ஏழு மணி செய்திகள் 03/10/2016 - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

ஏழு மணி செய்திகள் 03/10/2016

@@ 7pm-3-10-2016news @@
++++++++++++++++++++++++
http://www.sivakasiteacherkaruppasamy.blogspot.com

1] *போலந்தில் கருக்கலைப்பு மீது முழுமையான தடையை விதிக்கும் வகையில் முன்மொழியப்பட்ட சட்ட மசோதாவை எதிர்தது அங்குள்ள பெண்கள் பலர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்*
+++++++++++++++
♈🇮🇳🌴2] *2016 ஆம் ஆண்டின் மருத்துவத்திற்கான நோபல் பரிசு ஜப்பானை சேர்ந்த செல் உயிரியல் ஆராய்ச்சியாளர் யோஷிநோரி ஒசுமிக்கு வழங்கப்பட்டுள்ளது*
++++++++++++++++
♈🇮🇳🌴3] *மரபணு மாற்றம் செய்யப்பட்ட கடுகு விதை வகைகளுக்கு அனுமதி வழங்க மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு எதிராக விவசாயிகள் மற்றும் விவசாய அமைப்புகள் நாடெங்கிலும் பல்வேறு பகுதிகளில் போராட்டங்களை முன்னெடுத்துள்ளனர்.'விதை சத்தியாகிரகம்' என பெயரிடப்பட்டுள்ள இந்த போராட்டம் தமிழகத்தின் தலைநகர் சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்றது இந்திய திரைப்படத்துறையை சேர்ந்த பலரும் கூட இந்தப் போராட்டங்களில் பங்கேற்றார்கள்*
♈🇮🇳🌴4] *சமீப ஆண்டுகளில் உருவான மிக சக்தி வாய்ந்த அட்லாண்டிக் சூறாவளிகளில் ஒன்று கரிபியன் பகுதியை கடந்து கொண்டிருக்கிறது.ஜமைக்காவின் பல பகுதிகள் ஏற்கெனவே மழை மற்றும் பலமான காற்று காரணமாக தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளன. ஜமைக்காவின் தலைநகர் கிங்ஸ்டனில் உள்ள சாலைகளில் வெள்ள நீர் தேங்கி போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.ஹேய்ட்டியிலும் சூறாவளி எச்சரிக்கை ஒன்று விடுக்கப்பட்டுள்ளது.ஜமைக்காவைவிட அதிக ஆபத்தை ஹேய்ட்டி எதிர்கொள்ளும் என கூறப்படுகிறது.போதுமான உணவு மற்றும் தண்ணீரை சேகரித்து வைக்கவும், வீடுகளை பாதுகாக்கவும் ஹேய்ட்டியில் உள்ள பொதுமக்களை அதிகாரிகள் வலியுறுத்தி உள்ளனர்.2010 ஆம் ஆண்டில் ஏற்பட்ட பெரிய நிலநடுக்கத்தை தொடர்ந்து ஆயிரக்கணக்கான ஹேய்ட்டி மக்கள் இன்னும் கூடாரங்களில் வாழ்ந்து வருகின்றனர்.மாத்யூ சூறாவளி கிழக்கு கியூபாவை தாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது*
++++++++++++++++
♈🇮🇳🌴5] *இலங்கையில் மலையகத்தின் பல பகுதிகளிலும், பெருந் தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வுக் கோரிக்கை போராட்டம் காரணமாக,இன்று (திங்கட்கிழமை) அந்த பகுதிகளில் இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளது*
++++++++++++++++
♈🇮🇳🌴6] *நிதிஷ் கட்டாரா கொலை வழக்கு: குற்றவாளிகள் இருவருக்கும் 25 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது உச்ச நீதிமன்றம்* -உத்தரபிரதேசத்தின் முன்னணி அரசியல் தலைவரான டி.பி.யாதவின் மகள் பாரதியை, நிதிஷ் கட்டாரா என்ற வாலிபர் காதலித்தார். இருவரும் வெவ்வேறு பிரிவை சேர்ந்தவர்கள் என்பதால், பாரதியின் சகோதரர் விகாஸ் யாதவ், உறவினர் விஷால் யாதவ் மற்றும் சுக்தேவ் ஆகியோர், கடந்த 2002–ம் ஆண்டு நிதிஷ் கட்டாராவை கடத்தி கொலை செய்தனர். விகாஷ், விஷால் ஆகியோருக்கு 25 ஆண்டு கடுங்காவல் சிறையும், தடயங்களை மறைத்ததற்காக மேலும் 5 ஆண்டு சிறையும் தலா ரூ.50 லட்சம் அபராதமும் விதித்தது. சுக்தேவுக்கும் 25 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.இந்த தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் நீலம் கட்டாரா மேல் முறையீடு செய்தார். இந்த மேல் முறையீட்டு மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது. குற்றவாளிகள் விகாஷ் யாதவ் மற்றும் விஷால் யாதவ் ஆகிய இருவருக்கும்  25 ஆண்டுகள் தண்டனையை உறுதி செய்தது.மூன்றாவது குற்றவாளியான சுக்தேவுக்கு 20 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.  உயர் நீதிமன்றம் 25 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.இந்த உத்தரவை பிறப்பித்த நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, சி.நாகப்பன் அடங்கிய உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அமர்வு, நிதிஷ் கட்டாரா கொலையை ஆணவக் கொலை என்றும் தெரிவித்துள்ளது*

++++++++++++++++
♈🇮🇳🌴7] *இஸ்லாமிய நாள்காட்டிக்கு பதிலாக ஆங்கில காலண்டரை பின்பற்றி சம்பளம் வழங்க சவுதி அரசு முடிவு*
++++++++++++++++
♈🇮🇳🌴8] *கடவுளின் பெயரால் வன்முறை வேண்டாம் போப் ஆண்டவர் வேண்டு கோள்*

++++++++++++++++
♈🇮🇳🌴9] *சீனாவின் ஹுபேய் மாகாண தலைநகரான உஹான் நகரில் உள்ள ’ஹேப்பி வேல்லி’ பொழுதுப்போக்குப் பூங்காவில் நடைபெற்ற நிகழ்ச்சில் பங்கேற்ற மலேசியா நாட்டைச் சேர்ந்த இரு மேஜிக் பெண்கள் ஒரே நிமிடத்தில் 18 உடைகளை மாற்றி புதிய உலக சாதனை படைத்துள்ளனர்*
++++++++++++++++
♈🇮🇳🌴10] *தேனி: போடி அருகே உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட வேட்புமனுத் தாக்கல் செய்தவர் கொலை செய்யப்பட்டார். கந்தசாமிபுரத்தில் பிரகாஷ் என்பவரை 9 பேர் கும்பல் கல்லால் அடித்துக் கொன்றது. எர்னாம்பட்டி ஊராட்சி 7-வது வார்டில் போட்டியிட பிரகாஷ் காலையில் மனுத்தாக்கல் செய்திருந்தார்*
++++++++++++++++
♈🇮🇳🌴11] *காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க தாமதமாகும் என மத்திய அரசு மனு செய்திருப்பது ஏற்க முடியாது என்று புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். காவிரி விவகாரத்தில் பிரதமர் தலையிட்டு தீர்வு காண வேண்டும் என முதல்வர் நாராயணசாமி வலியுறுத்தியுள்ளார். மேலும் காவிரி நதிநீர் விவகாரத்தில் கர்நாடக அரசு முரண்டு பிடிப்பது கண்டிக்கத்தக்கது என முதல்வர் நாராயணசாமி கூறியுள்ளார்*
+++++++++++++++++++++++++++
♈🇮🇳🌴12] *சென்னை உயர்நீதிமன்றத்தில் 15 புதிய நீதிபதிகள் அக்டோபர் 5-ம் தேதி பதவியேற்க உள்ளனர். 15 பேர் புதிதாக பதவியேற்பதை அடுத்து சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 54-ஆக உயர்ந்துள்ளது*
+++++++++++++++++++++++++++
♈🇮🇳🌴13] *காவிரியில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட கர்நாடக அரசு முடிவு செய்துள்ளது. வினாடிக்கு 10 ஆயிரம் கனஅடி நீர் திறக்க கர்நாடக அரசு அறிவித்துள்ளது. கர்நாடக அணைகளுக்கு கூடுதலாக 5 டி.எம்.சி தண்ணீர் வந்துள்ளதால் நீரை திறந்து விட முடிவு செய்யப்பட்டது*
+++++++++++++++++++++++++++
♈🇮🇳🌴14] *வாணியம்பாடி அருகே புல்லூர் தடுப்பணையில் குளித்த போது நீரில் மூழ்கி 8 வயது சிறுவன் உயிரிழந்துள்ளான். நீரில் மூழ்கிய சிறுவன் புகழேந்தி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். வாணியம்பாடியை சேர்ந்த உறவினர்கள் புல்லூர் தடுப்பணையில் ஈமச்சடங்கை முடித்த போது சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழந்தான்*
+++++++++++++++++++++++++++
♈🇮🇳🌴15] *திண்டுக்கல்: பழனி முருகன் கோவிலில் நாளை முதல் ஒரு மாதத்திற்கு ரோப் கார் சேவை நிறுத்தப்படுகிறது. ஆண்டு பராமரிப்பு பணி காரணமாக ஒரு மாதத்திற்கு ரோப் கார் சேவை நிறுத்தப்படுவதாக கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. பக்தர்கள் படிப்பதை, இழுவை ரயில்களை பயன்படுத்தி கொள்ள கோவில் நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது*

++++++++++++++++++++++++
♈🇮🇳🌴16] *தமிழக உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நிறைவடைந்தது. கடந்த 26ம் தேதி தொடங்கிய உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்றுடன் நிறைவடைந்தது. டோக்கன் வாங்கியவர்களிடம் மட்டுமே வேட்புமனு தாக்கல் பெறப்படும் என மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது*
+++++++++++++++++++++++++
♈🇮🇳🌴17] *துபாய்: நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது  டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றதை அடுத்து ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் இந்திய அணி மீண்டும் முதலிடம் பிடித்துள்ளது. பாகிஸ்தான் அணி இரண்டாவது இடத்திலும், ஆஸ்திரேலிய அணி மூன்றாவது இடத்திலும் உள்ளன*
++++++++++++++++++++++++
♈🇮🇳🌴18] *பக்கிங்ஹாம் கால்வாயை தூர்வாருதல் தொடர்பாக பொதுப்பணித்துறையினர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். பாலவாக்கம் முதல் நீலாங்கரை வரையிலான பகுதியில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.  கால்வாயை தூர்வாரக் கோரி பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடரப்பட்டது குறிப்பிடத்தக்கது*
+++++++++++++++++++http://www.sivakasiteacherkaruppasamy.blogspot.com
♈🇮🇳🌴19] *சென்னை: ஸ்டாலினின் தனி உதவியாளரை அரசு திரும்பப் பெற்றதை எதிர்த்த வழக்கில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. உயர்நீதிமன்றத்தில் தமிழக சட்டப்பேரவை செயலாளர் பதில் மனு தாக்கல் செய்துள்ளார். தனி உதவியாளர் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டியுள்ளதால் திரும்பப்பெற்றதாக பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது*
++++++++++++
♈🇮🇳🌴20] *ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சால்மர் மாவட்டத்தில் போக்ரான் என்ற பகுதியில் இந்திய விமானப்படையை சேர்ந்த ஜாகுவார் பயிற்சி விமானம் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் இரண்டு விமானிகள் பத்திரமாக உயிர் தப்பினர். இது குறித்து விசாரணை நடத்த நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது*
++++++++++++
♈🇮🇳🌴21] *சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.64 குறைந்துள்ளது. ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.2,939-க்கும், ஒரு சவரன் ரூ.23,512-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் வெள்ளி விலை ரூ.49.00-க்கும், ஒரு கிலோ கட்டி வெள்ளி ரூ.45,820-க்கும் விற்பனை செய்யப்படுகிறது*
+++++++++++++++
♈🇮🇳🌴22] *உச்சநீதிமன்ற நீதிபதி சி.நாகப்பன் ஓய்வு பெற்றார்*
++++++++++++++
♈🇮🇳🌴22] *அனைத்து கட்சியினருடன் நாளை காலை தேர்தல் கமிஷன் ஆலோசனை*
++++++++++++++
♈🇮🇳🌴23] *வாக்காளர் பட்டியல் முழு அளவில் தயார் : தேர்தல் கமிஷனர்*

++++++++++++++++++++++++

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here