ஞாயிறு இரவு செய்திகள் 18/09/2016 - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

ஞாயிறு இரவு செய்திகள் 18/09/2016

          

💥💥💥💥💥💥💥💥💥💥💥

📡📡📡📡📡📡📡📡📡📡📡

📡💥📡💥📡💥📡📡💥📡💥

💥வானதி சீனிவாசனுக்கு 'ஐ லவ்யூ' சொன்ன நபருக்கு ரூ. 500 அபராதம் + கடும் எச்சரிக்கை!

கோவை: தமிழக பாஜக பொதுச்செயலாளர் வானதி சீனிவாசனிடம் பொது இடத்தில் அநாகரீகமாக நடந்து கொண்ட நபருக்கு ரூ. 500 அபராதமாக விதிக்கப்பட்டது. அதனை நீதிமன்றத்தில் செலுத்தியதைத் தொடர்ந்து அந்நபர் போலீசாரால் விடுவிக்கப்பட்டார்.

📡வேலை தருவதாக கூறி பண மோசடி.. ஆம் ஆத்மி பெண் எம்.எல்.ஏ. மீது புகார்

டெல்லி: அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி பணத்தைப் பெற்றுக் கொண்டு மோசடி செய்ததாக டெல்லி ஆம் ஆத்மி பெண் எம்.எல்.ஏ சரிதா சிங் மீது புகார் வந்துள்ளது. இதையடுத்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

💥சிவகங்கையில் பரபரப்பு: மனநலம் பாதித்த பெண்ணிடம் கிட்னி திருட்டு

சிவகங்கைூ சிவகங்கையை சேர்ந்த மனநலம் பாதித்த பெண்ணிடம் கிட்னி திருடப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை அருகே 

📡செல்ஃபி மோகம்:

5 மாணவர்கள் தண்ணீரில் மூழ்கி உயிரிழப்பு:

உயிர் தப்பிய மாணவி

தெலுங்கானா மாநிலம், வாரங்கலில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் பயிலும் ஒரு மாணவி உள்பட 5 மாணவர்கள் அருகே உள்ள தர்மசாகர் நீர்தேக்கத்திற்கு சென்றுள்ளனர். அப்போது தண்ணீரில் மூழ்கிய மாணவியை காப்பாற்ற முயன்ற 5 மாணவர்கள் உயிரிழந்தனர்.

இது தொடர்பான போலீசார் விசாரணையில், நீர்த் தேக்கத்தின் நடுவே உள்ள பாறையில் நின்று அவர்கள் குழுவாக செல்ஃபி எடுக்க முயன்றுள்ளனர். அப்போது மாணவி ரம்யா நிலை தடுமாறி தண்ணீரில் விழுந்துவிடவே, அவரை காப்பாற்ற சக மாணவர்கள் தண்ணீரில் குதித்துள்ளனர்.

அப்போது மாணவர்கள் 5 பேரும் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தனர். ஆனால் மாணவி ரம்யா தானாகவே முயன்ற பாறையை பிடித்து உயிர் பிழைத்தார். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் இந்த தகவல் கிடைத்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

💥காரைக்கால் மருத்துவமனையில் ஒரே பிரசவத்தில் 3 குழந்தை

காரைக்கால் : புதுவை மாநிலம், காரைக்கால் நெடுங்காட்டை சேர்ந்தவர் தனியார் பள்ளி ஆசிரியர் ஆரோக்கியதாஸ். இவரது மனைவி மரியபுஷ்பம்(24). நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார். முதல் பிரசவத்திற்காக அவரை காரைக்கால் விநாயகா மிஷன்ஸ் மருத்துவமனை மற்றும் மருத்துவ கல்லூரியில் சேர்த்தனர். நேற்று முன்தினம் மரிய புஷ்பத்திற்கு பிரசவ வலி ஏற்பட்டது. 

அவருக்கு அறுவை சிகிச்சை மூலம் பிரசவம் நடந்தது. இதில் 2 ஆண், ஒரு பெண் குழந்தை என ஒரே நேரத்தில் 3 குழந்தைகள் பிறந்தன. பிரசவம் பார்த்த மருத்துவர் நர்மதா கூறுகையில், 3 குழந்தைகளும் நலமாக உள்ளனர். முறையான பராமரிப்புக்காக ஐசியு பிரிவில் வைத்துள்ளோம். முதல் ஆண் குழந்தை 2 கிலோவும், 2வது ஆண் குழந்தை 1 கிலோ 750 கிராமும், 3வது பெண் குழந்தை 1 கிலோ 600 கிராமும் எடை உள்ளன என்றார்.

📡காட்பாடி அருகே 25 பேருக்கு டெங்கு காய்ச்சல் அறிகுறி

வேலூர்: வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே கழிஞ்சூர் கிராமத்தில் 25 பேருக்கு டெங்கு காய்ச்சல் அறிகுறியுடன் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை பாதிக்கப்பட்டுள்ளதால் கழிஞ்சூர் மக்கள் பீதி அடைந்துள்ளனர். 

💥கிடுகிடுவென குறையும் பாபநாசம் அணை நீர் மட்டம்.. குடிநீர் தட்டுப்பாடு வருமா... நெல்லை மக்கள் அச்சம்

நெல்லை: பாபநாசம் அணையின் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருவதால் நெல்லை, தூத்துக்குடியில் குடிநீர் தட்டுபாடு அபாயம் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

📡மாட்டிறைச்சி விவகாரம், பலாத்கார சம்பவங்கள் போன்றவை எல்லாம் அற்ப விஷயங்கள்: அரியானா முதல்வர் கட்டார் சொல்கிறார்

சண்டிகர்: பலாத்கார சம்பவங்கள், மாட்டிறைச்சி சர்ச்சை போன்றவை எல்லாம் அற்ப விஷயங்கள் என அரியானா முதல்வர் கட்டார் தெரிவித்துள்ளது 

💥147 திட்டங்களுக்கு நேரடி மானிய முறை: மத்திய அரசு திட்டம்

புதுதில்லி: மத்திய அரசின் நலத் திட்ட உதவிகளையும், நேரடி மானிய முறையை 147 திட்டங்களுக்கு விஸ்தரிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. வரும் 2018-ஆம் ஆண்டு மார்ச் மாதத்துக்குள் இந்த இலக்கை எட்ட திட்டமிடப்பட்டுள்ளதாக மத்திய நிதித் துறை செயலாளர் அசோக் லவாசா தெரிவித்தார்.
தற்போதைய நிலையில் மத்திய அரசின் 74 திட்டங்களில் நேரடி மானிய முறை கடைபிடிக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

📡தொடரை இழந்தது இந்தியா 'ஏ'

பிரிஸ்பேன்: ஆஸ்திரேலிய 'ஏ' அணிக்கு எதிரான அதிகாரப்பூர்வமற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டி 'டிரா' ஆக, இந்திய 'ஏ' அணி தொடரை இழந்தது.

📡கடலில் மீன்பிடிக்க சென்றபோது பலியான குடும்பத்துக்கு தலா ரூ.1 லட்சம்: ஜெயலலிதா உத்தரவு

சென்னை: கடலில் மீன்பிடிக்க சென்றபோது பலியான மீனவர் மற்றும் காணாமல் போனவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.1 லட்சம் நிதியுதவி அளிக்க ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

💥கே.ஆர்.எஸ். அணையில் இருந்து தமிழகத்துக்கு தண்ணீர் விடுவதை நிறுத்தியது கர்நாடக

கர்நாடக : கர்நாடக அரசு கே.ஆர்.எஸ். அணையில் இருந்து தமிழகத்துக்கு தண்ணீர் விடுவதை நிறுத்தியது. கே.ஆர்.எஸ். அணையில் இருந்து தமிழகத்துக்கு செப்.12 முதல் 8,000 கனஅடி திறக்கப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது. கர்நாடக அரசு நீர்மட்டம் குறைந்தது விட்டதாக கூறி கே.ஆர்.எஸ். அணையை மாலை 4 மணிக்கு முடியாது

📡உத்திரபிரேதச மாநிலத்தில் செல்போனின் கட்டணத்தை கேட்ட கடை ஊழியருக்கு அடி, உதை

உத்திரபிரதேசம்: உத்திரபிரேதச மாநில மதுராவில் செல்போனின் கட்டணத்தை கேட்ட கடை ஊழியருக்கு அடி, உதை, மதுராவில் உள்ள மொபையில் கடையில் ஒருவர் செல்போனை வங்கியுள்ளார். மேலும் வாங்கிய மொபையிலுக்கு தொகை எதுவும் செலுத்தாமல் கடையை விட்டு வெளியேறினார். 

அந்த நபரை கடை ஊழியர் தடுத்து நிறுத்தி அந்த செல்போனுக்கான தொகையை கேட்ட போது ஆத்திரம் அடைந்த அந்த நபர் மற்றும் அவருடன் வந்தவர்களும் கடை ஊழியரை சரமாரியாக அடித்து உதைத்தனர். தகவல் அறிந்த போலீசார் தாக்குதல் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

💥கீழக்கரை கடல் பகுதியில் நிறுத்தப்பட்ட விசை படகு கடலில் முழ்கியது

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை கடல் பகுதியில் தனியாருக்கு சொந்தமான விசை படகு நீரில் முழ்கியது. சுமார் 15 லட்சம் மதிப்பிலான இந்த படகில் மீன் பிடித்து 14-ம் தேதி கரை திரும்பிய உரிமையாளர் மன்சூர் அலிகான் விசை படகை வழக்கம் போல் கடலில் நிறுத்தி சென்றார்.

மீன் பிடிக்க இன்று கடல்பகுதிக்கு அவர் வந்த போது படகு கடலில் முழ்கி இருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தார். இது குறித்து மீன் வளத்துறை ஆய்வாளருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. படகு முழ்கியது குறித்து விசாரிக்கப்படுகிறது. 

💥பயங்கர
வாதிகளிடம் பாக்.,கில் தயாரான ஆயுதங்கள்

புதுடில்லி: காஷ்மீர் மாநிலம் உரியில் 17 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டது தொடர்பாக டில்லியில் ராணுவ நடவடிக்கைகளுக்கான தலைமை அதிகாரி லெப்டினன்ட் ஜெனரல் ரன்பீர் சிங் அளித்த பேட்டி: பயங்கரவாதிகளிடமிருந்து ஏ.கே., 47 ரக துப்பாக்கிகள், கையெறி குண்டை வெடிக்க செய்யும் சாதனங்கள், போரின் போது பயன்படுத்தப்டும் ஆயுதங்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. கொல்லப்பட்ட பயங்கரவாதிகள் அனைவரும் வெளிநாட்டை சேர்ந்தவர்கள். முதல் கட்ட தகவல்படி அனைவரும் ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத அமைப்பை சேர்ந்தவர்களாக இருக்கலாம். ராணுவ குடில்கள் தீப்பிடித்ததால் தான், 14 ராணுவ வீரர்கள் பலியானார்கள். பயங்கரவாதிகளிடமிருந்து கைப்பற்றப்பட்ட பொருட்களில் பெரும்பாலானவை பாகிஸ்தானில் தயாரிக்கப்பட்டவை.

💥தடுப்புத் தூண்களை உடைத்துக்கொண்டு சென்டர் மீடியனில் பாய்ந்த லாரி

ஊத்துக்கோட்டை: சாலை தடுப்புச்சுவரை உடைத்துக்கொண்டு தறிக்கெட்டு ஓடிய லாரி, சென்டர் மீடியனில் ஏறி நின்றது.அரியானாவில் இருந்து சென்னைக்கு துணி பண்டல்களை ஏற்றிக்கொண்டு ஆந்திர மாநிலம் திருப்பதி வழியாக கன்டெய்னர் லாரி சென்றது. தில்ஷாத் (20) லாரியை ஓட்டி சென்றார். நேற்று அதிகாலை பெரியபாளையம் அருகே தண்டலம் பகுதியில் வந்தபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து ஓடிய லாரி, அங்குள்ள புதிதாக அமைக்கப்பட்டுள்ள 10 க்கும் மேற்பட்ட புதிய தடுப்புகளை உடைத்துக்கொண்டு சென்டர் மீடியன் மீது ஏறி நின்றது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.இதுபற்றி தகவல் அறிந்ததும் பெரியபாளையம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.

📡தமிழகத்திற்கு தண்ணீர் திறப்பை நிறுத்தியது கர்நாடகா

பெங்களூரு: சம்பா சாகுபடிக்காக காவிரியில் வரும் 20ம் தேதி வரை 12 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்க வேண்டும் என கர்நாடகாவுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டிருந்தது. இதனையடுத்து கர்நாடகாவில் கலவரம் வெடித்தது. தமிழக பதிவெண் கொண்ட வாகனங்கள் தாக்கப்பட்டன. தமிழர்கள் தாக்கப்பட்டனர். இதனால் பல தமிழர்கள் கர்நாடகவிலிருந்து வெளியேறினர். பெங்களூருவில் 144 தடை உத்தரவும், ஊரடங்கு உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது. அமைதி திரும்பியதை தொடர்ந்து ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டது. 144 தடை உத்தரவு தொடர்ந்து அமல்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்திலும், கர்நாடகாவுக்கு எதிரான முழு அடைப்பு போராட்டம் அமைதியாக நடந்தது. சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி காவிரி கண்காணிப்பு குழுவிலும் தமிழக அரசு முறையீடு செய்துள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் காவிரி கண்காணிப்பு குழு கூடி ஆலோசனை நடத்தியது. இந்நிலையில், தமிழகத்துக்கு திறக்கப்படும் தண்ணீர் இரண்டு நாட்களுக்கு முன்பாகவே நிறுத்தப்பட்டு விட்டது. பெங்களூரு குடிநீருக்கும் அம்மாநில விவசாயத்திற்கும் திறக்கப்பட்ட தண்ணீரும் நிறுத்தப்பட்டுள்ளதாக அம்மாநில செய்திகள் தெரிவிக்கின்றன. கே.ஆர்.எஸ்., அணையின் மொத்த கொள்ளளவு 124.80 கன அடி.

அணையின் தற்போதைய நீர்மட்டம் 84.94 கன அடி. அணைக்கு நீர் வரத்து 9,540 கன அடி ஆகும். பாசனத்திற்கு தண்ணீர் நிறுத்தியதை கண்டித்து போராட்டம் நடத்த மாண்டியாவில் விவசாய அமைப்புகள் முடிவு செய்துள்ளது.இதனிடையே, காவிரி நீர் விவகாரத்தில், காவிரி கண்காணிப்பு குழு மீண்டும் கூட உள்ளதாலும், சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு விசாரணை நடைபெற உள்ளதாலும், மாண்டியா மாவட்டத்தில் 7 தாலுகாவில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

💥ராம்குமாரை போலீஸ் கொலை செய்துவிட்டதாக தந்தை குற்றச்சாட்டு

சென்னை: தன் மகன் ராம்குமாரை போலீஸ் கொலை செய்துவிட்டதாக தந்தை குற்றம்சாட்டியுள்ளார். ராம்குமாருக்கு வயிற்றுப் போக்கு ஏற்பட்டு உள்ளதாக மட்டுமே போலீஸ் என்னிடம் கூறியதாக தந்தை கூறியுள்ளார். சிறிது நேரத்தில் மகன் ராம்குமார் உயிரிழந்துவிட்டதாக போலீஸ் கூறியதாக பரமசிவம் பேட்டியளித்துள்ளார்

📡அரசு வழங்கிய நிலத்தை அபகரிக்க திட்டம்: அதிமுக எம்பி, எம்எல்ஏ முன்பு 6 பெண்கள் தீக்குளிக்க முயற்சி

பொன்னேரி: அரசு வழங்கிய நிலத்தை அரசே அபகரிக்க முயற்சி நடப்பதாக கூறி பாதிக்கப்பட்ட பெண்கள் அதிமுக எம்பி, எம்எல்ஏ முன் தீக்குளிக்க முயன்றது பழவேற்காடு பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது. 

💥காஷ்மீர்: உரி ராணுவ முகாம்மீது தீவிரவாதிகள் தாக்குதல்! ராஜ்நாத் ஆவேசம்!!

உரி:

காஷ்மீர் மாநிலத்தில் எல்லைக்கட்டுப்பாடு கோடு பகுதியில் உள்ள உரி ராணுவ தலைமையத்தை குறிவைத்து தீவிரவாதிகள் நடத்திய பயங்கர தாக்குதலில் 17 வீரர்கள் மரணம் அடைந்தனர்.

இந்திய வீரர்களின் எதிர் தாக்குதலில் 4 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். மேலும் 4 வீரர்களின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜம்மு-காஷ்மீர் மாநில தலைநகரான ஸ்ரீநகரில் இருந்து சுமார் 100 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள பாரமுல்லா மாவட்டத்தில் ஜீலம் நதிக்கரையோரம் உள்ளது உரி நகரம். இங்கு இந்திய ராணுவ படைப்பிரிவினருக்கான தலைமை முகாம் ஒன்று இயங்கி வருகிறது.

இன்று அதிகாலை 4 மணியளவில் இந்த முகாமுக்கு வெளியே அமைக்கப்பட்டுள்ள கம்பிவேலியை வெட்டிவிட்டு முகாமுக்குள் ஆயுதமேந்திய தீவிரவாதிகள் நுழைந்து திடீர் தாக்குதல் மேற்கொண்டனடடர. .முகாமின் மீது வெடிகுண்டுகளை வீசியும் , துப்பாக்கிகளால் சுட்டும் ஆவேசமாக தாக்குதல் நடத்தினர்.

இந்த திடீர் தாக்குதலில் அதிர்ச்சி அடைந்த ராணுவ வீரர்கள் எதிர்தாக்குதலில் ஈடுபட்டனர். இந்த திடீர் தாக்குதலில் 17 இந்திய ராணுவ வீரர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 19 வீரர்கள் படுகாயம் அடைந்தனர். தாக்குதல் நடத்திய 4 தீவிரவாதிகளும் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

இந்த துயர செய்தி கேள்விப்பட்ட மத்தியஉள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உ டனே உளவு அமைப்பு கூட்டத்தை கூட ஏற்பாடு செய்தார். ராஜ்நாத் சிங் இல்லத்தில் நடைபெற்ற கூட்டத்தில் ரா உளவு அமைப்பின் தலைவர் மற்றும் பாதுகாப்புத்துறை, உள்துறை அமைச்சகங்களின் செயலாளர்கள் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டம் தற்போது முடிவுக்கு வந்தது. தாக்குதலுக்கு பிறகு தீவிரவாதிகள் தப்பி இருந்தால் அவர்களை வேட்டையாடவும், அவர்களுக்கு உதவியவர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டதோடு, அடுத்த கட்ட நடவடிக்கை குறித்தும் இந்தக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

அதையடுத்து பேசிய ராஜ்நாத்சிங், உரி பகுதியில் இன்று தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் மிக உயர்ந்த பயிற்சி பெற்று, அதிநவீன ஆயுதங்களுடன் இந்த தாக்குதலை அரங்கேற்றியுள்ளனர்.

இதுபோன்ற தாக்குதல்களை தூண்டிவிடும் பாகிஸ்தானை தீவிரவாத நாடாக அறிவித்து, தனிமைப்படுத்த வேண்டும் என ராஜ்நாத் சிங் ஆவேசமாக தெரிவித்துள்ளார்.

📡ராம்குமார் உடலைப் பார்க்க வழக்கறிஞருக்கு அனுமதி மறுப்பு

சென்னை: ராம்குமார் உடலைப் பார்க்க வழக்கறிஞர் ராமராஜூக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. ராயப்பேட்டை மருத்துவமனை வளாகத்தில் வழக்கறிஞர்களுக்கும் போலீசுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. காவல்துறையைக் கண்டித்து மருத்துவமனை வளாகத்தில் வழக்கறிஞர்கள் முழக்கமிட்டு வருகின்றனர். 

💥ராம்குமார் சிறையில் தற்கொலை செய்து கொள்ளவில்லை அவர் கொலை செய்யப்பட்டுள்ளார் , சிறை நிர்வாகமே பொறுப்பு என ராம்குமார் தரப்பு வழக்கறிஞர் ராம்ராஜ் பேட்டி அளித்துள்ளார்.

 தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்த அவர் ராம்குமார் தற்கொலை செய்து கொள்ளும் அளவுக்கு கோழை அல்ல அவரிடம் நான் நேற்று கூட ஒரு மணி நேரம் பேசினேன். தெளிவான மனநிலையில் இருந்தார். ஆகவே இது தற்கொலை அல்ல கொலை என்று குற்றம்சாட்டினார்.
_எப்படி சொல்கிறீர்கள்_ என்று கேட்டபோது,
சிறையில் இருக்கிற ராம்குமார் காவல்துறை பாதுகாப்பில் இருக்கிறார். தற்கொலை செய்து கொள்ளும் காரணம் எதுவும் இல்லாத போது இது அப்பட்டமான கொலை தான் அனைவரும் சேர்த்து கொலை செய்து விட்டனர்.
இதற்கு சிறைத்துறைதான் பொறுப்பு என்று கூறினார்.   
      
புழல் சிறைச்சாலையில் கண்காணிப்பு கேமராக்களுக்கு ஞாயிறு விடுமுறையாம்.

# File Closed.

📡கர்நாடக அரசு கே.ஆர்.எஸ். அணையில் இருந்து தமிழகத்துக்கு தண்ணீர் விடுவதை நிறுத்தியது. கே.ஆர்.எஸ். அணையில் இருந்து தமிழகத்துக்கு செப்.12 முதல் 8,000 கனஅடி திறக்கப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது. கர்நாடக அரசு நீர்மட்டம் குறைந்தது விட்டதாக கூறி கே.ஆர்.எஸ். அணையை மாலை 4 மணிக்கு மூடியது

💥பயங்கரவாதிகளின் தாக்குதலுக்கு இந்தியா அடிபணியாது. பயங்கரவாதிகளையும் அவர்களுக்கு ஆதரவு தருபவர்களையும் நாம் ஒடுக்குவோம். உயிரிழந்த வீரர்களுக்கு எனது இரங்கலை தெரிவித்து கொள்கிறேன்--
ஜனாதிபதி

📡ஜம்மு காஷ்மீர் மாநிலம் யூரியில் நடந்த தீவிர தாக்குதலின் பின்னணியில் இருப்பவர்கள் தண்டனையில் இருந்து தப்ப முடியாது என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

💥காஷ்மீரின் உரி ராணுவ முகாம் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து உள்ள மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், இதற்கு காரணமான பாகிஸ்தானை தனிமை படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார்.

📡இந்தியாவுக்கு எதிராக நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கப்படும் என பிரதமர் அலுவலக இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் திட்டவட்டமாக கூறியுள்ளார்.

💥காஷ்மீரில் 17 ராணுவ வீரர்கள் உயிரிழப்புக்கு பிரதமர் மோடிதான் காரணம் என குற்றம்சாட்டியுள்ள லல்லு பிரசாத் யாதவ், மோடியின் 56 அங்குல மார்பு எங்கே போனது? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

📡ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் இன்று நடத்திய தாக்குதலுக்கு காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

💥ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை கடல் பகுதியில் தனியாருக்கு சொந்தமான விசை படகு நீரில் முழ்கியது. சுமார் 15 லட்சம் மதிப்பிலான இந்த படகில் மீன் பிடித்து 14-ம் தேதி கரை திரும்பிய உரிமையாளர் மன்சூர் அலிகான் விசை படகை வழக்கம் போல் கடலில் நிறுத்தி சென்றார்

📡கடலில் மீன்பிடிக்க சென்றபோது பலியான மீனவர் மற்றும் காணாமல் போனவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.1 லட்சம் நிதியுதவி அளிக்க ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்

💥கடந்த 5 ஆண்டு கால அதிமுக ஆட்சியில் எந்த எந்த அமைச்சர் எவ்வளவு ஊழல் செய்தார்கள் என்பதை தற்போது பணியில் உள்ள உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைத்து விசாரணை நடத்த மத்திய அரசு ஆணையிட வேண்டும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கோரியுள்ளார்.

📡பலாத்கார சம்பவங்கள், மாட்டிறைச்சி சர்ச்சை போன்றவை எல்லாம் அற்ப விஷயங்கள் என அரியானா முதல்வர் கட்டார் தெரிவித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

📡அதிமுக சார்பில் உள்ளட்சித் தேர்தலில் போட்டியிட 3 திருநங்கைகள் விருப்ப மனு தாக்கல் செய்துள்ளனர்.

💥பிரியாணி வாங்கித் தர்றோம், பணம் தருகிறோம், கேபிஎன் பஸ்கள் இருக்கும் இடத்தைக் காட்டுமாறு கேட்டார்கள். இதனால்தான் நான் அடையாளம் காட்டினேன் என்று கேபிஎன் பஸ்கள் எரிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள இளம் பெண் பாக்யஸ்ரீ போலீஸில் கொடுத்துள்ள வாக்குமூலம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

📡சென்னை தரமணியில் அம்பேத்கர் சட்டப் பல்கலைக் கழகம் காலவரையின்றி மூடப்படுகிறது. மாணவர்களின் உள்ளிருப்புப் போராட்டம் நான்கு நாட்கள் நீடித்ததால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

💥புதுக்கோட்டையில் விரல் நகத்தால் 9.98 கிலோ எடையை தூக்கி 55 நொடிகள் வைத்திருந்த மாணவன் சாதனை அடைத்துள்ளான். இதை அடுத்து அறந்தாங்கி பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவன் பிரதாப்பிற்கு கின்னஸ் சாதனை சான்றிதழ் தரப்பட்டது.

📡சிவகங்கையை சேர்ந்த மனநலம் பாதித்த பெண்ணிடம் கிட்னி திருடப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

💥தமிழக பாஜக பொதுச்செயலாளர் வானதி சீனிவாசனிடம் பொது இடத்தில் அநாகரீகமாக நடந்து கொண்ட நபருக்கு ரூ. 500 அபராதமாக விதிக்கப்பட்டது. அதனை நீதிமன்றத்தில் செலுத்தியதைத் தொடர்ந்து அந்நபர் போலீசாரால் விடுவிக்கப்பட்டார்.

📡உள்ளாட்சித் தேர்தலுக்கான விரும்ப மனுக்களை வரும் 21ம் தேதியிலிருந்து கொடுக்கலாம் என்று பாமக தலைவர் ஜி.கே. மணி அறிவித்துள்ளார்.

💥கரூர் அருகே மொச்ச கொட்டாம் பாளையத்தில் இன்று காலை அரசு பேருந்து - மணல் லாரி இரண்டும் நேருக்கு நேர் மோதியது.இந்த விபத்தில் லாரி ஓட்டுநர் உட்பட 3 பேர் பலியாகினர். பேருந்து பயணிகள் 15 பேர் படுகாயம் அடைந்தனர். விபத்து குறித்து கரூர் நகர போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

📡அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி பணத்தைப் பெற்றுக் கொண்டு மோசடி செய்ததாக டெல்லி ஆம் ஆத்மி பெண் எம்.எல்.ஏ சரிதா சிங் மீது புகார் வந்துள்ளது. இதையடுத்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

💥கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் புதிய தாக்குதலாக தண்ணீரை பீய்ச்சி அடித்து விரட்டியடித்துள்ளனர்.

📡நகைச்சுவை நடிகர் கவுண்டமணி குறித்து மீண்டும் ஒரு புரளி கிளம்பியுள்ளது. இதை கண்டித்துள்ளார் அவரது செய்தித் தொடர்பாளர் விஜய் முரளி.

📡💥📡💥📡💥📡💥📡💥📡

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here