இரவு செய்திகள் 02/10/2016 - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

இரவு செய்திகள் 02/10/2016


++++++++++++++++++++++++
A] *புறா மூலம் மோடிக்கு வந்த எச்சரிக்கை கடிதம்*
இந்தியா - பாகிஸ்தான் எல்லையருகே கடும் பதற்றம் நிலவி வருகிறது. இந்தியா பாகிஸ்தான் இடையே போர் நடைபெறுவதற்குக்கூட வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று இந்திய எல்லையில் இரண்டு பலூன்கள் பறந்து வந்தது. அதில் ‘பாகிஸ்தான் பழி வாங்கும்’ என்ற வாசகம் உருது மொழியில் எழுதப்பட்டிருந்தது.இந்நிலையில் பமியால் செக்டரின் சிம்பல் போஸ்டில் பாதுகாப்புப்படையினர் ஒரு புறா பறந்து வரக் கண்டனர். அந்த புறாவைப் பிடித்து பார்க்கையில் அதன் காலில் ஒரு கடிதம் இருந்ததை கண்டுபிடித்தனர். அந்த கடிதம் பிரதமருக்கு எழுதப்பட்டிருந்தது. அதில் ‘‘மோடி ஜி, 1971-ம் ஆண்டு இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரின்போது இருந்த அதே மக்கள் நாங்கள் என்று கருத வேண்டாம். தற்போது ஒவ்வொருவரும் மற்றும் ஒவ்வொரு குழந்தையும் இந்தியாவை எதிர்த்து சண்டையிட தயாராக இருக்கிறோம்’’ என்று எழுதப்பட்டுள்ளது*


B] *தமிழக வாகனங்களின் கண்ணாடியை உடைத்தனர் கர்நாடக போலீசார்* news.

C]  *முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது. முதல்வர்  ஜெயலலிதா மேலும் சில நாள் சிகிச்சை பெற மருத்துவமனை நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. லண்டனில் இருந்து வரவழைக்கப்பட்ட மருத்துவர் ரிச்சர்ட், மேலும்  சில நாட்கள் சிகிச்சை பெற அறிவுறுத்தியுள்ளதாக மருத்துவமனை செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது*


*2017-ம் ஆண்டு குடியரசு தின விழா சிறப்பு விருந்தினராக அபுதாபி இளவரசர் பங்கேற்கிறார்* *

*கும்பகோணம்: அ.தி.மு.க., பிரமுகர் வெட்டி கொலை*
♈🇮🇳🌴1] *பிரிட்டன், ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேறுவதற்கான முறையான நடவடிக்கைகள் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் தொடங்கும் என்று பிரிட்டன் பிரதமர் தெரிவித்திருக்கிறார்*

+++++++++++++++
♈🇮🇳🌴2] *உலக வன உயிரின மாநாட்டில் கலந்து கொண்ட பிரதிநிதிகள், ஆஃப்ரிக்க சாம்பல் கிளிகளின் சர்வதேச வர்த்தகத்தை தடை செய்வதற்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர்*
++++++++++++++++
♈🇮🇳🌴3] *அலெப்போ நகரை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரும் போரில் ரஷ்யா ஆதரவு பெற்ற சிரியா அரசு படையினர் முன்னேறி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது*
++++++++++++++++
♈🇮🇳🌴4] *கடந்த ஜூலை மாதம் துருக்கியில் தோல்வியில் முடிந்த ஆட்சிக்கவிழ்ப்பு முயற்சிக்கு முக்கிய மூளையாக செயல்பட்டார் என்று குற்றஞ்சாட்டப்பட்ட அமெரிக்காவை சேர்ந்த போதகர் ஃபெத்துல்லா குலனின் சகோதரர் துருக்கி போலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்*

++++++++++++++++
♈🇮🇳🌴5] *வாரணாசியில் பெரியளவில் நடந்த 'தூய்மை இந்தியா' பிரச்சாரம்-மிகப்பெரிய அளவில் நடைபெற்று வரும் துப்புரவு பிரச்சாரத்தின் மையத்தில் இந்திய நகரமான வாரணாசி உள்ளது. சரியாக இரண்டு ஆண்டுகளுக்குமுன் 'தூய்மை இந்தியா' திட்டத்தை பிரதமர் மோதி தொடங்கி வைத்தார்*
++++++++++++++++
♈🇮🇳🌴6] *மத்திய எத்தியோப்பியாவில் பாதுகாப்பு படையினர் மற்றும் அரசுக்கு எதிரான ஆர்ப்பாட்டக்காரர்கள் இடையே மேலும் அமைதியின்மை சூழல் நிலவுவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன*

++++++++++++++++
♈🇮🇳🌴7] *டேராடூன்,6.50 கிலோ போதை பொருள் கடத்தி வந்த நேபாள பெண்ணை உத்தரகாண்ட் போலீசார் கைது செய்துள்ளனர்*
++++++++++++++++
♈🇮🇳🌴8] *காஷ்மீரி செய்தி வட்டாரங்களின் 37 வயது பத்திரிகையாளர் சர்தார் ஜாவேத், தத்தா பானி செக்டாரில் வசித்து வருகிறார். இந்திய ராணுவம் தாக்குதல் நடத்திய பகுதிகளில் இதுவும் ஒன்று. பூஞ்ச் செக்டாரில் இருந்து மேற்கு பகுதியில் அமைந்து உள்ளது. ஆனால் பத்திரிக்கையாளர் சர்தார் ஜாவேத், இந்திய ராணுவத் தாக்குதல் நடந்ததற்கான ஆதாரங்கள் இல்லை என்கிறார். "நான் அது உண்மையல்ல என்று கூறவில்லை, ஏனெனில் அது ராணுவத்தினரின் கோணம். நான் கட்டுப்பாட்டு எல்லைப் பகுதியில் இருக்கிறேன், பத்திரிகையாளன் எனவே இங்கு தாக்குதல் நடந்திருந்தால் செய்திகள் வெகுவேகமாகப் பரவும். எது நடந்தாலும் மக்களுக்கு உடனடியாகத் தெரிந்து விடும்” என்று கூறிஉள்ளார். கிராமத்தை சேர்ந்த உள்ளூர் கவுன்சிலர் செய்தியாளர்களிடம் பேசுகையில், இந்தியாவின் கூற்று முற்றிலும் பொய் என்றார். மேலும் பேசுகையில், “அவர்களுக்கு தைரியம் இருந்தால் நான் சண்டையிட தயார், என்னுடைய வீட்டிலேயே நான் ஆயுதம் வைத்து உள்ளேன்,” 75 வயது கவுன்சிலர் கூறிஉள்ளார்.பத்திரிக்கையாளர்களுக்கு கேள்வி-பெரும்பாலும் பத்திரிகையாளர்களை அழைத்து செல்கிற போது, அவர்களுடைய கேள்விகளுக்கு அதிகாரிகள் பதில் சொல்வார்கள். ஆனால் சர்தார் ஜாவேத் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினார். ஆசிம் பஜ்வா; இந்திய ராணுவ தாக்குதலில் பலியானவர்களின் உடல்கள் எங்கே போயின? அவர்களது இறுதிச்சடங்கு எங்கே? இறந்தவர்களின் உடல்களை அவர்கள் எடுத்துச்சென்றிருந்தால், ஒரு உடலை கூட காட்டவில்லையே, ஏன்? எங்கே சேதம் ஏற்பட்து? என்று கேள்வி எழுப்பிய போது, செய்தியாளர் ஒருவர் ’நீங்கள் சுதந்திரமான விசாரணை நடத்த தயாரா? என கேள்வி கேட்டார். அப்போது பஜ்வா, எங்கள் தரப்பு ஐ.நா. பார்வையாளர்கள், பத்திரிகையாளர்கள் என எல்லாருக்குமே திறந்தே இருக்கிறது என்று பதில் அளித்தார்

++++++++++++++++
♈🇮🇳🌴9] *ஐஎஸ்எல் கால்பந்து 2016: கொல்கத்தாவில் இன்று நடைபெற்ற 2வது போட்டியில் சென்னை-கொல்கத்தா அணிகள் தலா இரண்டு கோல்கள் அடித்தது.  இதனையடுத்து போட்டி சமனில் முடிந்தது. முன்னதாக நேற்று நடைபெற்ற போட்டியில் கேரளாவை, கவுகாத்தி அணி வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது*

++++++++++++++++

♈🇮🇳🌴10] *இந்தியா முழுவதும், பிரதமர் மோடி துவக்கி வைத்த ஸ்வாச் பாரத் அபியான் எனப்படும் தூய்மையான இந்தியா திட்டத்தை நோக்கில் கொண்டு பல  இடங்களில் தூய்மைப்படுத்தும் பணி மேற்க்கொள்ளப்பட்டு வருகிறது. பிசிசிஐ சார்பில் கொல்கத்தாவில் அனுராக் தாகூர் தலைமையில் இந்திய அணியை சேர்ந்த  பலர் தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்*

++++++++++++++++
♈🇮🇳🌴11] *மத்திய பிரதேச மாநிலம் விதிஷா மாவட்டத்தில் பேருந்து ஆற்றில் கவிழ்ந்து விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் பேருந்தில் பயணம் செய்தவர்கள் 9  பேர் உயிரிழந்தனர். இதனையடுத்து பேருந்து விபத்து குறித்து விசாரணை நடத்தி 24 மணிநேரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய மத்திய பிரதேச போக்குவரத்துத்  துறை அமைச்சர் பூபேந்திர சிங் உத்தரவிட்டுள்ளார்*
+++++++++++++++++++++++++++
♈🇮🇳🌴12] **

+++++++++++++++++++++++++++
♈🇮🇳🌴13] *11வது நாளான இன்று காலை 10.30 மணிக்கு தமிழக அமைச்ச ர்கள் சி.வி.சண்முகம், கே.சி.வீரமணி, பெஞ்சமின், ஜெயக்குமார்,  திண்டுக்கல் சீனிவாசன், கரூர் விஜயபாஸ்கர், எடப்பாடி பழனிச்சாமி, ராஜேந்திரபாலாஜி மற்றும் முன்னாள் அமைச்சர்கள் சின்னையா, மாதவரம் மூர்த்தி, கே.பி.முனுசாமி, நத்தம் விஸ்வநாதன், முன்னாள் எம்.பி. மனோஜ்பாண்டியன் உள்ளிட்டோர் ஒரே நேரத்தில் அப்பல்லோவுக்கு வந்தனர்.இதையடுத்து கமிஷனர், டிஜிபியும் வந்தனர். அங்கே ஆலோசனை நடத்தியதாக தகவல்.   ஒரு மணி நேரத்திற்கு பின்னர் அமைச்சர்கள் அனைவரும் அப்பல்லோவை விட்டுச்சென்றனர்*

*தமிழக முதல்வரின் நிலை குறித்து பல வகையான செய்திகள் வருகின்றன. தமிழகத்தின் பொறுப்பு ஆளுனர் நேர்மையா வகையில் செய்தி கொடுக்கவில்லை என்பது தமிழக மக்களின் கருத்து. தமிழகத்தில் பொதுமக்கள் மிகுந்த குழப்பத்துடன் வாழ்வது குறித்து அரசு கவலை படுவதாக தெரியவில்லை*
♈🇮🇳🌴 *காஞ்சிபுரம் உலகநந்த பெருமாள் கோயில் சன்னதி தெருவில் வசித்து வந்த தேவகி சீட்டு பணத்தைக் கட்டி வந்த நிலையில் அந்த பணத்தை திரும்பி தருமாறு கேட்டதற்கு சீட்டு நடத்தியவர் தேவகியை அடித்து துன்புறுத்தியதால் மனவேதனை அடைந்த தேவகி நேற்று தீக்குளித்து   சென்னை மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாள்.பெண்ணின் சடலத்தை வைத்துக்கொண்டு ஆத்திரமடைந்த தேவகியின் உறவினர்கள் காஞ்சிபுரத்தில் உள்ள பிரதான சாலையான பேருந்து நிலையம் அருகே ஏராளமான பெண்கள் உட்பட சுமார் 50-க்கும் மேற்பட்டோர்  சாலை மறியலில் ஈடுபட்டனர்.அதனால் உறவினர்கள் சீட்டு நடத்திய பிரமுகர் மீது நடவடிக்கை எடுத்து கைது செய்ய வேண்டும் என காவல்துறையை வலியுறுத்தினர்*

♈🇮🇳🌴 *தமிழக முதல்வரின் நிலை குறித்து பல வகையான செய்திகள் வருகின்றன. தமிழகத்தின் பொறுப்பு ஆளுனர் நேர்மையா வகையில் செய்தி கொடுக்கவில்லை என்பது தமிழக மக்களின் கருத்து. தமிழகத்தில் பொதுமக்கள் மிகுந்த குழப்பத்துடன் வாழ்வது குறித்து அரசு கவலை படுவதாக தெரியவில்லை*

++++++++++++++++
www.sivakasiteacherkaruppasamy.com
++++++++++++

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here