இன்றைய முக்கிய நிகழ்வுகள் 10/09/2016 - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

இன்றைய முக்கிய நிகழ்வுகள் 10/09/2016


1] *அமெரிக்காவில் 2001ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 11ஆம் தேதி நடைபெற்ற இரட்டை கோபுரத் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் சவுதி அரேபிய அரசுக்கு எதிராக வழக்கு தொடுக்க வழிசெய்யும் மசோதவுக்கு, அமெரிக்க மக்கள் பிரதிநிதிகள் அவை ஆதரவு வழங்கியுள்ளது*

2] *ஃபேஸ்புக் நிறுவனமானது வியட்நாம் போரின் உக்கிரத்தை எடுத்துச் சொல்லும் பிரபல புகைப்படம் ஒன்றை தொடர்ந்து நீக்கி அதன் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி வருவதாக குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகியுள்ளது.அந்த புகைப்படத்தில், கொத்துக்குண்டு வீச்சிலிருந்து தப்பிக்க சிறுமி ஒருவர் ஆடைகளின்றி ஓடி வரும் காட்சி உள்ளது.ஃபேஸ்புக் நிறுவனத்திற்கு, குழந்தைகளின் நிர்வாண புகைப்படங்களுக்கும், வரலாற்று புகைப்படங்களுக்கும் உள்ள வேறுபாட்டை வேறுபடுத்தி புரிந்து கொள்ள இயலாமை காரணமாக சுதந்திரத்தை கட்டுப்படுத்துவதாக நார்வே செய்தித்தாள் நிறுவனமான ஆஃப்டென்போஸ்டென் கருத்து தெரிவித்துள்ளது*

3] *கண்ணுக்குள் அறுவை சிகிச்சை நடத்தி பார்வையை மீட்ட ரோபோ* -ஒரு நோயாளியின் கண்ணுக்குள் அறுவை சிகிச்சை மேற்கொள்ள, இயந்திர மனிதனை முதல் முறையாக அறுவை சிகிச்சை நிபுணர்கள் பயன்படுத்தி இருக்கின்றனர்.பிரிட்டனை சேர்ந்த ஒருவரின் விழித்திரையில் இருந்து ஒரு மில்லி மீட்டரில் நூறில் ஒரு பகுதி தடிமனான மிகவும் மெல்லிய படத்தை, இயந்திர மனிதனை வைத்து உரித்து எடுத்த பிறகு, அந்நபரின் ஒரு கண் பார்வை மீட்டெடுக்கப்பட்டுள்ளது.

4] *புதிய சாம்சங் கேலக்ஸி நோட்7 செல்பேசியை இந்தியாவின் அனைத்து விமானங்களிலும் பயன்படுத்துவதற்கு இந்திய விமானப் போக்குவரத்துத்துறை இயக்குநரகம் தடை விதித்திருக்கிறது* -பல நாட்டு விமான நிறுவனங்கள் இந்தத் தடையை ஏற்கெனவே விதித்திருக்கும் நிலையில் தற்போது இந்தியாவும் தடை விதித்துள்ளது.விமானத்தில் பயணிக்கும்போது, சாம்சங் கேலக்ஸி நோட் 7 செல்பேசியை இயங்கும் நிலையில் வைத்திருக்கவோ அல்லது மின்னூக்கி ஏற்படுத்தவோ வேண்டாம் என்று முன்னதாக அமெரிக்க அதிகாரிகளும் எச்சரித்து இருக்கின்றனர். பயணியர் எடுத்துச் செல்கின்ற பைகளில் அதனை வைக்காமல் இருக்க அமெரிக்க பெடரல் விமானப் போக்குவரத்து நிர்வாகம் அறிவுறுத்தி இருக்கிறது.மின்னூக்கி அளிக்கும்போது அல்லது அதற்கு பின்னர் இந்த செல்பேசி வெடித்து எரிந்து விடுவதாக பல்வேறு புகார்கள் வந்து கொண்டிருக்கும் நிலையில், விற்பனை செய்த அனைத்து செல்பேசிகளையும் திரும்பப் பெறுவதாக சாம்சங் அறிவித்தது. மேலும், ஜப்பான், கான்டாஸ் மற்றும் வெர்ஜின் ஆஸ்திரோலியா விமான நிறுவனங்களும் பயணியர் விமானத்தில் பயணிக்கின்றபோது இந்த செல்பேசியை பயன்படுத்த வேண்டாம் என்று வாடிக்கையாளர்களிடம் கேட்டுகொண்டுள்ளன.இந்தியாவின் தடை குறித்து, சாம்சங் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியாவில் கேலக்ஸி நோட் 7 செல்பேசி விற்பனை தொடங்கப்படவில்லை என்றும் சாம்சங் நிறுவனம் பாதுகாப்பு தொடர்பான கவனங்களை போக்குவதற்காகவே இந்தியாவில் விற்பனையை தள்ளிப்போட்டிருப்பதாகவும் கூறியுள்ளது. வாடிக்கையாளர்களுக்கு ஏற்பட்டிருக்கும் சிரமங்களை குறைக்கக் கூடிய வகையில், மிக விரைவாக கேலக்ஸி நோட் 7 செல்பேசிகளை புதிதாக அனுப்ப இருப்பதாக அது தெரிவித்திருக்கிறது.பாதுகாப்பு கவனங்களை நீக்கிவிடும் வகையில் திரும்ப பெறுகின்ற கேலக்ஸி நோட் 7-க்கு பதிலாக வழங்கும் புதிய செல்பேசிகளை இரண்டு வாரங்களில் வழங்கப் போவதாக சாம்சங் தெரிவித்திருக்கிறது.கடந்த மாதம் வெளியான இந்த செல்பேசி வாடிக்கையாளர்களிடம் பொதுவாக மிகுந்த வரவேற்பை பெற்றிருந்தது.இதுவரை 25 லட்சம் கேலக்ஸி நோட் 7 சாதனங்கள், உலக அளவில் விற்பனையாகி உள்ளன.

5] *சிரியாவில் அலெப்போ நகரின் கிழக்கு பகுதியில் போராளிகள் வசமுள்ள பகுதிகளில் தவித்து வரும் பல லட்சக்கணக்கான மக்களை நினைத்து கவலைப்படுவதாக சிரியாவுக்கான ஐ.நா சிறப்பு தூதர் டி மிஸ்டுரா தனது பேச்சில் கவலையை வெளிப்படுத்தினார்* -சில நாட்களில், அங்கு எரிபொருள் விநியோகம் முற்றிலுமாக நின்றுவிடும் என்றும், உணவு மற்றும் தண்ணீர் தட்டுப்பாடு காரணமாக இதற்குமுன் இருந்த நிலையை விட மோசமாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

6] *திலீபன் மகேந்திரன் மீது கொலைவெறி தாக்குதல்: உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதி* -சுவாதி கொலை வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள ராம்குமாருக்கு ஆதரவாகவும், இந்த கொலையில் பாஜகவை சேர்ந்த கருப்பு முருகானந்தம் என்பவர் சாம்பந்தப்பட்டுள்ளார் எனவும் முகநூலில் எழுதி வந்தவர் திலீபன் மகேந்திரன். நேற்று திருவாரூர் நீதிமன்றம் அருகே அடையாளம் தெரியாத நபர்களால் திலீபன் தாக்கப்பட்டுள்ளார். அவருடன் சேர்ந்து வழக்கறிஞர் ஒருவரும் தாக்கப்பட்டுள்ளார். சுவாதி கொலை வழக்கு குறித்து நீ பேசக்கூடாது என்று கூறியபடியே தாக்குதல் நடத்தப்பட்டதாக வழக்கறிஞர் தெரிவித்தார்.கடுமையான தாக்குதலுக்கு ஆளாகி மயக்கமடைந்து கிடந்த திலீபனையும், வழக்கறிஞரையும் மீட்ட வழக்கறிஞர்கள் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் திலீபன் மகேந்திரன் திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

7] *விஜயை தொடர்ந்து சூர்யாவுடன் இணையும் கீர்த்தி சுரேஷ்-முத்தையா இயக்கத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கப்போவதாக செய்திகள் வெளியாகியுள்ளது*

8] *பாலா இயக்கத்தில் கதாநாயகியாக உருவெடுக்கும் பாடகி * -இயக்குனர் பாலாவின் அடுத்தப் படைப்பு குறித்து பல்வேறு செய்திகள் வெளியான நிலையில் தற்போது புதுமுகங்களை வைத்து படம் இயக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

9] *காவிரி நீருக்காக கர்நாடகாவிடம் ஏன் கை ஏந்துகிறோம்? : வைரல் வீடியோ* -கர்நாடக அரசு தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடுவதற்கு அங்கு பல கன்னட அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். ஒவ்வொரு முறையும், கர்நாடகாவிடமிருந்து காவிரி நீரை, தமிழகம் நீதிமன்றம் மூலம் போராடித்தான் பெற வேண்டியுளது.
இந்நிலையில், நாட்டு நடப்புகளை அடிப்படையாகக் கொண்டு பல வீடியோக்களை யூடியூப்பில் வெளியிட்டு வரும் ‘புட் சட்னி’ குழு, தற்போது ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளது.
அதில் தமிழகத்தில் உள்ள ஆறுகள் அழிப்பு, மணல் கொள்ளை என காவிரி ஆறு வற்றிப் போனதற்கான அனைத்து காரணங்களையும் அலசியுள்ளனர்.
தவறுகளை நாம் செய்து விட்டு, தற்போது காவிரிக்காக, கர்நாடகாவிடம் கையேந்தி நிற்கிறோம் என்கிற தொனியில் விபரங்களை அடுக்குகிறார்கள்.

10] *கரூர் அருகே மணல்குவாரி அமைக்க கோரி மனு* -கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி தொகுதிக்குட்பட்ட வேலாயுதம்பாளையம் அடுத்துள்ள நஞ்சை தோட்டக்குறிச்சி, நடையனூர் ஆகிய பகுதிகளில் காவிரி கரையோரம் நதி நீர் பாயவில்லை. கடந்த தி.மு.க ஆட்சியில் அளவுக்கு அதிகமாக நாமக்கல் மாவட்டத்திற்குட்பட்ட கரூர் மாவட்டத்தின் அக்கறையான க.பரமத்தி வேலூர், மோகனூர் உள்ளிட்ட பகுதிகளில் மணல் எடுத்ததால் காவிரியின் நதி நீர் அப்பகுதியில் மட்டுமே பாய்ந்து வருகின்றது. கரூர் மாவட்டத்திற்குட்பட்ட பகுதிக்கு காவிரியின் நதிநீர் வரவில்லை. இந்நிலையில் தற்போது விவசாயத்திற்காகவும், குடிநீருக்காகவும் திறந்துவிடப்பட்டுள்ள 15 ஆயிரம் டி.எம்.சி குடிநீர் தங்களுக்கு வரவேண்டுமென்றும், அதற்கு ஏற்கனவே எங்கள் பகுதியில் கொண்டு வர இருந்த அரசுப் பொதுப்பணித்துறை சார்பில் அமைக்கப்பட்டிருந்த மணல் குவாரிகள் அமைத்து அந்த மணல் திட்டை அப்புறப்படுத்துவதோடு, எங்கள் கரையோரங்களிலும், காவிரியின் நதிநீரை கொண்டு வர வேண்டுமென்று ஊர் பொதுமக்கள் சார்பில் மனு கொடுக்கப்பட்டது.
முன்னதாக தங்கள் ஊரின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் செயல்படும் முகிலன் மற்றும் விஸ்வநாதன் ஆகியோருக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பபட்டது.

11] *தமிழ் நாளிதழ்கள் தீயிட்டு எரிப்பு; தமிழ் சேனல்கள் ஒளிபரப்பு நிறுத்தம்: கன்னட வெறியாட்டம் தொடர்கிறது!* -இந்த முழு அடைப்பை ஒட்டி கர்நாடகாவில் தமிழ் நாளிதழ்களை தீயிட்டு எரித்து, கன்னட அமைப்புகள் தங்களது எதிர்ப்பை பதிவு செய்தனர். மேலும், 54 தமிழ் டிவி சேனல்களின் ஒளிபரப்பும் நிறுத்தப்பட்டுள்ளது.அம்மாநிலத்தில் நடக்கும் அன்றாட நிகழ்வுகளை தமிழர்கள் தெரிந்துகொள்ள கூடாது என்பதற்காகவே இந்த தடைகளை செய்துள்ளனர். கர்நாடகாவில் தினத்தந்தி, தினமனி உள்ளிட்ட 5 முன்னணி தமிழ் நாளிதழ்கள் விநியோகிக்கப்படுகின்றன. அவற்றை வினியோகிக்கும் ஏஜென்சிகளும் இந்த போராட்டத்தில் ஈடுபடுகின்றன. சில இடங்களில் அதிகாலையில் வினியோகிக்கப்பட்ட நாளிதழ்களும் தீயிட்டு எரிக்கப்பட்டன.மேலும் 54 தமிழ் சேனல்கள் கர்நாடகாவில் ஒளிபரப்பப்படுகின்றன. அவற்றின் ஒளிபரப்பை இன்று ஒரு நாள் நிறுத்த வேண்டும் என கன்னட அமைப்புகள் கோரிக்கை விடுத்தன. இதனையடுத்து கர்நாடக அரசு அந்த கோரிக்கையை ஏற்று தமிழ் டிவி ஒளிபரப்பை நிறுத்தும்படி, கேபிள் உரிமையாளர்களுக்கு உத்தரவிட்டுள்ளது.

12] *ஜெயலலிதா பற்றி தவறாக பேசக்கூடாது : கன்னடர்களுக்கு குட்டு வைத்த சிவராஜ்குமார்* -தமிழக முதல்வர் ஜெயலலிதாவை பற்றி தவறாக பேசக்கூடாது என்று கன்னட நடிகர் சிவராஜ்குமார் கருத்து தெரிவித்துள்ளார். கன்னட சினிமா நட்சத்திரங்கள் பங்கேற்கும் பொதுக்கூட்டம் மற்றும் பேரணி இன்று பெங்களூரில் உள்ள கன்னட திரைப்பட வர்த்தக சபை அருகேயுள்ள சிவானந்தா சர்க்கிளில் நடைபெற்றது. அதில் கன்னட முன்னனி நடிகர், நடிகைகள் பலர் கலந்து கொண்டனர்.அந்த கண்டன கூட்டத்தில் பேசிய பலரும் தமிழக அரசையும், ஜெயலலிதாவையும் இகழ்ந்து பேசினர். அதன்பின் நடிகர் ராஜ்குமாரின் மகனும், கன்னட சூப்பர்ஸ்டாருமான சிவராஜ்குமார் பேசினார். அவர் பேசும் போது “ எந்த ஊரைச் சேர்ந்தவராக இருந்தாலும் பெண் என்பவர் பெண்தான். எனவே யாரும் அவரை தரக்குறைவாக பேசக்கூடாது. தமிழ்நாடு வேறு நாடு இல்லை. நமது பக்கத்து மாநிலம்தான்.  கர்நாடகாவை போன்றே, தமிழகத்திலும் விவசாயிகள் உள்ளனர்.ஒரு விவசாயின் துயரம் மற்ற விவசாயிக்கு தெரியும். எனவே இரு தரப்பும் பேசி பிரச்சனையை தீர்க்க வேண்டும்.  கர்நாடகாவில் வாழும் தமிழர்கள் இப்போராட்டத்திற்கு ஆதரவு தரவேண்டும்” என்று கேட்டுக் கொண்டார்.

13] *திரைப்பட கல்லூரி தலைவர் கருத்தால் ’சர்ச்சை’* -குருவைக் கொண்டாடும் குருகுல கல்வி முறையே தேவை என இந்திய திரைப்பட மற்றும் தொலைக்காட்சி கல்வி நிறுவனத்தின் தலைவர் கஜேந்திர சவுஹான் கருத்து தெரிவித்துள்ளார். ஆசிரியர் தினத்தையொட்டி நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு பேசிய கஜேந்திர சவுஹான், "பாரத மாதாவின் முந்தைய பண்பாட்டையும் கலாச்சாரத்தையும் நம்பிக்கை களையுமே நாம் இன்றைய தலைமுறைக்கு கற்பிக்க வேண்டியுள்ளது.அத்தகைய அர்ப்பணிப்பு உணர்வுகளை கொண்ட ஆசிரியர்களை நாம் உருவாக்க வேண்டும். நமது பழைய கல்வியமைப்பு முறையிலான குருகுல கல்வியமைப்பே இத்தகைய நோக்கத்தை நிறைவேற்றும்” என தெரிவித்துள்ளார்.அவர் தெரிவித்துள்ள இந்தக் கருத்திற்கு கடும்கண்டனங்கள் எழுந்துள்ளன. ஆர்எஸ்எஸ் ஊழியரான கஜேந்திர சவுஹான், நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு ஆட்சிக்கு வந்ததற்கு பிறகு, புனே நகரில் அமைந்துள்ள இந்தியாவின் புகழ்பெற்ற கல்வி நிறுவனமான இந்திய திரைப்பட மற்றும் தொலைக்காட்சி கல்வி நிறுவனத்தின் தலைவராக நியமிக்கப்பட்டார்.கஜேந்திர சவுஹான் கடந்த 2004ஆம் ஆண்டு பாஜகவின் உறுப்பினராக தன்னை வெளிப்படையாக அறிவித்துக் கொண்டு அரசியல் பணியாற்றியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.இந்த உயர் பொறுப்பிற்கு வருவதற்கு அடிப்படைத் தகுதியாக திரைப்படத் தொழிலில் 35 ஆண்டுகால அனுபவம் மற்றும் சிறந்த ஆளுமையாக விளங்கியிருக்க வேண்டும். ஆனால், அத்தகைய தகுதி இல்லாமலேயே இப்பொறுப்பில் அமர்த்தப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

14] *லட்சம் முத்தங்கள்: பார்வையாளர்களை கிறங்கடிக்கும் பாடல்!* -ஆதித்யா சோப்ரா இயக்கத்தில் உருவாகி இருப்பது ”பெக்ஃபையர்” என்ற ஹிந்தி திரைப்படம். இப்படத்தில் ரன்வீர் சிங் கதாநாயகனாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக வாணி கபூர் நடித்திருக்கிறார். இந்தப்படத்தில் இடம் பெறும் ”லாபான் கா கரோபார்” என்ற பாடல், லட்சம் முத்தங்களுடன் தயாராகி இருக்கிறது.  இந்த பாடல், இளம்தலைமுறையினரிடம் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது.
மேலும், முத்தங்கள் பற்றிய ஒரு ஆராய்சியினை இப்படத்தின் இயக்குனர் நன்கு செய்திருகிறார் என்பது இப்பாடலை பார்க்கும்போது தெரியவருகிறது. கலாச்சார காவலர்கள் இப்பாடலுக்கு தங்கள் எதிர்ப்பினையும் பதிவு செய்து வருகின்றனர்.

15] *பரிதவிக்கும் சமச்சீர் கல்வி மாணவர்கள்!* -மருத்துவப் படிப்புகளில் மாணவ,மாணவிகள் சேர்வதற்கு இனி ஒரே வழி நீட் தேர்வு மட்டுமே. 12-ம் வகுப்புத் தேர்வில் பெறும் மதிப்பெண்கள் இதில் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படமாட்டாது. மேலும், 12-ம் வகுப்புத் தேர்வில் 50 சதவீத மதிப்பெண்கள் பெறுபவர்கள் மட்டுமே இந்தத் தேர்வை எழுத முடியும்.  இந்த தேர்வில் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் இருந்து தான் அதிகமாக கேள்விக்கேட்கப்படுகிறது. அதனால், சமச்சீர் கல்வி படித்த பல மாணவர்கள் இந்த தேர்வில் தோல்வியடைந்துள்ளனர்.தமிழகத்தை சேர்ந்த சுரேஷ் என்பவர் 12-ம் வகுப்புத் தேர்வில் 1117 மதிப்பெண்கள் எடுத்தவர். இவரும் இந்த தேர்வில் தோல்வியடைந்துள்ளார். அதனால், நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி சுரேஷ் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.  இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, இது குறித்து பதில் தருமாறு மத்திய அரசுக்கும் தமிழக அரசுக்கும் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
மாணவர்களின் மருத்துவ கனவிற்கு வழிவகுக்க, ஒன்று சமச்சீர் கல்வியின் தரத்தை உயர்த்த வேண்டும் அல்லது, நீட் தேர்வு நீக்கப்பட வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

16] *ஒரிசாவில் குடியிருப்பு பகுதியில் கரடி ஒன்று சுற்றித்திரிந்துள்ளது. அதனை வனத்துறையினர் பத்திரமாக பிடித்துச்சென்றனர்*

17] *அதிபர் சிறிசேனா 6 மாதத்தில் இறந்து விடுவார்: இலங்கையில் பரபரப்பு* -இலங்கை அதிபராக இருக்கும் மைத்ரி பால சிறிசேனா இன்னும் ஆறு மாதத்தில் இறந்து விடுவார் என பிரபல ஜோதிடர் ஒருவர் கணித்து சொன்னதால் இலங்கை ஊடகங்களில் இந்த செய்தி நேற்று பரபரப்பாக பேசப்பட்டது.

18] *பீதியில் இருக்கும் சைவ பிரியர்கள்!* -
அமெரிக்க நாட்டில் இருக்கும் மிசோரி பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள் சமீபத்தில் நடத்திய ஆய்வின் முடிவு மக்களிடத்தில் அதிர்ச்சியையும் வியப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. அவர்கள் நடத்திய ஆய்வில், தாவரங்களுக்கு கேட்டுகும் திறன் இருக்கிறதாம், அதன் மூலம், அவைகளை உண்பவர்களை அது தாக்குமாம்.  மேலும், அவர்களின் ஆய்வில், தழைகளை உண்ணும் புழுக்களை விரட்டி அடிக்க, தழைகள் தங்கள் தேகத்தில் இருந்து ஒருவித எண்ணெய் பசையை வெளிபடுத்துமாம். அந்த எண்ணெய் பசை புழுக்களுக்கு பிடிக்காமல் அந்த தழையைவிட்டு மறு தழைக்கு தாவுமாம். புழுக்கள் தங்களை உண்வதை அது எழுப்பும் சப்தத்தை வைத்து தாவரங்கள் புரிந்துக்கொண்டு இந்த தாக்குதலை செய்கிறதாம். மேலும், தாவரங்களுக்கு பேசும் திறனும் இருக்கிறதாம். அது பெரும்பாலம் குமிழ்வது போல் ஒரு சப்தத்தை எழுப்புமாம். இந்த செய்தியை கேட்டதில் இருந்து, ”நாம் உண்ணும் தாவரங்கள் நம்மை தாக்குமோ” என்று சைவ பிரியர்கள் பீதியில் இருக்கிறார்கள்.

19] *ஒரு பிச்சைக்கார தமிழ் மாணவன் லண்டன் போன கதை!* -ஜெயவேலுவின் குடும்பத்தினர் 80 களில் நெல்லூரில் இருந்து குடிபெயர்ந்து, சென்னை வந்து வீதிகளில் பிச்சை எடுப்பதை தங்கள் தொழிலாக கொண்டனர். இவர்கள், சென்னையில் உள்ள, நடைபாதையில் தான் உறங்குவார்கள். மழை வந்தால், அருகில் இருக்கும் கடைகளில் தஞ்சம் புகுவோர்கள். அதுவும், காவல்துறையினர் அவர்களை வந்து விரட்டும் வரை தான்.  ஜெயவேலு சிறியவராக இருக்கும்போதே அவரின் தந்தை இறந்துவிட்டார். அதன் பிறகு அவரின் தாய் மதுவிற்கு அடிமையாகிவிட்டார்.
ஜெயவேலு பிச்சை எடுத்து கொண்டு வரும் பணத்தை அவர் குடித்தே அழித்தார். ஜெயவேலுவிடம் அணிவதற்கு ஒரு சட்டை மட்டுமே இருந்தது. அவர் பார்பதற்கு அசுத்தமாக இருந்தார். சென்னையில் தொண்டு நிறுவனம் வைத்து பொது சேவைகள் செய்யும் உமா முத்துராமனும் அவரது கணவரும் ஜெயவேலுவை பார்த்து பரிதாபப்பட்டு, பள்ளியில் சேர்த்து விட்டார்கள். ஜெயவேல் 12 ஆம் வகுப்பில் நல்ல மதிப்பெண் எடுத்தார். பின் லண்டனில் இருக்கும் கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் நுழைவு தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றதால் அவருக்கு கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் ஆட்டோமொபைல் பொறியியல் படிக்க வாய்ப்பு கிடைத்து.
தற்போது, அப்படிப்பையும் வெற்றிகரமாக முடித்துவிட்டு, மேல் படிப்பிற்காக இத்தாலி செல்கிறார். அவரின் படிப்பு செலவு முழுவதையும் உமா முத்துராமன் தங்கள் தொண்டு நிறுவனம் மூலம் மேற்கொள்கின்றனர்.

200 *அன்பளிப்பை டெலிவரி செய்யாத தபால்காரருக்கு அபராம்* -உத்திரப்பிரதேச மாநிலத்தில் ரக்‌ஷா பந்தன் அன்பளிப்பை டெலிவரி செய்யாத தபால்காரருக்கு ரூ.17 ஆயிரம் விதிக்கப்பட்டுள்ளது.

21] * மதுராந்தகம் அருகே பவுஞ்சூரில் நகைக்கடையில் துளையிட்டு 45 சவரன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன. பாராஸ் என்பவருக்கு சொந்தமான நகை கடையில் நிகழ்ந்த கொள்ளை குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்*

22] *குமாரபாளையம் அருகே இரு தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதியதில் 20
.www.sivakasiteacherkaruppasamy.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here