இன்றைய தலைப்பு செய்தி 03/09/2016 - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

இன்றைய தலைப்பு செய்தி 03/09/2016


*இன்றைய தலைப்புச் செய்திகள்* 

1. திரைப்படத் துறையில் சிறப்பு மிக்க பங்களிப்பை வழங்கியமைக்காக ஜாக்கி சானுக்கு கெளரவ ஆஸ்கர் விருது வழங்கப்படுகிறது. நடிகர், தயாரிப்பாளர், இயக்குநர் என்ற வகைகளில் பல்வேறு சிறப்பான சேவையாற்றியுள்ள ஜாக்கி சானுக்கு இந்த விருதை வழங்குவதில் பெருமைப்படுவதாக ஆஸ்கர் அகாட‌மியின் தலைவர் CHERYL BOONE ISSAC தெரிவித்துள்ளார்.

2. ஜிகா வைரஸ் தாக்கத்தினால் 200 கோடி பேர் பாதிக்கப்படும் ஆபத்து இருப்பதாக அறிவியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.THE LANCET INFECTIOUS DISEASES மருத்துவ ஆய்வு இதழில் வெளியிடப்பட்டுள்ள கட்டுரையில் அவர்கள் இவ்வாறு தெரிவித்துள்ளார்கள். ஆப்ரிக்க மற்றும் ஆசிய நாடுகளில் இதன் தாக்கம் அதிகமாக இருக்கும் என்றும், குறிப்பாக இந்தியா, இந்தோனேசியா மற்றும் நைஜீரியா ஆகிய நாடுகளின் மக்கள் வைரஸ் தொற்றால் அதிகம் பாதிக்கப்படும் வாய்ப்பு இருப்பதா‌கவும் அறிவியலாளர்கள் கூறியுள்ளனர்.

3. உஸ்பெகிஸ்தான் அதிபர் இஸ்லாம் கரிமோவ் கடந்த வாரம் நெஞ்சு வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில் அவர் இன்று சிகிச்சை பலனில்லாமல் காலமானார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

4. ஜிகா வைரஸ் தொற்று ஏற்படாமல் தடுக்க சென்னை விமான நிலையத்தில் மருத்துவக் குழு கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளது. சிங்கப்பூரில் 13 இந்தியர்களுக்கு ஜிகா வைரஸ் தொற்று ஏற்பட்டதை அடுத்து மருத்துவக் குழு கண்காணிப்பு நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. சென்னை விமான நிலையத்தின் சர்வதேச முனையத்தில் மருத்துவக் குழு கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளது.

5. : இந்தியா - எகிப்து இடையே இரு தரப்பு வர்த்தக உறவுகளை வலுப்படுத்துவதற்கான ஒப்பந்தம் டெல்லியில் கையெழுத்தாகியுள்ளது. இந்தியா வந்திருக்கும் எகிப்து அதிபர் அப்தெல் சிசியுடன் பிரதமர் நரேந்திர மோடி விரிவான பேச்சுகளை நடத்தினார். பேச்சுவார்த்தையின் முடிவில் வரத்தக உறவை விரிவு படுத்துவதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது. பின்னர் இரு தலைவர்களும் கூட்டாக செய்தியாளர்களிடம் அறிக்கை வெளியிட்டனர்.

6. துபாய் சுற்றுலாத்துறை துபாய் சுற்றுலா சின்னத்தின் வடிவில் தண்ணீரில் மிதக்கும் பூங்காவை அமீரகத்தில் இயங்கி வரும் சுற்றுலா தனியார் நிறுவனத்துடன் இணைந்து உருவாக்கி உள்ளது. துபாய் நகரில் ஜுமைரா கடற்கரை அருகே அமைந்துள்ள இந்த பூங்கா நேற்று திறக்கப்பட்டது. இந்த மிதக்கும் தண்ணீர் பூங்காவானது 208 அடி நீள, 108 அடி அகல பரப்பளவில் கடல் நீரில் அமைக்கப்பட்டுள்ளது.

7. ராட்சத விண்கல் ஒன்று பூமிக்கு மிக நெருக்கமாக நெருங்கி வந்து கொண்டிப்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். வழக்கத்துக்கு மாறாக பூமியை நெருங்கி செல்லவுள்ள இந்த விண்கல் ஆனது 35 மீட்டர் நீளமுடையதாக காணப்படுகின்றது.

8. தமிழகத்தின் பொறுப்பு ஆளுநராக மராட்டிய ஆளுநர் வித்யாசாகர் ராவ் பதவியேற்றுக் கொண்டார். வித்யாசாகர் ராவுக்கு சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல் பதவி பிரமானம் செய்து வைத்தார்

9. பிடிக்காத மனைவியை கொலை செய்வதை விட 3 தலாக் எனப்படும் முத்தலாக் அளித்து திருமண உறவை முறிப்பது மேலானது என முஸ்லிம் தனிநபர் சட்டவாரியம் உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. மூன்று தடவை தலாக் என்று கூறி திருமண உறவை முறிப்பது தொடர்பான வழக்குகளை உச்சநீதிமன்றம் விசாரித்து வருகிறது. இதில் அகில இந்திய முஸ்லிம் தனிநபர் வாரியம் பிரமானப்பத்திரம் தாக்கல் செய்துள்ளது. சமுதாய சீர்திருத்தம் என்ற பெயரில் சிறுபான்மையினரின் தனிசட்டங்களை மாற்றி எழுத முடியாது என அதில் வாரியம் தெரிவித்துள்ளது.

10. நாட்டில் முக்கிய நீர்த்தேக்கங்களாக கருதப்படும் 91 அணைகளில் தண்ணீரின் அளவு மொத்த கொள்ளளவில் செப்டம்பர் 1ம் தேதி நிலவரப்படி 67 சதவீதமாக அதிகரித்துள்ளதாக மத்திய நீர்வளத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. அந்த அணைகளில் மொத்த கொள்ளளவான 157.799 பில்லியன் கன மீட்டரில் (பி.சி.எம்) இருந்து, தற்போது 105.248 பி.சி.எம் அளவு தண்ணீர் உள்ளது. இது கடந்த ஆண்டைவிட 14 சதவீதம் அதிகமாகும். இதில் 37 அணைகளில் நீர்மின் உற்பத்தி செய்யப்படுகின்றது. மேலும் தமிழ்நாடு, இமாச்சல் பிரதேசம், குஜராத், திரிபுரா, உத்தரகாண்ட், மற்றும் ஆகிய மாநிலங்களில் உள்ள முக்கிய அணைகளில் நீர் இருப்பு கடந்த ஆண்டைவிட குறைவாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

11. சட்டப்பேரவை முன் மண்ணெண்ணெய் ஊற்றி பெண் போலீஸ் தற்கொலைக்கு முயன்றுள்ளார். சக போலீசார் தடுத்து நிறுத்தி பெண் போலீசை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பலத்த பாதுகாப்புடன் சட்டசபை நடைபெற்று கொண்டிருக்கும் போது பெண் போலீஸ் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் தற்கொலை முயற்சிக்கான காரணத்தை போலீசார் விசாரித்து வருகின்றனர்.

12. காவிரியில் இருந்து தமிழகத்துக்கு எவ்வளவு தண்ணீர் திறந்து விட முடியும் என கர்நாடகா தெரிவிக்க உச்சநீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. தமிழக அரசு தாக்கல் செய்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. கர்நாடக அரசு தமது பதிலை திங்கட்கிழமை தெரிவிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

13. ஸ்பெயினில் கோலாகலமாக நடைபெற்ற பாரம்பரிய தக்காளி திருவிழா தக்காளிகளை வீசி எறிந்து உற்சாகம்

14. உலகம் முழுவதும் சுமார் 250 கோடி பேர் ஸிகா வைரஸ் தாக்குதலுக்கு உள்ளாக கூடிய சூழ்நிலை உள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். உலக மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பங்கு மக்கள் ஸிகா வைரஸ் பாதிப்பு ஏற்படும் பகுதிகளில் வசிப்பதாக அவர்கள் கூறுகின்றனர். தி லேன்செட் இன்ஃபெக்ஷியஸ் டிசீசஸ்' என்ற மருத்துவ இதழில் வெளியான புதிய ஆய்வில், பெரும்பான்மையான மக்கள், ஸிகா வைரஸை தடுக்கவோ, கண்டுபிடிக்கவோ அல்லது கட்டுப்படுத்தவோ முடியாத சூழலில் வசிப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

15. அக்டோபர் 17-ந்தேதி உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடைபெறும் என தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அடுத்த வாரம் இதற்கான அறிவிப்பு வெளியாகும் என எதிர் பார்க்கப்படுகிறது.

16. புது தில்லி: ரிலையன்ஸ் ஜியோ நிறுவன கட்டண அறிவிப்பையடுத்து, தொலைத் தொடர்புத் துறை நிறுவனங்களின் சந்தை மதிப்பு ரூ.16,997 கோடி குறைந்தது. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி, ரிலையன்ஸ் ஜியோ வாடிக்கையாளர்களுக்கு இலவச அழைப்பு, ரோமிங் உள்ளிட்ட பல்வேறு சலுகை திட்டங்களை அறிவித்தார்.

17. நாடு தழுவிய பொது வேலை நிறுத்தம் காரணமாக கேரளாவில் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது, கடைகள், வர்த்தக நிறுவனங்கள் அடைக்கப்பட்டுள்ளன. அரசு மற்றும் தனியார் பஸ்கள், வாகனங்கள் இயக்கப்படவில்லை.

18. ராமகிருஷ்ணா நகர் லட்சுமி ஹயக்ரீவர் கோவிலில் பிரம்மோற்சவம் 4-ந் தேதி தொடங்குகிறது.

19. ரெயில் பயணிகளுக்கு 92 காசு கட்டணத்தில் ரூ.10 லட்சம் காப்பீடு திட்டம் அமலுக்கு வந்தது. 3 காப்பீட்டு நிறுவனங்களுடன் இணைந்து ஐ.ஆர்.சி.டி.சி. இத்திட்டத்தை அமல்படுத்துகிறது.

20. தமிழக மக்களுக்காக பணியாற்றியதில் பெருமையடை வதாக ஆளுநர் கே.ரோசய்யா தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here