இன்றைய செய்தித்தாள் 22/09/2016 - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

இன்றைய செய்தித்தாள் 22/09/2016

      

🌍📡🌍📡🌍📡🌍📡🌍📡🌍
Karuppasamyp14@gmail.com
📡📡📡📡📡📡📡📡📡📡📡
http://www.sivakasiteacherkaruppasamy.bblogspot.com
🌍🌍🌍🌍🌍🌍🌍🌍🌍🌍🌍

🌍கர்நாடகாவுக்கு 27 ம் தேதி வரை லாரி இல்லை

நாமக்கல்: கர்நாடகாவுக்கு வருகிற 27-ம் தேதி வரை தமிழக லாரிகளை இயக்க வேண்டாம் என தமிழ்நாடு மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளன தலைவர் தெரிவித்து உள்ளார்.இதுகுறித்து 

🌍ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வெல்வதே தனது இலக்கு: மாரியப்பன்

பாராலிம்பிக்கில் தங்கம் வென்ற மாரியப்பனுக்கு டெல்லியில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

டெல்லி விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மாரிப்பன் கூறுகையில், '' வரும் 2020ம் ஆண்டு டோக்கியோவில் நடைபெற இருக்கும் ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வெல்வதே தனது இலக்காகவும், தமிழ்நாட்டில் விளையாட்டு அமைப்பை ஏற்படுத்தி இளைஞர்களுக்கு பயிற்சி தர வேண்டும்'' எனவும் கூறினார்.

🌍ராம்குமார் தந்தையை சந்திக்க கலைஞர் மறுத்தது ஏன்?

சென்னை, நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் சுவாதி என்ற இளம்பெண் படுகொலை செய்யப்பட்ட வழக்கில், நெல்லை மீனாட்சிபுரத்தைச் சேர்ந்த பரமசிவம் மகன் ராம்குமார் என்பவர் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அவர் தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் தெரிவித்திருந்தனர். தற்போது ராம்குமாரின் உடல் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. ராம்குமாரின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும், தங்களது சார்பில் மருத்துவர் ஒருவர் நியமிக்கப்பட வேண்டும், அதுவரை ராம்குமாரின் பிரேத பரிசோதனைக்கு அனுமதிக்கக் கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் பரமசிவம் வழக்கு தொடர்ந்துள்ளார்.

இரு நீதிபதிகளின் மாறுபட்ட கருத்தால் இன்று இந்த வழக்கு 3வது நீதிபதியாக கிருபாகரன் விசாரிக்கிறார்.

இதனிடையே இந்த ராம்குமார் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும், தமிழக அரசு உரிய விளக்கத்தை அளிக்க வேண்டும் என்றும் திமுக தலைவர் கலைஞர், திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ உள்ளிட்ட அரசியல் கட்சியினர் கூறியுள்ளனர்.

இந்த நிலையில் இன்று காலை சென்னை கோபாலபுரத்தில் உள்ள திமுக தலைவர் கலைஞரின் இல்லத்திற்கு பரமசிவன் தனது வழக்கறிஞருடன் சென்றுள்ளார். கலைஞரை சந்திக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளனர். சந்திக்க கலைஞர் மறுத்ததால், அவர்கள் திரும்பிவிட்டனர்.

வழக்கு நீதிமன்றத்தில் இருக்கும்போது இந்த சந்திப்பு நடந்தால் அரசியல் ரீதியாக திசை திருப்பும் முயற்சிகள் நடக்கும் என்பதற்காக இந்த சந்திப்பை கலைஞர் தவிர்த்திருப்பதாக கூறப்படுகிறது.

🌍உரி தாக்குதலில் உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கு கான்பூரில் பொதுமக்கள் அஞ்சலி

கான்பூர்: உரி தாக்குதலில் உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கு உத்திர பிரதேச மாநிலம் கான்பூரில் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர். 

🌍யூரி தாக்குதலுக்கு பதிலடி: பாக் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் 20 தீவிரவாதிகளை கொன்ற இந்திய ராணுவம்

ஸ்ரீநகர்: யூரி தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள மூன்று தீவிரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் நடத்திய தாக்குதலில் 20 தீவிரவாதிகள் பலியாகியுள்ளனர் என்று கூறப்படுகிறது.

ஜம்மு காஷ்மீர் மாநிலம் யூரி செக்டாரில் உள்ள ராணுவ நிர்வாகத் தலைமையகத்திற்குள் புகுந்து 4 தீவிரவாதிகள் கடந்த ஞாயிற்றுக்கிழமை தாக்குதல் நடத்தினர். இந்திய ராணுவத்தினர் அந்த 4 தீவிரவாதிகளையும் சுட்டுக் கொன்றுவிட்டனர். ஆனால் ராணுவ வீரர்கள் 18 பேர் பலியாகினர்.

இந்நிலையில் நேற்று இரவு 18 முதல் 20 இந்திய வீரர்கள் ராணுவ ஹெலிகாப்டர்களில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிக்கு சென்றனர்.

அங்கு செயல்பட்டு வரும் 3 தீவிரவாத முகாம்கள் மீது அவர்கள் தாக்குதல் நடத்தினர்.

யூரி தாக்குதலுக்கு பதிலடியாக நடந்த இந்த தாக்குதலில் 20 தீவிரவாதிகள் பலியாகியுள்ளனர், 180 காயம் அடைந்துள்ளனர் என்று கூறப்படுகிறது. 

🌍பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட 70 வயது மூதாட்டி சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

சேலம்: நாமக்கல் மாவட்டத்தில் ராசிபுரம் அருகே பாலியல் பலாத்காரத்திற்கு ஆளான 70 வயது மூதாட்டி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

🌍ஸ்ரீநகரில் ஊரடங்கு உத்தரவு நீடிப்பு

ஸ்ரீநகர்: ஜம்மு- காஷ்மீர் மாநிலம், ஸ்ரீநகரின் சில பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு நீடிக்கிறது.

🌍அசாமில் தேயிலை தொழில் பாதிப்பு

கவுகாத்தி : காஷ்மீரில் 75 நாட்களுக்கும் மேலாக தொடர்ந்து வரும் பதற்ற நிலை காரணமாக அசாமில் தேயிலை தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.காஷ்மீருக்கு அசாமில் இருந்து அதிக அளவிலான தேயிலைகள் கொண்டு செல்லப்படுகின்றன. தற்போது காஷ்மீர் பதற்ற நிலை காரணமாக அசாமில் மில்லியன் கிலோகிராம் தேயிலைகள் தேங்கிக் கிடக்கின்றன.

🌍சிபிஐ அதிகாரி எனக் கூறி ஓட்டுநரை ஏமாற்றி கார் கடத்தல்: இளைஞர் கைது

விழுப்புரம்: சிபிஐ அதிகாரி எனக் கூறி, ஓட்டுநரை ஏமாற்றி வாடகை காரை கடத்திச் சென்ற இளைஞரை போலீஸார் மடக்கிப் பிடித்து கைது செய்தனர்.

🌍கட்டிட திறப்பு விழா நல்ல நேரம் கடந்து விட்டதாக கூறி ஒத்திவைப்பு : பொதுமக்கள் ஏமாற்றம்

திண்டுக்கல்: திண்டுக்கல், முசிறி உள்ளிட்ட இடங்களில் அறிவித்தபடி கட்டிட திறப்பு விழா, நல்ல நேரம் கடந்து விட்டதாக கூறி ஒத்திவைக்கப்பட்டதால் காத்திருந்த பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்தனர். 

🌍இனி ரயில்வேக்கு தனி பட்ஜெட் இல்லை 92 ஆண்டுகால நடைமுறையில் மாற்றம்

பொது பட்ஜெட்டுடன் ரயில்வே பட்ஜெட்டை இணைக்க மத்திய அமைச்சரவை புதன்கிழமை ஒப்புதல் அளித்தது.

இதன் மூலம் சுமார் 92 ஆண்டுகளாக நடைமுறையில் இருந்த ரயில்வே பட்ஜெட் முடிவுக்கு வந்துள்ளது. இனி ரயில்வே பட்ஜெட் என்பது பொது பட்ஜெட்டின் ஓர் அங்கமாகவே இருக்கும்.

இதுபோல பல்வேறு பட்ஜெட் சீர்திருத்த நடவடிக்கைகளுக்கும் அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

தில்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. இதில் பட்ஜெட்டை ஒரு மாதம் முன்னதாக தாக்கல் செய்ய ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. எனவே, பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனவரி 25-ஆம் தேதிக்கு முன்னதாக தொடங்கப்படவுள்ளது.

🌍விபத்தில் மரணமடைந்த ஆட்டோ ஓட்டுநர் மகளின் கல்விச் செலவை ஏற்றார் விஷால்

சென்னை: கார் மோதி விபத்தில் மரணமடைந்த ஆட்டோ ஓட்டுநர் மகளின் கல்விச் செலவை ஏற்பதாக அறிவித்துள்ளார் நடிகர் விஷால்.

🌍இன்று காலை காஷ்மீரின் பந்திபோரா மாவட்டத்தில் பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே பயங்கர துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடந்தது. இதில் பயங்கரவாதி ஒருவன் கொல்லப்பட்டுள்ளான். தொடர்ந்து துப்பாக்கிச் சண்டை நடந்து வருகிறது.

🌍தமிழகத்துக்கு தண்ணீர் வழங்கினால் பெங்களூரு நகர மக்களுக்கு குடிநீர் இருக்காது-- கர்நாடக அமைச்சர் ராமலிங்க ரெட்டி

🌍காஷ்மீர் பிரச்னைக்கு தீர்வு காணும் வரையில் இந்தியா-பாகிஸ்தான் இடையே அமைதி நிலவாது-- நவாஸ

🌍உச்சநீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் காவிரியிலிருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க முடியாது என்று பெங்களூருவில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் கர்நாடக அரசு முடிவு செய்துள்ளது.

🌍பொதுமக்கள் முன்னிலையில் இளம்பெண்ணை 30 முறை கத்தரிக்கோலால் குத்தி, மிக கொடூரமாக கொலை செய்த இளைஞரை 4 நாள் போலீஸ் காவலில் வைக்கும்படி டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

🌍பனாமா பேப்பர்ஸ் மோசடி விவகாரம் போன்று , பஹாமாஸ் மோசடி விவகாரம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இதில் முதலீடு செய்துள்ளதாக 400-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் பெயர்கள் இடம் பெற்றுள்ளதாக திடுக் தகவல்கள் வெளியாகியுள்ளன.

🌍மகளிர் ஆணையத்தில் நிதி முறைகேடு விவகாரம் எப்ஐஆரில் கெஜ்ரிவால் பெயர் சேர்ப்பு

🌍ஆம் ஆத்மி அரசு நியமித்த டெல்லி மின்சார ஒழுங்குமுறை ஆணையத் தலைவர் அதிரடி நீக்கம்: ஒப்புதல் பெறாததால் கவர்னர் நடவடிக்கை

🌍இந்தியா - இஸ்ரேல் கூட்டுத் தயாரிப்பில் உருவான அதிநவீன ஏவுகணையின் (எல்ஆர்-சாம்) சோதனை, ஒடிஸாவில் இரண்டாவது நாளாக புதன்கிழமையும் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது

🌍இந்தியக் கடற்கரையை ஒட்டியுள்ள 26 தீவுகளை சுற்றுலாத் தலங்களாக மாற்றும் வகையில் விரைவில் மேம்படுத்துமாறு அதிகாரிகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி உத்தரவிட்டுள்ளார்

🌍ஜம்மு- காஷ்மீர் மாநிலம், உரியில் நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக பிரதமர் நரேந்திர மோடி என்ன செய்யப் போகிறார்? என்று சிவசேனை கேள்வி எழுப்பியுள்ளது

🌍நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையில் இருப்பதால் ராம்குமார் உடல் பிரேத பரிசோதனை செய்வதில் காலதாமதம் ஏற்பட்டு வருகிறது. இதனால், ராம்குமாரின் உடலுக்குப் பாதிப்பில்லை என சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி முதல்வர் டாக்டர் நாராயண பாபுதெரிவித்தார்

🌍கோவை அருகே கேரள நகை வியாபாரியின் ஊழியர்களிடம் ரூ. 3.93 கோடி வழிப்பறி செய்யப்பட்ட வழக்கில் கரூர் ஆய்வாளர், உதவி ஆய்வாளர் மற்றும் தலைமைக் காவலர் ஆகிய 3 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

🌍தமிழகத்தைச் சேர்ந்த மருத்துவ மாணவரான சரவணன் தில்லியில் மர்மமான முறையில் இறந்தது தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு மத்திய அரசு உத்தரவிட வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவரும், திமுக பொருளாளருமான மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்

கர்நாடகாவில் தொடரும் வன்முறை காரணமாக தமிழகத்தில் இருந்து கர்நாடகாவிற்கு வருகிற 27ந் தேதி வரை லாரிகளை இயக்க வேண்டாம் என்று மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் வலியுறுத்தியுள்ளது.

🌍ஆந்திரத்தின் புதிய தலைமைச் செயலகம் அமராவதி பகுதியில் உள்ள வெலகபுடியில் இருந்து வரும் அக்டோபர் மாதம் 3-ஆம் தேதி முதல் செயல்படத் தொடங்கும் என்று அந்த மாநில அரசு புதன்கிழமை அறிவித்துள்ளது

🌍மொழி உணர்வை தூண்டி கர்நாடகாவில் ஆட்சியை பிடிக்க காங்., நினைக்கிறது --பொன். ராதாகிருஷ்ணன்

🌍சர்வதேச ஜுனியர் துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்திய வீரர் ருஷிராஜ் தங்கம் வென்று அசத்தியுள்ளார்.

🌍கடலூரில் சாலை விபத்தில் பாதிக்கப்பட்டு மூளைச்சாவு அடைந்த போலீஸ்காரர் உடல் உறுப்புகள் தானமாக அளிக்கப்பட்டன.

🌍அடுத்தாண்டு நடைபெற உள்ள பஞ்சாப் சட்டசபை தேர்தலில் ஆவாஸ் இ பஞ்சாப் கட்சி போட்டியிடாது என அக்கட்சி தலைவரும் முன்னாள் கிரிக்கெட் வீரருமான நவ்ஜோத் சிங் சித்து அறிவித்துள்ளார்.

🌍ஏர்செல் - மேக்சிஸ் விவகாரத்தில் குற்றம்சாட்டப்பட்டுள்ள வெளிநாட்டினரை "வழக்கில் தேடப்படும் நபர்கள்' என அறிவித்து பிடியாணையைப் பிறப்பிக்கக் கோரி சிபிஐ தாக்கல் செய்த மனு மீது வரும் சனிக்கிழமை (செப்டம்பர் 24) உத்தரவிடப்படும் என்று தில்லி சிபிஐ நீதிமன்றம் தெரிவித்துள்ளது

🌍விழாக்களில் மீதமாகும் உணவுகளை ஆதரவற்றோருக்கு வழங்க உதவுவதற்கான பிரத்யேக செயலி மத்தியப் பிரதேசத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

🌍ஹிந்து அமைப்புகளின் பிரதிநிதிகளுக்கு தமிழகத்தில் எந்தப் பாதுகாப்பும் இல்லை-- மத்திய அரசிடம் இந்து மக்கள் கட்சி

🌍காவிரி கலவரத்துக்கும் ஆர்.எஸ்.எஸ்.
அமைப்புக்கும் எந்தவிதத் தொடர்பும் கிடையாது என அந்த அமைப்பின் தமிழக தலைவர் டாக்டர் எம்.எல்.ராஜா தெரிவித்துள்ளார்

🌍அடுத்த உத்தரவு வரும் வரை வழக்குரைஞர் நளினி சிதம்பரம் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என அமலாக்கத் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

🌍தமிழகத்தில் கலந்தாய்வு அட்டவணையில் புதிதாகச் சேர்க்கப்பட்டுள்ள 7 தனியார் மருத்துவக் கல்லூரிகள் மூலம் அரசு ஒதுக்கீட்டுக்கு கூடுதலாக 593 எம்.பி.பி.எஸ். இடங்கள் கிடைத்துள்ளன

🌍அமெரிக்காவில் இருந்து மீட்கப்பட்ட ரூ.11.50 கோடி மதிப்புள்ள கோயில் சிலைகள் நீதிமன்றம் மூலம் அந்தந்த கோயிலிடம் ஒப்படைக்கப்படுகின்றன.

🌍கோவை சரகத்தில் உள்ள, 25 இன்ஸ்பெக்டர்கள் நேற்று பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.

🌍நிதி அமைச்சர் அருண் ஜெட்லி இன்று உள்கட்டமைப்பு நிதி மற்றும் பொது-தனியார்-கூட்டு (PPPs) முயற்சித் திட்டங்களின் நோக்கத்தை ஐந்து நாடுகளை உள்ளடக்கிய பிரிக்ஸ் (பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென் ஆப்ரிக்கா) குழு மாநாட்டில் கருத்தரங்கை தொடங்கி வைக்கிறார்.

🌍மும்பையில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் நகரத்தின் பல இடங்களில் வெள்ளம் சூழ்ந்து காணப்படுகிறது. இதன் காரணமாக வீடுகளுக்குள் வெள்ள நீர் புகுந்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

🌍தமிழகத்துக்கு நீரை பெற்று தர உச்சநீதிமன்றத்தை நாடிய தமிழக அரசுக்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ பாராட்டுகளை தெரிவித்தார்.

🌍காவிரி பிரச்சனையில் ஒருதலை பட்சமாக செயல்படுகிறது மத்திய அரசு--வைகோ

🌍தமிழகத்திற்கு திறந்து விடப்பட்ட நீரை கர்நாடகா நிறுத்தியதால் மேட்டூர் அணையின் நீர்வரத்து 3,493 கனஅடியாக குறைந்தது.

🌍ரியோவில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான பாரா ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்ற மாரியப்பன் உட்பட வீரர் மற்றும் வீராங்கனைகள் அனைவரும் தயாகம் திரும்பினர். டெல்லி விமான நிலையத்தில் அவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

🌍வலது கை நரம்பில் ஊசி மூலம் செலுத்தப்பட்ட விஷ மருந்தால்தான் திருப்பூரைச் சேர்ந்த எய்ம்ஸ் மாணவர் சரவணன் உயிரிழந்தார் என்று அவரது பிரேதப் பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது

🌍தனக்கு எதிராக தமிழகத்தில் தொடுக்கப்பட்டுள்ள அவதூறு வழக்குகளை எதிர்த்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் தாக்கல் செய்த மனுவுக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா இரு வாரங்களுக்குள் பதிலளிக்க நோட்டீஸ் அனுப்ப வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது

🌍குடிபோதையில் போர்சே காரை ஓட்டி விபத்தை ஏற்படுத்தி ஆட்டோ டிரைவரின் உயிரைப் பறித்த கார் ரேஸ் வீரர் விகாஷ், ஜாமீன் கோரி சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன், இதுகுறித்து போலீஸ் தரப்பில் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை வரும் 23ம் தேதிக்குத் தள்ளி வைத்தார்.

🌍தமிழகத்துக்கு காவிரியில் தண்ணீர் திறந்து விடுவதை நிறுத்த வேண்டும். இதனால் ஏற்படும் விளைவுகளை அனைத்து கட்சிகளும் கூட்டாக எதிர்கொள்ளும் --முன்னாள் பிரதமர் தேவ கவுடா

🌍ஹைதராபாத்தில் பெய்து வரும் கனமழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. சாலையெங்கும் தண்ணீர் தேங்கி நிற்பதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

🌍ரயில்வே பட்ஜெட் இணைப்பால் எந்தவித நன்மையும் ஏற்படாது - நிதீஷ் குமார்

📡🌍📡🌍📡🌍📡🌍📡🌍📡

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here