மதிய செய்திகள் 15/09/2016 - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

மதிய செய்திகள் 15/09/2016

           

🌍தங்கம் விலை சவரனுக்கு ரூ.16 உயர்வு

சென்னை : தங்கம் சந்தையில் இன்று விலை ஏற்றம் காணப்படுகிறது. தங்கம் விலை சவரனுக்கு ரூ.16ம் அதிகரித்துள்ளது. அதேசமயம் பார்வெள்ளி விலை ரூ.115 குறைந்துள்ளது. இன்றைய காலை நேர நிலவரப்படி சென்னையில் ஒரு கிராம் (22 காரட்) ஆபரண தங்கத்தின் விலை ரூ.2960 ஆகவும், 10 கிராம் (24 காரட்) தங்கத்தின் விலை ரூ.31,660 ஆகவும் உள்ளது. ஒரு சவரன் தங்கம் ரூ.23,680 க்கு விற்பனையாகிறது. அதே சமயம், வெள்ளி விலை கிராமுக்கு 20 காசுகள் குறைந்து ரூ.49 ஆகவும், பார்வெள்ளி விலை ரூ.115 குறைந்து ரூ.45,825 ஆகவும் உள்ளது.


📡அண்ணா சிலைக்கு ஜெ. மரியாதை

அண்ணாவின் 108வது பிறந்த நாளையொட்டி சென்னை அண்ணா சாலையில் உள்ள அவரது திருவுச்சிலைக்கு கீழே உள்ள திருவுருவப்படத்திற்கு ஜெயலலிதா மலர்தூவி மரியாதை செய்தார். அமைச்சர்கள் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிச்சாமி, செல்லூர் ராஜு, தங்கமணி உள்ளிட்ட அமைச்சர்களும் மலர்தூவி மரியாதை செய்தனர்.

🌍மனிதம்: விபத்தில் சிக்கிய கன்னடர்களை மீட்ட தமிழர்கள்

தமிழக பதிவெண் கொண்ட வாகனங்களை தாக்குவதும், தீ வைத்து எரிப்பதும் கர்நாடகத்தில் நடக்கும் வேளையில். கர்நாடக பதிவெண் கொண்ட கார் விபத்தில் சிக்க.. அதில் இருந்த கன்னடர்களை மனிதாபிமானத்தோடு மீட்டு காப்பாற்றியிருக்கிறார்கள் தமிழர்கள்.


📡லிபியாவில் கடத்தப்பட்ட இரு இந்தியர்கள் மீட்பு

புதுடில்லி: லிபியாவில் கடத்தப்பட்ட இரண்டு இந்தியர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர்.கடந்த வருடம் ஜூலை மாதம் ஆந்திராவை சேர்ந்த டி.கோபாலகிருஷ்ணன், தெலுங்கானாவை சேர்ந்த பல்ராமகிருஷ்ணன் ஆகியோர், லிபியாவில் பயங்கரவாதிகளால் கடத்தி செல்லப்பட்டனர். அவர்களது நிலை குறித்து தெரியாமல் இருந்தது. இரண்டு பேரையும் மீட்க வேண்டும் என அவர்களது குடும்பத்தினர் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். அவர்களை மீட்க வெளியுறவுத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வந்தனர்.இந்நிலையில், இருவரும் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதாக மத்திய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ் டுவிட்டரில் கூறியுள்ளார்.


🌍ஏர்செல், ஆர்-காம் இணைப்புக்கு ஒப்புதல்

மும்பை: ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் (ஆர்-காம்) நிறுவனமும் ஏர்செல் நிறுவனமும் இணைய உள்ளன. இதற்கான முடிவை இரு நிறுவனங்களும் நேற்று எடுத்துள்ளன. 


📡டெங்கு தடுப்பு பணிகளை புறக்கணிக்க போவதாக தமிழ்நாடு சுகாதார ஆய்வாளர்கள் எச்சரிக்கை

நாகப்பட்டினம்: பல்வேறு கோரிக்கைகளை வலியிறுத்தி வரும் செப்டம்பர் 16-ம் தேதி உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப் போவதாக தமிழ்நாடு சுகாதார ஆய்வாளர்கள் அறிவித்துள்ளனர்.


🌍சசிகலா புஷ்பாவிற்கு இறுகும் பிடி - கையெழுத்து மோசடியை விசாரிக்க ஹைகோர்ட் கிளை உத்தரவு

மதுரை: பணிப் பெண்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வழக்கில் சசிகலா புஷ்பா எம்.பி மற்றும் அவரது குடும்பத்தினரின் முன் ஜாமீன் மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்ட உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதி, ஜாமின் வக்காலத்து மனுவில் சசிகலா போலியாக,மோசடியாக கையெழுத் திட்டது பற்றி போலீசார் விசாரிக்க உத்தரவிட்டுள்ளார்.


📡பஞ்சாபில் 50,000க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு மதிய உணவு வழங்கப்படவில்லை

பஞ்சாப்: பஞ்சாபில் 32 அரசு உதவி பெறும் பள்ளிகளில் உள்ள சுமார் 50,000க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு சமைத்த மதிய உணவு பரிமாறப்படுவதில்லை என்று CAG அதன் சமீபத்திய அறிக்கையில் கூறியுள்ளது. சமைத்த மதிய உணவில் 450 மற்றும் 700 கலோரிகளும், 12 கிராம் மற்றும் 20 கிராம் புரதமும் உள்ளடங்கிய மதிய உணவை ஆரம்பநிலை மற்றும் நடுநிலை பள்ளி குழந்தைகளுக்கு வழங்க வேண்டும் என்று விதிமுறையில் உள்ளன. ஆனால் அதன்படி தற்போது ஊட்டச் சத்துக்கள் வழங்கப்படுவதில்லை என்று குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. 



🌍தாய்லாந்தில் கைதாகியிருந்த 17 தமிழர்கள் மீட்பு : வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை நடவடிக்கை

சென்னை: தாய்லாந்தில் கைது செய்யப்பட்டிருந்த 17 தமிழர்கள் வெளிநாட்டு வாழ் தமிழர் நலத்துறை மூலமாக மீட்கப்பட்டு தமிழகம் கொண்டு வரப்பட்டனர். 


📡ஓணத்தில் கேரள இளம் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்! - ஒருதலைக் காதல் விபரீதம்

கோவை: ஓணம் தினத்தில் ஒருதலைக் காதலால் கேரள இளம் பெண் கத்தியால் குத்திக் படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


🌍சென்னையில் சாலை விபத்து: இரு சக்கர வாகனத்தில் சென்ற பள்ளி மாணவர் பலி

சென்னை மயிலாப்பூர் ஆர்.கே. சாலையில் மாநகர பேருந்து மோதி, இரு சக்கர வாகனத்தில் சென்ற பள்ளி மாணவர் பலியானார்.

அவருடன் சென்ற நண்பர் சிறுகாயத்துடன் உயிர் தப்பினார். மாணவரின் உடலை, அடையாறு போக்குவரத்து போலீசார் மீட்டு, பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை மருத்துவமனைக்கு அனுப்பினர்.
விபத்து ஏற்படுத்திய பேருந்து ஓட்டுனர் துரைசாமியை கைது செய்தனர்.


📡வரைபட இயந்திரம், அலுவலர்கள் பற்றாக்குறையால் கட்டிட அனுமதி சான்று பெறுவதற்கு மாதக்கணக்கில் காத்திருக்கும் அவலம்

திருவொற்றியூர், : திருவொற்றியூர், மணலி, மாதவரம், தண்டையார்பேட்டை, துறைமுகம் ஆகிய மண்டலங்களில் வரைபட இயந்திரம், அலுவலர்கள் பற்றாக்குறை காரணமாக, புதிதாக வீடு கட்டுவோர் கட்டிட அனுமதி சான்றிதழ் பெற முடியாமல் மாதக்கணக்கில் அலைக்கழிக்கப்பட்டு வருகின்றனர்.


🌍தமிழகத்தில் நாளை முழு அடைப்பு... கோவையில் ஆட்டோக்கள் ஓடாது

கோவை: கர்நாடக அரசைக் கண்டித்து நாளை தமிழகத்தில் நடைபெறும் முழு அடைப்பு பேராட்டத்தில் கோவை மாவட்ட ஆட்டோ தொழிற்சங்கங்கள் கூட்டுக்குழு முழு ஆதரவு தெரிவித்துள்ளது


📡கடும் மழையிலும் விநாயகர் சிலையை ஆற்றில் கரைக்க எடுத்து செல்லும் மக்கள்

மும்பை: மும்பையில் கடும் மழையால் இயல்பு வாழ்க்கை பெருமளவு பாதிக்கப்பட்ட நிலையிலும், விநாயகர் சிலையை ஆற்றில் கரைப்பதற்காக மக்கள் மழையையையும் பொருட்படுத்தாமல் எடுத்துச் செல்கின்றனர்


🌍சென்னை கொளத்தூர் தொகுதியில் மு.க.ஸ்டாலின் ஆய்வு

சென்னை: சென்னை கொளத்தூர் தொகுதியில் ஆய்வுக்கு பின் மு.க.ஸ்டாலின் பேட்டி அளித்தார். பெரியார் நகரில் உள்ள நூலகத்தில் அடிப்படை வசதிகள் தேவை என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளதாக கூறினார். மேலும் மருத்துவமனையை மேம்படுத்த கோரிக்கை வைத்துள்ளதாக கூறினார். 


📡காவிரி: ரஜினிகாந்த் தலையிட தமிழிசை வற்புறுத்தல்!

சென்னை:

காவிரி விவகாரத்தில் நடிகர் ரஜினிகாந்த் தலையிட வேண்டும் என தமிழக பாரதியஜனதா கட்சி தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் வற்புறுத்தி உள்ளார்.

🌍ஒருதலைக் காதல் என்ற பெயரில் பெண்களுக்கு எதிராக தொடரும் வன்முறைகளை அரசு கட்டுப்படுத்த வேண்டும்: ராமதாஸ்

ஒரு தலைக் காதலால் கோவையைச் சேர்ந்த இளம்பெண் தன்யாவை கத்தியால் குத்தி கொலை செய்த இளைஞர் கேரளாவில் விஷம் குடித்து தற்கொலைக்கு முயற்சித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மனித நேயத்திற்கு எதிரான இந்த மிருகச் செயல் கண்டிக்கத்தக்கது. தன்யாவை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். ஒருதலைக் காதல் என்ற பெயரில் அரங்கேற்றப்படும் பெண்களுக்கு எதிரான வன்முறைகளை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்என்று பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார். 


📡உலகம் முழுவதும் மொழிகளுக்குள் அடிப்படை தொடர்பு: நிபுணர்கள் கண்டுபிடிப்பு!

மொழியியல் அறிஞர்கள் உலகம் முழுவதுமுள்ள மொழிகளை ஆராய்ந்ததில் உலக மொழிகளில் மூன்றில் இரண்டு பங்கு மொழிகளில் சில பொருட்களையும், செயல்களையும் குறிக்கும் சொல்லுக்கான அடிப்படை ஒலி பொதுவானதாக இருப்பதாக கண்டறிந்துள்ளனர்.

🌍பாராலிம்பிக்ஸ் வெற்றியாளர்களுக்கு 'கேல் ரத்னா' விருது இல்லை! விஜய் கோயல்!!

டில்லி:

பாராலிம்பிக்ஸில் பதக்கம் வென்ற மாற்றுத்திறனாளர்களுக்கு ராஜீவ்காந்தி கேல்ரத்னா விருது வழங்கப்பட மாட்டாது என்று மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் விஜய் கோயல் தெரிவித்துள்ளார்.


📡இறந்தவர் உடலை கயிறை கட்டி இழுத்து சென்ற போலீசார்

வைஷாலி: ஆற்றில் விழுந்து இறந்த நபரின் உடலை போலீசார் கயிறை கட்டி இழுத்துச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.பீஹார் மாநிலம் வைஷாலி மாவட்டத்தில், அடையாளம் தெரியாத நபர் ஒருவர், கங்கை நதியில் விழுந்து மரணமடைந்தார். இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலறிந்த போலீசார், இரண்டு மணி நேரம் தாமதமாக சம்பவ இடத்திற்கு வந்து, ஆற்றில் விழுந்த நபரின் உடலை மீட்டனர். உடலை கொண்டு செல்ல ஆம்புலன்சும், ஊழியர்களும் இல்லாத காரணத்தினால், போலீசார் அந்த நபரின் கழுத்தில் கயிறை கட்டி, பல 100 மீட்டர் தூரம் இழுத்து சென்றனர். இதனை யாரோ வீடியோவாக எடுத்து வெளியிட்டுள்ளனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


🌍பாகிஸ்தானில் இரண்டு ரயில்கள் நேருக்கு நேர் மோதல்!

பாகிஸ்தான்: மத்திய பாகிஸ்தானில், பயணிகள் ரயிலொன்றும், சரக்கு ரயிலொன்றும் மோதிக் கொண்டதில் நான்கு பேர் உயிரிழந்துள்ளனர்.100-க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர்.

பாகிஸ்தானின் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த முல்தான் நகருக்கு அருகே இந்த விபத்து நிகழ்ந்துள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


📡கவுன்சிலர் கோகிலா மர்ம மரணம்! - தகிக்கும் கொல்லம்

திருவனந்தபுரம்: கேரள மாநிலத்தில் பா.ஜ.க. கவுன்சிலராக இருந்த கோகிலா என்பவர் சாலை விபத்தில் உயிரிழந்தார். அவர் சென்ற இரு சக்கர வாகனத்தின் மீது வேகமாக வந்து மோதிய வாகனம் நிற்காமல் மறைந்ததால் இது திட்டமிட்ட கொலையாக இருக்கக்கூடும் என்கிற சந்தேகம் தற்போது எழுந்து உள்ளது.



🌍பெங்களூரில் போராட்டங்கள் நடத்தினால் அந்த இடத்திலேயே கைது: போலீஸ் எச்சரிக்கை

பெங்களூர்: பந்த் நடத்த அனுமதிக்க முடியாது என்றும், மீறி போராட்டங்கள் நடத்தும் கன்னட அமைப்பினர் அதே இடத்தில் கைது செய்யப்படுவார்கள் என்றும், காவல்துறை எச்சரித்துள்ளது.




📡மீண்டும் உலக வங்கியின் தலைவராகும் ஜிம் யோங் கிம்!

வாஷிங்டன்: உலக வங்கியின் தற்போதைய தலைவரான ஜிம் யோங் கிம் தான், உலக வங்கி தலைவர் பதவிக்கு மீண்டும் ஒரு ஐந்து ஆண்டு பதவிக்காலத்துக்கு நியமனம் செய்யப்பட்ட ஒரே நபர் என்று உலக வங்கி தெரிவித்துள்ளது.
உலக வங்கியின் தலைவர் பதவிக்கு, ஜிம் யோங் கிம்மின் பெயரை கடந்த மாதம் அமெரிக்க அரசு முன்மொழிந்தது.



🌍காவிரி வன்முறையை தடுக்க மனு.. விசாரிக்காமல் விலகிய நீதிபதி நாகப்பன்.. காரணம் தெரியுமா?

டெல்லி: கர்நாடகா மற்றும் தமிழகத்தில் அமைதியை நிலைநாட்ட உச்சநீதிமன்றம் தலையிட கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மீது உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை நடைபெற உள்ளது. இந்நிலையில், விசாரணை பெஞ்சில் இடம் பெற்றிருந்த நீதிபதி நாகப்பன் வழக்கு விசாரணையில் இருந்து தன்னை விடுவித்துக்கொண்டுள்ளார்.


📡காவிரி பிரச்சனை தொடர்பாக முழு அடைப்பு போராட்டம்: தவாக ஆதரவு

காவிரி பிரச்சனை தொடர்பாக வெள்ளிக்கிழமை (இன்று) தமிழகத்தில் நடைபெறும் முழு அடைப்பு போராட்டத்திற்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சி ஆதரவு அளிக்கும் என அதன் தலைவர் தி.வேல்முருகன் தெரிவித்துள்ளார்.


🌍பலுசிஸ்தான் விவகாரம்: ஐ.நா.,வில் பாகிஸ்தானுக்கு இந்தியா கண்டனம்

ஜெனிவா: காஷ்மீர் விவகாரத்தை சர்வதேச பிரச்னையாக்கும் பாகிஸ்தானுக்கு நெருக்கடி தரும் வகையில் ஐ.நா., மனித உரிமைகள் கூட்டத்தில், பலுசிஸ்தானில் நடக்கும் மனித உரிமை மீறல் சம்பவங்களுக்கு இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது


📡மாயமான ஏ.என் 32 விமானத்தில் சென்ற 29 பேரும் மரணம் : விமானப்படை அறிவிப்பு

டெல்லி: சென்னை தாம்பரத்தில் இருந்து அந்தமான் சென்ற ஏ.என் 32 ரக விமானம் நடுவானில் திடீரென மாயமானது. தீவிர தேடுதல் வேட்டை பல கட்டங்களாக நடத்தப்பட்ட நிலையிலும் மாயமான விமானத்தை கண்டறிய முடியவில்லை. இதனிடையே அந்த விமானத்தில் பயணம் செய்த 29 பேரும் உயிரிழந்துவிட்டதாக இந்திய விமானப்படை அறிவித்துள்ளது. 


🌍வெப்பநிலை குறையும்; வானிலை மையம் தகவல்

சென்னை: 'வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி நீடிப்பதால், தமிழகத்தில், இன்று வெப்பம் குறைவாக இருக்கும்' என, வானிலை மைய அதிகாரி கள் கூறினர்.சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறியதாவது: மேற்கு மத்திய வங்கக் கடல் பகுதியில், தெற்கு ஒடிசாவுக்கும், வடக்கு ஆந்திராவுக்கும் இடையில், இரு நாட்களுக்கு முன், காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இந்த தாழ்வு பகுதி, தெற்கு நோக்கி திரும்பி, வடக்கு ஆந்திர கடலோர பகுதிக்கும், மத்திய மேற்கு வங்கக் கடலுக்கும் நடுவில் நீடிக்கிறது.இதனால், தமிழகம் மற்றும் புதுச்சேரியில், ஓரிரு இடங்களில் மட்டும் மழைக்கு வாய்ப்புள்ளது. சென்னையில், ஒருசில பகுதிகளில், மாலை நேரங்களில் மழை பெய்யலாம்.பெரும்பாலான இடங்களில், மாலை நேரங்களில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும்; வெப்பநிலை உயராது.இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.


📡இந்திக்காரர்
களுக்கு ஆங்கிலம் தேவையாம்.. தமிழர்களுக்கு தேவையில்லையாம்.. இது கட்ஜு குசும்பு!

டெல்லி: முன்னாள் சுப்ரீம் கோர்ட் நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு கடந்த சில நாட்களாக தமிழகத்தையும், தமிழர்களையும் சீண்டும் வேலையில் இறங்கியுள்ளார். இந்திக்காரர்கள் ஆங்கிலம் படிக்கத் தேவையில்லை. இந்தியை முழுமையாக பேசினாலே போதும் என்று தனது பேஸ்புக் மூலமாக அறிவுரை கூறியுள்ள அவர், தமிழர்கள் ஏன் ஆங்கிலத்தை விரும்புகிறார்கள். அவர்கள் இந்தியைப் படிக்க வேண்டும். அப்போதுதான் வட இந்தியாவுக்குப் போனால் பிழைக்க முடியும் என்று எழுதியுள்ளார்.

இந்தி தினம் நேற்று கொண்டாடப்பட்டது.

இந்த நிலையில் இந்தித் திணிப்பு அறிவுரையாக இந்த பதிவைப் போட்டுள்ளார் கட்ஜூ. அதேசமயம், எல்லாவற்றையும் சொல்லி முடித்த பிறகு எந்த மொழியையும் யார் மீதும் திணிக்க முடியாது என்றும் கட்ஜு கூறியுள்ளார்.

இந்தப் பதிவில் தமிழர்களை மட்டுமே அவர் குறை சொல்லியிருக்கிறார்.


🌍தீவிரவாதத்தை பாக். நிறுத்த வேண்டும்: இந்தியா, ஆப்கானிஸ்தான் வலியுறுத்தல்

டெல்லி: அரசுமுறை பயணமாக இந்தியா வந்துள்ள ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கனி தலைமையிலான குழுவினரும் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான குழுவினரும் டெல்லியில் நேற்று பேச்சு வார்த்தை நடத்தினர்.


📡வேந்தர் மூவிஸ் மதனை 21-ம் தேதிக்குள் கைது செய்யுமாறு போலீசுக்கு ஐகோர்ட் உத்தரவு

சென்னை: மாயாமான வேந்தர் மூவிஸ் மதனை 21-ம் தேதிக்குள் கைது செய்யுமாறு போலீசுக்கு ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. மாயமான மதனை கண்டுபிடிக்கக் கோரி தாய் தங்கம் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். எஸ் ஆர் எம் கல்லூரியில் மருத்துவ சீட் வாங்கித் தருவதாக மதன் ரூ. 80 வசூலித்து மோசடி செய்ததாக குற்றம் சாட்டப்பட்டது.


🌍கர்நாடகாவில் தமிழ் குடும்பத்தை காருடன் எரித்துக் கொல்ல முயற்சி!

தர்மபுரி:

கர்நாடகாவின் மாண்டியா பகுதியில் நடைபெற்ற கலவரத்தில் தமிழ்நாட்டை சேர்ந்த குடும்பத்தினரை காருக்குள் வைத்து எரித்து கொல்ல முயன்ற சம்பவம் அம்பலமாகி உள்ளது.

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு பகுதியை சேர்ந்த நவாஸ்பாஷா. இவரது தம்பி மனைவி பிரசவத்திற்காக சொந்த ஊரான கர்நாடகாவின் மாண்டியாவிற்கு சென்றிருக்கிறார். அவரை பார்ப்பதற்காக கடந்த 11ம் தேதி தனது உறவினர்களுடன் நவாஸ்பாஷா சென்றிருந்தார்.

மறுநாள் 12ம் தேதி நவாஸ்பாஷா உள்ளிட்டோர் காரில் தமிழகம் திரும்பி கொண்டிருந்தனர். மாண்டியாவின் புறநகர் பகுதியில் உள்ள நந்தினி பால் டிப்போ அருகில் வந்தபோது, கலவர கும்பல் ஒன்று காரை வழி மறித்தது.

பிறகு, கார் மீது பெட்ரோல் ஊற்றி, உள்ளே இருந்தவர்களுடன் சேர்த்து எரிக்க முயன்றது.

இதையடுத்து பயந்து அலறியபடி, காரை விட்டு வெளியேறிய நவாஸ்பாஷா மனைவி உள்ளிட்ட குடும்பத்தினர், காட்டுக்குள் ஓடி உயிர் பிழைத்தனர். பிறகு பல்வேறு சோதனைகளுக்கிடையே ரயில் மூலம் சொந்த ஊர் திரும்பினர்.

இந்நிலையில் தர்மபுரி ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளிடம் நவாஸ்பாஷா புகார் மனு அளித்தார். அதில் தாங்கள் இழந்த கார் மற்றும் உடமைகளுக்கு இழப்பீடு வழங்க கோரியிருந்தார்.


📡தனியார் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை..! காலாண்டு தேர்வு ஒத்திவைப்பு

தமிழகத்தில் நாளை நடைபெற உள்ள முழு அடைப்பு போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து தனியார் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. காலாண்டு தேர்வு சனிக்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் நாளை நடைபெற உள்ள முழு அடைப்பு போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து 18 ஆயிரம் நர்சரி, பிரைமரி, மெட்ரிக் பள்ளிகள் இயங்காது என்று தமிழ்நாடு நர்சரி, பிரைமரி, மெட்ரி குலேசன் மற்றும் சி.பி.எஸ்.சி. பள்ளிகள் சங்க மாநில தலைவர் கே.ஆர்.நந்தகுமார் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், தமிழகத்தில் நாளை நடைபெறும் முழு அடைப்பு காரணமாக தனியார் பள்ளிகள் இயங்காது. தனியார் பள்ளிகளுக்கு வேன்களில் வரும் மாணவர்கள் வருவதிலும் சிரமம் உள்ளது. பள்ளி வாகனங்கள் வேலை நிறுத்தத்தில் பங்கேற்கின்றன. வேன், ஆட்டோ உரிமையாளர்கள், டிரைவர்கள் இதில் கலந்து கொள்வதால் பள்ளிகளை திறப்பது பல்வேறு பிரச்னைகள், கஷ்டங்களை ஏற்படுத்தும் என்பதால் தனியார் பள்ளிகள் செயல்படாது" என்று கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here