இரவு செய்திகள் 24/09/2016 - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

இரவு செய்திகள் 24/09/2016

http://www.sivakasiteacherkaruppasamy.blogspot.com
1] *வடக்கு கிழக்கு பகுதிகளில் மேற்கொள்ளப்படுகின்ற பௌத்தமயமாக்கலை உடன் நிறுத்த வேண்டும். தமிழ் மக்களுக்கான இறைமை, சுயநிர்ணய உரிமை என்பவற்றின் அடிப்படையில் சமஸ்டி முறையிலான ஓர் அரசியல் தீர்வு வேண்டும், யுத்தக்குற்றங்களுக்கு சர்வதேச விசாரணையே வேண்டும் என்ற மூன்று கோரிக்கைகளை வலியுறுத்தி யாழ்ப்பாணத்தில் பேரணியொன்று இன்று சனிக்கிழமை நடத்தப்பட்டிருக்கின்றது*
+++++++++++++++
♈🇮🇳🌴2] *அலெப்போ நகரில் 20 லட்சம் பேர் தண்ணீர் இல்லாமல் அவதி* -*சிரியா நகரான அலெப்போவில் உள்ள சிவில் பாதுகாப்பு தொண்டர்கள், கிளர்ச்சியாளர்களின் பிடியில் உள்ள மாவட்டங்களில் மீண்டும் வான்வழி தாக்குதல்கள் தொடங்கிவிட்டதாக தெரிவித்துள்ளனர்.கிளர்ச்சியாளர்கள் பிடியில் உள்ள மாவட்டங்களில் அரசின் ஆதரவுடன் வான்வாழி தாக்குதல்கள் நடந்ததால், நீரேற்று நிலையம் சேதமடைந்தது. அதற்கு பதிலடியாக மேற்கு அலெப்போ நகரத்தில் நீர் இறைக்கும் நிலையம் செயல்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அதனால், அலெப்போ நகரம் முழுவதும் கிட்டத்தட்ட 20 லட்சம் மக்கள் தண்ணீர் இல்லாமல் அவதிப்படுகின்றனர் என்று ஐக்கிய நாடுகள் சபையின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.இந்த வன்முறையானது பழுது பார்க்கும் குழுக்களை அங்கு சென்றடைவதைத் தடுக்குகிறது என்று ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம் கூறியுள்ளது*

++++++++++++++++
♈🇮🇳🌴3] *இராக்கின் திக்ரீத் நகரில் வடக்கே உள்ள ஒரு போலிஸ் சோதனைச்சாவடி மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 12 பேர் கொல்லப்பட்டுள்ளதாக இராக் பாதுகாப்பு படையினர் தெரிவித்துள்ளனர்*
++++++++++++++++
♈🇮🇳🌴4] *தட்டு இல்லாததால் நோயாளிக்கு தரையில் சோறு போட்ட கொடுமை: அரசு மருத்துவமனையின் அவலம்* -ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த ராஞ்சி அரசு மருத்துவமனையில் நேயாளி ஒருவருக்கு தரையில் உணவு போட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

++++++++++++++++
♈🇮🇳🌴5] * நடிகர் சரத்குமாரை, நடிகர் சங்க உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கிய விவகாரம், விஷால்-வரலட்சுமி இடையே விரிசலை ஏற்படுத்தியிருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது*
++++++++++++++++
♈🇮🇳🌴6] * பாடகர் விஜய் யேசுதாஸ்-தர்‌ஷனா விவாகரத்து???* -பாடகரும், நடிகருமான விஜய் யேசுதாஸ் துபாயை சேர்ந்த தர்‌ஷனாவை 5 வருடங்கள் காதலித்து 2007-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு அம்னேயா, அவ்யன் என்ற இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள். சமீபத்தில் விஜய் யேசுதாஸ்-தர்‌ஷனா இருவரும் விவாகரத்து செய்யப்போகிறார்கள் என்றும், இருவரையும் சேர்த்து வைக்க சமாதான முயற்சிகள் நடந்து வருவதாகவும் தகவல்கள் வெளியானது.
இந்நிலையில் விஜய் யேசுதாஸ் மனைவி தர்‌ஷனா இந்த விவாகாரத்து செய்தியை மறுத்திருக்கிறார். இது பற்றி கூறியுள்ள அவர் “நானும், விஜய்யும் விவாகரத்து செய்யப்போவதாக வந்த செய்திகளில் எந்த உண்மையும் இல்லை. எங்களுக்குள் எந்த பிரிவும் இல்லை. நாங்கள் மகிழ்ச்சியாக இருக்கிறோம். வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம்” என்று தெரிவித்துள்ளார்.



++++++++++++++++
♈🇮🇳🌴7] * பி.எஸ்.எல்.வி. சி–35 ராக்கெட் ஏவுவதற்கான கவுண்டவுன் தொடங்கியது*  சென்னையை அடுத்துள்ள ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் உள்ள முதலாவது ஏவுதளத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி. சி–35 ராக்கெட் மூலம் இந்த செயற்கைகோளை 26–ந்தேதி காலை 9.12 மணிக்கு விண்ணில் செலுத்த இஸ்ரோ இறுதி கட்ட பணிகளை மேற்கொண்டு வருகிறது. இது 37–வது ராக்கெட் ஆகும். ஸ்கேட்சாட்–1 செயற்கைகோள் பூமியில் இருந்து 720 கிலோ மீட்டர் தூரத்தில் விண்வெளி சுற்று வட்டப்பாதையில் நிலைநிறுத்தப்படும். இதனுடைய ஆயுள்காலம் 5 ஆண்டுகள் ஆகும்.இதனுடன் பி1–சாட், பிரதாம், பாத்பைண்டர்–1, அல்சாட்–1பி, அல்சாட்–2பி, அல்சாட்–1என், கேன்எக்ஸ்–7 ஆகிய செயற்கைகோள்களும் செலுத்தப்படுகிறது. இந்திய பல்கலைக்கழகங்கள் மற்றும் அகடமிக் நிறுவனங்களை சேர்ந்த 2 செயற்கைகோள்களும், அல்ஜீரியா, கனடா, அமெரிக்க நாட்டை சேர்ந்த செயற்கைகோள்களும் இவற்றில் அடங்கும்.பிரதானமான செயற்கைகோளை (ஸ்கேட்சாட்–1) திட்டமிட்ட சுற்றுவட்டப்பாதையில் நிலைநிறுத்திய உடன், ராக்கெட்டின் என்ஜின் சிறிது நேரம் நிறுத்தப்பட்டு, மீண்டும் இயக்கி மற்றொரு சுற்றுப்பாதையில் செயற்கைகோளை நிலைநிறுத்தும் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. இந்த ராக்கெட்டுக்கான 48 மணி நேர கவுண்ட்டவுன் இன்று காலை 8.42 மணிக்கு துவங்கியது.


++++++++++++++++
♈🇮🇳🌴8] *காஷ்மீரில் ஸ்மார்ட் சிட்டியை மத்திய அரசு அறிவிக்க வேண்டும்: காஷ்மீரி பண்டிட்டுகள் வேண்டுகோள்*
++++++++++++++++
♈🇮🇳🌴9] *சத்தீஷ்கரில் 3 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொலை*
++++++++++++++++
♈🇮🇳🌴10] *வான்வழி தாக்குதலில் கட்டிட இடிபாடுகளில் இருந்து 5 வயது சிறுமி உயிருடன் மீட்பு உருக்கமான வீடியோ* -சிரியாவின்  மிகப்பெரிய 2-வது நகரமாக அலெப்போ வும், அதை சுற்றியுள்ள பகுதிகளும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கிளர்ச்சி யாளர்கள் வசம் உள்ளது. அதை மீட்க ராணுவம் பல முறை அங்கு தாக்குதல் நடத்தியது. இருந்தும் அந் நகரை மீட்க முடியவில்லை. இந்த நிலையில் சிரியாவுக்கு ஆதரவாக ரஷிய ராணுவம்  களம் இறங்கியுள்ளது. நேற்று அலெப்போ நகரில் சிரியா மற்றும் ரஷிய ராணுவ ஹெலிகாப்டர்கள் பேரல் குண்டுகளையும், ஏவுகணைகளையும் மழை போல் பொழிந்து தாக்கியது.
இந்த் தாக்குதலில் பல பகுதியில் கட்டிடங்கள் தரைமட்டமாகியுள்ளன. பாதிக்கப்பட்ட பகுதியில் மீட்பு பணி நடைபெற்று வரும் நிலையில், ராவான் என்ற ஐந்து வயது சிறுமி இடிபாடுகளில் சிக்கி இருந்ததை ஒருவர் கண்டுள்ளார்.பின்னர், மிக கடுமையாக போராடி சிறுமியை பலத்த காயங்களுடன் மீட்ட மீட்பு குழுவினர் அவரை சிகிச்சைக்காக மருத்தவமனைக் கொண்டு சென்றுள்ளனர்.அப்பகுதியில் நடந்த விமான தாக்குதலில் சிறுமியின் பெற்றோர், மூன்று சகோதரிகள், சகோதரன் ஆகியோர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. எனினும், மருத்துவமனையில் இருக்கும் சிறுமியின் நிலைமை குறித்து தெளிவான தகவல் ஏதும் இதுவரை வெளியாகவில்லை.
++++++++++++++++
♈🇮🇳🌴11] *தீவிரவாதிகள் ஊடுருவலை தடுக்க சீனா ஷென்ஷேன் விமான நிலையத்தில்  ரோந்து பணிக்கு ஆன்போட் என்ற ரோபோ பயன்படுத்தப்படுகிறது* -சீனாவில் முதல் முறையாக பாதுகப்பு பணிக்கு  ரோபோ பயன்படுத்தப்படுகிறது. ஷென்சேன் விமான நிலையத்தில் முனைஅய்ம் 3-ல்  24 மணி நேரமும்  ரோந்து சுற்றி வர ரோபோ ஒன்று பயன்படுத்தப்படுகிறது.இதன் முதன்மையான செயல்பாடு என்பது  மனித முகங்களை அடையாளம் காணுவதாக இருக்கும்.இந்த ரோபோவில் 4  உயர் தொழில்நுட்ப கேமிராக்கள் பொருத்தப்பட்டு உள்ளன.இது பயணம் செய்பவர்களின் முகங்களை புகைப்படம் எடுத்து  ஆய்வுக்காக  மற்ற மனித  பணியாளர்களுக்கு அனுப்புகிறது.இதனால் பயங்கரவாதிகள் தப்பிக்க வழியே இல்லை.
+++++++++++++++++++++++++++
♈🇮🇳🌴12] *ஏவுகணை மழை வாழ்வா-சாவா? கடும் நெருக்கடியில் 20 லட்சம் அலெப்போ மக்கள்*
+++++++++++++++++++++++++++
♈🇮🇳🌴13] *அமெரிக்க இரட்டை கோபுர தாக்குதலில் சவுதி அரேபியா மீது வழக்கு நிராகரித்த ஒபாமா*
+++++++++++++++++++++++++++
♈🇮🇳🌴14] *சென்னையில் மேலும் 107 ‘அம்மா’ உணவகம் திறப்பு இட்லி, பொங்கல் வழங்கப்பட்டது*
+++++++++++++++++++++++++++
♈🇮🇳🌴15] *கோவை, திருப்பூர் மாவட்டங்களில் அமைதி திரும்ப அதிமுக அரசு உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்*
++++++++++++++++++++++++
♈🇮🇳🌴16] *கேரள மாநிலம் கோழிக்கோடு பொதுக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பேசினார். வளைகுடா நாடுகளில் உழைப்பவர்களில் கேரள மாநில மக்களே அதிகம் என்று மோடி கூறினார்*
+++++++++++++++++++++++++
♈🇮🇳🌴17] *சென்னை: வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, திருத்தம் செய்ய நாளை சிறப்பு முகாம் நடைபெறுகிறது. வாக்குச்சாவடி மையங்களில் சிறப்பு முகாம் நாளை காலை 9.30 மணி முதல் 5.30 மணிவரை நடக்கிறது*
++++++++++++++++++++++++
♈🇮🇳🌴18] *ஆந்திராவில் வெள்ளம் பாதிக்கப்பட்ட குண்டூர், கிருஷ்ணா, பிரகாசம் மாவட்டங்களில் முதல்வர் சந்திரபாபு நாயுடு ஆய்வு செய்து வருகிறார். ஹெலிகாப்டர் மூலமாக வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளை முதல்வர் பார்வையிட்டு வருகிறார். ஆந்திராவில் தொடர் மழைக்கு இதுவரை 9 பேர் உயிரிழந்துள்ளதாக அம்மாநில அரசு தகவல் தெரிவித்துள்ளது. ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களில் இரு தினங்களுக்கு கனமழை பெய்யும் எனவும் வானிலை மையம் எச்சரித்துள்ளது*
++++++++++++++++
♈🇮🇳🌴19] *திருச்சியில் இருந்து சென்னைக்கு சிறப்புக் கட்டண சிறப்பு ரயில் நாளை இரவு 10.40க்கு புறப்படும். சென்னையில் இருந்து திருச்சி சிறப்பு கட்டண ரயில் 28ம் தேதி இரவு 10.45க்கு புறப்படும்*
++++++++++++++++
♈🇮🇳🌴20] *பாராலிம்பிக்கில் தங்கம் வென்ற மாரியப்பன் சேலம் வந்தடைந்தார்.  அவருக்கு சேலம் மக்கள் உற்சாக வரவேற்பு அளித்துள்ளனர். சேலம் மாவட்டம் எல்லையான தொப்பூரில் ஆட்சியர் சம்பத் மாறியப்பனை வரவேற்றார்*
++++++++++++++++
♈🇮🇳🌴21] *சென்னை மவுலிவாக்கம் கட்டட இடிப்பு பணி ஒத்திவைக்கப்பட்டது. இதுகுறித்து சி.எம்.டி.ஏ அதிகாரிகள் கூறுகையில் ஒப்பந்ததாரர்கள் கூடுதல் அவகாசம் கேட்டதால் கட்டட இடிப்புப்பணி ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். மேலும் புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வெடிவைத்து 11 மாடி கட்டடத்தை தகர்க்கத் திட்டமிட்டுள்ளதாகவும் சி.எம்.டி.ஏ தகவல் தெரிவித்துள்ளது*
++++++++++++++++
♈🇮🇳🌴22] * உள்ளாட்சி தேர்தலில் வேட்பாளர்களின் தேர்தல் செலவு உச்சவரம்பு திருத்தம் செய்யப்பட்டது. வேட்பாளர்களின் தேர்தல் செலவு வரம்பை திருத்தி மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. ஊராட்சி வார்டு உறுப்பினர் தேர்தலின் ரூ.1.70 லட்சம் வரை செலவு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது*
++++++++++++++++
♈🇮🇳🌴23] *பான் பசிபிக் ஓபன் டென்னிஸ் சானியா மிர்ஸா- ஸ்ட்ரைகோவா ஜோடி சம்பியன் பட்டம் வென்றது. இறுதிப்போட்டியில் சீனாவின் சென்லியாங்-யாங் இணையை தோற்கடித்தது. சானியா மிர்ஸா- ஸ்ட்ரைகோவா ஜோடி 6-1, 6-1 என்ற செட்டில் வெற்றி பெற்றது*
++++++++++++++++
♈🇮🇳🌴24] * திருவனந்தபுரத்தில் சுயநிதி மருத்துவக் கல்லூரி ஒப்பந்தம் தொடர்பாக இளைஞர் காங்கிரசார் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.  தலைமைச்செயலகம் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியினரை போலீசார் தண்ணீர் பீய்ச்சி விரட்டையடித்தனர்*
++++++++++++++++++++++++++++
♈🇮🇳🌴25] *திருவண்ணாமலையில் சிலிண்டர் வெடித்து தந்தை, மகன் படுகாயம் அடைந்துள்ளனர். கோசாலை கிராமத்தில் பெரிய சிலிண்டரில் இருந்து சிறிய சிலிண்டருக்கு காஸ் மாற்றும் போது வெடித்தது. பலத்த காயம் அடைந்த உமாபதி அவரது மகன் பாலாஜி இருவரும் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்*
+++++++++++++++++++++++
♈🇮🇳🌴26] * நாகை நெல்லுக்கடை மாரியம்மன் கோவில் அருகே கொத்தன்குளத்தெருவில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீவிபத்தில் 15 வீடுகள் எரிந்து சாம்பலாகின. 2 தீயணைப்பு வாகனங்களில் வந்த தீயணைப்புத் துறையினர் தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்*
+++++++++++++++++++++++
♈🇮🇳🌴27] * பாக்.,கின் மக்களே அந்நாட்டை எதிர்த்து போரிடும் நாள் வரும்: மோடி  காஷ்மீரை நம்மிடமிருந்து பறிக்க வேண்டும் என்பதே பாக்., கின் குறிகோள் -ஆசியாவில் ஒரு நாடு வளர்ச்சிக்கு எதிராக செல்கிறது: மோடி -
கேரள மக்கள் போற்றத்தக்கவர்கள்: பிரதமர் மோடி*
+++++++++++++++++++++++
♈🇮🇳🌴28] *மதுரை மேலூர் சுங்கச்சாவடி முற்றுகை *
++++++++++++++++++++++++++

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here