🔉🔉🔉🔉🔉🔉🔉🔉🔉🔉🔉
http://www.sivakasiteacherkaruppasamy.blogspot.com
🔉🔊🔊🔉🔉🔊🔊🔉🔉🔊🔊
🔉செப். 21-இல் எம்.பி.பி.எஸ். 2-ஆம் கட்டக் கலந்தாய்வு
எம்.பி.பி.எஸ்.- பி.டி.எஸ். மாணவர் சேர்க்கைக்கான இரண்டாம் கட்டக் கலந்தாய்வு செப். 21-இல் தொடங்கும் என தேர்வுக் குழு அதிகாரிகள் கூறினர்.
இந்திய மருத்துவக் கவுன்சிலின் விதிகளின்படி. மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையை ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 30-ஆம் தேதிக்குள் முடிக்க வேண்டும்.
மத்திய அரசு பிறப்பித்த அவசரச் சட்டம் காரணமாக, தமிழகத்தில் நிகழ் கல்வி ஆண்டில் (2016-17) "நீட்' தேர்வு மதிப்பெண் அடிப்படையில் அல்லாமல், பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் முதல் கட்டக் கலந்தாய்வு சென்னையில் ஜூன் 21 முதல் 25 வரை நடைபெற்றது.
நிரப்பப்பட்ட இடங்கள்: சென்னை மருத்துவக் கல்லூரி உள்பட 21 அரசு மருத்துவக் கல்லூரிகளில் மாநில ஓதுக்கீட்டுக்கு உரிய 2,383 எம்.பி.பி.எஸ்.
இடங்கள், சுயநிதி கல்லூரிகளின் 470 அரசு ஒதுக்கீட்டு இடங்கள், சென்னை பாரிமுனையில் உள்ள அரசு பல் மருத்துவக் கல்லூரியின் 85 பி.டி.எஸ். இடங்கள் ஆகியவற்றை நிரப்ப முதல் கட்டக் கலந்தாய்வு நடைபெற்றது.
முடிவில் 21 அரசு கல்லூரிகளின் 2,383 இடங்கள் நிரப்பப்பட்டன; சுயநிதி கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டில் உள்ள 72 இடங்களும், பாரிமுனை அரசு பல் மருத்துவக் கல்லூரியில் 7 பி.டி.எஸ். இடங்களும் காலியாக இருந்தன.
122 இடங்கள்: கலந்தாய்வில் பங்கேற்று மாணவர்கள் கல்லூரிகளில் சேராததால் 122 காலியிடங்கள் உள்ளன. இதேபோன்று அரசு பி.டி.எஸ். காலியிடங்கள், சுயநிதி பல் மருத்துவக் கல்லூரிகள் சமர்ப்பித்துள்ள 970 அரசு ஒதுக்கீட்டு பி.டி.எஸ். காலியிடங்களை நிரப்பவும் இரண்டாம் கட்டக் கலந்தாய்வு நடத்தப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
🔉நெல்லை - செங்கோட்டை பயணிகள் ரயிலில் விளக்குகள் எரியாததால் பயணிகள் அவதி
நெல்லை: நெல்லையிலிருந்து செங்கோட்டைக்கு வந்த ரயிலில் இரவு நேரமாகியும் பெட்டிகளில் விளக்குகள் எரியாததால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.
P.karuppasamy 7373793336
🔉50 அடி பள்ளத்தில் உருண்ட லாரி: வீட்டின் மேல் விழுந்ததில் தம்பதி சாவு
கொடைக்கானல் மலைச் சாலையில் சரக்கு லாரி ஒன்று ஞாயிற்றுக்கிழமை 50 அடி பள்ளத்தில் உருண்டு, கீழே இருந்த வீட்டின் மேல் விழுந்ததில், கணவன்-மனைவி உயிரிழந்தனர்.
🔉டி.எஸ்.பி. கார் மோதி மீனவர் காயம்: கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்
காவல் துணைக் கண்காணிப்பாளர் வாகனம் மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்ற மீனவர் பலத்த காயமடைந்தார். இதையடுத்து அப்பகுதி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
🔉உண்டு, உறைவிடப் பள்ளியில் 2 மாணவர்கள் மர்மச் சாவு
விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலூரில் உள்ள உண்டு, உறைவிடப் பள்ளியில், மாணவர்கள் 2 பேர் மர்மமான முறையில் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தனர். இது தொடர்பாக போலீஸார் மற்றும் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
🔉உள்ளாட்சித் தேர்தலிலும் அதிமுகவுடான கூட்டணி தொடரும்: சரத்குமார்
தென்காசி: வரும் உள்ளாட்சித் தேர்தலிலும் அதிமுக - சமக கூட்டணி தொடரும் என்று சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் கூறினார்.
🔉"பைக் ரேஸ்': 38 பேருக்கு அபராதம்
மாமல்லபுரம் அருகே கிழக்கு கடற்கரை சாலையில் போலீஸார் நடத்திய சோதனையின் போது பைக் ரேஸில் ஈடுபட்டதாக 38 பேருக்கு தலா ரூ. 400 அபராதம் விதிக்கப்பட்டது.
சென்னையிலிருந்து புதுச்சேரி வரை வார இறுதி நாள்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் அனுமதி பெறாமல் பைக் ரேஸ் போட்டிகள் நடத்தப்படுவதாகவும், இதனால் விபத்துகள் அதிகம் நடைபெறுவதாகவும் போலீஸாருக்கு புகார்கள் வந்தன.
இதையடுத்து மாமல்லபுரம் காவல் துணைக் கண்காணிப்பாளர் சேகர் தலைமையில் ஆய்வாளர்கள் கோவிந்தராஜ், சிரஞ்சீவி, முத்துக்குமார் மற்றும் போலீஸார் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள வாகன சோதனைச்சாவடி அருகே கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது, சென்னையிலிருந்து புதுச்சேரி நோக்கி அதிவேகத்தில் வந்த 38 ரேஸ் பைக்குகளை போலீஸார் மடக்கிப் பிடித்தனர்.
விசாரணையில் முன் அனுமதி பெறாமல் பைக் ரேஸ் போட்டி நடத்தப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து போலீஸார் அவர்களுக்கு தலா ரூ. 400 அபராதம் விதித்து எச்சரித்து அனுப்பினர்.
🔉தொடர் விபத்தைத் தடுக்க பொன்னேரிக்கரையில் மேம்பாலம் அமைக்கப்படுமா?
பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் இருந்து, காஞ்சிபுரம் நகருக்குள் செல்லும் நுழைவாயிலான பொன்னேரிக் கரைப் பகுதியில் அடிக்கடி விபத்துகள் நிகழ்வதைத் தடுக்க அப்பகுதியில் மேம்பாலம் அமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.
🔉நீதிபதி பணியிடங்கள் காலியாக இருந்தால், நீதி எப்படி விரைவாகக் கிடைக்கும்? - கருணாநிதி
சென்னை: உயர்நீதிமன்றங்களில் நீதிபதி பணியிடங்கள் அதிகளவில் காலியாக இருந்தால், பாதிப்புக்கு ஆளாகியுள்ளோருக்கு நீதி எப்படி விரைவாகக் கிடைக்கும் என்று திமுக தலைவர் கருணாநிதி கேள்வி எழுப்பியுள்ளார்.
P.karuppasamy.9159023336,7373793336
🔉பொள்ளாச்சி அருகே சிறுத்தை மர்மச் சாவு
பொள்ளாச்சி அருகே மர்மமான முறையில் சிறுத்தை இறந்து கிடந்தது குறித்து வனத் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பொள்ளாச்சியை அடுத்த ஆனைமலை, பெருமாள்சாமி கரடு பகுதியில் சிறுத்தை ஒன்று இறந்து கிடப்பதாக வனத் துறையினருக்கு அப்பகுதி மக்கள் ஞாயிற்றுக்கிழமை தகவல் தெரிவித்தனர்.
அதன்பேரில், வனத்துறையினர் சம்பவ இடத்துக்குச் சென்று பார்த்ததில், மின் கம்பத்தின் கீழ் சிறுத்தை உயிரிழந்து கிடந்தது.
இதுகுறித்து வனத் துறையினர் கூறியதாவது:
சிறுத்தை இறந்து 2 நாள்களுக்குமேல் ஆகியிருக்கலாம். சிறுத்தை உயிரிழந்து கிடக்கும் இடத்தின் அருகில் உள்ள மின் கம்பத்தில் மயில் ஒன்று சிக்கி உயிரிழந்துள்ளது.
மின் கம்பத்தில் சிக்கியிருந்த மயிலைப் பிடிப்பதற்காக சிறுத்தை மின் கம்பத்தில் ஏறியபோது மின்சாரம் பாய்ந்து உயிரிழந்திருக்கலாம் என்றனர்.
🔉ஒகேனக்கல்லில் நொடிக்கு 10 ஆயிரம் கன அடி நீர் வரத்து
ஒகேனக்கல் காவிரியாற்றில் ஞாயிற்றுக்கிழமை காலை நிலவரப்படி நொடிக்கு 10 ஆயிரம் கன அடி தண்ணீர் வரத்து இருந்தது.
கர்நாடக அணைகளில் இருந்து காவிரியாற்றில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதாக சனிக்கிழமை காலை முதல் செய்திகள் வெளியாயின.
இந்த நிலையில், ஒகேனக்கல் காவிரியாற்றில் சனிக்கிழமை மாலை வரை நொடிக்கு 8 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்தது. ஆனால், ஞாயிற்றுக்கிழமை காலை நிலவரப்படி இந்த வரத்து 10 ஆயிரம் கன அடியாக உயர்ந்தது.
ஞாயிற்றுக்கிழமை என்பதால், பொதுப்பணித் துறையினர் பிற்பகல் தண்ணீர் வரத்து அளவீடு செய்ய வரவில்லை எனத் தெரிகிறது. காலை தண்ணீர் வரத்து நிலவரம் குறித்த குறுஞ்செய்தி வருவாய்த் துறை அலுவலர்களுக்கு வந்திருக்கிறது.
🔉திட்டக்குடி அருகே திருமணத்துக்காக சென்ற வேன் கவிழ்ந்து 24 பேர் காயம்
கடலூர்: திட்டக்குடி அருகே திருமணத்துக்காக சென்ற வேன் கவிழ்ந்து 24 பேர் காயமடைந்துள்ளனர். ஆவினங்குடி அருகே நிகழ்ந்த விபத்தில் காயமடைந்த 24 பேரும் திட்டக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
🔉மோடி கண்டுகொள்ளவில்லை: மாயாவதி குற்றச்சாட்டு
நம்பிக்கையுடன் ஓட்டுப்போட்டு தேர்ந்தெடுத்த மக்கள் பிரதமர் நரேந்திர மோடி கண்டுகொள்ளவில்லை என்று பகுஜன் சமாஜ் தலைவரும், முன்னாள் முதல்-மந்திரியுமான மாயாவதி குற்றம் சாட்டியுள்ளார்.
🔊உயிரிழந்த குழந்தையின் உடலுடன் கதறிய தாய் : விசாரிக்க கோர்ட் உத்தரவு
உயிரிழந்த குழந்தையின் உடலுடன் கதறிய தாய் : விசாரிக்க கோர்ட் உத்தரவு
உத்திரப்பிரதேச மாநிலம், பக்பத் மாவட்டத்தைச் சேர்ந்தவர் இம்ரனா. இவர், உடல்நலம் பாதிக்கப்பட்ட தனது இரண்டரை வயது மகளான குல்நாதை மீரட் நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தார். சிகிச்சை பலனின்றி அந்த குழந்தை இறந்துவிட்ட துயரம் ஆறாமல் தாய் அழுது கொண்டிருந்தநிலையில் குழந்தையின் சடலத்தை சொந்த ஊருக்கு கொண்டு செல்ல தனியார் ஆம்புலன்ஸ் கட்டணம் 2,500 ரூபாய் கேட்கப்பட்டது.
அதை கொடுக்க அவரிடம் பணம் இல்லை. இதனால் இரவு முழுவதும் ஆஸ்பத்திரி வளாகத்தில் மகள் உடலுடன் இம்ரனா இருந்தார். மறுநாள் காலையில் சிலரின் உதவியால் ஆம்புலன்ஸ் மூலம் மகளின் உடலை ஊருக்கு இம்ரனா கொண்டு சென்றார்.
இந்த தகவல் வெளியானதை அறிந்த மாவட்ட மாஜிஸ்திரேட்டு இதுதொடர்பாக தானாக முன்வந்து விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளார்.
🔊ரிலையன்ஸ் ஜியோ விளம்பர தூதர் மோடி: ரிலையன்சின் சட்டைப்பையில் காங்கிரஸ்: அரவிந்த் கெஜ்ரிவால்
ரிலையன்ஸ் ஜியோ விளம்பர தூதர் மோடி: ரிலையன்சின் சட்டைப்பையில் காங்கிரஸ்: அரவிந்த் கெஜ்ரிவால்
சுதந்திர இந்திய வரலாற்றில் எந்த ஒரு இந்திய பிரதமரும் மோடியைப் போல தன்மை ஒரு கார்ப்பரேட் நிறுவனத்திற்கு விற்றுக்கொண்டதில்லை என்று டெல்லி முதல் அமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம் சாட்டியுள்ளார்.
🔉அமைச்சரின் பேச்சை கண்டித்து விவசாயிகள் சாலை மறியல்: தொடர் உண்ணாவிரதம்
கர்நாடக அரசு காவிரியில் தண்ணீர் திறந்து விட மறுப்பதை கண்டித்தும், காவிரி மேலாண்மை வாரியம், நீர் பங்கீட்டு குழு அமைக்காமலும், அனைத்து விவசாய கடனை தள்ளுபடி செய்யாத மத்திய அரசை கண்டித்தும் திருச்சி சிந்தாமணி அண்ணாசிலை அருகே தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் சார்பில் கடந்த மாதம் 30-ந் தேதி முதல் தொடர் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்று வருகிறது. மாநில தலைவர் வக்கீல் அய்யாக்கண்ணு தலைமையில் நடைபெறும் இந்த தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் கலந்து கொண்ட விவசாயிகள் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் 6-வது நாளான ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற உண்ணாவிரத போராட்டத்தில், காவிரி ஆற்றில் இருந்து கர்நாடக அரசு தண்ணீர் திறந்து விடாததால் விவசாயிகள் வாழ வழியில்லாமல் கஷ்டப்படுவதை காட்டும் வகையில் உடலிலும், நெற்றியிலும் நாமம் போட்டுக்கொண்டு கோவணத்துடன் நூதன முறையில் உண்ணாவிரதம் இருந்தனர்.
இந்நிலையில் சனிக்கிழமை ஈரோடு பகுதியில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பண்ணன் தமிழக விவசாயிகள் யாரும் கடனாளியாக இல்லை என்று சில கருத்துக்களை தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இதை கண்டித்தும், அவரை மந்திரி சபையில் இருந்து நீக்கக்கோரியும் காலை 11 மணி அளவில் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டிருந்த விவசாயிகள் திடீரென எழுந்து சிந்தாமணி அண்ணாசிலை அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த கோட்டை போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதன்பேரில் அவர்கள் சாலை மறியலை கைவிட்டு மீண்டும் உண்ணாவிரத பந்தலுக்கு சென்று உண்ணாவிரதத்தை தொடர்ந்தனர்.
🔉நேபாளத்தில் நிலநடுக்கம்
நேபாளத்தில் நிலநடுக்கம்
நேபாளத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
நேபாளத்தில் இன்று காலை மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோலில் 4.5ஆக பதிவாகி உள்ளது.
🔊காவிரி வழக்கு - உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை
காவிரி வழக்கு - உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை
தமிழக அரசு சார்பில் கடந்த மாதம் 22ஆம் தேதி உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், கர்நாடக அரசு கடந்த ஆண்டும், இந்த ஆண்டும் 62 டிஎம்சி தண்ணீர் நிலுவையில் வைத்துள்ளதால் தமிழகத்தில் உள்ள 7 மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, யு.யு.லலித் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.
தமிழக அரசின் சார்பில் மூத்த வழக்கறிஞர் சேகர் நாப்தே, கர்நாடக அரசு தரப்பில் வழக்கறிஞர் பாலி நாரிமனும் ஆஜராகினர்.
நடுவரி மன்றத் தீர்ப்பின்படி கர்நாடக அரசு தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிடுவதில்லை என்றும், சம்பா சாகுபடிக்காக உடனடியாக 50 டிஎம்சி தண்ணீரைத் திறந்துவிட வேண்டும் என்றும் தமிழக அரசு சார்பில் வாதிடப்பட்டது. இதற்கு மறுப்பு தெரிவித்த கர்நாடக அரசு மழை பொய்த்துவிட்டதை காரணமாக கூறியது.
இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள், மனிதாபிமான அடிப்படையில் நீரைத் திறந்துவிட வேண்டும் என்றும், வாழு வாழவிடு என்றும் கருத்து தெரிவித்தனர். மேலும், எவ்வளவு தண்ணீரை திறக்க முடியும் என்பதை திங்கள்கிழமை தெரிவிக்கவும் உத்தரவிட்டனர். இந்த நிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது.
🔊முன்னாள் எம்எல்ஏ வீட்டில் 5 பவுன் நகை, பணம் திருட்டு
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அருகே திமுக முன்னாள் எம்எல்ஏ வீட்டில் 5 பவுன் நகை, ரூ. 5,000 ரொக்கம் ஆகியவற்றை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
🔉காஷ்மீரில் அனைத்துக் கட்சிக் குழுவினரை சந்திக்க பிரிவினைவாதிகள் மறுப்பு
காஷ்மீரில் அனைத்துக் கட்சிக் குழுவினரை சந்திக்க பிரிவினைவாதிகள் மறுப்பு
காஷ்மீரில் கடந்த 50 நாட்களுக்கு மேலாக நிலவும் பதற்ற நிலையை தணிக்கும் வகையில் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் 26 எம்பிக்கள் அடங்கிய அனைத்துக் கட்சிக் குழுவினர் ஸ்ரீநகர் சென்றனர்
🔉சத்தீஸ்கரில் பல இடங்களில் சாலைகளை தோண்டி சேதப்படுத்திய நக்சல்கள்
தன்த்வாடா: சத்தீஸ்கர் மாநிலம் தன்த்வாடா பகுதியில் உள்ள சுமார் 150 இடங்களில் உள்ள சாலைகளை தோண்டியெடுத்து நக்சல்கள் சேதப்படுத்தியுள்ளனர். இதனால் சுமார் 27கி.மீக்கு பல பகுதிகளில் சாலைப் போக்குவரத்து முடங்கியது. பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
🔊விமான விபத்தில் நேதாஜி இறக்கவில்லை: வி.பி. சைனி
ரூப்நகர்: நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் தைவானில் நிகழ்ந்த விமான விபத்தில் உயிரிழக்கவில்லை என்று அனைத்து இந்திய பார்வார்டு பிளாக் கட்சியின் தேசிய செயலர் வி.பி. சைனி தெரிவித்தார்.
இதுதொடர்பாக அவர் கூறியதாவது:
தைவானில் கடந்த 1945-ஆம் ஆண்டு நேரிட்ட விமான விபத்தில் நேதாஜி உயிரிழந்து விட்டதாக லண்டனைச் சேர்ந்த இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது. இது தவறான செய்தியாகும். நேதாஜிக்கு எதிரான சதியின் ஒரு பகுதியே இது.
லண்டன் இணையதளத்தின் செய்தியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள ஆவணங்கள், 24 ஆண்டுகளுக்கு முந்தையது ஆகும். நேதாஜி மரணம் தொடர்பாக ஜப்பான்தான் ஆவணங்கள் அளித்தது. ஆனால், அந்த ஆவணங்கள் அனைத்தும் பொய்யானவை என்று நிரூபிக்கப்பட்டு விட்டது.
தைவான் நாடு, இந்தியாவுக்கு எழுத்துப்பூர்வமாக அனுப்பிய அறிக்கையில், தங்கள் நாட்டில் நேதாஜி உயிரிழந்ததாக கூறப்படும் விமான விபத்து எதுவும் நேரிடவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில், அரசுடன் நேதாஜியின் குடும்பத்தைச் சேர்ந்த சிலரும் கைகோர்த்தனர். இதற்கு அவர்களது சுயநல நோக்கம் அல்லது தனிப்பட்ட காரணங்கள் இருக்கலாம்.
எனவே, நேதாஜி விவகாரத்தில் உண்மையில் என்ன நடந்தது என்பதைக் கண்டுபிடிக்க மத்திய அரசு முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும். தேசத்தின் கதாநாயகனான நேதாஜிக்கு கிடைக்க வேண்டிய மரியாதையை அளிக்க வேண்டும் என்று சைனி குறிப்பிட்டார்.
🔊திருச்சி உச்சிபிள்ளையாருக்கு 75 கிலோ கொழுக்கட்டை படையல்
திருச்சி: விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு புகழ்பெற்ற திருச்சி உச்சிபிள்ளையாருக்கு 75 கிலோ எடையுள்ள கொழுக்கட்டை படைக்கப்பட்டது.விநாயகர் சதுர்த்தி விழா இன்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. விநாயகர் கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடந்து வருகிறது. பொது இடங்களில் நிறுவப்பட்டுள்ள விநாயகர் சிலைகள் மற்றும் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக புகழ்பெற்ற திருச்சி மலைக்கோட்டை உச்சிபிள்ளையார் கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் அதிகாலை முதலே சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.உச்சிபிள்ளையாருக்கு 75 கிலோ எடையுள்ள பிரம்மாண்ட கொழுக்கட்டை நிவேதனமாக படைக்கப்பட்டது.
🔉3 ஏவுகணைகளை சுட்டு வீழ்த்திய வடகொரியா
சியோல் : சீனாவில் ஜி20 பொருளாதார மாநாடு நடந்து வரும் நிலையில் கிழக்கு கடற்கரை பகுதியில், கண்டம் விட்டு கண்டம் தாவும் 3 ஏவுகணைகளை வடகொரியா சுட்டு வீழ்த்தி உள்ளதாக தென்கொரியா தெரிவித்துள்ளது.உலக நாடுகளின் கவனத்தை வடகிழக்கு ஆசியா மீது திருப்புவதற்காகவும், தென்கொரியாவிற்கு மிரட்டல் விடுவதற்காகவும் வடகொரியா அவ்வப்போது ஏவுகணைகள் மற்றும் அதிநவீன ராக்கெட் சோதனைகளை நடத்தி வருகிறது. இதற்கு தென்கொரியாவும் பதிலடி கொடுத்து வருகிறது. இந்நிலையில் உலக பொருளாதார நிலை குறித்து ஆலோசிப்பதற்காக ஜி 20 மாநாட்டில் உலக நாடுகளின் தலைவர்கள் ஒன்று கூடி இருக்கும் நிலையில் வடகொரியா ஏவுகணைகளை தாக்கி அழித்துள்ளதாக தென்கொரியா தெரிவித்துள்ளது.
ஜி20 மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய தென் கொரிய அதிபர் பார்க் ஜியுன் ஹை யும், வடகொரியாவை கடுமையாக விமர்சித்து பேசி உள்ளார்.
🔊இங்கிலாந்து பிரதமருடன் மோடி சந்திப்பு
பீஜிங் : ஜி20 மாநாட்டில் கலந்து கொள்வதற்காக சீனா சென்றுள்ள பிரதமர் மோடி, மாநாட்டின் ஒரு பகுதியாக இங்கிலாந்து பிரதமர் தெரசாவை சந்தித்தார்.
🔊சென்னையில் 2512 இடங்களில் விநாயகர் சிலைகள்
சென்னை : விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி சென்னையில் 2,512 இடங்களில் விநாயகர் சிலைகள் நிறுவ அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. விநாயகர் சிலைகளுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.அதிகபட்சமாக 30 அடி உயரம் வரை சிலைகள் வைக்க அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. அனுமதி இன்றி பொது இடங்களில் யாரும் சிலைகளை வைக்கக்கூடாது என்று போலீசார் எச்சரித்து உள்ளனர்.
🔉திருச்சி அரியமங்கலம் மற்றும் பொன்மலை பகுதியில் வைப்பதற்காக கொண்டுவரப்பட்ட 12 விநாயகர் சிலைக்கு காவலதுறையினர் அனுமதி மறுத்ததையடுத்து 2 விநாயகர் சிலைகளை திருச்சி மாநகர காவல்துறை ஆனையர் அலுவலகத்தின் முன் வைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 50க்கும் மேற்பட்டவர்கள் கைது. திருச்சியில் திடீர் பரபரப்பு...... இதே காரணத்திற்காக அரியமங்கலம் பகுதியில் விநாயகர் சிலை வைக்க மயன்றவர்கள் மீது காவல்துறையினர் தடியடி.......
🔉ஆப்பிள் நிறுவனத்துக்கு ரூ.96,500 கோடி அபராதம்
மொபைல் போன் உள்ளிட்ட மின்னணு சாதன விற்பனையாளரான உலகப் புகழ் பெற்ற ஆப்பிள் நிறுவனத்தின் மீது ஐரோப்பிய யூனியன் ரூ. 96,500 கோடி (1,300 கோடி யூரோ) அபராதம் விதித்த நடவடிக்கை அமெரிக்காவுக்கு எதிரானது அல்ல என்று ஐரோப்பிய யூனியன் விளக்கமளித்துள்ளது.
ஜி-20 மாநாட்டில் கலந்து கொள்ள சீனா வந்துள்ள ஐரோப்பிய யூனியன் தலைவர் ஜான் கிளோட் ஜங்கர் பத்திரிகையாளர்களிடம் கூறியதாவது:அயர்லாந்தில் பதிவு செய்யப்பட்டு செயல்பட்டு வரும் ஆப்பிள் நிறுவனம், சட்ட விரோதமாக பல வரிச் சலுகைகளை அந்த நாட்டு அரசிடம் பெற்றுள்ளது என்ற குற்றச்சாட்டை ஐரோப்பிய யூனியனின் விசாரணைக் குழு அறிக்கை தெரிவிக்கிறது.
அயர்லாந்தில் கடந்த பல ஆண்டுகளாக ஏராளமான பன்னாட்டு நிறுவனங்கள் தொழில் தொடங்க அந்நாட்டு அரசு ஊக்குவித்து வருகிறது. அங்கு தொழில் தொடங்கும் நிறுவனங்களுக்கு ஏராளமான வரிச் சலுகையை அறிவித்துள்ளது. ஆனால் இது ஐரோப்பிய யூனியன் சில விதிமுறைகளுக்கு எதிரானதாகும்.
சென்ற 3 ஆண்டுகளாக நடைபெற்ற விசாரணையின் முடிவில், பன்னாட்டு நிறுவனங்களுக்கு அயர்லாந்து அளித்த சலுகை முறைகேடானது என்று தெரிவிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, ஆப்பிள் நிறுவனம் மட்டுமே முந்தைய ஆண்டுகளுக்கான வரியாக ரூ. 96,500 கோடி (1,300 கோடி யூரோ) தொகையை வரி உள்ளிட்ட அபராதமாக அயர்லாந்துக்கு செலுத்த வேண்டும் என்று ஐரோப்பிய யூனியனின் விசாரணைக் குழு உத்தரவிட்டது.
🔊கடலூர் மத்திய சிறையில் கைதி மணிகண்டன் தூக்கிட்டு தற்கொலை . கைதியின் தற்கொலை குறித்து போலீசார் விசாரணை
🔊அன்னை தெரசாவுக்கு புனிதர் பட்டம் : பிரதமர் நரேந்திர மோடி, சோனியாகாந்தி புகழாரம்
அன்னை தெரசாவுக்கு புனிதர் பட்டம் வழங்கப்பட்டதற்காக பிரதமர் நரேந்திர மோடி, மற்றும் காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி புகழாரம் சூட்டியுள்ளனர். அன்னை தெரசாவுக்கு நேற்று வாடிகன் நகரில் புனிதர் பட்டம் வழங்கப்பட்டது. போப் பிரான்சிஸ் முறைப்படி இதற்கான அறிவிப்பை வெளியிட்டார். இதையொட்டி ரோம் நகரம் விழாகோலம் பூண்டிருந்தது. இந்த விழாவில் 13 நாடுகளின் தலைவர்கள், உலக முழுவதில் இருந்து பேராயர்கள், பக்தர்கள் என 3 லட்சம் பேர் கலந்து கொண்டனர். இந்தியா சார்பில் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ், மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கலந்து கொண்டனர். விழாவில் பங்கேற்றது மகிழ்ச்சி அளிப்பதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
பிரதமர் மோடி
அன்னை தெரசாவுக்கு புனிதர் பட்டம் வழங்கப்பட்டதற்காக பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். சீனா சென்றுள்ள பிரதமர் மோடி ட்விட்டர் மூலம் தமது வாழ்த்தை பதிவு செய்துள்ளார். அன்னை தெரசா மறக்க முடியாதவர் என்று கூறியுள்ள மோடி அவருக்கு புனிதர் பட்டம் வழங்கப்படுவது இந்தியாவுக்கு பெருமை மிக்க தருணம் என்றும் தெரிவித்துள்ளார்.
சோனியாகாந்தி
அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற அன்னை தெரசாவுக்கு புனிதர் பட்டம் அளிக்கப்பட்டதை தொடர்ந்து கருணை, இரக்கம், மற்றும் அன்பின் மறு உருவம் என்று காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி புகழாரம் சூட்டியுள்ளார். இறக்கும் தருவாயில் உள்ளவர்களுக்கும், ஏழைகளுக்கும், தொழுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கும், ஆதரவற்றவர்களுக்கும் அன்னை தெரசா ஆற்றிய சேவைக்கு கிடைத்த அங்கீகாரமாகவே இந்த புனிதர் பட்டத்தை கருத வேண்டும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
🔉ஆசிரியர் தினத்தை முன்னிட்டு எதிர்க்கட்சித்தலைவர் மு.க.ஸ்டாலின் முகநூலில் வாழ்த்துசெய்தி அனுப்பியுள்ளார்u. மகத்தான கல்விப்பணியைச் செய்யும் ஆசிரியர்களுக்கு மனமார்ந்த வாழ்த்து. மேலும் சிறப்பான பணியை மேற்கொள்ளும் ஆசிரியர்களை பாராட்ட வேண்டியது நமது கடை எனவும் ஸ்டாலின் கூறியுள்ளார்.
🔉நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. பிரசித்தி பெற்ற விநாயகர் கோயில்களில் அதிகாலை முதலே சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டு வருகிறது.
ஆயிரக்கணக்கான பக்தர்கள் இந்த சிறப்பு வழிபாட்டில் பங்கேற்று விநாயகரை வழிபட்டனர். மும்பை சித்தி விநாயகர் கோயிலில் உள்ள பிரமாண்டமான விநாயகர் சிலை, லால்பாக் பகுதியில் உள்ள விநாயகர் கோயில் ஆகியவற்றில் சிறப்பு அலங்காரம் செய்து விநாயகருக்கு வழிபாடு நடத்தப்பட்டது. இதே போல் நாடு முழுவதும் விநாயகர் கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டு வருகின்றன.
🔊பெங்களூரு ஐபி நகரை சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவரது மனைவி புவனேஸ்வரி (50), டாக்டர். கோடம்பாக்கத்தில் நடந்த
திருமண நிகழ்ச்சிக்கு புவனேஸ்வரி நேற்று பெங்களூரு மெயில் ரயிலில் வந்தார். அதிகாலை 4.30 மணிக்கு ரயில் வியாசர்பாடி சிக்னல் அருகே வந்தபோது, ரயிலில் ஏறிய வாலிபர் ஒருவர், கதவு அருகில் நின்று கொண்டிருந்த புவனேஸ்வரியிடம் கத்தியை காட்டி மிரட்டி அவரது கழுத்தில் கிடந்த 6 சவரன் செயின் மற்றும் ₹7 ஆயிரம் மதிப்புள்ள செல்போனை பறித்துவிட்டு தப்பி விட்டார்.
🔊ஆப்கானிஸ்தானில் பேருந்து மற்றும் எரிபொருள் ஏற்றிச்சென்ற டேங்கர் லாரி மோதியதில் 36 பேர் உயிரிழந்தனர். ஜாபூல் மாகாணத்தில், காந்தகாரிலிருந்து காபூல் நோக்கி சென்று கொண்டிருந்த பேருந்து-டேங்கர் லாரி மீது மோதியது. இந்த சம்பவத்தில் 36 பேர் பலியானார்கள். 28 பேர் படுகாயமடைந்துள்ளனர். இந்த சம்பவத்தில் பேருந்தில் இருந்த பெண்களும், குழந்தைகளும் தீயில் கருதி உயிரிழந்தனர்.
🔉உ.பி.,யில் செப்.7-ல் பிரச்சாரத்தை தொடங்குகிறார் முலாயம் சிங்
உத்தரபிரதேசத்தில் அடுத்த ஆண்டு(2017) சட்டப்பேரவை நடைபெறவுள்ள நிலையில், வரும் செப்டம்பர் 7-ல் சமாஜ்வாடி கட்சி தலைவர் முலாயம் சிங் அழம்கார் பாராளுமன்ற தொகுதியில், தனது பிரச்சாரத்தை தொடங்குகிறார். உத்தரபிரதேச மாநிலத்தில் சமாஜ்வாடி கட்சி தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. அகிலேஷ் யாதவ் முதல்வராக உள்ளார். இங்கு சமாஜ்வாடி-பா.ஜ.க. இடையே கடும் போட்டி நிலவுகிறது.
ஏற்கனவே காங்கிரஸ் கட்சி தனது தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கி உள்ளது. சோனியாவும் பிரச்சாரத்தை தொடங்கி விட்டார். இதனிடையே ராகுல், மாகா யாத்ராவை அறிவித்துள்ளார். பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதியும் ஏற்கனவே பல்வேறு கட்ட பேரணிகளை தொடங்கி நடத்தி வருகின்றார்.இந்நிலையில், வருகின்ற செப்டம்பர் 7-ம் தேதி முலாயம் சிங் தலைமையிலான சமாஜ்வாடி கட்சியும் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்க உள்ளது.
www.sivakasiteacherkaruppasamy.com
🔉🔊🔊🔉🔉🔊🔊🔉🔉🔊🔊
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக