மாலை செய்திகள் 17/09/2016 - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

மாலை செய்திகள் 17/09/2016

1] *மத்திய பிரதேசத்தில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையை பார்வையிட சென்ற மத்திய மந்திரி ஜே.பி.நட்டா மீது மருத்துவ கல்லூரி மாணவர்கள் மை வீசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது*

2] *‘ஸ்கார்பீன்‘ நீர்மூழ்கி கப்பல் ரகசியங்கள் வெளியானது தொடர்பான முதல்கட்ட விசாரணையில் தகவல்கள் இந்தியாவில் இருந்து கசியவில்லை என்பது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. பிரான்சில் உள்ள டிசிஎன்எஸ் பாதுகாப்பு நிறுவனத்தில் இருந்து கசிந்து உள்ளது*

3] *உயர் தொழில்நுட்ப ஏவுகணைகளுடன் கூடிய முற்றிலும் இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட போர்க்கப்பலை இன்று கடற்படை தளபதி அட்மிரல் சுனில் லம்பா  நாட்டுக்கு அர்ப்பணித்தார்.  மோர்முகோ என பெயரிடப்பட்ட இந்த கப்பல், எதிரி நாட்டு ஏவுகணைகளை வானிலேயே வழிமறித்து அழிக்கும் வல்லமை கொண்டது*

4] *பிரதமர் மோடி பலுசிஸ்தான் விவகாரத்தை எழுப்பியதை அடுத்து பாகிஸ்தான் கடும் அச்சம் அடைந்து உள்ளது என்று பலூச் தலைவர் கூறிஉள்ளார். ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதி பர்கான் வானி கொல்லப்பட்டதை தொடர்ந்து ஆத்திரமூட்டும் வகையில் பாகிஸ்தான் செயல்பட்டது. இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி தனது சுதந்திரதின உரையில், பலுசிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பாகிஸ்தானின் மனித உரிமை மீறல் குறித்து கேள்வி எழுப்பினார். அப்போது பலுசிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மக்களுக்கு இந்தியா ஆதரவாக இருக்கும் என்றார். பலுசிஸ்தானில் பலூச் தேசிய இயக்கம் என்ற பெயரில் அதன் தலைவர்கள் பாகிஸ்தானிடமிருந்து விடுதலை கோரி போராடி வருகின்றனர். பிரதமர் மோடியின் பலுசிஸ்தான் ஆதரவுப் பேச்சால் ஊக்கம்பெற்ற அவர்கள் போராட்டத்தை தீவிரப்படுத்தி வருகின்றனர்*

5] *ஐ.எஸ். பயங்கரவாதிகளிடம் பாலியல் அடிமையாக சிக்கி தப்பிய நாடியா முராத் ஐ.நா. தூதராக நியமனம்*

6] *அரியலூர் அருகே 9 வயது சிறுமியை பலாத்காரம் செய்ய முயன்றவருக்கு 15 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. பெரியநாகலூரைச் சேர்ந்த சுதாகருக்கு ரூ.16 ஆயிரம் அபராதமும் விதித்து மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது*

7] *ஸ்டான்லி மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அழைத்து வரப்பட்ட கைதி தப்பினார். புழல் சிறையில் இருந்து மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்ட சிவக்குமார் தப்பித்து சென்றுள்ளார். 5 கைதிகள் அழைத்து வரப்பட்டதில் சிவக்குமார் மட்டுட் தப்பித்துச் சென்றுள்ளார். வடபழனியைச் சேர்ந்த சிவக்குமார் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்*

8] *தெலங்கானா மாநிலம் வாரங்கல்லில் நீரில் மூழ்கி  5 மாணவர்கள் உயிரிழந்தனர். தர்மா சாகர் அணையில் குளித்தபோது 5 மாணவர்கள் உயிரிழந்தனர். நீரில் சிக்கிய மாணவியை காப்பாற்ற சென்றபோது 5 பேரும் நீரில் மூழ்கினர்*

9] *புதுச்சேரியில் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்த ஜான்குமார் வீட்டில் வருமானவரி சோதனை நடைபெற்று வருகிறது.
புதுச்சேரி சவரி படையாட்சி தெருவில் ஜான்குமார் வீடு உள்ளது. ஜான்குமார் வீட்டில் வருமானவரித் துறை அதிகாரிகள் 5 பேர் சோதனை நடத்துகின்றனர். நாராயணசாமிக்காக நெல்லித்தோப்பு தொகுதி எம்.எல்.ஏ. பதவியை 2 நாட்களுக்கு முன் ராஜினாமா செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது*

10] *புதுச்சேரி உக்கிரவாணிபேட்டில் பைனான்சியர் மோகன்தாஸ் அரிவானால் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இருசக்கர வாகனங்களில் வந்த 5 பேர் அரிவாளால் மோகன்தாஸை சரமாரியாக வெட்டினர். ஓதியம்பட்டில் பாலகிருஷ்ணன் என்பவர் கொலைக்கு பழிக்கு பழியாக மோகன்தாஸ் கொலை என தகவல்கள் தெரிவிக்கின்றன*

11] *ஏர்செல் - மேக்சிஸ் வழக்கு: மாறன் சகோதரர்கள் மனு தள்ளுபடி*

12] *திருமணமான தெலுகு சினிமா தயாரிப்பாளருடன் அனுஷ்கா காதலா???*

13] *கட்சியில் பிளவு இல்லை ஒற்றுமையாக இருக்கிறோம்: அகிலேஷ்*

14] *இம்மாதம் 30-ம் தேதி உலகம் முழுதும் ரிலீஸ் ஆகும் “எம்.எஸ்.தோனி-தி அன் டோல்ட் ஸ்டோரி” திரைப்படத்தின் விளம்பர பரப்புதலுக்காக தன் மனைவி சாக்‌ஷி, படத் தயாரிப்பாளர் அருண் பாண்டே ஆகியோருடன் அமெரிக்கா சென்றுள்ளார் தோனி*- திரைப்படத்தை விளம்பரப்படுத்தும் நிகழ்ச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய தோனி, “நான் பாண்டேயிடம் ஒரு விஷயத்தை தெளிவாகக் கூறினேன், என்னை உயர்த்திப் பிடிக்கும், என் புகழ்பாடும் படமாக இது இருக்கக்கூடாது, ஒரு தொழில்பூர்வமான விளையாட்டு வீரனின் பயணத்தை சித்தரிப்பதாக இருக்க வேண்டும் என்றேன்” எனக் கூறினார் தோனி.
எடிட் செய்யப்படாத படத்தை முதன் முதலில் பார்த்த தோனி, அவரது வாழ்க்கையில் நடந்தது மீண்டும் நினைவில் புதிதாக பதிந்ததாக கூறினார்.
கடந்த காலத்தில் இருப்பது நல்ல உணர்வை ஏற்படுத்தியது. அதாவது மற்றவர்கள் என்னைப் பற்றி என்ன நினைத்தனர் என்பது தெரியவருகிறது. நான் என் பெற்றோரிடம் கிரிக்கெட் பற்றி ஒரு போதும் பேசியதில்லை. ஆனால் தற்போது இந்தப் படத்தைப் பார்த்த போது அவர்கள் என்னைப் பற்றி என்ன நினைத்தார்கள் என்பது தெரிய வந்தது ஒரு புதிதான விஷயமாக இருந்தது.
முதலில் என்னைப்பற்றிய படம் என்று சற்று கவலையடைந்தேன், ஆனால் படம் எடுக்கத் தொடங்கப்பட்டவுடன் நான் கவலைப்படவில்லை, நான் என் தரப்பு கதையைக் கூறத் தொடங்கினேன் என தோனி தெரிவித்தார்

15] *டெல்லியில் சுமார் 2 கோடி மதிப்புள்ள 900 ஐபோன்களை டிரக்குடன் கடத்திச் சென்ற இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர்* டெல்லி ஒக்லா பகுதியில் இருந்து டவர்கா பகுதிக்குச் ஐபோன்களுடன் சென்ற டிரக் ஒன்று கடந்த 13ஆம் தேதி கடத்தப்பட்டது. இதுதொடர்பாக டெல்லி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.விசாரணையில் அலம்(24) மற்றும் அர்மன்(22) கூட்டுச் சேர்ந்து டிரக்கை கடத்தியது தெரியவந்தது. இவர்களிடமிருந்து சுமார் 2 கோடி மதிப்புள்ள 900 ஐபோன்கள் கைப்பற்றப்பட்டது

16] *மும்பையில், நட்சத்திர ஓட்டல்களில் ஆடி, பிஎம்டபிள்யூ, பென்ஸ் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட சொகுசு கார்களை திருடிய எம்பிஏ பட்டதாரி வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார்*

♈🇮🇳🌴🌴🌴🌴🌴🇮🇳♈

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here