மனிதநேய சிகரம் ஜீவா பிறந்தநாள் - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

மனிதநேய சிகரம் ஜீவா பிறந்தநாள்

இன்று ஜீவாவின் பிறந்த நாள். இத்தகைய மனித நேயத்தை ஒருமனிதன் கொண்டிருக்க முடியுமா என்ற அளவிற்கு ஜீவாவின் வாழ்க்கை அமைந்திருந்தது. டி.கே..எஸ் சகோதரர்கள் எழுதிய நூல் ஒன்றில் இது பற்றிய குறிப்பு உள்ளது.
டி.கே.எஸ்.சகோதரர்கள் நீலகிரியில் நாடகம் நடத்துவதற்காக முகாமிட்டிருந்த நேரம். அவர்களை பார்க்க ஜீவா வந்திருந்தார். அது கட்சி தடை செய்யப்பட்ட காலம். சகோதரர்கள் இருவருடன் ஒரு மரத்தடியில் நீண்ட நேரம் ஜீவா உரையாடிக் கொண்டிருந்தவர், திடீரென்று தூரத்தில் ஒரு நபரை காட்டி, நான் சென்ற பின் அவரை இங்கு அழைத்து வந்து உணவு போட்டு அனுப்புங்கள் என்று கூறியுள்ளார். டி.கே.எஸ் சகோதரர்களுக்கு குழப்பம் ஏற்பட்டுவிட்டது. ஏன் இவர் சென்ற பின்னர் அவரை அழைக்க வேண்டும் என்ற கேள்வி அவர்களுக்கு எழுந்துவிட்டது. ஜீவாவிடம் அவர்களால் ஏன் என்று கேட்க முடியவில்லை. ஆனால் ஜீவா சென்ற பின்னர், அவர் கூறியதைப் போலவே, அந்த நபரை மரியாதையோடு அழைத்து வந்து சோறுப்போட்டு அனுப்பி வைத்துள்ளார்கள்.
நீண்ட காலத்திற்கு பின்னர், இதை பற்றி ஜீவாவிடம் டி.கே. எஸ். சகோதரர்கள்    கேட்ட போது ஜீவா கூறிய தகவல் அவர்களை ஆச்சர்யத்தில் மூழ்கடித்துவிட்டது. ஜீவாவை கண்காணிக்க நியமிக்கப்பட்ட, போலீஸ் சி.ஐ.டி. தான் அவர். அது ஜீவாவுக்கு தெரிந்திருக்கிறது. தன்னை கண்காணிக்க அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட சி.ஐ.டி தான் என்ற போதிலும், உணவு கடைகள் எதுவுமே இல்லாத அந்த குளிர் பிரதேசத்தில் அவருக்கு எங்கே உணவுகிடைக்கும் என்ற மனித நேயத்தல் ஜீவா அவருக்கு சாப்பாடு போட சொல்லியுள்ளார். அது தான் ஜீவாவின் மனிதாபிமானம்.
....சி.மகேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here