நாட்டு நடப்புகள் 14/09/2016 - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

நாட்டு நடப்புகள் 14/09/2016


·         உலக தலைவர்கள் மீது பான் கி மூன் அதிருப்தி- லோக்கல் தலைவர்களுக்கும் இது பொருந்துது
·         ஐநா., பொதுச் செயலாளராக பதவி வகித்து வரும் பான் கி மூன், 10 ஆண்டுகளுக்கு பிறகு, உலக தலைவர்கள் மீதான தனது அதிருப்தியை வெளிப்படுத்தி உள்ளார். பான் கி மூன், ஐநா பொதுச் செயலாளராக தான் பெற்ற வெற்றிகள், தோல்விகள், மனவேதனைகள் பற்றி வெளிப்படையாக பேசி உள்ளார். அவர் கூறுகையில், உலக தலைவர்கள் பலர் மக்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்துவதை விட, தங்களின் ஆட்சி அதிகாரத்தை தக்க வைத்துக் கொள்வதிலேயே அதிக கவனம் செலுத்துகிறார். அதிபர் பஷர் அசாத் என்ற ஒரு மனிதரால் சிரியா விதியின் கையின் பிணைய கைதி போல் சிக்கிக் கொண்டிருப்பது ஏன் என தெரியவில்லை.
·         நான் மனிதஉரிமைகள் பற்றி ஏதும் பேசவில்லை என கூறி பலரும் என்னை பதவி விலக சொல்கிறார்கள். ஆனால் மற்ற மேற்கத்திய தலைவர்களை விட நான் அதிகமாகவே பேசி உள்ளேன் என்பதை என்னால் நிச்சயமாக சொல்ல முடியும். உலகம் இன்று அனுபவித்து வரும் இன்னல்கள் மக்களால் வந்தது இல்லை. தலைவர்களால் உருவாக்கப்பட்டது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் என பல தலைவர்கள் கூறிக் கொள்கிறார்கள். உண்மையில் அவர்கள் சொல்வதன் அர்த்தம், ஒருமுறை தேர்வாகி விட்டால் மக்களை அடக்கி ஆள்வது, அதிகம் ஊழல் செய்வது, மக்களின் குரல்களை மதிப்பதில்லை என்றார்


1] *சசிகலா புஷ்பாவின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது மதுரை உயர் நீதிமன்ற கிளை*

2] *கோவாவில் மல்லையாவின் ரூ.85 கோடி சொகுசு பங்களா ஏலம் விடப்படுகிறது, ஸ்டேட் பாங்கி நடவடிக்கை*

3] *தமிழக காங்கிரஸ் தலைவராக திருநாவுக்கரசர் நியமனம்*

4] *சட்டம் மற்றும் ஒழுங்கை பராமரிக்க தமிழகம் மற்றும் கர்நாடகாவிற்கு உத்தரவிடக் கோரி சுப்ரீம் கோர்ட்டில் மனுதாக்கல் செய்யப்பட்டு உள்ளது. மனுவை நாளை விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி டிஎஸ் தாகூர் மற்றும் ஏஎம் கான்வில்கார் அடங்கிய பெஞ்ச் கூறியது. மனுதாரர் பி சிவகுமாரின் வழக்கறிஞர் அதிஷ் அகர்வாலா, பொதுநல மனுவை உடனடியாக எடுத்து விசாரிக்கவேண்டும் என்று வலியுறுத்தினார். சட்டம் ஒழுங்கை பராமரிக்கவும், தனியார் மற்றும் பொது சொத்துக்கள் மற்றும் பொதுமக்களுக்கு பாதுகாப்பு வழங்க இருமாநிலங்களுக்கும் உத்தரவிட வேண்டும் என்று மனுவில் கூறப்பட்டு உள்ளது.சிவகுமார் தரப்பில் தாக்கல் செய்யப்பட்டு உள்ள மனுவில், வன்முறையில் சூறையாடப்பட்ட சொத்துக்களுக்கு போராட்டத்திற்கு தலைமை தாங்கிய தலைவர்கள் பொறுப்பு ஏற்கவும், சேதப்படுத்தப்பட்ட சொத்துக்களுக்கான தொகையை அவர்களே செலுத்த உத்தரவிடவேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது*

5] *பா.ஜனதாவில் இருந்து சித்து விலகினார். அவரது மனைவி எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார்* -கட்சி மேலிடத்துடன் இவருக்கு கருத்துவேறுபாடு ஏற்பட்டதால் ராஜினாமா செய்தார் என்று கூறப்பட்டது. அதை தொடர்ந்து அவர் ஆம் ஆத்மி கட்சியில் சேர்ந்து பஞ்சாப் சட்டசபை தேர்தலில் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் புதிதாக ஒரு இயக்கத்தை தொடங்கினார். அதன் மூலம் பஞ்சாப் மாநில வளர்ச்சிக்கு பாடுபட போவதாக அறிவித்தார்

6] *கர்நாடகத்தில் நடந்த வன்முறையால் ஐ.டி. நிறுவனங்களுக்கு ரூ.25,000 கோடி நஷ்டம் ஏற்பட்டு உள்ளது*

7] *சமாஜ்வாடி கட்சியின் தலைவர் பதவியை பறித்ததால் முலாயம்சிங் யாதவுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக அகிலேஷ் யாதவ்  ‘சித்தப்பாவிடம் இருந்து முக்கிய மந்திரி பதவியை பறித்துவிட்டார்’* -அகிலேசுக்கும் அவரது சித்தப்பாவான சிவ்பாலுக்கும் இடையே மோதல் ஏற்ட்டுள்ளது. சில மாதங்களுக்கு முன்பு முக்தார் அன்சாரி என்வரின் கட்சியை சமாஜ்வாடி கட்சியுடன் இணைக்க சிவ்பால் விரும்பினார். ஆனால் அதை அகிலேஷ் யாதவ் ஏற்க மறுத்து விட்டார். இதனால் அதிருப்தி அடைந்த சிவபால் கட்சியில் விலக முயன்றார். அவரை முலாயம்சிங் சமரசம் செய்தார். மேலும், சிவ்பால் யாதவ் மீது அதிகமான லஞ்ச புகார்கள் வருவதால் அவரை ராஜினாமா செய்யும்படி மிரட்டல் விடுக்கப்படுவதாகவும் தகவல் வெளியாகியது. இந்த நிலையில் நேற்று திடீரென சமாஜ்வாடி கட்சி தலைவர் பதவியில் இருந்து அகிலேஷ் யாதவை முலாயம் நீக்கினார். அதோடு கட்சித் தலைவராக தனது சகோதரர் சிவ்பாலை நியமனம் செய்து அறிவித்தார். இது அகிலேசிடம் கடும் அதிர்ச்சியை ஏற்டுத்தியது. அடுத்த சில மணி நேரத்துக்குள் அவர் பதிலடி நடவடிக்கைகளில் ஈடுபட்டார்.  மந்திரி சபையில் சிவ்பால் பொதுப்பணித் துறை, நீர்ப் பாசனம், வருவாய், மற்றும் கூட்டுறவுத் துறை ஆகிய வற்றை வகித்து வந்தார். நேற்றிரவு அந்த பதவிகளை அகிலேஷ் பறித்தார். அதற்கு பதில் முக்கியத்துவம் இல்லாத சமூக நலத்துறையை கொடுத்துள்ளார். அகிலேசின்  இந்த அதிரடி நடவடிக்கை முலாயம்சிங், சிவ்பால் இருவருக்கும் கடும் அதிர்ச்சி அளித்துள்ளது.

8] *கர்நாடகாவில் மீண்டும் அமைதி திரும்பி வருகிறது. பள்ளி-கல்லூரிகள் திறக்கப்பட்டது. துணை ராணுவப்படை பாதுகாப்பு நீடிக்கப்பட்டு உள்ளது*

9] *டெல்லியில் சிக்கன்குனியா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்து உள்ளது. நாடு முழுவதும் 12 ஆயிரம் பேருக்கு பாதிப்பு உள்ளது என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது*

10] *சிரியாவில் பிணைக்கைதிகள் கழுத்தை அறுத்து தொங்கவிடும் கொடூர வீடியோவை ஐ.எஸ். பயங்கரவாதிகள் வெளியிட்டு உள்ளனர்*

11] *கொலம்பியாவில் 5.9 ரிக்டர் அளவுக்கொண்ட நிலநடுக்கம் ஏற்பட்டது*

12] *காவிரியில் தண்ணீர் திறந்து விடக்கோரியும் கர்நாடகத்தில் நடக்கும் வன்முறையை கண்டித்தும் நாளை மறுநாள் (16-ந்தேதி) முழுஅடைப்பு போராட்டம் நடத்த போவதாக விவசாய சங்கங்கள் அறிவித்துள்ளன. இதற்கு தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மற்றும் வணிகர் சங்கங்களின் பேரவை ஆதரவு தெரிவித்துள்ளன. இந்த நிலையில் முழு அடைப்பு போராட்டத்திற்கு ஆதரவு தருமாறு தி.மு.க. உள்பட பல்வேறு கட்சிகளுக்கு விவசாய சங்கங்கள் கோரிக்கை விடுத்து இருந்தன. இதை ஏற்று 16-ந்தேதி நடைபெறும் முழு அடைப்பு போராட்டத்திற்கு தி.மு.க. ஆதரவு அளிக்கும் என்று தி.மு.க. தலைவர் கருணாநிதி அறிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் 16-ந்தேதி நடைபெறும் போராட்டத்தில் தி.மு.க.வினர் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.  முழு அடைப்பு போராட்டத்திற்கு ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவும் ஆதரவு தெரிவித்துள்ளார்*

13] *கொரட்டூரில் பொதுமக்களுக்கு தொல்லை கொடுத்து வந்த ‘ஸ்கைரோனமஸ்’ பூச்சிகள் உற்பத்தியாகும் இடத்தை வேளாண்மை பல்கலைக்கழக குழுவினர் கண்டுபிடித்து சாதனை படைத்துள்ளனர்*

14] *தேர்தல் அறிக்கையில் சொன்னபடி, பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் தெரிவு செய்யப்பட்ட நூல்கள், பிரெஞ்சு, ஜெர்மன், மலையாளம், இந்தி, தெலுங்கு மொழிகளில் மொழி பெயர்க்கப்படும் என்று முதல்–அமைச்சர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்*

15] *தமிழகத்தில் வரும் 16ம் தேதி பெட்ரோல் பங்குகள் இயங்காது என்று கே.பி.முரளி அறிவித்துள்ளார். கர்நாடகத்தில் தமிழர்கள்  தாக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து நடைபெறும் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து பெட்ரோல் பங்குகள் இயங்காது என  தெரிவிக்கப்பட்டுள்ளது. காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை பெட்ரோல் பங்குகள் இயங்காது என்று முரளி தெரிவி்தார்*

16] *உத்திர பிரதேச மாநில முதல்வர் அகிலேஷ் யாதவ் லக்னோவில் புதிய காப்பீடு திட்டத்தை அறிமுகம் செய்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் பாலிவுட் நடிகர் நவாஸுதின் சித்திக் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்*

17] * வாட்ஸ்அப் நிறுவனத்தின் புதிய அப்-க்கு எதிரான வழக்கில் பதில் அளிக்க டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. புதிய அப் மூலம் தகவல்கள், புகைப்படங்களை பகிர்ந்து கொள்வதில் சிரமம் உள்ளதாக பொதுநல வழக்கு ஒன்றை தாக்கல் செய்யப்பட்டிருந்தது*

18] *அரசு முறை பயணமாக ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கானி இந்தியா வந்துள்ளார். டெல்லியில் அவர் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசினார்*

19] *வேலூர் சிறையில் பேரறிவாளனை தாக்கிய வடமாநிலத்தைச் சேர்ந்த ராஜேஷ் கண்ணா தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார். சர்க்ரை  நோய், ரத்த அழுத்த நோய்களுக்கான மாத்திரைகளை அதிகமாக சாப்பிட்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார். மாத்திரைகளை சாப்பிட்ட  ராஜேஷ் மயக்கமடைந்ததையடுத்து சிறை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்*

20] *காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. மத்திய மேற்கு வங்கக் கடலில்  காற்றழுத்த தாழ்வுப் பகுதி அதே இடத்தில் நீடிப்பதால் மழை தொடரும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த 24  மணிநேரத்தில் அதிகபட்சமாக தஞ்சாவூரில் 5 செ.மீ., மழையும், ராசிபுரத்தில் 4 செ.மீ,. மழையும் பெய்துள்ளது*

21] *டெங்கு மற்றும் சிக்கன்குனியா பரவி வருவதை குறித்து கவலைப்பட வேண்டாம் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜேபி நட்டா  கூறியுள்ளார். நாடு முழுவதும் மருந்துகள் மற்றும் சோதனை மையங்கள் அதிக அளவில் உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்*

22] *அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட முதல்வர் ஜெயலலிதா நடவடிக்கை எடுக்கவில்லை என எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின்  புகார் தெரிவித்துள்ளார். காவிரி பிரச்சனை தொடர்பாக அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட திமுக தொடர்ந்து வலியுறுத்தி வருவதாகவும் ஸ்டாலின்  தெரிவித்தார்*

23] *காவல்துறை, தீயணைப்புத்துறை, சிறை, ஊர்க்காவல் துறை அலுவலர்கள் 126 பேருக்கு அண்ணா பதக்கம் வழங்கப்பட உள்ளதாக  முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார். அர்பணிப்புடன் பணிபுரிந்தவரை பாராட்டும் வகையில் முதலமைச்சரின் பதக்கங்கள் வழங்கப்படுகின்றன.  முதல்நிலைக் காவலர் முதல் கண்காணிப்பாளர் வரை 100 பேர், தீயணை்புத்துறையில் 7 பேருக்கு பதக்கம் வழங்கப்பட உள்ளது. சிறைத்துறையில் 9  அலுவலர்களுக்கும், ஊர்க்காவல் துறையைச் சேர்ந்த 8 பேருக்கும் பதக்கம் வழங்கப்படுகிறது*

24] *ஷீனா போரா கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள இந்திராணி, சஞ்சீவ் கன்னா, மற்றும் கணவர் பீட்டர் முகர்ஜி ஆகியோர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களின் நீதிமன்ற காவல் முடிவடைந்ததை அடுத்து  இந்திராணி உள்ளிட்டவர்களின் நீதிமன்ற காவலை செப்டம்பர் 27 ம் தேதி வரை நீடித்து மும்பை எஸ்பிளனடே நீதிமன்றம்  உத்தரவிட்டுள்ளது*

25] *எம்.ஜி.ஆர். உறவினர் கொலை: ஆயுள் தண்டனையை எதிர்த்து 7 பேர் மேல்முறையீடு*

26] *கோவை மாவட்டம் பாப்பம்பட்டி பிரிவு அருகே கோழி ஏற்றிக்கொண்டு வேன் வந்தது. வேனை ஆனைமலையை சேர்ந்த ஆறுச்சாமி,32, ஓட்டி வந்தார். வேனில் வால்பாறையை சேர்ந்த சரவணன்,29, லாலா ஜோயி ஆகியோரும் உடன் வந்தனர். வழியில் கிணத்துக்கடவு அருகே சோழவாடி பிரிவு என்ற இடத்தில் வேன் கட்டுப்பாட்டை இழந்து வேப்ப மரத்தின் மீது மோதியது. இதில் சரவணன் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். மற்ற இருவரும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் மரணமடைந்தனர்*

27] *பஞ்சாப் சட்டசபையில் அமைச்சர் மீது ஷூவை வீசிய காங்., எம்.எல்.ஏ*

28] *செப்.,16, கோவாவில் பிரிக்ஸ் சுற்றுச்சூழல் மாநாடு*

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here