மதிய செய்திகள் 17/09/2016 - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

மதிய செய்திகள் 17/09/2016

1] *தைவானின் கிழக்கு கடற்கரையில் ஒரு வாரத்திற்குள் இரண்டாவது புயல் நெருங்கியுள்ளதால் அதிக புயல் காலநிலையை சந்திப்பதற்கு தைவான் தயாராகி வருகிறது*

2] *ஆயதப் பாதுகாப்பை கைவிட்டால் என்ன நடக்கிறது என்பதை, அதை செய்து பார்த்தால் ஹிலரிக்கு தெரியும் என தன்னுடைய போட்டியாளரான அமெரிக்க ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளரான ஹிலரிக்கு குடியரசு கட்சியின் வேட்பாளர் டோனால்ட் டிரம்ப் அழைப்புவிடுத்துள்ளார்*

3] *இலங்கையில் பௌத்த வழிபாட்டு தல உற்சவமொன்றில் குழப்பமடைந்த யானையின் தாக்குதலில் 60 வயது பெண்ணொருவர் பலியாகியுள்ளார்*

4] *இன்று மியூனிக் நகரில் தொடங்குகின்ற உலகிலேயே மிக பெரிய பீர் மது விழாவான அக்டோபர்ஃபெஸ்டை முன்னிட்டு, ஜெர்மனி காவல் துறையினர் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளனர்*

5] *கிளிநொச்சியின் சந்தைப் பகுதியில் வெள்ளிக்கிழமை முன்னிரவு ஏற்பட்ட தீ விபத்து ஒன்றில் புடவை கடைத் தொகுதி ஒன்று, பலவிதப் பொருட்களை விற்கும் கடைத் தொகுதி ஒன்று உட்பட மூன்று கடைத் தொகுதிகள் தீயினால் எரிந்து நாசமடைந்துள்ளன*

6] *காஷ்மீரில் கடந்த ஜூலை 8-ம் தேதி, ஹிஸ்புல் முஜாகிதீன் தளபதி பர்கான் வானி கொல் லப்பட்டதை தொடர்ந்து வன்முறை வெடித்தது. பிரிவினைவாதிகளின் தொடர் போராட்ட அறிவிப்புகளால் அங்கு கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக பதற்றம் நீடிக்கிறது* -இந்நிலையில் ஸ்ரீநகரின் ஹர்வான் பகுதியைச் சேர்ந்த இளைஞர் மோமின் அல்டாப் கனாய் வெள்ளிக்கிழமை இரவு பெல்லட் குண்டுகள் பாய்ந்த நிலையில் சடலமாக கண்டெக்கப்பட்டார்.நேற்றிரவு ஹர்வான் பகுதியில் பாதுகாப்புப் படையினருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. இதனையடுத்து அங்கு பாதுகாப்புப் படையினர் பெல்லட் குண்டுகளை பயன்படுத்தினர். இந்த போராட்டத்தில் படையினர் தாக்குதலில் 40-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். போராட்டம் ஓய்ந்த பின்னர் மோமின் என்ற இளைஞர் மாயமாகியிருந்தார். இந்நிலையில் அவரது சடலம் கண்டெடுக்கப்பட்டது. இதனையடுத்து காஷ்மீர் கலவர பலி 81 ஆக அதிகரித்துள்ளது.

7] *அகிலேஷ் யாதவை மீண்டும் சமாஜ்வாடி கட்சியின் தலைவராக நியமிக்க வேண்டும்: ஆதரவாளர்கள் கோரிக்கை* லக்னோ,உத்தரபிரதேசத்தில்

8] *தெலுங்கானா மாநிலத்தின் மெஹபூப் நகர் மாவட்டத்தின் சாட்நகர் பகுதியைச் சேர்ந்தவர் பிரவீன் குமார். ஹைதராபாத்தின் மத்திய பல்கலைக்கழகத்தில் முதலாம் ஆண்டு படித்து வந்த இவர் தனது விடுதி அறையில் துக்கிட்டு தற்கொலை செய்ய முயன்றார்.சக மாணவர்கள் பார்த்து அவரை மீட்டு உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால், சிகிச்சை பலனிளிக்காமல் மருத்துவமனையில் மாணவர் உயிரிழந்தார். பிரவீன் குமாரின் விடுதி அறையில் தற்கொலை குறிப்பு எதுவும் கிடைக்கவில்லை. இதனால், அவரது தற்கொலைக்கான காரணம் தெரியவில்லை.  பிரவீன்குமார் பிறபடுத்தப்பட்ட வகுப்பை சார்ந்தவர் என்று கூறப்படுகிறது*

9] *பள்ளி, கல்லூரிகளில் சுற்றுச்சூழல் கட்டாய பாடம்: மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு*

10] *அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட்டும் ஹிலாரி கிளிண்டனுக்கு பாதுகாப்பு அளிக்கும் ரகசிய போலீசாரிடம் இருந்து துப்பாக்கிகளை பறிக்க வேண்டும் என அவரை எதிர்த்து போட்டியிடும் டொனால்ட் டிரம்ப் கூறியுள்ள கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது*

11] *பிரச்சினைக்குரிய தென் சீனக்கடலில், அமெரிக்காவுடன் சேர்ந்து ரோந்துப்பணியில் ஈடுபடப்போவதாக ஜப்பான் அறிவித்துள்ளது. இது சீனாவுக்கு புதிய தலைவலியாக அமையும்*

12] *சீன நாட்டின் தென் கிழக்கு கடலோர பகுதியை இந்த ஆண்டின் மிக வலுவான புயல் என கருதப்படுகிற ‘மெராண்டி’ புயல் நேற்று முன்தினம் தாக்கியது. அந்த பகுதியில் பலத்த மழை பெய்து வெள்ளக்காடாகி உள்ளது. புயல், மழை காரணமாக 5 லட்சம் வீடுகள் இருளில் மூழ்கின. மின்சார வினியோகத்தை மீண்டும் வழங்க மின்துறையினர் போராடி வருகின்றனர். லட்சக்கணக்கானோர் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டு முகாம்களில் தங்கவைக்கப்பட்டனர்.புஜியான் மாகாணத்தில் புயல், மழைக்கு
7 பேர் உயிரிழந்தனர். அதன் அண்டை மாகாணமான ஷெஜியாங் மாகாணத்தில் 3 பேர் உயிரிழந்தனர்.  இவ்விரு மாகாணங்களிலும் 11 பேரை காணவில்லை*

13] *சென்னை: ஏழை எளிய மக்கள் பயன் பெறும் வகையில் ‘அம்மா திருமண மண்டபங்கள்’ கட்ட தமிழக முதல்வர் ஜெயலலிதா உத்தரவு பிறப்பித்துள்ளார்*

14] *பிரதமர் மோடியின் பிறந்த நாள்: முதல் அமைச்சர் ஜெயலலிதா வாழ்த்து*

15] *பாலியல் தொல்லை கொடுத்ததாக எழுந்த புகாரில் ஆசிரியர் கோகுலப்பாண்டியன் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். நடுநிலை பள்ளி ஆசிரியை புகாரையடுத்து தேனி மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் நடவடிக்கை எடுத்துள்ளார்*

16] *சென்னை: அன்புநாதன் வீட்டில் கைப்பற்றப்பட்ட பணம் நத்தம் விஸ்வநாதன் குடும்பத்திற்கு சொந்தமானது அதாவது கரூரில் ரூ. 5 கோடி கைப்பற்றப்பட்டது பற்றி வருமான வரித்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். தேர்தலின் போது சிக்கிய பணம் மகன் அமர்நாத் அனுப்பியது என உறுதியாகியுள்ளது என தகவல் வந்துள்ளது*

17] *நாமக்கல்லில் முட்டைக் கொள்முதல் விலை 10 காசு உயர்ந்து ரூ.3.85 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது*

18] * ஜாமின் நிபந்தனையை தளர்த்துமாறு பச்சமுத்து தாக்கல் செய்த மனு மீது 20-ம் தேதி விசாரணை. தினமும் போலீசில் கையெழுத்திடும் நிபந்தனையை தளர்த்த பச்சமுத்து கோரிக்கை விடுத்துள்ளார்*

19] *நாம் தமிழர் கட்சியை தடை செய்யக்கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கறிஞர் ரீகன் மனுத்தாக்கல் செய்துள்ளார். சென்னையில் நடந்த பேரணியில் விக்னேஷ் என்ற இளைஞர் தீக்குளித்து உயிரிழந்ததிருந்தது திட்டமிட்டு நடந்திருக்கலாம் என்று மனுவில் கூறப்பட்டுள்ளது. பேரணியில் ஏராளமானோர் இருக்கும் போது உயிரிழப்பை தடுக்கவில்லை என மனுவில் ரீகன் தெரிவித்துள்ளார்*

20] *தந்தை பெரியாரின் 138-வது பிறந்த நாளை ஒட்டி அவரது படத்துக்கு மலர் தூவி தேமுதிக தலைவர் விஜயகாந்த் மரியாதை செலுத்தினார்*

21] *பழவேற்காடு அருகே கரிமணல் கிராமத்தில் மீனவர்கள் ஒப்பாரி போராட்டம் நடத்தி வருகினறனர். தங்களுக்கு வழங்கிய மாற்று இடத்தில் வீடு கட்ட அரசு அனுமதிக்கவில்லை என் அக்குற்ற சாட்டியுள்ளனர். ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளம் அமைக்க கையகப்படுத்தப்பட்ட நிலத்துக்கு மீனவர்களுக்கு மாற்று இடம் வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது*

22] *பெங்களூரில் இருந்து தமிழகம் வர போலீஸ் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என கர்நாடகாவில் போராட்டக்காரர்களால் தாக்கப்பட்ட லாரி ஓட்டுநர் மணிவேல் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார்*

23] *தென்தமிழகம், வடதமிழகத்தில் மழை பெய்யக் கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் சென்னையில் வானம் மேகம் மூட்டத்துடன் காணப்படும் அல்லது இரவில் மழை பெய்ய வாய்ப்புகள் உள்ளன என்று  சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது*

24] *தேனி மாவட்டம் பொம்மிநாயக்கன்ப்பட்டியைச் சேர்ந்த சையது அலிபார்த்திமா வயது 3 எனற சிறுமிக்கு டெங்கு என கண்டறியப்பட்டுள்ளது. டெங்குக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட சிறுமி தேனி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார்*

25] *பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்த நாளை முன்னிட்டு சூரத்தில் உலக சாதனையை முயற்சிக்காக 3750 கிலோ எடையுள்ள உலகின் மிக பெரிய கேக் தயாரிக்கப்பட்டுள்ளது*

26] * கலவரத்தில் பாதிக்கப்பட்ட தமிழகர்களுக்கு கர்நாடக அரசு இழப்பீடு தர வேண்டும் என ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். மேலும் தமிழர்களின் வர்த்தக நிறுவனங்கள் திட்டமிட்டு கொள்ளையடிக்கப்பட்டதாக ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார்*

27] *பிரதமர் மோடியின் பிறந்தநாளை ஒட்டி தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவ் வாழ்த்து தெரிவித்துள்ளார். வளமான இந்தியாவை உருவாக்க நீண்ட நலத்துடன் வாழ பிரதமருக்கு வித்யாசாகர் ராவ் வாழ்த்து தெரிவித்துள்ளார்*

28] *மாற்றுத்திறனாளிகள் 900 பேருக்கு மோடி நிவாரணம் வழங்குகிறார்*

29] *உலக நாடுகள் மத்தியில் அணு ஆயுத பலத்தை பெருக்கிடும் வகையில் பல ஏக்கர் கொண்ட ஒரு நிலப்பகுதியில் அணு ஆயுதம் தயாரிக்கும் மையத்தை உருவாக்க பாகிஸ்தான் திட்டமிட்டு வருவதாக சமீபத்தில் ஒரு சாட்டிலைட் மூலம் எடுக்கப்பட்ட விவரத்தில் தெரிய வந்துள்ளது*

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here