சிறுநீர் சிக்கலை நீக்கும் அற்புத மூலிகை கோபுரந்தாங்கி! - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

சிறுநீர் சிக்கலை நீக்கும் அற்புத மூலிகை கோபுரந்தாங்கி!

சிறுநீரில் சிக்கலா?

வெயில் காலத்தில் போதுமான அளவு நீர் அருந்த வேண்டும். கடும் உழைப்புள்ளவர்களும், அலைச்சல் உள்ளவர்களும் அன்றாட
அளவைவிட கூடுதலாக அருந்த வேண்டும். பொதுவாக 60 கிலோ எடை உள்ள ஒருவர் 3 முதல் 4 லிட்டர் நீரை அருந்தவேண்டுமென
மருத்துவர்கள் குறிப்பிடுகின்றனர். நீர்ச்சத்து நிறைந்த தர்பூசணி, திராட்சை, பப்பாளி, இளநீர், எலுமிச்சை ஆகியவற்றை அடிக்கடி உட்கொள்ள வேண்டும். உடலின் வெப்பத்தை அதிகரிக்கும் காரத்தன்மையுள்ள உணவுகளை தவிர்க்க வேண்டும். எண்ணெய் பலகாரங்கள், மசாலா உணவுகள், சுத்தமில்லாத திரவ, திட உணவுகள், செயற்கை நிறங்கள் மற்றும் மணத்தால் செய்யப்பட்ட துரித உணவுகள் மற்றும் ஆயத்த உணவுகளை தவிர்க்க வேண்டும். இல்லாவிட்டால் சிறுநீர்ப்பாதையில் சிக்கல் உண்டாகிவிடும்.

சிறுநீர்ப்பாதையில் அல்லது சிறுநீர் கழிப்பதில் சிரமம் ஏற்படுவதில் உடல் ரீதியான காரணங்களைவிட திரவ பரிமாற்றத்தில் ஏற்படும் கோளாறு காரணமாகவே பெரும்பாலான தொல்லைகள் உண்டாகின்றன. இதனால் சிறுநீர் எரிச்சல், சிறுநீர் கழிக்கும்போதும், கழித்த பின்பும் உறுப்பில், அடிவயிறு, முதுகில் வலி, சிறுக சிறுக அடிக்கடி சிறுநீர் செல்லுதல் மற்றும் உடல் எப்பொழுதும் காய்ச்சலாக இருப்பதுபோன்ற உணர்வு, குமட்டல், வாந்தி ஆகியன உண்டாகும். சிறுநீரகத்தின் நீர் பெருக்கு திறனை அதிகரித்து, சிறுநீரை அளவுக்கதிகமாக பிரித்து, நுண்கிருமிகள்
மற்றும் உப்புகள் தேங்காவண்ணம் காத்து, சிறுநீர் சிக்கலை நீக்கும் அற்புத மூலிகை கோபுரந்தாங்கி.

அன்ட்ரோகிராபிஸ் எகியாயிடஸ் என்ற தாவரவியல் பெயர் கொண்ட அகன்தேசியே குடும்பத்தைச் சார்ந்த இந்த சிறு செடிகள் வெப்ப பகுதிகளிலே அதிகம் வளருகின்றன. எக்கியோடினின் என்ற பிளேவன் மற்றும் எக்கியாயிடின் போன்ற வேதிச்சத்து நிறைந்துள்ள இந்த தாவரம் சிறுநீரை பெருக்கி, சிறுநீர் சிக்கலை நீக்கும் ஆற்றலுடையது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது.

கோபுரந்தாங்கி, சிறுபீளை, நெருஞ்சில், வெள்ளரி விதை ஆகியவற்றை நிழலில் உலர்த்தி, ஒன்றிரண்டாக இடித்துவைத்து ஒரு கைப்பிடியளவு 1லிட்டர் நீரில் போட்டு கொதிக்கவைத்து, 500 மிலியாக சுண்டிய பின்பு வடிகட்டி காலை மற்றும் மாலை உணவுக்கு முன்பு குடித்துவர சிறுநீர் நன்கு வெளியேறும். எரிச்சல் குறையும்.

உலோக மற்றும் உப்பு கற்களை கரைக்கும் ஆற்றலுடையதால் சித்த மருத்துவத்தில் பற்பங்கள் மற்றும் செந்தூரங்கள் தயாரிக்க
உலோகசுத்திக்கு பயன்படுகிறது. அடிக்கடி சிறுநீரகத்தில் ஏற்படும் கற்களால் பாதிக்கப்படுபவர்கள் கோபுரந்தாங்கி கசாயத்தை 10 முதல் 15 நாட்கள் குடித்து வரலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here