கரிசலாங்கண்ணி மூலிகை - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

கரிசலாங்கண்ணி மூலிகை


கரிசலாங்கண்ணி முக்கியமாக மருந்துக்குத்தான் அதிகப் பயன்படுத்தப்படுகிறது. கீரையாகவும் அதைப் பயன்படுத்தலாம். கரிப்பான், கரிசாலை, பொற்றிழைக்கரிப்பான் என்னும் வேறு பல பெயர்களும் இதற்கு உண்டு.

கரிசல் என்றால் தங்கம் என்று ஒரு பொருள் உண்டு. இது உடலைத் தங்கம் போல ஆக்கும் என்னும் கருத்தில் இந்தக் கீரைக்கு கரிசலாங்கண்ணி என்று பெயர் ஏற்பட்டுள்ளது.

நெல் வயல்களிலும், வாய்க்கால் வரப்புகளிலும், ஏரிக்கரைகளிலும், ஈரப்பிடியுள்ள வேறு இடங்களிலும் கரிசலாங்கண்ணிக் கீரை வளர்ந்து கிடப்பதைக் காணலாம்.

கரிசலாங்கண்ணியில் பொதுவாக நான்கு வகைகள் உள்ளன. அவற்றுள் மஞ்சள் பூ பூக்கும் வகைதான் சிறந்ததாகக் கருதப்படுகிறது.

மற்ற கீரை வகைகளில் உள்ளதைப் போலவே கரிசலாங்கண்ணியிலும் வைட்டமின்களும், தாது உப்புக்களும் குறிப்பிடத்தக்க அளவில் உள்ளன.

கரிசலாங்கண்ணிக் கீரை இரத்தத்தைச் சுத்தம் செய்கிறது. கண் பார்வையைத் தெளிவு படுத்துகிறது. தசையைக் கடுமையாக விரைக்கச் செய்யும் “தணுக் வாய்வு” என்னும் கொடிய நோய்க்குப் பயன்படுத்தப்படும் மருந்தில் இது முக்கியப் பொருளாகச் சேர்க்கப்படுகிறது.

கரிசலாங்கண்ணிக் கீரை உடலுக்கு உரமூட்டுகிறது. மண்ணீரலில் ஏற்படும் வீக்கம் முதலியவற்றைக் குணப்படுத்துகிறது. தோல் வியாதிகளுக்கும் இது மருந்தாகப் பயன்படுகிறது. கரிசலாங்கண்ணிக் கீரையினால் ஒற்றடம் கொடுத்தால் உடலில் ஏற்படும் வீக்கங்கள் வற்றும்.

இந்தக் கீரையை உண்பதாலும், இதன் சாற்றை தலையில் தேய்ப்பதாலும் முடி கருகருவென்று வளரும். குழந்தைகளைத் தேய்த்துக் குளிப்பாட்டவும் இந்தக் கீரையின் சாற்றைப் பயன்படுத்தலாம்.

கரிசலாங்கண்ணி இலைச் சாறு இரண்டு சொட்டுகளுடன் எட்டு சொட்டு தேனைக் கலந்து குழந்தைகளுக்குக் கொடுத்தால் சளி, நீர்க்கோவை போன்றவை குணமாகும்.

நல்லெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெயுடன் கரிசலாங்கண்ணிச் சாற்றைச் சேர்த்து காய்ச்சித் தயாரிக்கப்பட்ட தைலத்தை தலைவலி முதலியவற்றுக்குத் தேய்க்கலாம்.

தலையில் தேய்த்தால் தலை முடி கருமையாகும். இந்தத் தைலத்தை உடலில் வலியுள்ள இடத்தில் தய்த்தால் வலி நீங்கும்.

எடையையும், உடல் பருமனையும், தொந்தியையும் கரைக்க விரும்புபவர்கள் இந்தக் கீரையைத் தொடர்ந்து உணவில் சேர்த்துக்கொள்ளலாம்.

கரிசலாங்கண்ணிக் கீரையைப் பயன்படுத்தித் தயாரிக்கப்பட்ட கண்மை கண் நோய்களைத் தடுக்கிறது. இதன் சாற்றைக் காதில் விட்டால் காது வலி நீங்கும்.

சிகப்பு, மஞ்சள், நீலம், வெள்ளை என்னும் நான்கு வகைகள் இருப்பினும் வெள்ளைக் கரிசலாங்கண்ணியே அதிகம் கிடைக்கும்.

இது மேட்டுநிலங்களிலும் மலையடிவாரங்களிலும் தானாகவே வளரும்.கரிப்பான், கைகேசி, கையாந்தகரை, தேகராஜம், பிருங்கராஜம், கரிசனாங்கண்ணி, கரியசாலை, கையான், கரிசாலை,  கைவீசி இலை போன்ற பல பெயர்களாலும் அழைக்கப்படுகிறது. கையாந்தகரை எல்லோருக்கும் தெரிந்த பெயர்.

கசப்புச் சுவையுடைய இக்கீரை அதிக உஷ்ணம் கொண்டது. இக்கீரையைச் சமைத்து உண்டால் குஷ்டம், காமாலை வீக்கங்கள், பாண்டு போன்ற நோய்கள்  குணமாகும்.

மஞ்சள் கரிசலாங்கண்ணியைச் சமைத்து உண்டால் தேக மினுமினுப்பு கூடும். கண் பார்வை மிகும்.

குன்ம நோயால் உண்டாகும் கட்டிகள் உடையும். மூளைக்கும் நல்லது.

பாம்புக்கடி விஷம் நீங்க, இக்கீரையைச் சாறு பிழிந்து மூன்று அல்லது நான்கு தேக்கரண்டி சாப்பிட்டால் போதும்.

சிறு குழந்தைகளுக்கு அடிக்கடி ஜலதோஷம் பிடித்தால், இக்கீரையைச் சாறு பிழிந்து இரண்டு துளிகளும், சுத்தமான தேன் ஏழு துளிகளும் கலந்து குடிக்கத் தரவும். ஜலதோஷம் மாறும்.

தலைக்கு எண்ணெய் காய்ச்சும்போது அதில் கரிசலாங்கண்ணி கீரையைப் போட்டுக் காய்ச்சித் தேய்த்தால், தலைமுடி கருகருவென்று வளரும். இளநரையும் மாறும். கண்ணுக்கும் குளிர்ச்சி தரும்.

இக்கீரையின் வேர்களைப் பொடித்து உண்டால், மண்ணீரல், கல்லீரல் சம்பந்தமான நோய்கள் மாறும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here