ராமநாதபுரத்தில் 144 தடை :தியாகி இமானுவேல் சேகர தேவேந்திரர் ,முத்துராமலிங்க தேவர் நினைவுநாளை முன்னிட்டு மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

ராமநாதபுரத்தில் 144 தடை :தியாகி இமானுவேல் சேகர தேவேந்திரர் ,முத்துராமலிங்க தேவர் நினைவுநாளை முன்னிட்டு மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை


ராமநாதபுரம் மாவட்டத்தில் முத்துராமலிங்க தேவர், அதன்படி பொதுக்கூட்டங்கள், பேரணிகள் நடத்தவும், ஐந்து மற்றும் அதற்கு மேற்பட்டவர்கள் கூடுவதற்கும் தடை விதிக்கப்படுகிறது. அரசியல் கட்சிகள் உள்ளிட்டவை பேரணிகள், பொதுக்கூட்டங்கள் நடத்த அனுமதி பெற வேண்டும். மேலும் செப்டம்பர் 9 முதல் 15ஆம் தேதி வரையும், அக்டோபர் 25 முதல் 31ஆம் தேதி வரையும், வெளி மாவட்டங்களில் இருந்து வாடகை வாகனங்கள், சரக்கு வாகனங்கள், டிராக்டர்கள், மோட்டார் சைக்கிள்கள், ஆட்டோக்களில் தலைவர்களின் நினைவிடங்களுக்கு அஞ்சலி செலுத்த வரவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேபோல் நினைவிடங்களுக்கு ஒரு கிலோ மீட்டருக்குள் மட்டுமே மாவட்ட நிர்வாகத்தின் அனுமதி பெற்று ஜோதி எடுத்து வர வேண்டும். மேலும் அஞ்சலி செலுத்த வரும் வாகனங்கள் அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களில் செல்ல வேண்டும்.

இமானுவேல் சேகரன் நினைவு நாள் நிகழ்ச்சிகளை முன்னிட்டு இன்று முதல் இரண்டு மாதங்களுக்கு 144 தடை உத்தரவு அறிவிக்கப்பட்டுள்ளது. தென் மாவட்டங்களில் எப்போதுமே அதன் இயல்பு வாழ்வை குலைத்து பதற்றத்தை உருவாக்கும் விழாக்களாக முத்துராமலிங்க தேவர் குரு பூஜையும், இமானுவேல் சேகரன் நினைவு நாள் பூஜையும் இருக்கின்றன.பரமக்குடியில் செப்டம்பர் 11 அன்று இமானுவேல் சேகரன் நினைவு தினம், அக்டோபர் 30இல் கமுதி பசும்பொன்னில் முத்துராமலிங்கத் தேவர் குரு பூஜை விழாவை முன்னிட்டு, இன்று (செப்டம்பர் 9) முதல் இரண்டு மாதங்களுக்கு ராமநாதபுரம் மாவட்டத்தில் 144 தடை உத்தரவை மாவட்ட ஆட்சியர் ச.நடராஜன் பிறப்பித்தார். 
செப்டம்பர் 11 இமானுவேல் சேகரன் நினைவிடத்துக்கு அஞ்சலி செலுத்தவரும் அரசியல் கட்சி தலைவர்கள், பல்வேறு அமைப்புகளின் தலைவர்கள் அனுமதிக்கப்பட்ட நேரத்தில் வந்து அஞ்சலி செலுத்திவிட்டுச் செல்ல வேண்டும். நினைவிடத்தில் மாலை நான்கு மணிக்குள் அனைத்து நிகழ்ச்சிகளையும் முடித்துக்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here