மதிய செய்திகள் 19/09/2016 - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

மதிய செய்திகள் 19/09/2016

@ குடிபோதை: இரண்டு பேரை பலி வாங்கிய கார் ரேஸ் வீரர், விகாஸ்ஆனந்த்!

சென்னை:

நேற்று நள்ளிரவில் குடிபோதையில் கார் மோதிய விபத்தில் காயமடைந்த 2 பேர் இறந்தனர். மேலும் 9 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

@ அத்திப்பள்ளியில் போராட்டம் நடத்திய வாட்டாள் நாகராஜ் கைதுஅத்திப்பள்ளியில் போராட்டம் நடத்திய வாட்டாள் நாகராஜ் கைது

பெங்களூரு: அத்திப்பள்ளியில் போராட்டம் நடத்திய வாட்டாள் நாகராஜ் போலீசாரால் கைது செய்யப்பட்டார். காவிரியில் தமிழகத்திற்கு தண்ணீர் தர எதிர்ப்பு தெரிவித்து கன்னடசலுவலி ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர். 

@ கரூர் அருகே தனியார் பள்ளி வேன் மோதி இருசக்கர வாகனத்தில் சென்ற 5-ம் வகுப்பு மனைவி பலி

கரூர்: கரூர் அருகே தனியார் பள்ளி வேன் மோதி இருசக்கர வாகனத்தில் சென்ற 5-ம் வகுப்பு மனைவி உயிரிழந்துள்ளார். தான்தோன்றிமலையில் நடந்த விபத்தில் தந்தையுடன் சென்ற மாணவி லத்திகா உயிரிழந்துள்ளார். 
ராம்குமாரின் மரணத்திற்கு சிறைத்துறை அதிகாரிகளே பொறுப்பு என முன்னாள் நீதிபதி சந்துரு கருத்து

@ ராம்குமாரின் மரணம் வழக்கை விரைவில் முடிப்பதற்கான முயற்சி எனவும் முன்னாள் நீதிபதி சந்துரு கருத்து
சிறையில் பாதுகாப்பு விதிமுறைகள் இருக்கும் நிலையில் ராம்குமாரின் உயிரிழப்பு சந்தேகம் அளிக்கிறது
சிறையில் நிகழும் மர்மங்களுக்கு சிறைத்துறை அதிகாரிகளே பொறுப்பு
நல்ல உடல்நலத்துடன் இருப்பவர்கள் சிறையில் அடைக்கும்போது மட்டும் எப்படி உடல்நிலை சரியில்லாமல் போகிறது என கேள்வி
அனைத்து சிறைகளிலும் வயர்கள் வெளியில் இருக்கும்படி இருக்காது என முன்னாள் நீதிபதி சந்துரு,
சுவற்றில் பதிக்கப்பட்ட நிலையில்தான் மின்சார இணைப்புகள் கொடுக்கப்பட்டிருக்கும்
ராம்குமாரின் மரணம் திட்டமிட்டு நடைபெற்றுள்ளதாக முன்னாள் நீதிபதி சந்துரு குற்றச்சாட்டு

@ வெற்றிக்கு பிறகே கண்ணை மூடுவேன்: கருணாநிதி!

சென்னை

நடைபெற்ற முப்பெரும் விழாவில் பேசிய திமுக தலைவர் கருணாநிதி, மாபெரும் வெற்றி பெற்ற பிறகுதான் கண்ணை மூடுவேன் என்று உருகினார்.

@ நத்தம் வீட்டில் ரெய்டு: கோடிகணக்கான ரூபாய்க்கான ஆவணங்கள்! பரபரப்பு தகவல்!!

சென்னை:

நத்தம் விஸ்வநாதன் வீடுகளில் நடைபெற்ற ரெய்டில் 300 கோடிக்கான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகிறது.

கடந்த 12ந்தேதி தமிழகத்தை பரபரப்பாக்கிய செய்தி முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் வீடு, மேயர் சைதை துரைசாமி வீடு உள்பட 45 இடங்களில் ஒரே நாளில் ரெய்டு நடைபெற்றது.

இதையடுத்து கட்சி பதவியில் இருந்து நத்தம் விஸ்வநாதனை நீக்கி முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டார்.

தமிழக மக்கள் அனைவரும் உற்று நோக்கிய இந்த ரெய்டில் ஏராளமான ஆவணங்கள், பணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

முன்னாள் மின் துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் வீடு மற்றும் அலுவலகங்களில், வருமான வரித்துறை அதிகாரிகள் 5 நாட்கள் நடத்திய சோதனையில், 300 கோடி ரூபாய் அளவுக்கு, கணக்கில் வராத சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளதாக தெரிகிறது.

@ வால்பாறை குடியிருப்பு பகுதிகளில் யானைகள் நடமாட்டம்: கும்கி முகாம் அமைக்க கோரிக்கை

வால்பாறை: வால்பாறை குடியிருப்பு பகுதிகளில் குட்டிகளுடன் சுற்றித்திரியும் காட்டு யானைகளால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். கடந்த 1 வாரமாக வால்பாறையில் யானைகள் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. வனத்தை விட்டு கூட்டம் கூட்டமாக வெளியேறி வரும் யானைகள், பொதுமக்களை அச்சுறுத்தியும், பொருட்களை சேதப்படுத்தியும் வருகின்றன. இந்நிலையில் நேற்று இரவு குட்டிகளுடன் அருகிலிருந்த எஸ்டேட் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த யானை கூட்டம் ரேசன் கடையை உடைக்க முயன்றது. 

அப்போது அங்கு சென்ற பொதுமக்களும், வனத்துறையினரும் கூச்சலிட்டும், பட்டாசுகளை வெடித்தும் யானைகளை விரட்ட முயற்சித்தனர். இதே போல சிறுகுன்றா மேல்பிரிவு எஸ்டேட்டில் புகுந்த 3 யானைகள் சத்துணவு கூடத்தின் கதவை உடைத்து அரிசி மற்றும் முட்டைகளை சாப்பிட்டுள்ளன.

மேலும் பாத்திரங்களை சேதப்படுத்திவிட்டு சென்றுள்ளன. இதனால் அச்சத்தில் உள்ள பொதுமக்கள் தற்காலிக கும்கி முகாமை அமைக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க கோரியுள்ளனர். 

@ சென்னை - காரைக்கால் இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்குமா?

சென்னை- காரைக்கால் துறைமுகங்களுக்கிடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து வசதியை ஏற்படுத்த மத்திய- மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் மேலோங்கியுள்ளது.

@  மது அருந்தி வாகனங்கள் இயக்கும் இளைஞர்கள்: விசாரணை வரம்பில் கொண்டுவர உயர்நீதிமன்றம் உத்தரவு

இளம்பருவத்தினர் மது அருந்துவதைத் தடுப்பதற்கு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அமைக்கப்பட்ட குழுவின் விசாரணை வரம்பில், மது அருந்தி வாகனம் ஓட்டுவதையும் இணைக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

@ நீர்த்தேக்கத்துக்காக 50 ஆண்டுகளாக போராட்டம்

பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டத்தில் சுமார் 50 ஆண்டுகளுக்கும் மேலாக எதிர்பார்க்கப்பட்டு வரும் சின்னமுட்லு நீர்த்தேக்கத் திட்டத்தை விரைந்து நிறைவேற்ற வேண்டும் எனப் பொதுமக்களும், விவசாயிகளும் வலியுறுத்துகின்றனர்.

@ ராம்குமார் தற்கொலை செய்து கொண்டார் என்பது நம்பும் படியாக இல்லை: மு.க. ஸ்டாலின்

சென்னை : ராம்குமார் தற்கொலை குறித்து உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் நீதி விசாரணை நடத்த வேண்டும் என்று தமிழக எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.

@ ராம்குமார் தாயார், சகோதரிகள் சாலை மறியல்

ராம்குமார் தாயார், சகோதரிகள் சாலை மறியல்

புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த ராம்குமார் தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். அவரது உடல் சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் அவரது உறவினர்கள் ராம்குமார் மரணம் குறித்து சிபிஐ விசாரணை நடத்தக் கோரி சாலை மறியலில் ஈடுபட்டனர். செங்கோட்டை பன்பொழி சாலையில் நடந்த இந்த சாலை மறியலில் ராம்குமாரின் தாயார் புஷ்பா, சகோதரிகள் காளீஸ்வரி, மதுபாலா ஆகியோரும் கலந்து கொண்டனர்.

@ உ.பி.யில் உருவாகும் உலகின் மிக உயரமான கோயில்!

உத்தரப் பிரதேச மாநிலம், மதுரா மாவட்டத்தில் உள்ள பிருந்தாவன் நகரில் சந்திரோதயா மந்திர் (கோயில்) கட்டப்பட்டு வருகிறது. இது உலகின் மிக உயரமான கட்டடம் என்ற சாதனை படைத்த துபையில் உள்ள புர்ஜ் கலிஃபாவைக் காட்டிலும் உயரமாகக் கட்டத் திட்டமிடப்பட்டுள்ளது.

@ கோவில் பணியாளர்களின் மாத ஓய்வூதியம் உயர்வு: ஜெயலலிதா அறிவிப்பு

சென்னை: கோவில் பணியாளர்களின் மாத ஓய்வூதியம் ரூ.2 ஆயிரமாக உயத்தப்படும் என முதலவர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். மேலும் நாகை எட்டுக்குடி சுப்பிரமணியசாமி கோயிலில் ரூ.95 லட்சத்தில் திருமண மண்டபம் காட்டப்படும். அதன் பின்னர் கோயில் நிகழ்வுகளை ஆவணப்படுத்தி காணொளிக் கடசிகளுடன் காண சிறப்பு இணையதளம் என முதலவர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

@ உள்ளாட்சித் தேர்தல் குறித்து வாசன் ஆலோசனை

உள்ளாட்சி தேர்தலில் கூட்டணி அமைப்பது தொடர்பாகவும், முக்கிய முடிவு எடுப்பது குறித்தும் மாவட்ட தலைவர்களுடன் ஜி.கே.வாசன் நாளை ஆலோசனை நடத்துகிறார்.

@  தண்ணீர் திறப்பு திடீர் நிறுத்தம்.. விவசாயிகளால் கே.ஆர்.எஸ் அணை முற்றுகை.. 4 ஆயிரம் போலீஸ் குவிப்பு

@ புதுச்சேரியில் செப்.,21-ல் ஆட்டோக்கள் வேலை நிறுத்தம்: ஆட்டோ சங்க ஒருங்கிணைப்பு குழு அறிவிப்பு

புதுச்சேரி: புதுச்சேரியில் வரும் 21ம் தேதி 4000 ஆட்டோக்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக அனைத்து ஆட்டோ சங்க ஒருங்கிணைப்பு போராட்டக்குழு அறிவிப்பு விடுத்துள்ளது.

@ உரிய பதிலடி கொடுங்கள்: பாரிக்கர் அறிவுரை

புதுடில்லி: உரி தாக்குதல் சம்பவத்திற்கு காரணமான பயங்கரவாதிகள் மீது உரிய பதிலடி கொடுக்க மத்திய பாதுகாப்பு அமைச்சர் பாரிக்கர் உத்தரவிட்டுள்ளார்.காஷ்மீர் மாநிலம் எல்லைக்கட்டுப்பாடு கோடு அருகேயுள்ள உரி பகுதியில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் பலியான ராணுவ வீரர்களின் எண்ணிக்கை 20 ஆக உயர்ந்துள்ளது. சம்பவ இடத்திற்கு மத்திய பாதுகாப்பு அமைச்சர் பாரிக்கர் நேரில சென்று ஆய்வு செய்தார். பயங்கரவாதிகள் எப்படி ஊடுருவினர் என்பது குறித்து கேட்டறிந்தார். தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார்.பின்னர் டுவிட்டரில் பாரிக்கர் வெளியிட்ட செய்தியில், " பயங்கரவாதிகள் தாக்குதலில் பலியானவர்களின் தியாகம் வீண்போகக்கூடாது.

அவர்களுக்கு எனது வணக்கங்களை தெரிவித்து கொள்கிறேன். உரி சம்பவத்தை தொடர்ந்து அங்கு நிலைமையை ஆய்வு செய்தேன். ராணுவ தளபதிக்கும், கமாண்டர்களுக்கும், தாக்குதலுக்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிவுரை வழங்கியுள்ளேன்" எனக்கூறப்பட்டுள்ளது.

@ ராம்குமார் மரணம்: புழல் சிறையில் நீதிபதி தமிழ்ச்செல்வி நேரில் ஆய்வு

சென்னை: சுவாதி கொலை வழக்கில் கைதான ராம்குமார் மரணம் அடைந்த புழல் சிறையில், திருவள்ளூர் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி தமிழ்ச்செல்வி நேரில் ஆய்வு நடத்தினார்.

@ உரி தீவிவாத தாக்குதல்: பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் ஆலோசனை

டெல்லி: உரி தீவிவாத தாக்குதலில் 17 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். இந்த விவகாரம் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், பாதுகாப்பு துறை மனோகர் பாரிக்கர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஆகியோர் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர்.

@ பிரியாணிக்காக 42 பேருந்துகளை எரித்த பெண்: பெங்களூரு கலவரம் குறித்து அதிர்ச்சியூட்டும் தகவல்

பெங்களூர்: தமிழகத்தை தலைமையிடமாகக் கொண்ட கேபிஎன் டிராவல்ஸ் பேருந்துகள் பெங்களூருவில் எரிக்கப்பட்ட சம்பவத்தில் அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மட்டன் பிரியாணியும், நூறு ரூபாயும் கொடுப்பதாகக் கூறிய கும்பலுடன் சேர்ந்து 42 பேருந்துகளை 22 வயது பெண் ஒருவர் எரித்துள்ளார் என்பது விடியோ பதிவுகள் மூலம் தெரிய வந்துள்ளது.

@  ஏர்டெல் மீது ரிலையன்ஸ் ஜியோ குற்றச்சாட்டு

டெல்லி:நேற்று முன்தினம் ஏர்டெல் நிறுவனம் ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு ஒப்பந்தத்தின் படி புதிய தொடர்பு முறைகளை வழங்குவதாக அறிவித்தது. மேலும் இந்த தொடர்பு முறைகளை வெளியிட வேலைசெய்து வருவதாகவும் கூறியது. ஏர்டெல் இப்படி கூறியதை அடுத்து ரிலையன்ஸ் நிறுவனம் தற்போது குற்றம் சாட்டியுள்ளது. 

@ ஜம்மு-காஷ்மீரில் 73-வது நாளாக ஊரடங்கு உத்தரவு: மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

ஸ்ரீநகர்: காஷ்மீரில் ஸ்ரீநகரின் ஒரு பகுதியில் 73-வது நாளாக ஊரடங்கு உத்தரவு தொடர்வதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது.

@ குளிர்காலக் கூட்டத் தொடரை முன்னதாகவே நடத்த அரசு ஆலோசனை

புது தில்லி: சரக்கு-சேவை வரியை (ஜிஎஸ்டி) விரைவில் அமல்படுத்தும் நோக்கில் நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடரை முன்னதாக நடத்துவது குறித்து மத்திய அரசு ஆலோசித்து வருகிறது.

@ 22 கேரட் தங்கம் சவரனுக்கு ரூ.104 உயர்வு

மும்பை: 22 கேரட் தங்கம் சவரனுக்கு ரூ.104 உயர்ந்து ரூ.23640-க்கு விற்கப்படுகிறது. 22 கேரட் தங்கம் கிராமுக்கு ரூ.13 உயர்ந்து ரூ.2955-க்கு விற்கப்படுகிறது.24 கேரட் தங்கம் கிராமுக்கு ரூ.14 உயர்ந்து ரூ.3160-க்கு விற்கப்படுகிறது.மேலும் வெள்ளி கிராமுக்கு 80 காசுகள் உயர்ந்து ரூ.49.30க்கு விற்கப்படுகிறது.வெள்ளி ஒரு கிலோவுக்கு ரூ.740 உயர்ந்து ரூ.46110-க்கு விற்கப்படுகிறது.

@ சசிகலா புஷ்பாவின் முன்ஜாமீன் மேல்முறையீட்டு மனு வெள்ளிக்கிழமை விசாரணை

டெல்லி: சசிகலா புஷ்பாவின் முன்ஜாமீன் மேல்முறையீட்டு மனு வெள்ளிக்கிழமை உச்சநீதிமன்றத்தில் விசாரணை நடத்த உள்ளது. தலைமை நீதிபதி தாக்கூர் அமர்வு சசிகலா புஷ்பாவின் முன் ஜாமின் மனுவை விசாரிக்கும். வீட்டுப் பணிப்பெண்ங்களை கொடுமைப்படுத்தியதாக சசிகலா புஷ்பா மீது போலீஸ் வழக்குப் பதிவு செய்தது. 

@ அசாமில் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் மீது துப்பாக்கிச்சூடு: 2 பேர் பலி

திஸ்பூர்: அசாம் மாநிலம் காசிரங்கா தேசிய பூங்கா அருகே போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் மீது போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 2 பேர் உயிரிழந்தனர். மேலும் 18 போலீசார் காயமடைந்தனர்.

@ காவிரி மேற்பார்வைக்குழு கூட்டம் டெல்லியில் தொடங்கியது

டெல்லி: காவிரி மேற்பார்வைக்குழு கூட்டம் டெல்லியில் தொடங்கியது. இந்த கூட்டத்தில் தமிழக அரசின் தலைமைச் செயலாளர் ரேம் மோகன் ராவ் பங்கேற்றுள்ளார். மேலும் ஆலோசனையில் கர்நாடக, கேரளா, புதுச்சேரி அதிகாரிகளும் பங்கேற்றுள்ளார். 

@ குடும்பத் தகராறு... எம்எல்ஏ கே.பி.பி.சாமியை சரமாரியாகத் தாக்கிய சகோதரர்கள்!

சென்னை: குடும்பத் தகராறு காரணமாக திருவொற்றியூர் திமுக எம்எல்ஏ கே.பி.பி.சாமியை அவரது சகோதரர்கள் தாக்கியுள்ளனர். இதனால் காயமடைந்த எம்எல்ஏ தனியார் மருத்துவமனையில் சிகிக்சை பெற்று வருகிறார்.

@ உரி தீவிரவாத தாக்குதல்: ராணுவ வீரர்கள் உடலுக்கு மெஹ்பூபா முஃப்தி அஞ்சலி

ஸ்ரீநகர்: உரி தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்த ராணுவ வீரர்கள் உடலுக்கு ஜம்மு காஷ்மீர் முதலமைச்சர் மெஹ்பூபா முஃப்தி மற்றும் ராணுவ வீரர்கள் அஞ்சலி செலுத்தினர். 

@ கோத்தகிரி சுற்றுவட்டாரத்தில் கடும் குடிநீர் தட்டுப்பாடு : மாற்றுத் திட்டத்தை செயல்படுத்த வலியுறுத்தல்

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி சுற்றுவட்டாரத்தில் நிலவி வரும் கடும் குடிநீர் தட்டுப்பாட்டால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். கோத்தகிரியை சுற்றியுள்ள 15-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு அப்பகுதியிலுள்ள இநாடார் நீர்தேக்கம் குடிநீர் ஆதாரமாக விளங்குகிறது. மழையின்றி தற்போது இந்த நீர்த்ததேக்கம் வறண்டு காணப்படுகிறது. இதனால் குடிநீர் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. 

@ சென்னை ஆழ்வார்பேட்டை இல்லத்தில் ஸ்டாலினுடன் ஜி.கே.வாசன் சந்திப்பு

சென்னை: சென்னை ஆழ்வார்பேட்டை இல்லத்தில் ஸ்டாலினுடன் ஜி.கே.வாசன் சந்தித்தினர். மேலும் உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இந்த சந்திப்பு நடந்து வருகிறது. 

@  ஆதாரங்களை தராமல் குற்றம்சாட்டும் இந்தியா: பாக்., குற்றச்சாட்டு

இஸ்லாமாபாத்: காஷ்மீர் மாநிலம் உரியில் நடந்த பயங்கரவாத தாக்குதல் சம்பவத்தில் தங்கள் மீது கூறப்படும் குற்றச்சாட்டு அடிப்படை ஆதாரமில்லாதது என பாகிஸ்தான் கூறியுள்ளது.காஷ்மீர் மாநிலம் உரியில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த சம்பவத்தில் 20 ராணுவ வீரர்கள் பலியானார்கள். சம்பவம் தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், சம்பவத்தின் பின்னணியில் பாகிஸ்தான் உள்ளதாக கூறினார். ராணுவ நடவடிக்கைகளுக்கான அதிகாரி ரண்பீர் சிங் கூறுகையில், பயங்கரவாதிகளிடமிருந்து கைப்பற்றப்பட்ட ஆயுதங்களில் பாக்., முத்திரை இருந்தது எனக்கூறினார்.இந்நிலையில், பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் நபீஸ் ஜகாரியா, டிவிக்கு அளித்த பேட்டியில், பாகிஸ்தான் மீது இந்தியா கூறும் குற்றச்சாட்டிற்கு அடிப்படை ஆதாரமில்லை.

சம்பந்தப்பட்டவர்கள் மீதான உரிய ஆதாரங்களை பாகிஸ்தான் கேட்டால், இந்தியா அதனை தருவதில்லை. பயங்கரவாத தாக்குதல் நடந்தால், தொடர்ந்து பாகிஸ்தானை குறைகூறும் வரலாறு இந்தியாவிடம் உண்டு. ஆனால், விசாரணையில் அனைத்தும் பொய் என நிருபிக்கப்பட்டுள்ளது எனக்கூறினார்.

@ போதையில் கார் ஓட்டிய சட்டக்கல்லூரி மாணவன்: ஆட்டோ டிரைவர் 2 பேர்பலி

சென்னை: போதையில் காரை ஓட்டி சட்டக்கல்லூரி மாணவர் விபத்தை ஏற்படுத்தியதில் ஆட்டோ டிரைவர் பலியானார்.சென்னை கதிட்ரல் சாலையில், இன்று அதிகாலை 3.30 மணியளவில் நடந்த இந்த சம்பவம் தொடர்பாக விகாஸ் விஜயானந்த்(22) என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரது கார் மோதியதில் ஆறுமுகம் என்ற ஆட்டோ டிரைவர் பலியானார். மேலும் இந்த சம்பவத்தில் பல ஆட்டோக்கள் சேதமடைந்தன. விகாஸ் ஓட்டி வந்த காரும் சேதமடைந்தது. சாலையோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த ஆட்டோவில் டிரைவர்கள் தூங்கி கொண்டிருந்தனர்.இந்த சம்பவம் தொடர்பாக காயமடைந்த சுந்தர் என்ற ஆட்டோ டிரைவர் கூறுகையில், "கார் பிரேக் போடும் சத்தம் கேட்டதுதான் தாமதம். அடுத்த வினாடியே இந்த சம்பவத்தில் சிக்கி காயமடைந்தேன்.

போலீசார் வந்த பிறகு தான் என்ன நடந்தது என தெரியவந்தது. போலீசார் தான் டிரைவர்களை மீட்டு சென்றனர். 20 நிமிட தாமதத்திற்கு பிறகு தான் ஆம்புலன்ஸ் வந்தது" எனக்கூறினார்.கடந்த ஜூன் மாதம் ஐஸ்வர்யா என்ற இளம்பெண் போதையில் ஆடி காரை ஓட்டி வந்து விபத்தை ஏற்படுத்தியதில், கூலி தொழிலாளி ஒருவர் பலியானார். ஐஸ்வர்யா கைது செய்யப்பட்டு பின்னர் நிபந்தனை ஜாமினில் விடுதலை செய்யப்பட்டார்.

@ உரி தீவிரவாத தாக்குதல்: பாகிஸ்தானுக்கு எதிராக இளைஞர் காங்கிரஸ் உறுப்பினர்கள் ஆர்ப்பாட்டம்

சண்டிகர்: உரி தீவிரவாத தாக்குதல் விவகாரத்தில் பாகிஸ்தானுக்கு எதிராக இளைஞர் காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் சண்டிகரில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

@ ராம்குமார் உடலை பிரேத பரிசோதனை செய்ய இடைக்காலத் தடை

சென்னை: புழல் சிறையில் நேற்று தற்கொலை செய்த கொண்ட ராம்குமார் உடலை பிரேத பரிசோதனை செய்ய சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி சிவஞானம் உத்தரவு பிறத்துள்ளார்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here