அமராவதி ஆற்றில் பண மூட்டைகள்! அப்போ அரவக்குறிச்சி தேர்தல்? - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

அமராவதி ஆற்றில் பண மூட்டைகள்! அப்போ அரவக்குறிச்சி தேர்தல்?


“கரூர் அருகே நிலத்தில் புதைத்துவைக்கப்பட்டிருந்த பண விவகாரம் வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது. ஏற்கனவே, தேர்தலுக்குமுன்பு கரூர் அன்புநாதன் வீட்டில் பணம் பிடிபட்ட விவகாரத்தில்தான் அரவக்குறிச்சி தேர்தல் நிறுத்தப்பட்டது. அந்தத் தொகுதிக்கான தேர்தல் இன்றுவரை நடைபெறவில்லை. அதற்கான தேதியும் இன்னும் அறிவிக்கப்படவில்லை. இந்தச் சூழ்நிலையில் மண்ணில் புதைத்துவைத்திருந்ததாகச் சொல்லப்படும் பணம் யாருடையது என்பதுபற்றி விசாரணை தொடங்கியிருக்கிறது.
கரூர் அருகே, அமராவது ஆற்றங்கரையோரத்தில் சிறுவர்கள் சிலர் விளையாடிக் கொண்டிருந்தபோது, மண்ணில் சிமெண்ட் மூட்டைகளில் ஆயிரம் ரூபாய் நோட்டுகள் புதைத்து வைத்திருப்பதைப் பார்த்திருக்கிறார்கள். அந்த மூட்டைகளைப் பார்த்த சிறுவர்கள், அதை மூடிவைத்துவிட்டு வீட்டுக்குப் போய் தகவல்சொல்லி ஆட்களை அழைத்து வந்திருக்கிறார்கள். அதற்குள் அந்தப் பணம் மாயமாகிவிட்டது.

சிமெண்ட் மூட்டைகளில் பணத்தை நிலத்தில் புதைத்தது யார்? என்று போலீஸ் விசாரிக்கத் தொடங்கியுள்ளது. பணத்தை சர்வசாதாரணமாக மண்ணில் யார் புதைத்து வைத்திருப்பார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது. இது நடக்கவிருக்கும் அரவக்குறிச்சி தேர்தல் செலவுக்காக கொண்டு வரப்பட்ட பணமா அல்லது ஏற்கனவே தேர்தல் சமயத்தில் கெடுபிடிகள் அதிகம் இருந்ததால் அப்போது பதுக்கிய பணமா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. இந்தப் பண விவகாரம்பற்றி லோக்கல் போலீஸ் விசாரித்தால் எந்த உண்மையும் வெளியே வராது என்று சொல்கிறார்கள் விவரமறிந்தவர்கள்” என்பதுதான் அந்த மெசேஜ். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here