காலை செய்தித்தாள் 29/09/2016 - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

காலை செய்தித்தாள் 29/09/2016

http://www.sivakasiteacherkaruppasamy.blogspot.com
++++++++++++++++++++++++
♈🇮🇳🌴1] *அமெரிக்காவில் அதிபர் ஒபாமா, நாடாளுமன்றம் நிறைவேற்றிய சட்டமொன்றை தனது வெட்டு அதிகாரத்தை பயன்படுத்தி நிராகரித்ததை மீறி, 9/11 தாக்குதலில் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் செளதி அரசாங்கம் மீது வழக்கு தொடுக்க அனுமதிக்கும் நாடாளுமன்றத்தின் முடிவை ஆபத்தான முன் உதாரணம் என்று அதிபர் ஒபாமா தெரிவித்துள்ளார்*
+++++++++++++++
♈🇮🇳🌴2] *மும்பை–புனே நெடுஞ்சாலையில் லாரி மீது கார் மோதிய கோர விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர். மேலும் 3 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்*
++++++++++++++++
♈🇮🇳🌴3] *மத்திய மந்திரிசபை ஒப்புதல் ரெயில்வே ஊழியர்களுக்கு 78 நாள் போனஸ் தசரா பண்டிகைக்கு முன்னர் வழங்கப்படும்*
++++++++++

♈🇮🇳🌴4] *பருவநிலை மாற்றம் தொடர்பான பாரீஸ் உடன்படிக்கையை அமல்படுத்த மத்திய மந்திரிசபை ஒப்புதல்*
++++++++++++++++
♈🇮🇳🌴5] *‘எச்.ஐ.வி. பாதித்த மனைவியின் பராமரிப்பு செலவை ஏற்க வேண்டியது கணவரின் கடமை’ தானே கோர்ட்டு உத்தரவு*
++++++++++++++++
♈🇮🇳🌴6] *‘வாட்ஸ்–அப்’பில் பிரதமர் மோடி பற்றி அவதூறு வாலிபர் கைது* - *உத்தரபிரதேச மாநிலம் சோனிபத்ரா மாவட்டம் விந்தம் கஞ்ச் பகுதியை சேர்ந்தவர் சொகைல் அன்சாரி. இந்த வாலிபர், ‘வாட்ஸ்–அப்’பில் பிரதமர் நரேந்திரமோடி பற்றி ஆட்சேபிக்கத்தக்க, அவதூறான புகைப்படங்களையும், பாகிஸ்தானுக்கு ஆதரவான புகைப்படங்களையும் வெளியிட்டதாக கூறப்படுகிறது*

++++++++++++++++
♈🇮🇳🌴7] *அமெரிக்காவில் மீண்டும் துப்பாக்கிச்சூடு: பள்ளி குழைந்தகள் உட்பட 3 பேர் காயம்* - *தெற்கு கலிபோர்னியாவில் உள்ள டவுன்வில்லே என்ற பகுதியில் அமைந்துள்ள தொடக்கப்பள்ளியில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. அங்கு, துப்பாக்கியுடன் நுழைந்த பதின்ம வயது இளைஞர், திடீரென சராமரியாக துப்பாக்கியால் சுட்டுள்ளார். இதில், பள்ளி ஆசிரியர், 2 மாணவர்கள் காயம் அடைந்ததனர்.உடனடியாக, சம்பவ இடத்தைச் சுற்றி வளைத்த போலீசார், தாக்குதல் நடத்திய பதின்ம வயது நபரை கைது செய்தனர்*

++++++++++++++++
♈🇮🇳🌴8] *பாகிஸ்தானில் நடைபெறுவதாக இருந்த சார்க் மாநாடு ஒத்திவைப்பு பூடான், ஆப்கானிஸ்தான், வங்காளதேசமும் புறக்கணிப்பு*

++++++++++++++++
♈🇮🇳🌴9] *எங்கள் மீது போரை திணித்தால், இந்தியாவை அணுகுண்டு போட்டு அழிப்போம் என பாகிஸ்தான் ராணுவ மந்திரி கவாஜா ஆசிப் ஆவேசத்துடன் கூறினார்*
++++++++++++++++
♈🇮🇳🌴10] *நீலம்–செனாப் நதிகளில் இந்தியா கட்டுமானம் அமைப்பதற்கு எதிர்ப்பு சிந்து நதி நீர் ஒப்பந்தத்தில் உலக வங்கி தலையிட பாகிஸ்தான் கோரிக்கை*
++++++++++++++++
♈🇮🇳🌴11] *அமெரிக்காவுக்கும், கியூபாவுக்கும் இடையே 50 ஆண்டுகளுக்கு மேலாக பகைமை நிலவி வந்தது. தூதரக உறவும் இல்லாமல் இருந்து வந்தது.  அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவும், கியூபா அதிபர் ராவுல் காஸ்டிரோவும் 2014–ம் ஆண்டு சந்தித்து பேசி இணக்கமாகி உள்ளனர். மீண்டும் தூதரக உறவு மலர்ந்துள்ளது.இந்த நிலையில் கியூபாவுக்கான அமெரிக்க தூதராக ஜெப்ரே டிலாரண்டிஸ் என்பவரை ஒபாமா நியமித்து அதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளார்*
+++++++++++++++++++++++++++
♈🇮🇳🌴12] *ரஹீல் ஷெரீப் ஓய்வு பெறுகிறார்: பாகிஸ்தானின் புதிய ராணுவ தளபதி யார்?*
+++++++++++++++++++++++++++
♈🇮🇳🌴13] *ஆப்கானிஸ்தானில் அமெரிக்க தாக்குதலில் 18 பேர் சாவு பொதுமக்களும் பலியான பரிதாபம்*
+++++++++++++++++++++++++++
♈🇮🇳🌴14] *வடசென்னை அனல்மின் நிலையத்தில் மின் உற்பத்தி பாதிப்பு*
+++++++++++++++++++++++++++
♈🇮🇳🌴15] *சென்னை: பல்வேறு பகுதிகளில் கனமழை* *சென்னையில் 90 நிமிடங்களில் 65 மி.மீ., மழை*
++++++++++++++++++++++++
♈🇮🇳🌴16]* புதுக்கோட்டை: திருமயத்தில் பஸ்-லாரி மோதல்; 2 பேர் பலி; பலர் காயம்*
+++++++++++++++++++++++++
♈🇮🇳🌴17] *உள்ளாட்சி தேர்தல்: தி.மு.க., 2-வது பட்டியல் வெளியீடு*
++++++++++++++++++++++++
♈🇮🇳🌴18] *உள்ளாட்சி தேர்தல்: பா.ஜ., வேட்பாளர்களின் முதல் பட்டியல் வெளியீடு*
+++++++++++++++++++
♈🇮🇳🌴19] *11,12-ம் தேதிகளில் நெல்லை -சென்னைக்கு சுவிதா ரயில்கள் இயக்கம்*
++++++++++++
♈🇮🇳🌴20] *கட்சி பேனர்கள், சுவரொட்டிகளை அகற்ற தேர்தல் ஆணையம் உத்தரவு*
++++++++++++
♈🇮🇳🌴21] *சினிமா பாணியில் மகளை காப்பாற்ற போராடிய பாசக்கார தந்தை* *ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மாவட்டத்தை சேர்ந்த பங்கி சதிபாபு (30) என்பவர் உடல்நிலை சரியில்லாத தனது 6 மாத மகளை காப்பாற்றுவதற்காக, கழுத்தளவு வெள்ளத்தில், தலைக்கு மேல் மகளை தூக்கிக் கொண்டு சென்ற புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.கழுத்தளவு நீரில் 5 கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று தனது குழந்தையை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பங்கி சதிபாபு சேர்த்திருக்கிறார். தனது உயிரையும் பொருட்படுத்தாது சதிபாபு மகளை தூக்கிக் கொண்டு சென்றதை சமூக வலைதளங்களில் பலரும் பாராட்டி வருகின்றனர்*

+++++++++++++++
♈🇮🇳🌴22] *மலேசியன் விமானத்தை சுட்டு வீழ்த்தியது ரஷ்ய ஏவுகணை: நெதர்லாந்து விசாரணைக்குழு கண்டுபிடிப்பு* - *மலேசியன் ஏர்லைன்ஸ் விமானமான எம்.எச்.,17, கிழக்கு உக்ரைன் பகுதியில் சுட்டு வீழ்த்தப்பட்டது. இப்பகுதி ரஷ்ய ஆதரவுக் கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் இருந்தது குறிப்பிடத்தக்கது. இதில் அவ்விமானத்திலிருந்த 283 பயணிகள் 15 விமான ஊழியர்கள் என மொத்தம் 298 பேர் பலியாகினர்*
++++++++++++++
♈🇮🇳🌴22] *சசிகுமார் மனைவி தற்கொலை முயற்சி* - *கடந்த வாரம் கோவையில் இந்து முன்னணி பிரமுகர் சசிகுமார் வெட்டி கொல்லப்பட்டார். இந்த நிலையில் அவருடைய மனைவி விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். விஷம் குடித்த சசிகுமாரின் மனைவி யமுனா கோவை துடியலூர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக தகவல்*
++++++++++++++
♈🇮🇳🌴23] *இந்தியா எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் துப்பாக்கி சூடு*

++++++++++++++
♈🇮🇳🌴24] *திருச்சி இனாம்குளத்தூர் பகுதியில் 5 வீடுகளில் 41 சவரன் நகை கொள்ளையடிப்பட்டுள்ளது.மேலும் 20 ஆயிரம் ரூபாய் பணமும் கொள்ளை போயி உள்ளது. அல் அமின் நகரில் நடந்த கொள்ளை குறித்து இனாம்குளத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை  மேற்கொண்டு வருகின்றனர்*
+++++++++++++++++++++++++++
♈🇮🇳🌴25] *மேற்கு வங்கம் மாநிலம் மால்டா மாவட்டத்தில் உள்ள மஹானந்த நதியில் 15 பேருடன் சென்ற படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதனையடுத்து அனைவரும் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர்*
++++++++++++
♈🇮🇳🌴26] *உச்சநீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து காவிரி விவகாரம் தொடர்பாக இரு மாநில அதிகாரிகளையும் அழைத்து டெல்லியில் இன்று பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. இந்த பேச்சுவார்த்தையில் மத்திய நீர்வளத்துறை அமைச்சர் உமாபாரதி, கர்நாடக முதலமைச்சர், சித்தராமைய்யா, மற்றும் தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொள்ள உள்ளனர்*
+++++++++
♈🇮🇳🌴27] *உத்தரபிரதேசம் மாநிலம் ஜலோன் மாவட்டத்தில் ஒரு மனிதன் குடித்துவிட்டு உயர் மின்னழுத்த கம்பி மீது ஏறி நின்று கொண்டிருந்தார். இதனையடுத்து உயர் மின்னழுத்த கம்பி மீது மற்ற இரண்டு மனிதர்கள் ஏறி அவரை கீழே கொண்டு வந்தனர். அவரை கீழே இறக்கிவிடும் வரை அப்பகுதி கூச்சல்களும், பரபரப்பும் நிறைந்து காணப்பட்டது*
++++++++++++++++++
♈🇮🇳🌴28] *திருப்பதி அருகே முங்கிலப்பட்டில் செம்மரம் கடத்தி வந்த 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சேலத்தை சேர்ந்த 2 பேரை கைது செய்து ரூ.37 லட்சம் மதிப்பிலான செம்மரங்கள் பறிமுதல் செய்யப்பட்டது*
+++++++++++
♈🇮🇳🌴29] *டெல்லி, நரேலாவில் உள்ள ஒரு தொழிற்சாலையில் நேற்று மாலை தீ விபத்து ஏற்பட்டது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு 30 தீயணைப்பு வண்டிகளுடன் வந்த வீரர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த தீ இன்னும் கட்டுக்குள் கொண்டு வரவில்லை என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன*
+++++++++++
♈🇮🇳🌴30]நாகை துறைமுகத்தில் அலை சீற்றத்தால் நாட்டுப்படகு கவிழ்ந்ததில் மீனவர் சசிக்குமார் கடலில் மூழ்கினார். மீன்பிடித்து விட்டு திரும்பும்போது முகத்துவாரத்தில் நிகழ்ந்த விபத்தில் 4 மீனவர்கள் கரை திரும்பினர். கடலில் மூழ்கி காணாமல் போன கீச்சாங்குப்பம் மீனவர் சசிக்குமாரை தீவிரமாக தேடி வருகின்றனர்
++++++++++++
🇮🇳🌴31] *பெங்களூரு:  ஜே.பி. நகரை சேர்ந்த வரலட்சுமி(48) நேற்று முன்தினம் மாலை 4.30 மணி அளவில் நடைபயிற்சி முடித்துக்கொண்டு வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியே பைக்கில் வந்த மர்ம ஆசாமிகள் இருவர் வரலட்சுமி அணிந்திருந்த ₹ 30 ஆயிரம் மதிப்பிலான தங்க சங்கிலியை பறித்துக்கொண்டு தப்பிவிட்டனர். இதேபோல், வித்யாரண்யபுராவை சேர்ந்த மோக்‌ஷதாயினி(62) நேறறு முன்தினம் மாலை 5.30 மணிக்கு அஙகுள்ள துர்கா பரமேஷ்வரி கோவில் அருகே சென்றுகொண்டிருந்தபோது அவ்வழியே பைக்கில் வந்த மர்ம ஆசாமிகள் 60 கிராம்  தங்க சங்கிலியை பறித்துக்கொண்டு தலைமறைவாயினர்
+++++++++++++++++++++++

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here