை வாய்க்கால்களில் இருந்து பிரிந்து செல்லும் கொப்பு வாய்க்கால்கள் ஆகியவை ஒரு சில பகுதிகளில் இருப்பதற்கான தடயங்களே இல்லாத நிலை தான் இருந்து வருகின்றது. ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று பொதுப்பணித்துறையினர்க்கு விவசாயிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காமல் உள்ளனர்.
🔉🔊🔊🔉🔉🔊🔊🔉🔉🔊🔊
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக