TODAY NEWS 10/08/2016 - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

TODAY NEWS 10/08/2016

📡முக்கிய  செய்திகள் 🌍📡

                 📡🌍10\08\16🌍📡

http://www.sivakasiteacherkaruppasamy.blogsoot.com

🌍பாமக அங்கீகாரம் ரத்து கோரிய வழக்கு: தேர்தல் ஆணையத்துக்கு உயர்நீதிமன்றம் புது உத்தரவு

பாமகவின் அங்கீகாரத்தை ரத்து செய்யக் கோரிய வழக்கில், தனது வரம்புக்குள்பட்டு 3 மாதங்களுக்குள் தேர்தல் ஆணையம் பரிசீலித்து முடிவெடுக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

"கலப்பு திருமணங்களை ஆதரிக்க மறுக்கும் பாமகவால் தான் கௌரவக் கொலைகள் நடந்து வருகின்றன. ஜாதி ரீதியான பிரிவினையை ஏற்படுத்தும் வகையில் செயல்படும் பாமகவின் அரசியல் கட்சியின் அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும்' என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குரைஞர் வாராகி மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு தலைமை நீதிபதி எஸ்.கே.கௌல், நீதிபதி ஆர்.மகாதேவன் ஆகியோர் அடங்கிய முதல் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.



🌍1.90 லட்சம் குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களை காணோம்

புதுடில்லி : மத்திய குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் துறை இணை அமைச்சர் ஹரிபாய் பார்திபாய் சவுத்ரி, லோக்சபாவில் கூறியதாவது: கடந்த, 2006 - 07ல், நான்காவது இந்திய குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவன கணக்கெடுப்பு நடைபெற்றது. முதலிடத்தில் உ.பி.,அந்த புள்ளிவிபரப்படி, மொத்தம், 22,48,011 குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களில், 1,87,682 நிறுவனங்களை அடையாளம் காண முடியவில்லை. 15,63,974 நிறுவனங்கள் செயல்பாட்டில் உள்ளன; 4,96,355 நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. மாயமான நிறுவனங்களில், உ.பி., முதலிடத்தில் உள்ளது. இங்கு, பதிவு செய்யப்பட்ட, 3,03,589 குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களில், 35,231 நிறுவனங்களை காணவில்லை.



🌍மறைந்த முன்னாள் அருணாசலப் பிரதேச முதலமைச்சர் உடல் சொந்த ஊரக்கு வருகை

மறைந்த முன்னாள் அருணாசலப் பிரதேச முதலமைச்சர் கலிக்கோ புல் உடலானது இறுதி சடங்கிற்காக இட்டாநகரில் இருந்து அஜ்வா மாவட்டத்தில் உள்ள சொந்த ஊருக்கு எடுத்து வருகின்றனர். 


🌍போதையில் தகராறு செய்தவரைத் தட்டிக் கேட்ட இளைஞர் வெட்டிக்கொலை

திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகேயுள்ள சங்கோதிபாளையம் காந்தி நகர் ஏ.டி.காலனியில் வசித்து வந்தவர் முருகன் (வயது-35). இவரது மனைவி ஸ்டெல்லா (வயது-32). இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை மற்றும் 2 பெண் குழந்தைகள் உள்ளனர். அங்குள்ள விசைத்தறிக் கூடத்தில் முருகன் நெசவுத்தொழிலாளியாக வேலை செய்துவந்தார்.

இந்நிலையில், வழக்கம்போல் வேலைக்குச் சென்றுவிட்டு வீட்டுக்கு ஞாயிற்றுக்கிழமை திரும்பிய முருகன், வீட்டில் படுத்துத் தூங்கிக் கொண்டிருந்தபோது, பக்கத்துவீட்டைச் சேர்ந்த பண்ணாரி மகன் செந்தில் (வயது-37) என்பவர் மது போதையில் தகாத வார்த்தைகளால் சப்தம் போட்டுள்ளார்.

"குடித்துவிட்டு வந்து சத்தம் போடதே..." என்று செந்திலை தட்டிக்கேட்ட முருகனை, ஆவேசமட bைந்த செந்தில் அரிவாளால் வெட்டியுள்ளார்.
H b

🌍3-வது டெஸ்ட் போட்டி: முதல் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 234-5

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியில் முதல் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 5 விக்கெட்டுகளை இழந்து 234 ரன்கள் எடுத்துள்ளது



🌍தமிழகத்தில் 2.4 கோடி மாணவர்களுக்கு குடற்புழு நீக்க மாத்திரை வழங்க இலக்கு

தமிழகத்தில் 2.4 கோடி மாணவர்களுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கப்படவுள்ளன என பொது சுகாதாரத் துறை இயக்குநர் டாக்டர் குழந்தைசாமி தெரிவித்தார்.


🌍வேட்பாளர்களிடம் செலவுத் தொகையை வசூலிக்க அதிகாரம் இல்லை: உயர்நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தகவல்

அரவக்குறிச்சி, தஞ்சாவூர் ஆகிய 2 சட்டப் பேரவைத் தொகுதியில் முறைகேட்டில் ஈடுபட்ட வேட்பாளர்களிடம் இருந்து தேர்தல் செலவுகளை வசூலிக்க தங்களுக்கு அதிகாரம் இல்லை என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.


🌍பெண்கள் பாதுகாப்பு: ராமதாஸ் ஆர்ப்பாட்டம்

பெண்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி பாமக நிறுவனர் ராமதாஸ் சென்னையில் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்.


🌍ரியோ ஒலிம்பிக் போட்டி : காலிறுதிக்கு முன்னேறினார் விகாஸ்

ரியோ ஒலிம்பிக் போட்டியில் குத்துச்சண்டை முதல் சுற்றில் இந்திய வீரர் விகாஸ் கிருஷன் வெற்றி பெற்றார். 75 கிலோ பிரிவில் அமெரிக்க வீரர் கான்வெல்லை 3-0 என்ற புள்ளி கணக்கில் கிருஷன் வீழ்த்தினார். முதல்சுற்றில் வெற்றி பெற்றதை அடுத்து காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளார்.



🌍உத்தரகண்ட் மாநிலத்தில் கனமழை: மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

உத்தரகண்ட் மாநிலம், ஹல்த்வானி நகரத்தில் உள்ள பகுதிகளில் தொடர்ந்து கன மழை பெய்து வருவதால் சாலைகள் முழுவதும் தண்ணீர் தேங்கி இருக்கிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது



🌍கூடங்குளம் அணுமின் நிலையத்தின் முதல் அலகு இன்று நாட்டுக்கு அர்ப்பணிப்பு

பிரதமர் நரேந்திர மோடி, ரஷியன் குடியரசுத் தலைவர் விளாடிமிர் புட்டின் மற்றும் தமிழக முதல்வர் ஜெயலலிதா கூட்டாக இணைந்து கூடங்குளம் அணுமின் நிலையத்தின் முதல் அலகை இன்று நாட்டுக்கு அர்ப்பணிக்கின்றனர்.




🌍நுங்கம்பாக்கம் ரெயில் நிலையத்தில் சுவாதி கொலை செய்யப்பட்ட இடத்தை ரெயில் பயணிகள் வசதிகள் குழு பார்வையிட்டது பாதுகாப்பு ஆணையரிடம் சரமாரியாக கேள்வி கேட்டனர்



🌍ஓடும் ரயிலில் நடந்த கொள்ளை குறித்து பரபரப்புத் தகவல்: ரயில் நிலையங்களில் பதிவான சிசிடிவி காட்சிகள் ஆய்வு

சென்னை: ஓடும் ரயிலில் ரூ.5.78 லட்சம் கொள்ளையடிக்கப்பட்ட விவகாரத்தில் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ள தனிப்படை போலீசார், சேலம் முதல் சென்னை வரை அனைத்து ரயில் நிலையங்களிலும் சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர். சேலத்திலிருந்து சென்னைக்கு கொண்டு வரப்பட்ட ரூ.342 கோடியில் ரூ.5.78 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள ரயில்வே பாதுகாப்பு படையினர் 10க்கும் மேற்பட்ட தனிப்படைகள் அமைத்து விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். கொள்ளை நடந்த ரயிலை தமிழக காவல் துறை தலைவர் அசோக்குமாரும் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்துள்ளார்.


🌍ஹெட்மெட் போடலையா; ரூ.2 ஆயிரம் அபராதம்

புதுடில்லி : மோட்டார் வாகன சட்ட திருத்த மசோதா, லோக்சபாவில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேறியது. இதன்படி ஹெட்மெட் இல்லாமல் மோட்டார் சைக்கிள் ஓட்டினால், ரூ.2 ஆயிரம் அபராதம் உட்பட, சாலை விதி மீறலுக்கான அபராதம் பலமடங்கு உயர்த்தப்படுகிறது.மசோதா குறித்து படிப்பதற்கு போதிய அவகாசம் அளிக்காமல், அவசரமாக தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கூறிய எதிர்ப்பையும் மீறி, மோட்டார் வாகன சட்ட திருத்த மசோதா, லோக்சபாவில் நேற்று தாக்கல் செய்யப்பட்டு, நிறைவேறியது.குடிபோதையில் வாகனம் ஓட்டினால், 10,000 ரூபாய் அபராதம்; சாலை விபத்தில் உயிரிழந்தால், 10 லட்சம் ரூபாய் இழப்பீடு; அதிக வேகமாக வாகனத்தை ஓட்டினால், 4,000 ரூபாய் அபராதம்; ஹெட்மெட் இல்லாமல் மோட்டார் சைக்கிள் ஓட்டினால், 2,000 ரூபாய் அபராதம் உட்பட, சாலை விதி மீறலுக்கான அபராதம் பலமடங்கு உயர்த்தப்படுகிறது.




🌍சென்னைக்கு விமானத்தில் அழைத்து வருகிறார்கள்; மாதம் ரூ.7 லட்சம் ஒப்பந்த அடிப்படையில் இளம்பெண்களை விபசாரத்தில் தள்ளும் கொடுமை; நட்சத்திர ஓட்டல், முக்கிய பிரமுகர் வீட்டில் போலீசார் அதிரடி சோதனை



🌍கூடங்குளம் முதல் உலை நாட்டுக்கு இன்று அர்ப்பணிப்பு

திருநெல்வேலி : கூடங்குளம் முதலாவது அணு உலை நாட்டுக்கு இன்று(ஆக.,10) அர்ப்பணிக்கப்படுகிறது. பிரதமர் நரேந்திர மோடி, ரஷிய அதிபர் புதின், தமிழக முதல்வர் ஜெயலலிதா ஆகியோர் 'வீடியோ கான்பரன்சிங்' மூலம் இதில் பங்கேற்கின்றனர்.திருநெல்வேலி மாவட்டம், கூடங்குளத்தில் தலா 1,000 மெகாவாட் உற்பத்தித் திறன் கொண்ட இரு அணுஉலைகள் உள்ளன. இதில், முதல் அணுஉலை நாட்டுக்கு இன்று அர்ப்பணிக்கப்படுகிறது. இன்று மாலை 3.30 மணிக்கு நடைபெறும் நிகழ்ச்சியில் 'வீடியோ கான்பரன்சிங்' மூலம் ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின், இந்திய பிரதமர் நரேந்திர மோடி, தமிழக முதல்வர் ஜெயலலிதா ஆகியோர், முதல் உலையை நாட்டுக்கு அர்ப்பணிக்கவுள்ளனர்.




🌍பேரவையில் ஜனநாயகம் மீறல், அதிமுகவை கண்டித்து திமுக பொதுக்கூட்டம்

திருவொற்றியூர்: சென்னை வடக்கு மாவட்டம், மாதவரம் தெற்கு பகுதி திமுக சார்பில், சட்டமன்றத்தில் ஜனநாயகத்தை மீறும் அதிமுகவினரை கண்டித்து மாதவரம் பஜார் தெருவில் நேற்று முன்தினம் பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட செயலாளர் மாதவரம் சுதர்சனம் எம்எல்ஏ தலைமை வகித்தார். தெற்கு பகுதி செயலாளர் துக்காராம் வரவேற்றார். கவுன்சிலர் எம்.டி.துரை, மாவட்ட துணை செயலாளர் ராமகிருஷ்ணன் முன்னிலை வகித்தனர். 


🌍வேலை நிறுத்தம் தொடரும்: மதுரை வழக்கறிஞர்கள் அறிவிப்பு

வழக்கறிஞர்கள் சட்டத்திருத்தத்தை திரும்ப பெறக்கோரி தமிழகம் முழுவதும் செவ்வாய்க்கிழமை வழக்கறிஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மதுரை மாவட்ட நீதிமன்றத்தின் முன்பு 100க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது, தங்களது கோரிக்கைகளை நிறைவேற்றும் வரை நீதிமன்றம் முன்பும் சென்னை உயர்நீதிமன்றம் முன்பும் போராட்டம் நடத்தப்படும் என்று தெரிவித்தனர்.



🌍மத்திய அரசின் கார்பரேட் ஆதரவுக் கொள்கையைக் கண்டித்து அனைத்துத் தொழிற்சங்கங்கள் ஆர்ப்பாட்டம்

தொழிலாளர், விவசாயிகள், வணிகர்கள், பொதுமக்கள் மற்றும் தேச நலனுக்கு எதிரான மத்திய அரசின் கார்பரேட் ஆதரவுக் கொள்கையைக் கண்டித்து புதுக்கோட்டையில் அனைத்துத் தொழிற்சங்கங்கள் சார்பில் அர்ப்பாட்டம் நடைபெற்றது.



🌍குத்தாட்டம் போட்டதை டிரைவர் கண்டித்ததால் கல்வீசி பஸ் கண்ணாடி உடைப்பு போதை வாலிபர்கள் 2 பேர் கைது

துரைப்பாக்கம்: பஸ்சில் குத்தாட்டம் போட்டு வந்ததை கண்டித்து, கீழே இறக்கி விட்டதால் ஆத்திரம் அடைந்த வாலிபர்கள் பஸ் மீது சரமாரி கற்கள் வீசி தாக்கினர். இதில் கண்ணாடி உடைந்து நொறுங்கியது. இதுதொடர்பாக, 2 பேரை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர். 


🌍சுவாதி பாணியில் மீண்டும் ஒரு சம்பவம் : அண்ணன் முறையானதால் காதலிக்க மறுத்த தங்கையை கொல்ல முயன்ற இன்ஜினியர்

சென்னை : சென்னை பல்லாவரம் சந்தை ரோடு எப்போதும் பரபரப்பாக காணப்படும் பகுதி. இங்கு நேற்று முன்தினம் மாலை இளம் பெண் ஒருவரை, வாலிபர் ஒருவர் பின் தொடர்ந்து வந்து அவரின் கையை பிடித்து இழுத்து தகராறு செய்து கொண்டு இருந்தார். இதனால் ஆத்திரமடைந்த அந்தப்பெண், தன் காலில் இருந்த செருப்பை கழற்றி அந்த வாலிபரை சரமாரியாக தாக்கினார். இதை சற்றும் ஏதிர்பார்க்காத அந்த வாலிபர் கோபத்தில், தான் மறைத்து வைத்திருந்த பிளேடை எடுத்து அந்த பெண்ணின் முகம், உடல் உள்பட பல இடங்களில் அறுத்தார். இதனால் அவர் வலி தாங்காமல் அலறியபடி கூச்சலிட்டார். மேலும் அவரது உடலில் இருந்து ரத்தம் பீறிட்டு கொட்டியது. 

இந்த சம்பவங்களை பார்த்த பொதுமக்களின் மனதில், நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் இன்ஜினியர் சுவாதி கொலை செய்யப்பட்ட சம்பவம் நினைவுக்கு வந்ததாக கூறப்படுகிறது.

எனவே, பொதுமக்களில் ஒரு பகுதியினர் கடும் கோபத்துடன் பாய்ந்து சென்று அந்த வாலிபரை மடக்கி பிடித்து தர்மஅடி கொடுத்தனர். மேலும் இதுகுறித்து தகவலறிந்த பல்லாவரம் போலீசார் சம்பவம் இடம் விரைந்து வந்து படுகாயங்களுடன் ரத்த வெள்ளத்தில் இருந்த பெண்ணை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், பொது மக்கள் அந்த வாலிபரை பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.




🌍காஷ்மீரில் மனிதஉரிமை மீறல்: பாக்., புகார்

இஸ்லாமாபாத் : ஹிஸ்புல் முஜாகிதீன் அமைப்பின் தளபதி பர்கான் வானி பாதுகாப்பு படையினரால் கொல்லப்பட்டதை தொடர்ந்து காஷ்மீரில் கடந்த சில வாரங்களாக வன்முறை சம்பவங்கள் நடைபெற்று வருகிறது. இதனால் அங்கு பதற்றமான சூழல் நிலவி வருகிறது.இந்நிலையில், காஷ்மீர் மாநிலத்தில் மனித உரிமை மீறல்கள் நடைபெறுவதாக ஐக்கிய நாடுகள் சபையில் பாகிஸ்தான் புகார் அளித்துள்ளது. 



🌍அருணாசலபிரதேச முன்னாள் முதல்–மந்திரி கலிகோபுல் தூக்குப்போட்டு தற்கொலை சாவில் மர்மம் இருப்பதாக குற்றச்சாட்டு; முதல்–மந்திரி வீடு முற்றுகை


🌍திருச்சியில் இருந்து ரயிலில் அனுப்பிய 383 கோடிக்கு பலத்த பாதுகாப்பு

திருச்சி: கடந்த சில தினங்களாக, திருச்சி, தஞ்சாவூர், கும்பகோணம் பகுதிகளில் உள்ள வங்கி கிளைகளில் இருந்து கிழிந்த ரூபாய் நோட்டுகள் திரும்ப பெறப்பட்டன. ரூ.382.67 கோடி பணம் பெறப்பட்டு திருச்சி ஜங்சன் நிலையத்தில் இருந்து மங்களூர் எக்ஸ்பிரஸ் மூலம் சென்னைக்கு அனுப்பும் பணி நேற்று மேற்கொள்ளப்பட்டது. சேலத்தில் இருந்து ரயில் மூலம் சென்னை கொண்டு செல்லப்பட்ட பணம் கொள்ளையடிக்கப்பட்டதால், பலத்த பாதுகாப்புடன் அனுப்பி வைக்கும் பணி நடந்தது. 

கிழிந்த நோட்டுகளை 216 பெட்டிகளில் பார்சல் செய்தனர். பண பெட்டிகள் ஏற்றி வைக்கப்பட்டிருந்த ரயிலின் பார்சல் பெட்டி இன்ஜினுக்கு அடுத்து இணைக்கப்பட்டு, இரவு 10.20 மணிக்கு போலீஸ் பாதுகாப்புடன் சென்னைக்கு ரயில் புறப்பட்டது.



🌍குமரி அனந்தன் உள்ளிட்ட 30 பேர் கைது

தியாகிகள் தினத்தை முன்னிட்டு தியாகி சின்ன சுப்பையா நாயக்கர் நினைவு அறக்கட்டளை சார்பில் விடுதலை போராட்ட வீராங்கணை சொர்ணம்மாள் சார்பில் விடுதலை போராட்ட வீராங்கணை சொர்ணம்மாள் திருஉருவ படத்தை மதுரை மாநகராட்சி வளாகத்தில் வைப்பதற்காக காங்கிரஸ் கட்சியினர் திட்டமிட்டனர். அதற்காக தமுக்கம் மைதானம் அருகே உள்ள தியாகிகள் நினைவு தூண் அருகே இருந்து சொர்ணம்மாள் திருஉருவ படத்தை ஊர்வலமாக தமிழ்நாடு காந்தி பேரவை தலைவர் குமரி அனந்தன் தலைமையில் மாநகராட்சிக்கு வந்தனர்.

அப்போது போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி, அனுமதி இல்லாமல் ஊர்வலமாக வந்து சொர்ணம்மாள் திருஉருவ படமத்தை மாநகராட்சியில் வைக்க முயன்றதற்காக கைது செய்தனர்.


🌍கூடங்குளம் அணுமின் நிலையத்தின் முதல் அலகு இன்று நாட்டுக்கு அர்ப்பணிப்பு

சென்னை: பிரதமர் நரேந்திர மோடி, ரஷியன் குடியரசுத் தலைவர் விளாடிமிர் புட்டின் மற்றும் தமிழக முதல்வர் ஜெயலலிதா கூட்டாக இணைந்து கூடங்குளம் அணுமின் நிலையத்தின் முதல் அலகை இன்று நாட்டுக்கு அர்ப்பணிக்கின்றனர். 


🌍துப்புரவுத் தொழிலாளர் பணிக்கு விண்ணப்பித்த பட்டதாரிகள்

கான்பூர் : உ.பி.,யில் கழிவறை சுத்தம் செய்வது உள்ளிட்ட துப்புரவு பணிகளுக்கு பட்டதாரிகள் உட்பட 5 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.உ.பி.,யில் கழிவறை சுத்தம் செய்யும் துப்புரவுத் தொழிலாளர் பணிக்கு முதுநிலை பட்டதாரிகள், இளநிலைப்பட்டதாரிகள் உட்பட 5 லட்சம் பேர் விண்ணப்பித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 



🌍ரூ.399-க்கு சலுகை விலையில் விமான டிக்கெட்; சுதந்திர தினத்தை முன்னிட்டு பிரபல தனியார் விமான நிறுவனம் சிறப்பு சலுகை


🌍பவுனுக்கு ரூ.104 உயர்வு

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை செவ்வாய்க்கிழமை பவுனுக்கு ரூ.104 அதிகரித்து, ரூ.23,648-க்கு விற்பனையானது.

சென்னையில் செவ்வாய்க்கிழமை மாலை நிலவரப்படி ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.13 அதிகரித்து, ரூ.2,956-க்கு விற்பனையானது.

வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ.125 அதிகரித்து, ஒரு கிலோ கட்டி வெள்ளி ரூ.47,405-க்கு விற்பனையானது.

செவ்வாய்க்கிழமை

விலை நிலவரம் (ரூபாயில்)

ஒரு கிராம் தங்கம் 2,956

ஒரு பவுன் தங்கம் 23,648

ஒரு கிராம் வெள்ளி 50.70

ஒரு கிலோ வெள்ளி 47,405

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here