8 O'CLOCK NEWS 30/08/2016 - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

8 O'CLOCK NEWS 30/08/2016


www.sivakasiteacherkaruppasamy.blogspot.com

📡📡📡📡📡📡📡📡📡📡

அமெரிக்காவோடு ஒருங்கிணைந்த வர்த்தக ஒத்துழைப்பை ஐரோப்பிய ஒன்றியம் உருவாக்க முடியுமா என்பது தொடர்பாக, ஐரோப்பிய ஒன்றிய உறுப்பினர் நாட்டின் இன்னொரு அமைச்சர் சந்தேகம் எழுப்பியுள்ளார்.அடுத்த மாதம், உறுப்பு நாடுகளின் சக வரத்தக அமைச்சர்களை சந்திக்கின்றபோது, ஐரோப்பிய ஒன்றிய – அமெரிக்க சுதந்திர வர்த்தகப் பேச்சுவார்த்தையை கைவிட கேட்டுகொள்ள போவதாக பிரான்ஸ் வர்த்தக அமைச்சர் மாத்தியாஸ் ஃபெக்கேல் கூறியுள்ளார்.

மில்லியன் கணக்கான அமெரிக்க டாலர்கள் மதிப்புள்ள சிரியாவுக்கான ஐ.நா.வின் உதவி திட்டங்களின் ஒப்பந்தம், அமெரிக்க மற்றும் ஐரோப்பிய ஒன்றியங்களால் தடை விதிக்கப்பட்ட நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டிருப்பது லண்டனின் கார்டியன் நாளிதழ் நடத்திய புலனாய்வில் தெரிய வந்திருக்கிறது.

ஜப்பானை நெருங்கி வரும் பலத்த சூறாவளி: விமானங்கள் ரத்து-மணிக்கு 120 கிலோ மீட்டர் வேகம் வரை வீசும் லயன்ராக் என்ற இந்த சூறாவளி, ஜப்பானின் வட கிழக்கில் உள்ள டோஹோகு பகுதியை, இன்று பிற்பகல் கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.கடந்த ஐந்து வருடங்களுக்கு முன்பு நிகழ்ந்த பூகம்பம் மற்றும் சுனாமியினால், இப்பகுதி பலத்த சேதத்தை சந்தித்தது.கடந்த 2011-ஆம் ஆண்டு சேதமடைந்த ஃபுகுஷிமா அணு உலையை நடத்தி வரும் டோக்கியோ மின் சக்தி நிறுவனம் தனது வெளிப்புற செயல்பாடுகள் பலவற்றை இடைநிறுத்தியுள்ளதாகத் தெரிவித்துள்ளது.

நியூசிலாந்தில் 500 பசுக்கள் நூதன திருட்டு-வழக்கத்திற்கு மிகவும் மாறான மாடு திருட்டு வழக்கு ஒன்றை நியூசிலாந்து காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.இந்தத் தீவின் தெற்கு பகுதியிலுள்ள பண்ணை ஒன்றிலிருந்து 500 பசுக்கள் மாயமாகியுள்ளன.

’பேராசை’ - ஜெயலலிதாவின் அரசியல் வாரிசாக நினைக்கும் தீபா!-முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா லண்டனில் இதழியல் படித்து பட்டம் பெற்றவர்.இவர் சில நாட்களுக்கு முன்பு போயஸ் கார்டனுக்கு வந்து ஜெயலலிதாவை சந்திக்க வேண்டும் என்று கேட்டுள்ளார். கார்டன் வாசலில் சந்திப்பிற்கான காரணம் கேட்டுள்ளனர். தீபா அவரிடம், ”இந்த போயஸ் கார்டன் சொத்துக்கு நான்தான் உண்மையான வாரிசு. எங்க பாட்டி சந்தியா தெளிவா உயில் எழுதி வச்சிருந்தாங்க. அவங்களோட மகன், மகள் வயிற்றுப் பேரன், பேத்திகளுக்குத்தான் இந்தச் சொத்து சொந்தம். அப்படிப் பார்த்தா நான்தான் இந்த வீட்டு எஜமானி. நான் இங்க இருக்கிற என்னோட அத்தையைப் பார்க்கனும். அவங்களப் பார்க்க விடாம தடுக்க நீங்கள்லாம் யாரு மிஸ்டர்?” என்றார்.இந்த தகவலை ஜெயலலிதாவிடம் கார்டன் விசுவாசிகள் கூறியுள்ளன. ஜெயலலிதாவை சந்திக்க தீபாவிற்கு அனுமதி அளிக்கப்படவில்லை. கார்டன் வாசலிலேயே ஒருமணி நேரம் அழுது கழித்து விட்டு தீபா திரும்பச்சென்றதாக கூறப்படுகிறது.தீபாவுக்கு, ஜெயலலிதாவின் அரசியலில் வாரிசாக ஆக வேண்டும் என்று ஆசை இருப்பதாக கூறப்படுகிறது. அரசியலில் ஈடுபடுவது குறித்து பலமுறை அவர் ஜெயலலிதாக்கு கடிதம் எழுதியதாகவும் அதற்கு எந்தப் பதிலும் வரவில்லை எனவும் கூறப்படுகிறது.

செப்டம்பர்-2: சென்னையில் பரபரப்பு போஸ்டர்-சென்னை முழுவதும் “செப்டம்பர்-2, தண்டனை?” என்று அச்சிடப்பட்ட போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கில் தீர்ப்பை எதிர்ப்பார்த்து அனைத்து கட்சியினரும் காத்துக்கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் இந்த போஸ்டர் ஒட்டப்பட்டதால் ஒருபக்கம் செப்டம்பர் இரண்டாம் தேதி ஜெயலலிதா சொத்து குவிப்பில் தீர்ப்பு வர போகிறது என்று வதந்தி கிளம்பியுள்ளது.இதுகுறித்து உளவுத்துறை விசாரணை நடத்தியதில் குற்றமே தண்டனை படம் வெளிவர உள்ளதை முன்னிட்டு அந்த படத்திற்காக இந்த போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது.இந்த போஸ்டர் சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தோனியுடனான 11 வருட ஒப்பந்தத்தை முடித்தது யார்???-ஒரு நாள் மற்றும் டிவெண்டி 20 இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் தோனியின் கிரிக்கெட் வாழ்க்கை சரிந்து வருவதை அடுத்து இவருடன் போடப்பட்டு வந்த ஒப்பந்தத்தை தொடர்வதை நிறுவனங்கள் தவிர்த்து வருகின்றன. தோனி வெற்றி பெறாத போட்டிகளே இல்லை என்ற நிலையில் பெப்சி கோலா மற்றும் லேஸ் இரு நிறுவனங்களின் விளம்பர தூதராக இருந்து வந்தார். தற்போது, 11 வருடத்திற்குப் பிறகு தோனியுடன் போடப்பட்டு வந்த ஒப்பந்தத்தை பெப்சிகோ நிறுவனம் முடித்துக் கொண்டது.
2014 ஆம் ஆண்டு வரை பெப்சி, ரீபோக், பூஸ்ட், டாபர், சோனி, டிவிஎஸ் மோட்டார்ஸ், வீடியோகான், ஓரியண்ட் ஃபேன்ஸ் மற்றும் பிக் பஜார் என தோனி 18 பிராண்டுகளின் விளம்பர தூதராக 10 முதல் 12 கோடி வரை பெற்று வந்தார்.
ஆனால் இப்பொழுது, லாவா மொபைல்ஸ், பூஸ்ட் என இந்தப் பட்டியலில் பத்திற்கும் குறைவான நிறுவனங்களே உள்ளன. பெப்சி உட்பட சோனி டிவி மற்றும் டாபர் நிறுவனங்களும் தோனியுடனான ஒப்பந்தத்தை நீட்டிக்கப்போவதில்லை என்று அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த ஆண்டு, 27 மில்லியன் டாலர்கள் சம்பத்தது உலகின் மிக அதிக சம்பளம் பெறும் விளையாட்டு வீரராகவும் தோனி தேர்வு செய்யப்பட்டார். இவரது சம்பளம் மற்றும் தொழில்முறை வருவாய் 4 மில்லியன் டாலர்களாகக் கணக்கிடப்பட்டுள்ளது.
பல நிறுவனங்கள் தோனியை தங்களது விளம்பர தூதர் ஒப்பந்தத்தை ரத்து செய்வதற்கான காரணம் ஒரு வருட ஒப்பந்தத்திற்கு இவர் கேட்கும் அதிகபட்ச விலையான 8 கோடி ரூபாயே என்றும் கூறப்படுகிறது.

ஜெயலலிதாவை சீண்டும் கமல்: என்னுடைய முதல்வர் பினராயி விஜயன்; நான் ஒரு மலையாளி!-நடிகர் கமல் ஹாசனுக்கு பிரான்ஸ் நாட்டின் மிக உயரிய விருதான ‘செவாலியே’ விருது வழங்கப்படுவதாக அந்நாட்டின் கலாசாரத்துறை அறிவித்துள்ளது. கமலுக்கு கேரள முதல் பினராயி விஜயன் வாழ்த்து கூறினார்.இதற்கு நன்றி தெரிவித்து கமல் அனுப்பிய செய்தியை கேரள முதல்வர் பினராயி விஜயன் பேஸ்புக்கில் கேரள முதலமைச்சர் அலுவலகம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.அதில், என்னுடைய செவாலியே விருது பற்றி தாங்கள் கூறிய கருத்துக்கு மிகுந்த நன்றி. ஒருவர் கூறினார், எப்படி மற்றொரு மாநில முதல்வர் உங்களை இப்படி பாராட்டுகிறார் என்று. அதற்கு பின்னர் பதில் அளித்த நான் அவர் மற்றொரு மாநிலத்தின் முதல்வர் அல்ல, என்னுடைய மாநிலத்தின் முதல்வர். மலையாள திரைப்படங்களுக்கு செல்பவர்களிடம் கேட்டுப்பாருங்கள் நான் எந்த மாநிலத்தை சேர்ந்தவன் என்று. இவ்வாறு அந்த பதிவில் கமல் கூறியதாக இருந்தது.நடிகர் கமலுக்கு செவாலியே விருது அறிவிக்கப்பட்டது முதல் பலரும் வாழ்த்து கூறிவரும் வேளையில் முதல்வர் ஜெயலலிதா இன்னமும் வாழ்த்து கூறவில்லை. நாம் தமிழர் கட்சித் தலைவருமான சீமான் உள்ளிட்டோர், கமலுக்கு மோடி, ஜெயலலிதா ஏன் பாராட்டு தெரிவிக்கவில்லை, அவருக்கு பரிசுத் தொகை அறிவிக்கவில்லை என கேள்வி எழுப்பியிருந்தனர்.ஆனாலும் தமிழக முதல்வர் ஜெயலலிதாவிடம் இருந்து எந்த ஒரு வாழ்த்தும் வரவில்லை. இந்நிலையில் கேரள முதல்வர் பினராயி விஜயன் வாழ்த்து தெரிவித்ததால், ஜெயலலிதாவை இதன் மூலம் சீண்டவே கமல் தான் ஒரு மலையாளி எனவும், தனது முதல்வர் பினராயி விஜயன் எனவும் கூறி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளதாக பேசப்படுகிறது.

’சொல்வதெல்லாம் உண்மை’ நிகழ்ச்சியின் மறுபக்கம் தெரியுமா?-ஜீ தமிழ் தொலைக்காட்சியில், நடிகை லக்ஷ்மி ராமகிருஷ்ணன் நடத்தும் நிகழ்ச்சி சொல்வதெல்லாம் உண்மை. இந்நிகழ்ச்சியில் குடும்பப் பிரச்சனைகள் தீர்த்து வைக்கப்படுகிறது. அதனால் குடும்ப சிக்கல்களில் அகப்பட்டிருக்கும், பல குடும்பத்தினர் இந்நிகழ்ச்சியில் பங்கேற்று வருகின்றனர். இந்நிலையில், சொல்வதெல்லாம் நிகழ்ச்சியின் மீது பல புகார்கள் வந்த வன்னம் உள்ளது.

இந்நிலையில், அந்நிகழ்ச்சியில் பங்கேற்ற பலர் அவமானம் தாங்காமல் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். மேலும், ஜீ தமிழ் தொலைக்காட்சி, ஒருவரின் கருப்பு பக்கத்தை வைத்து பணம் சம்பாதிப்பதாக புகார் எழுந்துள்ளது.

இந்நிகழ்ச்சிக்கு குடும்பப் பிரச்சனை என்று வரும் ஒருவரை, அவர் கொண்டு வரும் பிரச்சனைக்கு மட்டும் தீர்வு சொல்லாமல், அவரின் கருப்புப் பக்கத்தை தெரிந்து கொண்டு, அதை மையப்படுத்தி, நிகழ்ச்சியை எடுத்து ஒளிபரப்பி பணம் சம்பாதிப்பதாக கூறப்படுகிறது. 99 சதவிகிதம் பிரச்சனை என்று தொலைக்காட்சியை தொடர்பு கொள்பவர் தான், இதில் பலி ஆடு என்றும் கூறுகின்றனர்.
”விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கு தான் இந்நிகழ்ச்சியை தொடர்ந்து நடத்தி வருவதாக தொலைக்காட்சி தரப்பில் கூறப்பட்டாலும், விழிப்புணர்வு ஏற்படுத்த ஒரு உயிரை பலி கொடுப்பது எந்த வகையில் நியாயம்” என்றும் கேள்வி எழுகிறது.”மக்கள் பிரச்சனையை தீர்க்க நீதிமன்றமும், காவல்நிலையமும் இருக்க, மக்கள் பிரச்ச்னையில் நீதி வழங்க இவர்களுக்கு என்ன உரிமை இருக்கிறது?” என்றும் சமூக ஆர்வலர்கள் கேட்கின்றனர்.”உண்மையில் அந்த அந்நிகழ்ச்சியின் தயாரிப்பாளருக்கோ அல்லது அந்நிகழ்ச்சியை நடத்தும் லக்ஷ்மி ராமகிருஷ்ணனுக்கோ மக்கள் மீதும், குடும்பங்கள் மீதும் அக்கறை இருந்தால் அவர்கள் ஏன், ஒரு தனிநபர் அந்தரங்கத்தை உலகம் அறிய செய்து அவர்களை அவமானப்பட வைத்து தற்கொலைக்கு தூண்ட வேண்டும்” என்றும் மனிதநேய அமைப்புகள் சில கேள்வி எழுப்பி உள்ளது.

இளைஞனை மிரட்டி உடலுறவு கொண்ட பெண் மீது வழக்கு பதிவு!-உத்தரப்பிரதேசத்தில் 16 வயது இளைஞன் ஒருவனை 23 வயது பெண் ஒருவர் கட்டாயப்படுத்தி உடலுறவு கொண்டதாக போஸ்கோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

தம்பதியரை ஏமாற்றிய நடிகர் சரத்குமார்!
தென்காசி தொகுதியின் எம்.எல்.ஏ வாக சரத்குமார் இருந்தபோது, அரசு மருத்துவமனை வளாகத்தில் சொந்த செலவில் பிரம்மாண்டமான பசுமைப் பூங்காவை அமைத்தார். மேலும், அந்த பூங்காவை பராமரிப்பதற்காக கணவன் மனைவியான ஞானமுத்து - வசந்தகுமாரி ஆகியோரை வேலைக்கு அமர்த்தி, அவர்களுக்கு தனது சொந்த நிதியிலிருந்து மாத ஊதியம் கொடுத்து வந்தார். இந்நிலையில் கடந்த சட்டமன்ற தேர்தல் சமயத்திலிருந்து அவர்களுக்கு ஊதியம் கொடுப்பதையும், பூங்கா பராமரிப்புக்கு நிதி கொடுப்பதையும் நிறுத்திவிட்டார். கடந்த பத்து மாதங்களாக இன்றளவிலும் எந்த தரப்பிலிருந்தும் அவர்கள் ஊதியம் பெறவில்லை.
பூங்காவை பராமரிக்காமலும், தண்ணீரி விட்டாமலும் இருந்தால் பூங்கா பசுமை இழந்து முழுவதுமாக சீரழந்துவிடும் என்பதால், ஞானமுத்துவும் வசந்தகுமாரியும் யாருடைய உதவியுமின்றி தங்களது சொந்த செலவில் பூங்காவை பராமரித்து, அதற்கு தினமும் தண்ணீர் ஊற்றி வருகின்றனர்.

பணம் கொடுத்து நாட்டை விட்டு தப்பினார்களா விடுதலைப் புலிகள்?-இலங்கையில் இறுதிக்கட்ட போர் நடைபெற்ற போது, பாதுகாப்பு அமைச்சகத்தின் உயர் அதிகாரி ஒருவருக்கு பணம் கொடுத்து, 200-க்கும் மேற்பட்ட விடுதலை புலிகள் அமைப்பின் உறுப்பினர்கள் நாட்டை விட்டு தப்பியோடியதாக வெளியுறவு அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

இலங்கை ஜனாதிபதியின் வலைத்தளத்தில் ஊடுருவிய 17 வயது மாணவன்-ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் அதிகாரப்பூர்வ வலைதளத்தில் சட்டவிரோதமாக பிரவேசித்தமை தொடர்பாக 17 வயது மாணவர் உட்பட இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களை, விளக்க மறியலில் வைக்கும்படி கொழும்பு மாஜிஸ்திரேட் உத்தரவிட்டுள்ளார்.

இலங்கை: கனகராயன்குளத்தில் புத்தர் சிலை உடைப்பு-வவுனியா கனகராயன்குளத்தில் அதிரடிப்படையினர் வணங்கி வந்த புத்தர் சிலையை அடையாளம் தெரியாதவர்கள் அடித்து நொறுக்கியிருப்பதாகக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இலங்கை: உள் நாட்டு போரில் காணாமல் போனோர் குறித்த நினைவு கூறல்-அனைத்துலக வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினமாகிய இன்று (செவ்வாய்க்கிழமை), இலங்கையில், உள் நாட்டு போரில் காணாமல் போனவர்களை நினைவு கூறும் நிகழ்வுகள் கிழக்கு மாகாணத்திலும் நடைபெற்றன.
http://www.sivakasiteacherkaruppasamy.blogspot.com

♈🇮🇳🌴🌴🌴🌴🌴🇮🇳♈

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here