🌍📡🌍📡🌍📡🌍📡🌍📡🌍
http://www.sivakasiteacherkaruppasamy.blogspot.com
🌍🌍🌍🌍🌍🌍🌍🌍🌍🌍🌍
📡ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிற்சங்கங்கள் இன்று நாடு தழுவிய போராட்டத்தில் ஈடுபடுகின்றன.
🌍நியூசிலாந்து நாட்டில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனையடுத்து அங்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது.ரிக்டரில் 7.1 ஆக பதிவாகியுள்ளது
📡தமிழக ஆளுநராக வித்யாசாகர் ராவ் நாளை பதவியேற்பு
🌍பீகார் மாநிலம் கயாவில் நக்சல்களுக்கும் - பாதுகாப்பு படை வீரர்களுக்கும் இடையே கடும் துப்பாக்கிச் சண்டை நிலவி வருகிறது.
📡விண்ணில் அமைக்கப்பட்டு வரும் சர்வதேச விண்வெளி ஆய்வு கூடத்திற்கு பொருட்களை ஏற்றிச் சென்ற அமெரிக்க தனியார் ராக்கெட் 'ஸ்பேஸ்எக்ஸ் - பால்கன் 9' திடீரென நடுவானில் வெடித்துச் சிதறியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
🌍மின்யுக இந்தியா (டிஜிட்டல் இந்தியா) திட்டத்தின் கீழ் அனைத்துத் துறைகளின் செயல்பாடுகளையும் கணினிமயமாக்குவதற்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது-- மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ரவி சங்கர் பிரசாத்
📡ரயில் கொள்ளை வழக்கில், உடனுக்குடன் தகவல் பரிமாற, 'வாட்ஸ் - ஆப் குரூப்' துவங்க, போலீஸ் அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.
🌍சட்டப்பேரவையில் இருந்து எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட 79 திமுக உறுப்பினர்களை இடைநீக்கம் செய்தது தொடர்பாக, சட்டப்பேரவை செயலர் 4 வாரத்தில் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டுமென சென்னை உயர் நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது.
📡பெட்ரோல், டீசல் விலை உயர்வு-- மக்கள் மீது நடத்தப்படும் இரக்கமற்ற தாக்குதல் - அன்புமணி ராமதாஸ்
🌍பக்ரீத் பண்டிகையின் போது ஒட்டகத்தை அறுத்து குர்பானி கொடுப்பது முஸ்லிம்களின் மரபாகும். இதற்குத் தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளதைக் கண்டித்து தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தினர் சென்னையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
📡ஆபாச சிடி விவகாரம் : தாம் தலித் என்பதால் சதித்திட்டம் மூலம் பழிவாங்கப்பட்டுள்ளதாக டெல்லி முன்னாள் அமைச்சர் சந்தீப் குமார் கூறியுள்ளார்.
🌍முன்னாள் மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் மீது, விதிகளை மீறி மருத்துவக் கல்லூரிகளுக்கு அனுமதி வழங்கியதாக தொடரப்பட்டுள்ள வழக்கை கீழ் நீதிமன்றம் விசாரிக்கத் தடை இல்லை என்று டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக அன்புமணி தாக்கல் செய்த மனுவையும் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
📡மருத்துவப் படிப்பில் சேர இடம் வாங்கித் தருவதாக கூறி பலரிடம் ரூ.75 கோடி மோசடி செய்த வழக்கில் எஸ்.ஆர்.எம் குழுமத் தலைவர் பாரிவேந்தரின் ஜாமீன் மனுவை சைதாப்பேட்டை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
🌍கேரளாவில் கைது செய்யப்பட்ட ஐஎஸ்ஐஎஸ் இளைஞர்கள் 2 பேர் கோரள போலீஸ் மூலம் மும்பை போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டனர். அவர்களுக்கு செப்டம்பர் 6ம் தேதி வரை போலீஸ் காவல் வழங்கப்பட்டுள்ளது.
📡நக்கீரன் ஆசிரியர் கோபால் மற்றும் நிருபர்கள் மீதான 18 அவதூறு வழக்குகளுக்கும் சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தடை விதித்துள்ளது.
🌍கடந்த 1971ம் ஆண்டு போர் வரை, விமானப்படை முழுமையாக பயன்படுத்தவில்லை , ராணுவ தீர்வு கண்டிருந்தால் பாகிஸ்தான் ஆகிரமிப்பு காஷ்மீர் இந்தியாவுடன் இணைந்திருக்கும் -- விமானப்படை தளபதி அருப் ராகா
📡டிடிஎச் மூலம் ஒளிபரப்பப்படும் இந்திய சேனல்களுக்கு பாகிஸ்தான் மின்னணு ஊடக ஒழுங்குமுறை ஆணையம் தடைவிதித்துள்ளது.
🌍சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக என்.ஆதிநாதன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
📡கடந்த 2013ம் ஆண்டு அனைத்து சமுதாய கூட்டமைப்பு கூட்டத்தை கூட்டி பரபரப்பை ஏற்படுத்திய ராமதாஸ், மீண்டும் தலித் அல்லாதோர் அமைப்புகளோடு சேர்ந்து அடுத்த ஆட்டத்தை துவக்கி விட்டார். தலித் அல்லாத அனைத்து சமூக அமைப்புகளின் தலைவர்களை ஒருங்கிணைத்து, பெண்களின் பாதுகாப்பும், ஐ.நா., ஒப்பந்தங்களும். தமிழ்நாட்டில் செய்ய வேண்டியது என்ன? என்ற தலைப்பில் சேலத்தில் கருத்தரங்களை நடத்தியுள்ளார் ராமதாஸ்.
🌍காஞ்சி மடாதிபதி ஜெயேந்திரர் மடம் திரும்பினார்
📡அமெரிக்கா மூலம் தமிழகம், ராஜஸ்தானில் காலநிலை மாற்றத்தை எதிர் கொள்ள, ஏழு கோடி ரூபாய் நிதியுதவி கிடைத்துள்ளது. இதில், மதுரை, திண்டுக்கல், திருநெல்வேலி, கிருஷ்ணகிரி மாவட்டங்களுக்கு, 3.40 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
🌍ஜி.எஸ்.டி., எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி மசோதாவுக்கு, 16வது மாநிலமாக ஒடிசா, நேற்று ஒப்புதல் அளித்தது.
📡திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் அருகேயுள்ள மணிமுத்தாறு பகுதியில் தென்னந்தோப்பில் புகுந்த கரடி அங்கிருந்த விவசாயிகளைக் கண்டு மிரண்டு, தென்னை மரத்தில் ஏறியது
📡பிரதமர் மோடி இன்று வியட்நாம் பயணம்
வியட்நாம், சீனா ஆகிய நாடுகளுக்கு 4 நாள் சுற்றுப் பயணம் மேற்கொள்ளும் பிரதமர் மோடி, முதற்கட்டமாக இன்று வியட்நாம் செல்கிறார்.
பிரதமர் நரேந்திர மோடி வியட்நாம், சீனா ஆகிய நாடுகளுக்கு 4 நாட்கள் சுற்றுப்பயணத்தை இன்று(செப்.,2) மேற்கொள்கிறார். முதலில், வியட்நாம் செல்லும் அவர், அந்நாட்டின் முக்கிய தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துகிறார். ராணுவம், பாதுகாப்பு, வர்த்தகம் உள்ளிட்ட துறைகளில் உறவை வலுப்படுத்துவது உள்ளிட்டவை பேச்சுவார்த்தையில் இடம் பெறும் எனத் தெரிகிறது.
நாளை சீனாவின் ஹேங்சூ நகருக்கு செல்லும் பிரதமர் மோடி, அங்கு 4 மற்றும் 5ம் தேதிகளில், நடைபெறும் ஜி-20 நாடுகளின் உச்சி மாநாட்டில் பங்கேற்கிறார். மேலும் சீன அதிபர் ஜி ஜின் பிங்குடன் பேச்சுவார்த்தை நடதுகிறார். 'பிரிக்ஸ்' நாடுகளின் தலைவர்கள் கூட்டத்திலும் கலந்து கொள்கிறார். தனது 4 நாள் சுற்றுப்பயணத்தை முடித்துக் கொள்ளும் பிரதமர் மோடி, வரும் 5ம் தேதி இந்தியா திரும்புகிறார்.
🌍ஜனாதிபதி ஒப்புதலுக்கு செல்கிறது ஜி.எஸ்.டி., மசோதா
ஜி.எஸ்.டி., மசோதாவை ஒடிசா மாநில சட்டசபை நிறைவேற்றியதையடுத்து 50 சதவீத மாநிலங்களின் ஆதரவு கிடைத்தது. இதனையடுத்து இம்மசோதா ஜனாதிபதியின் ஒப்புதலை பெற அனுப்பப்படவுள்ளது.
நாடு முழுவதும் ஒரே சீரான, ஜி.எஸ்.டி., வரிவிதிப்பு முறை அமல்படுத்தப்பட உள்ளது. பார்லிமென்டில் இந்த மசோதா, ஆகஸ்ட் 8ல், நிறைவேற்றப்பட்டது. அரசியல் சட்டத் திருத்த மசோதா என்பதால், 50 சதவீத மாநிலங்கள் இதற்கு ஒப்புதல் அளிக்க வேண்டும். குறைந்தபட்சம், 16 மாநிலங்களில் ஒப்புதல் தேவை என்ற நிலையில், அசாம், பீஹார், மேற்குவங்கம், ஜார்க்கண்ட் தெலுங்கானா, சிக்கிம் உட்பட, அடுத்தடுத்து, 15 மாநில சட்டசபைகளில், ஜி.எஸ்.டி., மசோதாவுக்கு ஒப்புதல் தீர்மானம் நிறைவேறியது; 16வது மாநிலமாக, ஒடிசா நேற்று ஒப்புதல் வழங்கியது. இதனையடுத்து ஜனாதிபதியின் ஒப்புதலுக்காக மசோதா அனுப்பப்பட உள்ளது.
இதுகுறித்து வருவாய்த் துறைச் செயலர் ஹஷ்முக் ஆதியா தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது: ஜி.எஸ்.டி., மசோதாவை அங்கீகரித்து ஒடிசா மாநில சட்டசபை தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. இதன்மூலம், மசோதா சட்டமாக்கப்படுவதற்குத் தேவையான 50 சதவீத மாநிலங்களின் ஆதரவு கிடைத்துவிட்டது.
மசோதாவை சட்டமாக்கும் பணிகள், 23 நாள்களிலேயே நிறைவடைந்துவிட்டன. இனி, ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் ஒப்புதலுக்கு அனுப்பப்படும். நவம்பரில், பார்லிமென்ட்டில் இம்மசோதா நிறைவேற்றப்பட வேண்டும். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
வரும் 2017 ஏப்., 1ம் தேதியிலிருந்து ஜி.எஸ்.டி., வரி விதிப்பு முறையை நாட்டில் அறிமுகப்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
📡காஷ்மீர் விவகாரம் குறித்து ஐ.நா.,வுக்கு கடிதம் எழுதினார் நவாஸ்
ஜம்மு - காஷ்மீரில் மனித உரிமை மீறல்கள் குறித்து, உண்மை கண்டறியும் குழுவை அனுப்பி விசாரணை நடத்த வேண்டும் என ஐ.நா.,வுக்கு பாக்., பிரதமர் நவாஸ் ஷெரிப் மீண்டும் கடிதம் எழுதியுள்ளார்.
காஷ்மீரில் ஹிஸ்புல் முஜாஹிதீன் பயங்கரவாதி புர்கான் வானி என்ற பயங்கரவாதி சுட்டுக்கொல்லப்பட்டதை தொடர்ந்து, அங்கு கலவரம் ஏற்பட்டது 65 பேர் பலியாகினர். ஆயிரக்கணக்கானோர் காயமடைந்துள்ளனர்.
காஷ்மீரில் பாதுகாப்புப் படையினர் மனித உரிமை மீறல்களில் ஈடுபடுவதாக குற்றம்சாட்டிய பாக்., இவ்விவகாரத்தில் ஐ.நா., தலையிட வேண்டும் எனவும் கடிதம் மூலம் கோரிக்கை விடுத்திருந்தது. இந்நிலையில், பாக்., பிரதமர் நவாஸ் ஷெரிப், ஐ.நா..பொதுச் செயலளர் பான் கீ மூனுக்கு மீண்டும் ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில் ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் மீறப்படும் மனித உரிமைகளை, பதற்ற நிலையுடன் மட்டும் ஒப்பிடக் கூடாது என குறிப்பிடப்பட்டுள்ளதாக பாக்., வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் நபீஸ் ஜகாரியா தெரிவித்துள்ளார்.
🌍இன்று பஸ்கள் ஓடும் போக்குவரத்து கழகம் அறிவிப்பு
மதுரை:'மதுரை, திண்டுக்கல், தேனி, விருதுநகர் மாவட்டங்களில் வழக்கம் போல் இன்று (செப்.,2) அரசு பஸ்கள் இயக்கப்படும்' என போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.
மதுரை மண்டல போக்குவரத்து கழக அதிகாரி ஒருவர் கூறியதாவது: கோரிக்கைகளை வலியுறுத்தி, அனைத்து தொழிற்சங்கங்களும் இன்று வேலைநிறுத்தம் அறிவித்துள்ளன. இதற்கும் அரசு பஸ்களை இயக்குவதற்கும் சம்பந்தம் இல்லை.
வழக்கம்போல், அனைத்து வழித்தடங்களிலும் பஸ்கள் இயக்கப்படும். வேலைநிறுத்தத்தில் தொழிற்சங்க நிர்வாகிகள் மட்டுமே கலந்து கொள்வர்; தொழிலாளர்கள் வழக்கம் போல் பணிக்கு வருவர் என்றார்.
📡பாடம் நடத்த உத்தரவு
_தமிழகத்தில் உள்ள பல ஆசிரியர் சங்கங்களைச் சேர்ந்த, 50 ஆயிரம் பேர், இன்றைய போராட்டத் தில் பங்கேற்கின்றனர். பள்ளிகளை, பெற்றோர் - ஆசிரியர் கழக ஆசிரியர்கள், சிறப்பாசிரியர்கள் மூலம் சமாளிக்க, கல்வி அதிகாரிகள் ஏற்பாடு செய்துள்ளனர். ஆசிரியர் இல்லாத வகுப்பு களில், தலைமை ஆசிரியர்களும் பாடங்கள் நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த போராட்டத்தில், ஜாக்டோ, டேக்டோ சங்கங்கள் பங்கேற்கவில்லை_
🌍வங்கி சேவை பாதிக்கும்:
_மத்திய தொழிற்சங்கங்கள், இன்று நடத்தும், 'ஸ்டிரைக்'கில், அனைத்துஇந்திய வங்கி ஊழி யர் சம்மேளனம் உள்ளிட்ட, பல தொழிற் சங்கங் களும் பங்கேற்கின்றன. ஆறு லட்சம் வங்கி அதிகாரிகள் பங்கேற்பதால், தமிழகம் உட்பட, நாடு முழுவதும் வங்கிப் பணிகள் பாதிக்கும்;_
_ஏ.டி.எம்.,களில், பணம் இருக்கும் வரை, எடுக்கலாம். தபால் துறையிலும் பணிகள் பாதிக்கும்._
_தமிழகத்தில், அரசு ஊழியர் சங்கம், வருவாய் துறை சங்கத்தினரும் போராட்டத்தில் பங்கேற்ப தால், தாசில்தார், கலெக்டர் அலுவல கம் உட்பட, அரசுத் துறை அலுவலகங்களிலும், பணிகள் பாதிக்க வாய்ப்பு உள்ளது. ஆட்டோ, லாரிகள் போக்குவரத்தும் பாதிக்கப்படும் என தெரிகிறது._
📡சுங்க சாவடிகளில் கட்டணம் குறைப்பு தமிழகத்தில் முதல் முறை அமல்
தமிழகத்தில் உள்ள, 22 சுங்கச்சாவடிகளில், நேற்று முதல் கட்டணம், ஒரு ரூபாய் முதல், நான்கு ரூபாய் வரை குறைக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில், 5,004 கி.மீ., நீளமுள்ள தேசிய நெடுஞ்சாலைகளில், 3,006 கி.மீ., சாலைகள், தேசிய நெடுஞ்சாலை ஆணைய கட்டுப்பாட்டில் உள்ளன. இதில், 43 இடங்களில், சுங்கச்
சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இங்கு, தேசிய நெடுஞ்சாலை ஆணையம் மட்டுமின்றி, தனியாரும் கட்டணம் வசூலிக்கின்றன.
சாலை விரிவாக்கம் மற்றும் பராமரிப்பு ஒப்பந்த
அடிப்படையில், தனியாருக்கு, சுங்க கட்டணம் வசூலிப்பு உரிமை தரப்பட்டுள்ளது. சாலை விரி வாக்க பணிக்கு செலவிட்ட பணத்தை பெறும் வரை, ஆண்டுக்கு, 10 சதவீதம் கட்டணத்தை உயர்த்திக் கொள்ளலாம். தனியார் நிறுவனம், செலவுத் தொகையை வசூலித்து விட்டால், அதன்பின் கட்டணத்தை குறைக்க வேண்டும்.
பல நிறுவனங்கள், முதலீட்டு தொகையை வசூலித்த பிறகும், கட்டணத்தை குறைக்க வில்லை. இது சர்ச்சையை ஏற்படுத்தியது. ஏப்., மாதம், தமிழகத்தில், 21 சுங்கச்சாவடிகளில், 10 சதவீத கட்டண உயர்வு நடைமுறைக்கு வந்தது. இதற்கு, அரசியல் கட்சிகள், சரக்கு வாகன உரிமை
யாளர்கள், பஸ் உரிமையாளர்கள் உட்படபலரும், கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
மீதமுள்ள, சென்னை - கோல்கட்டா; கரூர் - திண்டுக்கல்; மதுரை - துாத்துக்குடி; நாமக்கல் - கரூர், புதுச்சேரி - திண்டிவனம்; தஞ்சாவூர் - திருச்சி; திருச்சி - கரூர் உட்பட, 22 சுங்கச்சாவடிகளில், நேற்று முதல், கட்டண நடைமுறை மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. கட்டணத்தை உயர்த்தாமல், ஒரு ரூபாய் முதல், நான்கு ரூபாய் வரை, கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது.
கட்டண உயர்வுக்கு கடும் எதிர்ப்பு வந்ததால், தேசிய நெடுஞ்சாலை ஆணையம், தமிழகத்தில், முதல் முறையாக கட்டண குறைப்பு நடவடிக்கையை எடுத்துள்ளது.
🌍சென்னை கோயம்பேடு சந்தையில் மின்சாரம் தாக்கி பாஸ்கரன் என்ற கூலி தொழிலாளி பலி.
📡புதுச்சேரியில் தனியார் பேருந்துகள் ஓடவில்லை
புதுச்சேரியில் வேலைநிறுத்தம் காரணமாக தனியார் பேருந்துகள் இயங்கவில்லை. 4,000க்கும் மேற்பட்ட ஆட்டோக்கள், 200க்கும் மேற்பட்ட டெம்போக்களும் ஓடவில்லை. குறைந்த அளவில் புதுச்சேரி அரசுப் பேருந்துகள் போலீஸ் பாதுகாப்புடன் இயக்கப்பட்டு வருகின்றன. புதுச்சேரியில் பெரும்பாலான தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
🌍கோவை - கேரளா பேருந்துகள் இயக்கம் நிறுத்தம்: மாநகர் முழுவதும் போலீஸ் பாதுகாப்பு
கோவை மாவட்டத்தில் இருந்து கேரளாவுக்கு பேருந்துகள் இயக்கம் நிறுத்தப்பட்டுள்ளதால் பயணிகள் அவதிக்குள்ளாகியுள்ளனர். கோவை மாநகரில் ஆட்டோக்கள் இயங்கவில்லை; லாரிகள் உக்கடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. திருப்பூரில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பின்னலாடை நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. வேலை நிறுத்தப் போராட்டத்தில் 3 லட்சம் பின்னலாடை நிறுவன தொழிலாளர்கள் பங்கேற்றுள்ளனர். வேலைநிறுத்தத்தையொட்டி மாநகர் முழுவதும் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
📡மணப்பாறையில் ரயிலை மறித்த ஏஐடியூசி அமைப்பினர் கைது
மணப்பாறை ரயில் நிலையத்தில் ரயிலை மறித்த ஏஐடியூசி அமைப்பினர் கைது செய்யப்பட்டுள்ளனர். திண்டுக்கல் - திருச்சி சென்ற பாசஞ்சர் ரயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.
🌍நாடு தழுவிய ஸ்டிரைக் துவங்கியது : இயல்பு வாழ்க்கை பாதிப்பு
12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய தொழிற்சங்கங்கள் இன்று நாடு தழுவிய வேலை நிறுத்த போராட்டத்தை அறிவித்துள்ளன. சம்பள உயர்வு, தொழிலாளர் சட்டத்தில் கொண்டு வரப்பட்ட திருத்தங்களை திரும்ப பெற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை இந்த போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த போராட்டம் காரணமாக நாட்டின் பல பகுதிகளில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. டில்லி, மேற்குவங்கம் உள்ளிட்ட வட மாநிலங்களில் பஸ்கள், ஆட்டோக்கள் இயங்கவில்லை. குறிப்பிட்ட அளவிலான பஸ்கள் மட்டும் பலத்த பாதுகாப்புடன் இயக்கப்பட்டு வருகிறது. கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. வங்கி சேவைகளும் முடங்கி உள்ளன. அரசு அலுவலகங்கள் மூடப்பட்டுள்ளன. தமிழகத்தில் இருந்து கேரளா மற்றும் கர்நாடக மாநிலங்களுக்கு செல்லும் வாகனங்கள் தமிழக எல்லையில் நிறுத்தப்பட்டுள்ளன.
தமிழகத்தில் பஸ்களை வழக்கம் போல் இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பாதுகாப்பு பணியில் ஒரு லட்சம் போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மத்திய - மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் வங்கிகளில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அண்ணா தொழிற்சங்கம் நீங்களாக மற்ற அனைத்து தொழிற்சங்கங்களும் இந்த வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன.
🌍பொது வேலை நிறுத்தம்: "சென்னை" தனது வழக்கமான போக்குவரத்து நெரிசலுடன் இயல்பு வாழ்க்கைக்கு பாதிப்பில்லாமல் செயல்படுகிறது.
📡பொது வேலை நிறுத்தம். தென்காசி, செங்கோட்டை வழியாக கேரளாவிற்கு போக்குவரத்து நிறுத்தம். இரு மாநில பஸ்களும் நிறுத்த ப்பட்டதால் பயணிகள் அவதி
🌍நாடு தழுவிய வேலைநிறுத்தம்: திருவனந்தபுரம் பேருந்து நிலையத்தில் பயணிகள் தவிப்பு
நாடு தழுவிய பொது வேலைநிறுத்தம் காரணமாக கேரளா மாநிலம் திருவனந்தபுரம் பேருந்து நிலையத்தில் பயணிகள் செய்வதறியாது தவிக்கின்றனர்.
📡திருவள்ளூர் மாவட்டத்தில் போலீசார் குவிப்பு
திருவள்ளூரில் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் போலீசார் பாதுகாப்புடன் இயக்கப்பட்டு வருகிறது. திருவள்ளூரில் வேலைநிறுத்தத்தையொட்டி தலைமை அஞ்சல் அலுவலகம் முன் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
🌍திருப்பதி செல்லும் பேருந்துகள் நிறுத்தம்: பக்தர்கள் தவிப்பு
திருப்பதி செல்லும் அரசுப் பேருந்துகள் வேலூர் பேருந்து நிலையத்திலேயே நிறுத்தப்பட்டுள்ளது. திருப்பதிக்கு பேருந்துகள் இயக்கப்படாததால் வேலூர் பேருந்து நிலையத்தில் பக்தர்கள் பரிதவிக்கின்றனர்.
📡பேருந்து கண்ணாடி உடைப்பு
காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டு அடுத்த வில்லியம்பாக்கத்தில் தனியார் பேருந்து கண்ணாடி உடைத்ததால் பரபரப்பு மர்மநபர்களுக்கு போலீசார் வலைவீச்சு.
🌍📡🌍📡🌍📡🌍📡🌍📡🌍
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக