மாலைநேர செய்திகள் 10/09/2016 - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

மாலைநேர செய்திகள் 10/09/2016

* டெல்லி விமான நிலைய சர்ச்சையில் சசிகலா புஷ்பா மீது அவர் சார்ந்து இருந்த கட்சித் தலைமை நடவடிக்கை எடுத்தது. உங்கள் கட்சியில் என்ன நடவடிக்கை எடுத்தீர்கள்? என பிரபல தமிழ் நிருபர் ஒருவர் ஸ்டாலினிடம் கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்த ஸ்டாலின், நண்பர் திருச்சி சிவா, தலைவர் கலைஞர் அவர்களை நேரில் பார்த்து அளித்த தன்னிலை விளக்கம் ஏற்றுக் கொள்ளப்பட்டது என கூறினார். ஆனால் அவர் என்ன விளக்கம் அளித்தார் என்பதை ஸ்டாலின் கூறவில்லை*

*அஜித்தை விசாரித்த கிரிக்கெட் வீரர் பிரெட்லீ: யார் இந்த தல!-தமிழ்நாடு ப்ரீமியர் லீக் கிரிக்கெட் போட்டிகள் தமிழகத்தில் நடைபெற்று வருகின்றன. இதனை ஊக்குவிப்பதற்காக ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் பிரெட்லீ வந்துள்ளார். சமீபத்தில் இவர் வேஷ்டி சட்டை அணிந்து வந்த காட்சிகளும் நடந்தது. நேற்று கிரிக்கெட் மைதானத்தில் அஜித் நடித்த வேதாளம் படத்தின் ஆலுமா, டோலுமா பாடல் போடப்பட்டுள்ளது. அப்போது அஜித் ரசிகர்கள் ஆக்ரோஷமாக தல.. தல.. என கத்த ஆரம்பித்துள்ளனர்.ரசிகர்கள் தல.. தல.. என கத்துவதை கவனமாக கேட்ட கிரிக்கெட் வீரர் பிரெட்லீ யார் இந்த தல என்று அஜித்தை பற்றி விசாரித்துள்ளார்*

*ரிலையன்ஸ் ஜியோவிற்கு சற்று போட்டியளிக்கவும், தன் நிலையை தக்கவைத்துக்கொள்ளவும் பிஎஸ்என்எல் தனது பிராட்பேண்ட் காம்போ சலுகை ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. இந்த காம்போ சலுகையில் 2 எம்பிபிஎஸ் வேகத்திலான வரம்பற்ற டேட்டா மற்றும் இந்தியாவில் அனைத்து பகுதிகளுக்கும் எந்த எண்களுக்குமான 24 மணி நேர இலவச வாய்ஸ் கால்ஸ் வழங்கப்படுகிறது.
பிஎஸ்என்எல் நிறுவனத்தின் இந்த பிராட்பேண்ட் காம்போ சலுகையின் விலை ரூ.1199/- என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது.'பிபிஜி காம்போ யூஎல்டி 1199' என் பெயரிடப்பட்ட இந்த புதிய திட்டமானது 10 மில்லியன் பிராட்பேண்ட் வாடிக்கையாளர்கள் உயர் மதிப்பு பிராட்பேண்ட்களில் சந்திக்கும் சிக்கல்களை சரி செய்ய உதவும் என்று பிஎஸ்என்எல் கூறுகிறது.
ரூ.1199 விலையில் அனைத்து பிஎஸ்என்எல் வட்டாரங்களிலும் புதிய மற்றும் தற்போதுள்ள வாடிக்கையாளர்களுக்கும் இந்த சலுகை கிடைக்கும், நிலுவை கட்டணம் கிடையாது*

*நடிகர் சிவகார்த்திகேயன், சுப்பர் ஸ்டார் ரஜினியின் தீவிர ரசிகர் என்பது எல்லோருக்கும் தெரிந்த ஒன்று* -இவர் நடிப்பிலும், நடன அசைவுகளிலும் கூட ரஜினி சாயல் அதிகமாக இருக்கும். இந்நிலையில், அப்படிப் பட்ட சிவகார்த்திகேயன் சமீபத்தில் ஒரு விஷயத்தில் மட்டும் உலக நாயகன் கமலை பின்பற்றுகிறார்.கமல் எப்போதும் தனது சம்பளத்தை 100 சதவீதம் வெள்ளையில்தான் வாங்கிக் கொள்வார். கமலைப் போலவே சிவகார்த்திகேயனும் தன் சம்பளத்தை வெள்ளையில்தான் பெற்றுக்கொள்கிறார். பெரும்பாலான நடிகர்கள் இதை பின்பற்றவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

*நடிகர் பிரபுதேவா நீண்ட இடைவெளிக்கு பின்னர் தமிழில் நடித்திருக்கும் படம் தேவி. இதில் தமன்னா, எமி ஜாக்சன் நடித்துள்ளனர்* -ஏ.எல். விஜய் இயக்கத்தில் பிரபுதேவாவே தயாரிக்கும் இந்த படத்தின் பெயர் தேவி. மிகுந்த எதிர்பார்ப்புகளை உருவாக்கி இருக்கும் இந்த திரைப்படம் போஸ்ட் ப்ரொடக்சன் வேளைகளில் உள்ளது. நேற்று இந்த படத்தின் ஒரு புது ட்ரைலர் படக்குழு வெளியிட்டது.

*இந்த பெண்ணை போல் உங்களால் புகை விட முடியுமா? : speed வீடியோ virus in whatsup-facebook*
ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு திறமை உண்டு என்று செல்வார்கள். இந்த பெண்ணுக்கோ வாயில் திறமை உண்டு என்றுதான் கூறவேண்டும். புகையை இழுத்து ஸ்டைலாக, பல உருவங்களில் புகையை அசால்ட்டாக விடுகிறார் இந்த இளம் பெண்...

*கபாலி படம் மூலம் பிரபலமடைந்தவர் நடிகை ராதிகா ஆப்தே. இவர் தேர்வு செய்யும் திரைப்படங்களில் கதைக்கு தேவை என்றால், எந்த தயக்கமும் இல்லாமல், நிர்வாணமாக நடிப்பார். அதற்கு கலாச்சார காவலர்களிடம் இருந்து எதிர்ப்புகள் எழுந்தது. அதற்கு பதில் அளித்து பேசிய ராதிகா ஆப்தே, “நிர்வாணமாக நடிப்பது என்னுடைய சுதந்திரம்” என்றார்* . இவர், நடன கலைஞர் டெரன்ஸ் லூயிஸ்யுடன் நடன ஒத்திகை பார்பது போல் ஒரு வீடியோ இணையதளத்தில் வெளியாகியுள்ளது. அந்த வீடியோவை லட்சக்கணக்கானோர் இதை பார்த்துள்ளனர். இசைத்துறையில் அளவற்ற பங்களிப்பிப்பு செய்த 83 வயதாகும் பாடகர் ஆஷா போஸ்லேவிற்கு மரியாதை செலுத்தும்விதமாக இம்மாதம் மும்பையில் நடக்க இருக்கும் விழாவில் ராதிகா ஆப்தே நடனமாடுவதற்காக, இந்த நடன ஒத்திகை செய்ததாக கூறப்படுகிறது.

*விமானம் ஏன் வெள்ளையாவே இருக்குனு யாராவது யோசிச்சீங்களா???* -தெய்வத்திருமகள் படத்தில் காக்க ஏன் பா கருப்பா இருக்கு? மரம் ஏன் பா உயரமா இருக்கு? என கேட்பது போல இருக்கும் இந்த கேள்வியும். ஆனால் இதற்கு பின் அறிவியல் பூர்வமாண விடையும் உள்ளது. நிறங்களிலேயே மங்காத நிறம் வெள்ளை. அதை தவிர்த்து மற்ற அனைத்து நிறங்களும், அதிகமாக வெயில் மற்றும் புற ஊதா கதிர்வீச்சு அதிகம் பட்டால் சீக்கிரம் மங்கிவிடும்.
அதே போல் மற்ற நிறங்கள் சீக்கிரமாக வெப்பத்தை உள்வாங்கும் தன்மை கொண்டவை. இதனால், அதிகம் சூடாகும் வாய்ப்புகள் உள்ளன. வெள்ளை நிறம் ஒளியின் அலைநீளத்தை பிரதிபலித்து அதிகமாக வெப்பம் உள்வாங்காமல் பார்த்துக் கொள்ளும். இதனால் விமானம் அதிகமாக சூடாகாது.
வானில் பறக்கும் போதும், நிலத்திலும் இயல்பாக, எளிதாக பார்க்கக்கூடிய நிலை வெள்ளை நிறத்திற்கு இருக்கிறது. இதனாலும் வெள்ளை நிறம் அதிகமாக பயன்படுத்தப்படுகிறது.
மேலும், விமானங்களுக்கு வெள்ளை நிறம் பயன்படுத்துவதால் மறுவிற்பனை மதிப்பும் அதிகம் பாதிக்காது எனவும் கூறப்படுகிறது.
பெரும்பாலான விமானங்கள், விமான கம்பெனிகளால் சொந்தமாக வாங்கப்படுவது இல்லை. விமான உற்பத்தி நிறுவனங்களிடம் இருந்து குத்தகைக்கு தான் வாங்குகின்றனர். வெள்ளை நிறம் பயன்படுத்துவதால், லோகோவை மற்றும் மாற்றினால் போதுமானது எனவும் சிலர் கூறுகின்றனர்.

விமானத்தை பொதுவாக பெயின்ட் செய்ய 33 லட்சத்தில் இருந்து ஒரு கோடியே 33 லட்சம் வரை ஆகலாம். வண்ணங்கள் அதிகரிக்க அதிகரிக்க அதற்கான செலவும் அதிகரிக்கும். இதுபோல பல காரணங்களால் விமானம் வெள்ளை நிறத்திலேயே இயக்கப்படுகிறது.

*வாங்கிய பணத்தை ராம்ராஜ் திருப்பி கொடுக்கவேண்டும் : தமிழச்சி ஆவேசம்*
சுவாதி வழக்கிலிருந்து ராம்குமாரின் வழக்கறிஞர் ராம்ராஜ் விலக முடிவெடுத்தால், அவர் இதுவரை வாங்கிய பணத்தை திருப்பிக் கொடுக்க வேண்டும் என்று தமிழச்சி கருத்து தெரிவித்துள்ளார்.

*”இரட்டை கோபுரம் தகர்க்கப்பட்டது போல ஆயிரம் தடவை தாக்குவோம்” அல்-கொய்தா மிரட்டல்* -’இரட்டை கோபுரம் இடித்து தகர்க்கப்பட்டது போன்று ஆயிரம் தடவை தாக்குவோம்’ என அமெரிக்காவுக்கு அல்-கொய்தா மீண்டும் மிரட்டல் விடுத்துள்ளது.

*உலகையே திரும்பி பார்க்க வைத்த சுவர்ணலட்சுமி*  -உலகை பார்க்காமல் உலகையே திரும்பி பார்க்க வைத்து சாதித்த பெண்ணை உளமார பாராட்டுவோம். அமெரிக்காவில் உள்ள ஐ.நா.சபையில் ஒருவர் ஒரு முறை பேசினாலே வாழ்க்கையில் பாக்கியம் பெற்றவர் ஆவார். ஆனால் பார்வையற்ற சென்னை மாணவி சுவர்ணலட்சுமி ஒரு முறைக்கு இரு முறை சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு ஐ.நா.வில் பேசியுள்ளார்  ‘சென்னை கனரா பாங்கின் நிறுவனர் நாள்’ விழாவினை முன்னிட்டு சாதனை புரிந்த மாணவ, மாணவியருக்கான பாராட்டு விழா “ப்ரீடம் ட்ரஸ்ட்” டாக்டர் சுந்தர் தலைமையில் நடைபெற்றது. மேடைக்கு அழைக்கப்பட்டவர்களில் ‘சுவர்ணலட்சுமி’ பலரது கருத்தையும் கவர்ந்தார். ஐ.நா. போய் வந்த சுவர்ணலட்சுமிக்கு இங்குள்ள பல்வேறு அமைப்புகள் பாராட்டு விழா நடத்தி வருகின்றன.

*பேஸ்புக்கில் லைவ் செக்ஸ் : காதலியின் தந்தைக்கு டேக் செய்த காதலன்* -தன்னுடைய காதலியுடன் உடல் உறவில் ஈடுபடுவதை, ஒரு வாலிபர் நேரடியாக பேஸ்புக்கில் ஒளிபரப்பிய செய்தி வெளியாகியிருக்கிறது* இருவரும் காதலர்கள், அவர்களின் காதலை பெற்றோர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை, காதலியின் தந்தைக்கு காதலனை பிடிக்கவில்லை, என்ற பழைய கதைதான். ஆனால், அந்த காதலர்கள் செய்த விஷயம்தான் புதுசு..
அதாவது, தனது காதலியின் தந்தையை கடுப்பேற்ற முடிவு செய்த அந்த காதலன், காதலியுடன் உடல் உறவில் ஈடுபடுவதை தனது பேஸ்புக் பக்கத்தில் நேரிடையாகஒளிபரப்பினார். மேலும், அந்த வீடியோவை காதலியின் தந்தைக்கும் டேக் செய்தார். வீடு முழுக்க பல இடங்களில் உலாவி அவர்கள் உடல் உறவில் ஈடுபட்டுள்ளனர்.
மொத்தம் 33 பேர் அந்த வீடியோவை பார்த்துள்ளனர். இதன் மூலம், காதலியின் தந்தையை பழிவாங்கியதாக கருதியுள்ளார் அந்த ரோமியோ. ஆனால், பேஸ்புக்கில் பதிவு செய்த சிறிது நேரத்தில் அந்த வீடியோ நீக்கப்பட்டது.

*காஷ்மீரில் பாதுகாப்பு படையினருடன் போராட்டக்காரர்கள் மீண்டும் மோதல்: 2 பேர் பலி*

*சாரதா சிட்பண்ட் மோசடி: ஜாமீனில் விடுவிக்கப்பட்ட மதன் மித்ரா குறித்து கருத்து கூற மம்தா பானர்ஜி மறுப்பு*

*டெல்லி பல்கலைக்கழகம் மற்றும் இந்த பல்கலைக்கழகத்துக்கு உட்பட்டு டெல்லியில் இயங்கிவரும் 44 கல்லூரிகளின் மாணவர் சங்க பொறுப்பாளர்களை தேர்ந்தெடுக்கும் தேர்தல் நேற்று நடைபெற்றது.இந்தத் தேர்தலில் இந்திய தேசிய மாணவர்கள் யூனியன் மற்றும் அகில பாரதிய வித்யார்த்தி பவன் ஆகிய அமைப்புகள் போட்டியிட்டன.   இந்த தேர்தல் முடிவுகள் இன்று வெளியாகின. இந்தத் தேர்தலில் தலைவராக அகில பாரதிய வித்யார்த்தி பவன் அமைப்பைச் சேர்ந்த அமித் தன்வர், துணைத் தலைவராக பிரியங்கா சாப்ரி, செயலாளராக அங்கித் சாங்க்வான் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இந்திய தேசிய மாணவர்கள் அமைப்பைச் சேர்ந்த மோஹித் சங்கவான் துணை செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்*

*பான் கி மூன் ஒரு முட்டாள் என மீண்டும் பிலிப்பைன்ஸ் அதிபர் சர்ச்சை பேச்சு * -பிலிப்பைன்ஸ் அதிபர் ரோடிரிகோ டுட்டர்டே, அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவை கடுமையாக திட்டிப் பேசி பரபரப்பை ஏற்படுத்தினர். பின்னர் அதற்காக மன்னிப்பு கோரினார்

*கர்நாடகத்தில் தமிழர்களை தாக்குபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் - மத்திய மந்திரி ராம்தாஸ் அத்வாலே *

*96 டி.எம்.சி. தண்ணீர் தரக்கோரி தமிழக அரசும் சீராய்வு மனு தாக்கல் செய்ய வேண்டும் கருணாநிதி அறிக்கை*

*திருவள்ளூர்: ஆரணி சுற்றுவட்டாரத்தில் மஞ்சள் நோயால் நெற்பயிர்கள் நாசம் அடைந்து வருகின்றன. உழவன்பாடி, சீனிவாசபுரம், மருசூர் உள்ளிட்ட கிராமங்களில் 100 ஏக்கர் நெற்பயிர் நாசமடைந்துள்ளன. நெற்பயிரில் மஞ்சள் நோய் பரவி வருவதால் ஆரணி சுற்றுவட்டார விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்*

*விருதாச்சலத்தில் ஓய்வு பெற்ற நீதிமன்ற ஊழியர் குருநாதன் வீட்டில் 15 சவரன் நகை திருடிச் சென்றுள்ளனர். வெளியூர் சென்ற குருநாதன் வீட்டில் பூட்டை உடைத்து ரூ.60 ஆயிரத்தையும் மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்*

*சென்னை பட்டினம்பாக்கத்தில் விநாயகர் சிலைகள் கடலில் கரைக்கப்படுகின்றன. பல்வேறு இடங்களில் இருந்து விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்டு கடலில் கரைக்கப்படுகிறது*

*லிமா: பெரு நாட்டின் வடக்கு பகுதியில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.1-ஆக பதிவாகி உள்ளது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புக்கள் மற்றும் உயிரிழப்பு குறித்து தகவல் தெரிவிக்கப்படவில்லை*

*சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.40 உயர்ந்துள்ளது. ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.2,974-க்கும், சவரன் ரூ.23,792-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை கிராம் ரூ.50.10-க்கும் கட்டி வெள்ளி கிலோ ரூ.46,835-க்கும் விற்கப்படுகிறது*

* இஸ்லாமிய அறக்கட்டளையின் தேசவிரோத செயல்களை காங்கிரஸ் ஆதரித்தது என பாஜக குற்றம்சாட்டியுள்ளது. ராஜூவ் அறக்கட்டளைக்கு இஸ்லாமிய அறக்கட்டளை ரூ.50 லட்சம் நன்கொடை வழங்கியது ஏன் எனவும் மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கேள்வி எழுப்பியுள்ளது*

*தங்கம் வென்ற மாரியப்பனுக்கு நடிகரும், சட்டமன்ற உறுப்பினருமான கருணாஸ் ரூ.50,000 பரிசு அறிவித்துள்ளார்*

*மாரியப்பன் தங்கம் வென்றதை அடுத்து அவரது சொந்த ஊரில் மக்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். சேலம் பெரியவடகன்பட்டியில் பள்ளி மாணவர்கள் மற்றும் உறவினர்கள் பட்டாசு வெடித்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்*

*சென்னை தங்கசாலையில் பழைய கட்டிடம் இடிந்து விழுந்ததில் 2 பேர் படுகாயம் அடைந்தனர். மேலும் காயமடைந்த புருஷோத்தமன், கீதா ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்*

*டேவிஸ் கோப்பையில் இருந்து போபண்ணா விலகல்*

*காவிரி நீர் பிடிப்பு பகுதியில் உள்ள ஆரங்கி,ேஹமாவதி, கபிணி அணையில் துணை ராணுவ படையினர் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர். மாண்டியா மாவட்டம் முழுவதும் போலீஸ் கட்டுக்குள் உள்ளது. பிருந்தாவன் பூங்காவுக்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பபட்டன*

* திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சில நாட்களாக வைரஸ் காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இதுவரை 78 பேர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சிகிச்சை பெறுவோரை திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் சுந்தரவள்ளி இன்று நேரில் சென்று சந்தித்தார். அவர்களுக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சைகளையும் கேட்டறிந்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், திருவள்ளூரில் வைரஸ் காய்ச்சல் தற்போது கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களில் 4 பேருக்கு டெங்கு அறிகுறி இருப்பது கண்டறியப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்

*சென்னை  பழைய வண்ணாரபேட்டையில் மாநகர பேருந்து, இருசக்கர வாகணத்தின்மீது மோதி விபத்து தனியார் சீட்டு  பண்டு காசாளர் சம்பவ இடத்திலேயே  பலி

செப்டம்பர் 10
சென்னை  பழைய வண்ணாரபேட்டை திருவொற்றியூர் விரைவு சாலையில்  மாநகர பேருந்து தடம் எண் 28A ஓட்டிவந்த முஹம்மது முனிப்  மோதி இருசக்கர வாகனத்தில் வந்த தண்டையார்பேட்டை சேர்ந்த ரஞ்சித்குமார்  . இவர் தனியார் சீட்டு  பண்டு  காசாளராக   பணியாற்றும் ரஞ்சித்குமார் இவர்    சம்பவ இடத்திலேயேபரிதாபமாக பலியனர்  விபத்து குறித்து வண்ணாரபேட்டை புலனாய்வு போக்குவரத்து   காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து உடலை மீட்டு பிரேத  பரிசோதனைக்கு  அரசு மருத்துவமனைக்கு  அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

*மருத்துவமனையை கண்டுக்கொள்ளாத முதல்வர்*

காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டு அரசு பொது மருத்துவமனை தீவிர சிகிச்சைபிரிவில் வைக்கப்பட்ட புகார் பெட்டியில் ஒருமாதங்களுக்கு முன்பு போடப்பட்ட புகார்களை மருத்துவமனை முதல்வர் குணசேகரன் இதுவரை எடுத்து பார்க்கவில்லை என மக்கள் குற்றச்சாட்டு முதல்வர் மருத்துவமனைக்கு சரிவர வருவதில்லை எனவும் குற்றச்சாட்டு.

பகல் கொள்ளையை
கவனிக்குமா
புதுச்சேரி போக்குவரத்து துறை.

வில்லியனூர் அரும்பார்த்தபுரம் இரயில்வே மேம்பாலம் கட்டும்பணி நடைபெறுவதால்
வில்லியனூர்.  பொறையூர்
ஊசுடு வழுதாவூர்சாலை வழியாக பேருந்துகள்  மூலகுளம் சென்று புதுச்சேரிக்கு வழக்கம் போல் செல்ல
வேண்டும்.

இதனால் பேருந்துகள் நான்கு கிலோ மீட்டர் சுற்றி செல்ல வேண்டியிருப்
பதால் பேருந்து கட்டணம் ரூபாய் ஐந்திலிருந்து கூடுதலாக இரண்டு ரூபாய் சேர்த்து ரூபாய்  7/- .(ஏழு) வசூலிக்க புதுச்சேரி போக்குவரத்து ஆணையர் உத்தரவு பிறப்பித்
திருந்தார்.

அதே போன்று புதுச்சேரியில்
இருந்து வில்லியனூர் வர பழைய கட்டணத்தில் (ரூ.5/-) எவ்வித மாற்றமும் இல்லை எனவும்

பேருந்துங்கள்
மூலகுளம் பெரம்பை சென்று மூலக்கடை வழியாக வில்லியனூர் செல்ல உத்தரவு பிறப்பித்து
இருந்தார்.

அதனை ஒரு சில பேருந்துகளை தவிர ஏனைய பேருந்துகள் கடைபிடிக்க
வில்லை.
புதுச்சேரியில் இருந்து வர ரூபாய் 7/- கட்டாயப்படுத்தி வாங்குகிறார்கள்.

இதனை பலமுறை போக்குவரத்து ஆணையரின் நேர்முக உதவியாளரிடம் தெரிவித்தால் பெயருக்கு ஒரு நடவடிக்கை எடுத்து அதோடு விட்டு
விடுகின்றனர்.

இரண்டு மாதத்திற்கு முன்பு கூடுதல் கட்டணம் வசூலிக்கும் பேருந்துகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கபடும் என்று கூறியிருந்தார் ஆனால் இன்று (10.09.2016)  சனிக்கிழமை மதியம்  1.15 மணிக்கு மதிகடிப்பட்டு பேருந்து பெயர். RBC. 
புதுவையில் இருந்து வில்லியனூர் வர ரூபாய் 7/- சூலித்தார்கள். டிக்கெட்   ரூபாய் 7/- என்று  போட்டு கொடுத்து
உள்ளார்கள்.

பேருந்தின் உள்ளே First Aid Box கூட இல்ல இவை அனைத்தும் புகைப்படம் எடுத்து போட்டுள்ளேன். 

பொதுமக்களிடம் கூடுதலாக ரூபாய் 2/-  கொள்ளை அடிப்பது தடுக்கப்படுமா.

நடவடிக்கை எடுக்குமா புதுச்சேரி அரசு.

ஆதங்கத்துடன்

கலிய. முருகன்
வில்லியனூர்
புதுச்சேரி.

சென்னை தங்கசாலையில் டாடா போன் டவர் ரோட்டில் இடிந்து விழுந்து பரந்தாமன் வயது 28 மரணம் லலிதா 44 படுகாயம் ஏழுகிணறு போலீஸ் விசாரணை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here