📡📡📡📡📡📡📡📡📡📡📡
http://www.sivakasiteacherkaruppasamy.blogspot.ccom
💥📡📡💥📡💥📡💥📡💥📡
💥💥💥💥💥💥💥💥💥💥💥
💥இன்று டிஸ்சார்ஜ் ஆகிறார் ஜெ.
கடந்த வியாழக்கிழமை இரவு சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஜெயலலிதா, இன்று டிஸ்சார்ஜ் ஆகிறார்.
அதற்கான ஏற்பாடுகள் நேற்று மாலை முதல் ஆரம்பித்துவிட்டது. போயஸ் கார்டனில் ஜெ. ஓய்வு எடுக்க சிறப்பு மருத்துவ ஏற்பாடுகளை அப்பல்லோ மருத்துவமனை மருத்துவர்கள் செய்ய ஆரம்பித்துவிட்டார்கள். அதனால் இன்று எந்த நேரமும் அவர் மருத்துவமனையில் இருந்து போயஸ் கார்டனுக்கு திரும்புவார் என கார்டன் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
📡வீடுகளை சூறையாடிய யானை கூட்டம் மக்கள் அலறியடித்து ஓட்டம்
கோவை : கோவையை அடுத்த போளூவாம்பட்டி வனச்சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் காட்டு யானை நடமாட்டம் அதிகரித்துள்ளது. இவை, தனியாகவும், கூட்டமாகவும் அப்பகுதியில் உள்ள வீடு மற்றும் வாழை, சோளம், தக்காளி தோட்டங்களுக்குள் புகுந்து விடுகின்றன. நேற்று முன்தினம் மாலை, வனத்தில் இருந்து வெளியேறிய ஒன்பது யானைகள் கொண்ட கூட்டம், முள்ளங்காடு வழியாக சிறுவாணி சாலையை கடந்து, முட்டத்து வயல் பகுதிக்குள் நுழைந்தது. அங்கிருந்த தண்ணீர் தொட்டியை உடைத்து தள்ளியது. பின்னர், குளத்தேரி பகுதியை நோக்கி சென்ற யானை கூட்டம், அங்கிருந்த இரண்டு வீடுகளை இடித்து தள்ளியது. அப்போது, வீட்டில் தூங்கிக்கொண்டு இருந்தவர்கள் அலறியடித்து ஒட்டம் பிடித்தனர்.
அதிர்ஷ்டவசமாக அவர்கள், காயமின்றி தப்பினர். அக்கம் பக்கத்தினர் சத்தம் எழுப்பி, யானை கூட்டத்தை விரட்டியடிக்க முயற்சி செய்தனர். வனத்துறையினரும் அங்கு விரைந்தனர். சுமார் நான்கு மணி நேரம் போராடி, இந்த யானை கூட்டத்தை தாணிகண்டி என்ற வனப்பகுதிக்குள் விரட்டியடித்தனர்.
📡உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் விசிக வேட்பாளர் பட்டியல் 30-ல் வெளியீடு: திருமாளவன் பேட்டி
சென்னை: உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் விசிக வேட்பாளர் பட்டியல் 30-ம் தேதி வெளியிடப்படுவதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாளவன் தெரிவித்துள்ளார்
📡1 முதல் 8ம் வகுப்பு வரை மாணவர்கள் புத்தகங்களை சுமக்க தேவையில்லை
ஆம்பூர் : சிபிஎஸ்இ இயக்குனரகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: அதிக சுமையுடன் கூடிய புத்தகப்பையை மாணவர்கள் சுமப்பதால் அவர்களுக்கு உடல் நலன் பாதிக்கப்படுவதுடன் பக்க விளைவுகள் ஏற்படும். குறிப்பாக மாணவர் பருவத்தில் முதுகெலும்பு வளர்ச்சியடையும் பருவம். எனவே அப்பருவத்தில் அதிக பாரமான புத்தகப்பையை சுமப்பதால் முதுகுதண்டு வலி, சதை வலி, தோள்பட்டை வலி, தலைவலி ஆகியவை ஏற்படக்கூடும். எனவே பள்ளிகளில் கால அட்டவணைப்படி புத்தகங்கள் எடுத்து வரவும், தேவையற்ற பொருட்களை மாணவர்கள் எடுத்து வருவதை தவிர்க்கவும் ஆலோசனை வழங்க வேண்டும். மாணவர்கள் குடிக்க தகுந்த சுத்தமான குடிநீரை வழங்குவதுடன் அதையே ஆசிரியர்களும், பள்ளி முதல்வரும் குடிக்க வேண்டும்.
சிபிஎஸ்இ பள்ளிகள் 1 முதல் 8 வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு குறைந்த எடையுடைய புத்தகங்களை வழங்குவதோடு மட்டுமல்லாமல் அதிக புத்தகங்களை வழங்கக்கூடாது. குறிப்பாக 1 மற்றும் 2ம் வகுப்பு மாணவர்களுக்கு வீட்டுப்பாடம் தரக்கூடாது. மேலும் அவர்கள் பள்ளிக்கு புத்தகப்பையை சுமந்து வர வேண்டியதில்லை. இதேபோல் ஆசிரியர்கள் பாடப்புத்தகங்களை எடுத்து வர மாணவர்களை கட்டாயப்படுத்தக்கூடாது. வொர்க்புக்கில் உள்ள தனி தாள்களை மாணவ, மாணவியருக்கு தருவதாலும் புத்தகச்சுமை குறையும். பெற்றோர் தங்கள் பிள்ளைகளின் புத்தகப்பையை தினந்தோறும் சரி பார்த்து புத்தகங்களை மாற்றி தர வேண்டும். தோள்களில் தொங்கும் பையோ, இறுக்கமான முதுகு பையோ கூடாது. இதுகுறித்து அனைத்து பள்ளிகளும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
💥பீகாரில் ஆம்புலன்ஸ் மறுக்கப்பட்டதால் இறந்த உடலை பிளாஸ்டிக் பையில் எடுத்து சென்ற உறவினர்கள்
கதிகார்: பீகார் மாநிலம் கதிகார் என்ற இடத்தில் உள்ள மருத்துவமனையில் இறந்த உடலை எடுத்து செல்ல ஆம்புலன்ஸ் மறுக்கப்பட்டதால் பாகல்பூர் என்ற ஊருக்கு அவரது உறவினர்கள் 3 பேர் பிளாஸ்டிக் பையில் உடலை எடுத்து சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
📡தமிழகத்தில் அரசு பள்ளிகள் காணாமல் போகும் அவலம்
சென்னை : தமிழகத்தில் கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் 12 மாவட்டங்களில் உள்ள 38 க்கும் மேற்பட்ட அரசு பள்ளிகள் மூடப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது.தமிழகத்தில் அரசு பள்ளிகளின் நிலை குறித்து தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் கேட்கப்பட்டது. இதற்கு என்ஜிஓ.,க்கள் நடத்திய ஆய்வின் அடிப்படையில் பதிலளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் சென்னை, வேலூர், சேலம், திருச்சி, திண்டுக்கல் உள்ளிட்ட 15 மாவட்டங்களில் உள்ள 155 பள்ளிகள் மூடப்படும் அபாய நிலையத்தில் உள்ளது ஆய்வில் தெரிய வந்துள்ளது. மாணவர்களின் எண்ணிக்கை, ஆசியர்களின் எண்ணிக்கை, உள்கட்டமைப்பு, விளையாட்டு மைதானம், கழிப்பறை வசதி, பாதுகாப்பான குடிநீர் வசதி உள்ளிட்டவைகளின் அடிப்படையில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.இதில், மூடப்படும் நிலையில் இருக்கும் 155 பள்ளிகளில், 111 பள்ளிகளில் 25 க்கும் குறைவான மாணவர்களே உள்ளனர்.
36 பள்ளிகளில் 10க்கும் குறைவான மாணவர்களே உள்ளனர். 37 சதவீதம் பள்ளிகளில் மேற்கூரை இல்லாமலும், 77 சதவீதம் பள்ளிகளில் ஆய்வகங்கள், கம்ப்யூட்டர் அல்லது நூலக வசதி இல்லாமலும், 50 சதவீதம் பள்ளிகள் விளையாட்டு மைதானம், சுற்றுச்சுவர் இல்லாமலும், 38 சதவீதம் பள்ளிகளில் பாதுகாப்பான குடிநீர் வசதி மற்றும் கழிப்பறை இல்லாமலும், 75 சதவீதம் பள்ளிகளில் போதிய வகுப்பறைகள் இல்லாமலும் உள்ளன. 22 ஆரம்பப் பள்ளிகளில் ஒரே ஒரு ஆசிரியரும், 103 பள்ளிகளில் 2 ஆசிரியர்களும் மட்டுமே உள்ளது ஆய்வில் தெரிய வந்துள்ளது.அனைத்து மாவட்ட பள்ளிகளிலும் கல்வித்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு, மூடப்படும் நிலையில் உள்ள அரசு பள்ளிகளை தரம் உயர்த்தவோ அல்லது மற்ற பள்ளிகளுடன் ஒன்றிணைக்கவோ அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என என்ஜிஓ.,க்கள் அரசுக்கு பரிந்துரை செய்துள்ளனர்.
💥பதான்கோட்டில் ஆயுதங்களுடன் புகுந்த நான்கு மர்ம நபர்கள்? தீவிர தேடுதல் வேட்டை!
பஞ்சாப் மாநிலம் பதான்கோட்டில் ஆயுதங்களுடன் நான்கு மர்ம நபர்கள் புகுந்ததாக வந்த தகவலை அடுத்து பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
📡கார் மோதி ஆட்டோ ஓட்டுநர் இறந்த வழக்கில் ஜாமீன் கோரி சரண்குமார் மீண்டும் மனுத்தாக்கல்
சென்னை: சென்னையில் கார் மோதி ஆட்டோ ஓட்டுநர் இறந்த வழக்கில் ஜாமீன் கோரி சரண்குமார் மீண்டும் மனுத்தாக்கல் செய்துள்ளார். முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்ததால் உயர்நீதிமன்றத்தில் சரண்குமார் ஜாமீன் மனுத்தாக்கல் செய்துள்ளார். கடந்த 19-ம் தேதி ஆட்டோக்கள் மீது சொகுசு கார் மோதியதில் ஓட்டுநர் ஆறுமுகம் உயிரிழந்தார்.
💥பிம்ஸ் கல்லூரியில் 18 இடங்களை பெற வலியுறுத்தி சாலை மறியல்: போக்குவரத்து கடும் பாதிப்பு
புதுச்சேரி: புதுச்சேரியில் நடைபெற்ற சென்டாக் உயிரியியல் பாடப்பிரிவுகளுக்கான இறுதிக்கட்ட கலந்தாய்வில் குழப்பம் ஏற்பட்டது. பிம்ஸ் மருத்துவக் கல்லூரியில் 18 இடங்கள் ஒதுக்கப்படாததால் பெற்றோர் கொதிப்படைந்து கிழக்கு கடற்கரைச் சாலையில் மறியில் ஈடுபட்டனர்.
📡டெல்லியில் கார் கொள்ளையடிக்கும் முயற்சி: திருடனை சுட்டு பிடித்த போலீசார்
டெல்லி: டெல்லி கன்ஜஹவாலா பகுதியில் கார் கொள்ளையடிக்கும் முயற்சியில் ஒரு திருடனை போலீசார் சுட்டு பிடித்தனர். மற்றவர்கள் காரரை திருடி சென்றனர். தப்பி ஓடிய அவர்களை பிடிக்கும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
💥திருவள்ளூர் பொன்னேரி அருகே 252 இலவச மிக்சி பறிமுதல்: வாக்காளர்களுக்கு கொடுக்க கடத்தப்பட்டதா என விசாரணை
பொன்னேரி: உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் தொடங்க்கி உள்ள நிலையில் திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே பதுக்கி வைக்கப்பட்டிருந்த தமிழக அரசின் 252 இலவச மிக்சிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
📡ஆஸ்பத்திரியில் இருந்தாலும்.. மறக்காமல் அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவித்த ஜெ.!
சென்னை: வரவிருக்கும் தீபாவளி பண்டிகையை அரசு ஊழியர்கள் மகிழ்ச்சியோடு கொண்டாடும் வகையில் தமிழக முதல்வர் ஜெயலலிதா போனஸ் மற்றும் கருணைத் தொகையை அறிவித்துள்ளார்.
2015 - 16ம் ஆண்டிற்கான தீபாவளி போனஸை தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். அதன்படி, லாபம் ஈட்டும் பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரிவோர் 20 சதவீத போனஸும் 11.67 சதவீதம் கருணைத் தொகையும் பெறுவார்கள். நஷ்டத்தில் இயங்கும் அரசு நிறுவனங்களில் பணி புரிவோருக்கு 8.33 சதவீதம் குறைந்தபட்ச போனஸ் மற்றும் 1.67 விழுக்காடு கருணைத்தொகை என மொத்தம் 10 விழுக்காடு போனஸ் மற்றும் கருணைத் தொகை வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு மின்சார வாரியம், அரசுப் போக்குவரத்துக் கழகங்கள், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம், ஆகிய பொதுத் துறை நிறுவனங்களில் பணிபுரியும் தகுதியுடைய தொழிலாளர்களுக்கு 8.33 விழுக்காடு போனஸ் மற்றும் 11.67 விழுக்காடு கருணைத்தொகை என மொத்தம் 20 விழுக்காடு போனஸ் மற்றும் கருணைத் தொகை வழங்கப்படும்.
இலாபம் ஈட்டியுள்ள கூட்டுறவு சங்கங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு போனஸ் மற்றும் கருணைத் தொகை மொத்தம் 20 விழுக்காடு வரையிலும் ஒதுக்கக்கூடிய உபரி தொகைக்கு ஏற்ப வழங்கப்படும். பிற கூட்டுறவு சங்கங்களில் பணியாற்றும் அனைத்து தகுதியுடைய பணியாளர்களுக்கும் 8.33 விழுக்காடு குறைந்தபட்ச போனஸ் மற்றும் 1.67 விழுக்காடு கருணைத் தொகை வழங்கப்படும்.
தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் மற்றும் சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரியத்தில் பணிபுரியும் 'சி' மற்றும் 'டி' பிரிவு பணியாளர்களுக்கு 8.33 விழுக்காடு போனஸ் மற்றும் 1.67 விழுக்காடு கருணைத் தொகை என மொத்தம் 10 விழுக்காடு போனஸ் மற்றும் கருணைத் தொகை வழங்கப்படும்.
தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தில் பணிபுரியும் 'சி' மற்றும் 'டி' பிரிவு பணியாளர்களுக்கு 8.33 விழுக்காடு போனஸ் வழங்கப்படும். அரசு ரப்பர் கழகம், தமிழ்நாடு வனத்தோட்ட கழகம், தமிழ்நாடு தேயிலைத் தோட்டக் கழகம், கூட்டுறவு மற்றும் பொதுத்துறை சர்க்கரை ஆலைகள், தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் இணையம் ஆகிய நிறுவனங்களில் பணிபுரியும் தகுதியுடைய தொழிலாளர்களுக்கு, அந்த நிறுவனங்களின் லாப நட்டத்திற்கு ஏற்ப ஒதுக்கக்கூடிய உபரித் தொகையை கருத்தில் கொண்டு 8.33 விழுக்காடு போனஸ் மற்றும் 11.67 விழுக்காடு கருணைத்தொகைக்கு மிகாமலோ அல்லது 8.33 விழுக்காடு போனஸ் மற்றும் 1.67 விழுக்காடு கருணைத்தொகையோ வழங்கப்படும்.
தமிழ்நாடு பாடநுhல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தில் பணிபுரியும் 'சி' மற்றும் 'டி' பிரிவு பணியாளர்களுக்கு 8.33 விழுக்காடு போனஸ் மற்றும் 11.67 விழுக்காடு கருணைத் தொகை என மொத்தம் 20 விழுக்காடு போனஸ் மற்றும் கருணைத் தொகை வழங்கப்படும்.
ஒதுக்கக்கூடிய உபரி தொகையுடன் லாபம் ஈட்டியுள்ள தமிழ்நாடு கூட்டுறவு வீட்டுவசதி சங்கத்தில் பணிபுரியும் 'சி' மற்றும் 'டி' பிரிவு பணியாளர்களுக்கு 8.33 விழுக்காடு போனஸ் மற்றும் 11.67 விழுக்காடு கருணைத் தொகை என மொத்தம் 20 விழுக்காடு போனஸ் மற்றும் கருணைத் தொகைக்கு மிகாமல் வழங்கப்படும். ஒதுக்கக்கூடிய உபரி தொகையுடன் லாபம் ஈட்டாத தமிழ்நாடு கூட்டுறவு வீட்டுவசதி சங்கத்தில் பணிபுரியும் 'சி' மற்றும் 'டி' பிரிவு பணியாளர்களுக்கு 8.33 விழுக்காடு போனஸ் மற்றும் 1.67 விழுக்காடு கருணைத் தொகை என 10 விழுக்காடு போனஸ் வழங்கப்படும்.
தமிழ்நாடு மின்சார வாரியத்தில் பணிபுரியும் ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு 4,000 ரூபாயும், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் தற்காலிக அடிப்படையில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு 3,000 ரூபாயும், போனஸ் சட்டத்தின் கீழ் வராத தலைமை கூட்டுறவு சங்கங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள் மற்றும் மாவட்ட கூட்டுறவு சங்கங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு 3,000 ரூபாயும், தொடக்க கூட்டுறவு சங்கங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு 2,400 ரூபாயும் கருணைத் தொகையாக வழங்கப்படும்.
இதனால் போனஸ் பெற தகுதியுள்ள நிரந்தர தொழிலாளர்கள் குறைந்த பட்சம் 8400 ரூபாய் அதிகபட்சம் 16800 ரூபாய் பெறுவர். தமிழ்நாடு அரசின் பொதுத் துறை நிறுவனங்களில் பணிபுரியும் 3 லட்சத்து 67ஆயிரத்து 887 தொழிலாளர்களுக்கு 476 கோடியே 71 லட்சம் ரூபாய் போனஸாக வழங்கப்படும். அரசின் இந்த நடவடிக்கை காரணமாக பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றும் தொழிலாளர்கள் தீபாவளிப் பண்டிகையை சீரோடும், சிறப்போடும் கொண்டாட வழி வகை ஏற்படும் என்று ஜெயலலிதா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.
இதன் மூலம் 3 லட்சத்து 67 ஆயிரத்து 877 தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்கள் பயன்பெறுவார்கள். இவர்களுக்கு மொத்தம் 476 கோடியே 71 லட்சம் ரூபாய் போனஸாக வழங்கப்பட உள்ளது. இந்தத் தொகை இம்மாதம் சம்பளத்தோடு சேர்த்தே பணியாளர்களுக்கு வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்மூலம் நிரந்தர தொழிலாளர்கள் குறைந்த பட்சம் 8,400 ரூபாயும், அதிகபட்சம் 16, 800 ரூபாயும் போனசாக பெறுவார்கள்.
📡பி.சி.சி.ஐ.,க்கு உச்சநீதிமன்றம் கண்டனம்
புதுடில்லி: இந்தியா, நியூசிலாந்து அணிகள் மோதவுள்ள டில்லி ஒரு நாள் போட்டியின் தேதி மாற்றப்பட்டது.
இம்மாதம் இந்தியா வரும் நியூசிலாந்து அணி 3 டெஸ்ட், 5 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் வரும் 22ல் கான்பூரில் துவங்குகிறது.
இதனிடையே, இரண்டாவது ஒரு நாள் போட்டி அக்டோபர் 19ல் டில்லி, பெரோஷா கோட்லா மைதானத்தில் நடப்பதாக இருந்தது. அன்றையதினம் 'கார்வா சாத்' என்ற பண்டிகை கொண்டாடப்படுகிறது.
இதனால், இப்போட்டியை வேறு தேதிக்கு மாற்றுமாறு டில்லி கிரிக்கெட் சங்கம் விடுத்த வேண்டுகோளை ஏற்ற, இந்திய கிரிக்கெட் போர்டு, அக்., 20க்கு மாற்றியது.
நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்திய வீரர்கள் தேர்வு வரும் 12ல் நடக்கும் எனத்தெரிகிறது.
💥திருத்தணி அருகே டெங்கு காய்ச்சலுக்கு ஒருவர் பலி
திருத்தனி: திருத்தணி அருகே பூனிமங்காட்டில் டெங்கு காய்ச்சலுக்கு சூரியா என்பவர் உயிரிழந்துள்ளார். அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சூரியா சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
📡கோவை இந்து முன்னணி பிரமுகர் கொலை வழக்கு: சிபிசிஐடிக்கு மாற்றம்!
கோவையில் கொலை செய்யப்பட்ட இந்து முன்னணி பிரமுகர் சசிகுமாரின் வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி தமிழக டிஜிபி டி.கே.ராஜேந்திரன் உத்தரவிட்டுள்ளார்.
💥செல்போன் டவரில் ஏறி அதிமுகவினர் 3 பேர் தற்கொலை மிரட்டல்: உள்ளாட்சி தேர்தலில் சீட் கிடைக்காததால் போராட்டம்
ஆலந்தூர்: உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட ஆதரவாளருக்கு சீட் கிடைக்காததால் அதிமுகவினர் 3 பேர் செல்போன் டவரில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்தனர். இச்சம்பவம் நந்தம்பாக்கத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
📡தங்கம் விலை : சவரனுக்கு ரூ.184 குறைவு
சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.184 குறைந்துள்ளது. ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.2,950-க்கும், ஒரு சவரன் ரூ.23,600-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் வெள்ளி விலை ரூ.48.80-க்கும், ஒரு கிலோ கட்டி வெள்ளி ரூ.45,600-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
💥கடல் வழியாக தீவிரவாதிகள் ஊடுருவலை தடுக்கும் பொருட்டு நடைபெற்று வரும் ஆப்ரேஷன் சாகர் கவாச் ஒத்திகையின் போது காரைக்காலில் கடல் வழி ரோந்தின் போது 6பேர் பிடிபட்டனர்.
📡ராமேஸ்வரம் நகராட்சிக்குட்பட்ட 18வது வார்டில் இந்து மக்கள் கட்சி சார்பில் போட்டியிடும் முணியம்மாள் ராமேஸ்வரம் கோயில் ரத வீதிகளில் பக்தர்களின் வாகனங்களை அனுமதிக்க வலியுறுத்தி ட்ரை சைக்கிளில் வந்து வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
சாகர் கவாச் ஆப்பரேசன் ஒத்திகையில் மாறுவேடத்தில் வந்த தீவிரவாதிகள் 4பேரை மண்டபம் மெரைன் போலிசார் நடுகடலில் கைது செய்தனர்.
💥நாகர்கோயில் - தமிழகம் முழுவதும் ஹிந்து இயக்க நிர்வாகிகளை திட்டம் தீட்டி படுகொலை செய்யும் பயங்கரவாதிகளை அடையாளம் கண்டு அவர்கள் மீது தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி நாகர்கோயிலில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தடையை மீறி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்திய 100 க்கும் மேற்ப்பட்ட பா.ஜ.க வினர் கைது .
📡திருமங்கலம் அருகே உச்சப் பட்டி இலங்கை அகதிகள் முகாமில் இளம் பெண் நிரோஷா (22) வீட்டினுள் தூக்கிட்டு தற்கொலை .ஆஸ்டின் பட்டி போலீசார் விசாரணை .
💥சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் முதல்வர் ஜெயலலிதாவை சந்திக்க மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் வருகை....
📡பொள்ளாச்சி அருகே செல்லப்பம்பாளையம் பிரிவில் நின்று கொண்டிருந்த லாரி மீது கார் மோதிய விபத்தில் 5பேர் பலி-3பேர் படுககாயத்துடன் அரசு மருத்துவமனையில் அனுமதி....
📡திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் தென்மண்டல பசுமை தீர்ப்பாயம் ஆய்வு
திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் தென்மண்டல பசுமை தீர்ப்பாயம் ஆய்வு செய்து வருகின்றனர். ஓய்வு பெற்ற நீதிபதி சம்பத், ஓய்வு பெற்ற வனப்பாதுகாப்பு அதிகாரி சேகர் ஆகியோர் ஆய்வு நடத்தி வருகின்றனர். கிரிவலப்பாதை விரிவாக்க திட்டத்துக்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடரப்பட்டது. ஆய்வுக்குப்பின், மக்கள் கருத்தை கேட்டு அறிக்கை தாக்கல் செய்யப்பட உள்ளது.
💥திறமை இருந்து வாய்ப்பு இல்லாமல் தவிக்கும் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுங்கள் - தங்கமன் மாரியப்பன்
விளையாட்டு துறையில் திறமை இருந்தும் வாய்ப்பு கிடைக்காமல் இருப்பவர்களை கண்டுபிடித்து அவர்களுக்கு உரிய வாய்ப்பினை அளிக்க அரசு முன்வர வேண்டும் என்று பாராலிம்பிக்கில் தங்கம் வென்ற மாரியப்பன் வலியுறுத்தியுள்ளார்
பாராலிம்பிக் போட்டியில் உயரம் தாண்டுதலில் தங்கம் வென்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்த சேலம் மாவட்டத்தை சேர்ந்த மாரிப்பனுக்கு, அவர் பயின்று வரும் சேலம் ஏ.வி.எஸ் கலை மற்றும் அறிவியில் கல்லூரி சார்பில் நேற்று பாராட்டு விழா நடைபெற்றது.
இதனையொட்டி கல்லூரிக்கு வந்த மாரியப்பனுக்கு கல்லூரி நிர்வாகம் மற்றும் மாணவ மாணவியர்கள் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. என்.சி.சி மாணவர்களின் அணிவகுப்போடு அழைத்து வரப்பட்ட தங்கமகனுக்கு அங்கு திரண்டிருந்த ஆயிரக்கணக்கான மாணவ மாணவியர்கள் உற்சாக குரல் எழுப்பியும், தேசிய கொடியோடும் வரவேற்பு அளித்தனர்.
📡சென்னை: தமிழக முதல்வர் ஜெயலலிதா சிகிச்சை பெற்றுவரும் அப்போலோ மருத்துவமனை எதிரே அமர்ந்து கொண்டு செல்போனில் செல்ஃபி எடுத்துள்ளனர், அதிமுக நிர்வாகிகளான சி.ஆர்.சரஸ்வதியும், பாத்திமாபாபுவும்.
நடிகைகளான சி.ஆர்.சரஸ்வதி, அ.தி.மு.கவின் செய்தித்தொடர்பாளராகவும், பாத்திமாபாபு, தலைமை பேச்சாளராகவும் உள்ளனர். இவர்கள் அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து நலம் விசாரிக்க சென்றனர்.
இதன்பிறகு மருத்துவமனை வெளியே வந்து அமர்ந்து கொண்டு, செல்ஃபி எடுத்துள்ளனர். பாத்திமா பாபு செல்போனில் செல்ஃபி எடுக்கப்பட்டதை போல தெரிகிறது. சரஸ்வதி அதற்கு போஸ் கொடுத்துள்ளார். இந்த போட்டோ வார இதழ் ஒன்றின் போட்டோ கிராபரால் கிளிக் செய்யப்பட்டுவிட்டது.
அதிமுக தொண்டர்கள் எல்லோரும், ஜெயலலிதா குணமாக வேண்டி, கோயில், கோயிலாக வலம்வந்து வேண்டிவரும் நிலையில், இவ்விரு முக்கிய நிர்வாகிகள் ஜாலியாக செல்பி எடுத்துள்ளது தொண்டர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
ஜெயலலிதா இதை கண்டுகொள்ளாமல் விடுவாரா, அல்லது, சீரியஸ்னஸ் இல்லாமல் செல்ஃபி எடுத்ததற்காக பதவியை பறிப்பாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
💥சத்தீஷ்கர் மாநிலம் நாராயணன்பூரில் மாவோயிஸ்டுகள் நடத்திய தாக்குதலில் ஒரு ராணுவ வீரர் உயிரிழப்பு மூவர் படுகாயம்.
📡தமிழ்நாட்டிற்கு தண்ணீர் தரலாம் என கர்நாட அரசு தலைமை வழக்கறிஞர் மதுசூதணன் நாயக் கருத்து தெரிவித்துள்ளார். பெங்களூரில் நடைபெற்று வரும் அனைத்து கட்சி கூட்டத்தில் தமது கருத்தை நாயக் தெரிவித்தார். மழை காரணமாக கே.ஆர்.எஸ். அணைக்கு வினாடிக்கு 24,000 கனஅடி தண்ணீர் வருவதால் தமிழகத்திற்கு தண்ணீர் தரலாம் என்று நாயக் தெரிவித்தார். உச்சநீதிமன்ற கண்டனத்தை தவிர்க்க தண்ணீர் திறப்பதே சிறந்தது என அவர் தெரிவித்துள்ளார்.
💥செப்.29 வியாழக்கிழமை மக்கள் தலைவர் வைகோ அவர்கள் கரூர் வருகை!
காவிரி ஆற்றில் தொடர்ந்து நடைபெற்று வரும் மணல் கொள்ளையை தடுக்கவும், காவிரி ஆற்றை சுடுகாடாக்கும் மணல் குவாரி அனுமதிகளை ரத்து செய்யவும் காவிரி பாதுகாப்பு இயக்கம் சார்பில் கரூர் மாவட்டம் புகழூர் வேலாயுதம்பாளையத்தில் செப்டம்பர் 29 வியாழன் அன்று காலை 9 மணி அளவில் மாபெரும் உண்ணாநிலை போராட்டம் நடைபெற உள்ளது.
இந்த உண்ணாநிலை அறப்போராட்டத்தில் தலைவர் வைகோ அவர்கள் பங்கெடுத்து உண்ணாவிரதத்தை முடித்து வைத்து நிறைவுப் பேருரை நிகழ்த்த இருக்கிறார்கள்
📡சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் ஒப்பந்ததாரர்களுக்கு பாக்கி வைத்துள்ள 60 கோடி ரூபாயை உடனடியாக வழங்க வலியுறுத்தி, கோயம்பேட்டில் அதன் அலுவலகம் முன் 300க்கும் மேற்பட்டோர் முற்றுகை.
💥சென்னை எழும்பூரில் பாரதீய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் தமிழிசை , தேசிய செயலாளர் ஹெச்.ராஜாவை போலீசார் கைது.
📡நான்கு வயது சிறுமி பலாத்காரம்!
25 வயது இளைஞர் கைது
கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அருகேயுள்ள கிராமத்தைச் சேர்ந்த 4 வயது சிறுமியை அதே பகுதியைச் சேர்ந்த சந்திரன் (வயது-25) என்பவர் மிட்டாய் வாங்கித் தருவதாகக் கூறி மறைவான இடத்துக்கு அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து சிறுமி தனது பெற்றோரிடம் தெரிவித்தார். இதையடுத்து சிறுமியை தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்ந்தனர். தேன்கனிக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
இந்தப் புகாரின்பேரில் காவல் நிலைய ஆய்வாளர் சம்பூரணம் வழக்குப் பதிவு செய்து சந்திரனை கைது செய்து தேன்கனிக்கோட்டை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்தார்
💥தமிழக - கேரள எல்லையில் பலத்த பாதுகாப்பு
நீலகிரி மாவட்டம், கூடலூரை அடுத்துள்ள கேரள வனத்தில் வனத் துறையுடன், அப்பகுதியிலிருந்த மாவோயிஸ்டுகள் திங்கள்கிழமை இரவு துப்பாக்கிச் சண்டையில் ஈடுபட்டனர்.
நீலகிரி மாவட்டம், கூடலூர் வனக் கோட்டத்தை அடுத்துள்ள கேரள மாநிலம், மலப்புரம் மாவட்டம், நிலம்பூர் வனத்தில் உள்ள அகம்பாறா ஆதிவாசி காலனிக்கு பத்துக்கும் மேற்பட்ட மவோயிஸ்டுகள் துப்பாக்கியுடன் வந்துள்ளதாக கேரள போலீஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
இதையடுத்து, அப்பகுதிக்குச் சென்ற கேரள போலீஸாருடன் மாவோயிஸ்டுகள் துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்டுள்ளனர். இதையடுத்து, மாவோயிஸ்டுகள் வனப் பகுதிக்குள் தப்பி ஓடிவிட்டனர். இதனால், தமிழக - கேரள எல்லையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது
📡திமுக எம்.பி. சிவா குடும்ப சண்டை வீதிக்கு வந்தது. எம்.பி., சிவா மருமகன் முத்துக்குமார் காரை பெட்ரோல் ஊற்றி எரிக்க முயன்றதாக மகன் சூரியா மீது தில்லைநகர் போலீசில் புகார். 4 பேரை போலீசார் பிடித்து விசாரணை.
📡வீட்டை காலி செய்யச் சொன்ன முதியவர் கொலை!
கோவை பி.என்.புதூர் பொன்னுசாமி நகரில் வசித்து வந்தவர் இராமமூர்த்தி (வயது-62). கூட்டுறவு வங்கியில் மேலாளராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவருக்கு மும்மநாயக்கர் வீதியில் சொந்தமான ஒரு வீடு உள்ளது. இந்த வீட்டில் பழனியம்மாள் (வயது-36) என்பவர் தனது இரு மகள்களுடன் வசித்து வந்தார்.
இதனிடையே, பழனியம்மாள், அவரது மகள்களுக்கு இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்தது. இதனால், வீட்டைக் காலி செய்யுமாறு பழனியம்மாளிடம் இராமமூர்த்தி கூறியுள்ளார்.
ஆனால், பழனியம்மாள் வீட்டை காலி செய்ய மறுக்கவே இதுகுறித்து ஆர்.எஸ்.புரம் காவல் நிலையத்தில் இராமமூர்த்தி புகார் அளித்திருந்தார். இந்நிலையில், பழனியம்மாளின் வீட்டுக்கு இராமமூர்த்தி தனது மனைவி சாந்தகுமாரி, மகள் மோகனாவுடன் திங்கள்கிழமை இரவு சென்றுள்ளார்.
அப்போது, இராமமூர்த்தியின் குடும்பத்தினர் பழனியம்மாளை வீட்டைக் காலி செய்யச் சொல்லி மீண்டும் கூறியுள்ளனர். அப்போது, ஏற்பட்ட தகராறில் இராமமூர்த்தியை பழனியம்மாள் கீழே தள்ளிவிட்டுள்ளார்.
இதில், நிலைதடுமாறி அருகில் இருந்த சாக்கடையில் விழுந்ததில் தலையில் பலமாக காயமடைந்த இராமமூர்த்தி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.
மேலும், இந்தச்சம்பவத்தில் காயமடைந்த இராமமூர்த்தியின் மகள் மோகனா அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து ஆர்.எஸ்.புரம் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து பழனியம்மாளை கைது செய்தனர்
💥ஜெயா டிவி மூலம் முதல்வர் ஜெயலலிதா உரையாற்ற உள்ளதாக தகவல்
உடல்நிலை குறித்து வதந்தி பரவுவதால் தொலைக்காட்சி வாயிலாக ஜெ., பேச திட்டம்
📡காவிரியில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க கர்நாடகா மீண்டும் மறுப்பு தெரிவித்துள்ளது. தமிழகத்திற்கு தண்ணீர் திறப்பது பற்றி நாளை டெல்லியில் நடைபெற உள்ள இரு மாநில அதிகாரிகள் பேச்சுவார்த்தைக்கு பின் முடிவு செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது
📡💥📡💥📡💥📡💥📡💥📡
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக