மதிய செய்திகள் 04/10/2016 - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

மதிய செய்திகள் 04/10/2016

$$$$$$$$$$$$$$$$$$$$$$$
http://www.sivakasiteacherkaruppasamy.blogspot.com
1] *காவிரி மேலாண்மை வாரியத்தை இப்போது அமைக்க முடியாது என உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு கூறியதைத் திரும்பப் பெற வேண்டுமென்றும், உடனடியாக மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டுமென்றும் தமிழக தலைமைச் செயலர் ராம மோகன ராவ், மத்திய நீர்வளத் துறை செயலர் ஷஷி ஷேகரிடம் கோரியுள்ளார்*
+++++++++++++++
2] *சிரியாவில் கிளர்ச்சியாளர்களின் பிடியில் இருக்கும் அலெப்போ நகரிலுள்ள பெரிய மருத்துவமனை, ஒரு வாரத்தில் மூன்றாவது முறையாக வான்வழி தாக்குதலுக்குள்ளாகி இருப்பதாக அங்கிருந்து வருகின்றசெய்திகள் தெரிவிக்கின்றன*
++++++++++++++++
3] *உலகின் பணக்கார நாடுகள் அகதிகள் குறித்த தங்களது பொறுப்புகளைத் தட்டிக்கழிப்பதை மனித உரிமை அமைப்பான அம்னெஸ்டி இன்டர்நேஷனல் கடுமையாகக் கண்டித்துள்ளது. அந்த நாடுகள் மிகக் குறைந்த அளவில் அகதிகளுக்கு அடைக்கலம் கொடுப்பது மற்றும் குறைந்த அளவில் அவர்களுக்குத் தேவையானவற்றை அளிப்பது போன்றவற்றை அது விமர்சித்துள்ளது*

4] *ஆப்கானிஸ்தானில் திங்களன்று குண்டுஸ் மாகாண தலைநகரில் தொடங்கிய தலிபான் தாக்குதல் முறியடிக்கப்பட்டது என்று அம்மாகாண ஆளுநர் தெரிவித்துள்ளார்*
++++++++++++++++
5] *பிலிப்பைன்ஸ் அதிபர் ரொட்ரிகோ டுடெர்டோ அமெரிக்காவுடனான போர்ப் பயிற்சிகளை முடிவுக்குக் கொண்டு வர விரும்புவதாகக் கூறியபோதும், பிலிப்பைன்ஸும் அமெரிக்காவும் இராணுவப் பயிற்சிகளை நடத்தி வருகின்றன*
++++++++++++++++
6] *சமீபத்திய ஆண்டுகளில் அட்லாண்டிக் பகுதியில் வீசிய மிகவும் வலிமையான சூறாவளிகளில் ஒன்று, ஹேய்ட்டியில் இன்னும் சில மணிநேரங்களில் கரையை கடக்கின்றபோது வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவுகளை உருவாக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது*
++++++++++++++++
7] *வரி செலுத்திய விபரங்களை வெளியிட வேண்டும் என்ற அழுத்தத்திற்கு உள்ளாகியிருக்கும் குடியரசு கட்சியின் அதிபர் வேட்பாளர் டொனால்ட் டிரம்ப், சட்டத்தை புத்திசாலித்தனமாக பயன்படுத்தி சட்டப்படியாக குறைவான வரியை செலுத்தி இருப்பதை பற்றி பெருமையாக பேசியுள்ளார்* - ஒரு வர்த்தகராக அவருக்கும், அவருடைய முதலீட்டாளருக்கும், தொழிலாளர்களுக்கும் பயன் தரும் வகையில் வரி செலுத்தும் சட்டத்தை பயன்படுத்தி கொள்வது தன்னுடைய கடமை என்று கோலோராடோ மாநிலத்தில் புவெப்லோவில் ஆதரவாளர்களிடம் ட்ரம்ப் தெரிவித்தார்.அமெரிக்காவின் வரி பணம் செலவழிக்கப்படும் விதத்தை வெறுப்பதாக அவர் கூறினார்.வரி வசூலிப்பு சட்டத்தின் ஒவ்வொரு அம்சங்கள் மூலமும் டிரம்ப் ஆதாயத்தை பெற்றிருப்பதாக அவரது போட்டி வேட்பாளரான ஹிலரி கிளிண்டன் தெரிவித்திருக்கிறார்.தன்னுடைய வர்த்தகப் பாதையில் டிரம்ப் சிறு வியாபாரங்களையும், தொழிலாளர்களையும் ஏமாற்றியிருக்கிறார் என்று ஹிலரி ஒகியோவின் அக்ரோனில் பேரணியில் பேசியபோது கூறியிருக்கிறார்
++++++++++++++++
8] *அமெரிக்காவைச் சேர்ந்த முஸ்லீம் மதகுரு ஃபெத்துல்லா குலனுடன் தொடர்பு உள்ளதாகச் சந்தேகத்தின் பேரில் ஏறக்குறைய 13,000 போலிஸ் அதிகாரிகளை துருக்கி பணியிடைநீக்கம் இடைநிறுத்தம் செய்துள்ளது*

++++++++++++++++
9] *நான்கு ஆண்டுகளாக நடைபெற்று வருகின்ற அமைதி ஒப்பந்தத்தை மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பில் வாக்காளர்கள் நிராகரித்து விட்ட நிலையில் ஆபத்தான நிலையில் இருக்கும் அமைதி முன்னெடுப்புக்கு ஒரு வழி காணும் முயற்சியாக கொலம்பிய அதிபர் யுவான் மானுவேல் சாண்டோஸ் எதிர்கட்சி தலைவர்களை சந்தித்திருக்கிறார்*
++++++++++++++++
10] *கறிச்சோறு, டிவி: அடம்பிடித்த சிறைகைதிகள்* -சத்தீஸ்கார் மாநிலம் தலைநகர் ராய்ப்பூர் மத்திய சிறையில், கைதிகள் கறிச்சோறு மற்றும் டி.வி வேண்டும் என்று காந்தி ஜெயந்தி அன்று திடீர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்*
++++++++++++++++
♈🇮🇳🌴11] * கடும் புயல் காரணமாக விமானம் ஒன்று தரையிறங்க முடியாமல் தத்தளிக்கும் வீடியோ காட்சி ஒன்று தற்போது வெளியாகியுள்ளது* -இங்கிலாந்தின் பர்மிங்காம் விமான நிலையத்தில் பலத்த காற்று வீசி கொண்டிருந்தது. அப்போது A321 பயணிகள் விமானம் அந்த விமான நிலையத்தில் தரையிறங்க முயன்றது.அப்போது காற்றின் வேகம் அதிகரித்ததால் விமானம் தரையிறங்க முடியாமல் தத்தளித்தது. இதனையடுத்து சூழ்நிலையை உணர்ந்த விமானி விமானத்தை  மீண்டும் மேலே செலுத்தினார். தொடர்ந்து வானில் வட்டமிட்ட விமானம் சில நிமிடங்களில் இடையூறுகளை தாண்டி வெற்றிகரமாக தரையிறக்கப்படுகிறது.இது  குறித்த வீடியோ இணையத்தில் பரவி வைரலாகியுள்ளது*
+++++++++++++++++++++++++++
♈🇮🇳🌴12] * இரண்டு கைகளை இழந்த நபருக்கு ஓட்டுநர் உரிமம்* -மத்திய பிரதேச மாநிலத்தில் முதன்முறையாக இரண்டு கைகளும் இழந்தநபருக்கு ஓட்டுநர் உரிமம் வழங்கப்பட்டுள்ளது. மத்திய பிரதேச மாநிலம் இந்தூர் நகரைச் சேர்ந்தவர் விக்ரம் அக்னிஹொத்ரி. இவர் இரண்டு கைகளை இழந்தாலும் நம்பிக்கையை இழக்காமல் போராடி ஒட்டுநர் உரிமம் பெற்றுள்ளார். இரண்டு கைகளும் இல்லாமல் கார் ஓட்டுவதற்கு, ஓட்டுநர் உரிமம் பெற்ற முதல் நபர் விக்ரம் அக்னிஹோத்ரி.கடந்த 2015 ஆம் ஆண்டு இவர் படிப்பாளி ஓட்டுநர் உரிமம் பெற விண்ணப்பித்த போது, அதிகாரிகள் இவரால் கைச்சைகை செய்ய முடியாது என்பதால் விண்ணப்பதை நிராகரித்துவிட்டனர்.அதன்பின்னர் பல முறை முயற்சி செய்து பொராடி, இந்தூர் பகுதியிலே சுமார் 14,000 கி.மீ தூரம் கார் ஓட்டி, அதன்பின்னரே அவருக்கு ஓட்டுநர் உரிமம் கிடைத்துள்ளது. ஊனமுற்றோர் வழங்கப்படும் ஓட்டுநர் உரிமம் இவருக்கு வழங்கப்பட்டுள்ளது.இதற்கிடையில் மந்திய அமைச்சர் நிதின் கட்காரியை சந்தித்து ஓட்டுநர் உரிமம் கோரி மனு கொடுத்துள்ளார். மேலும் ஒட்டுநர் ஒரிமம் பெறுவதற்கு ஆகஸ்டு மாதம் இந்தூரில் இருந்து லடாக் வரை தொடர்ச்சியாக 20 நாட்கள் கார் ஓட்டி பயணம் செய்துள்ளார்

+++++++++++++++++++++++++++
13] *குழந்தை இல்லா தம்பதிகளின் ஏக்கத்தை போக்க ரோபோ குழந்தை* -குழந்தை இல்லா தம்பதிகளின் ஏக்கத்தை போக்கவும் வெறுமையை விளக்கவும் ஜப்பானில் ‘ரோபோ’ குழந்தைகள் உருவாக்கப்பட்டுள்ளன. ஜப்பானில் அதிக அளவில் ரோபோகளின் பயன்பாடு உள்ளது. அவை ஆஸ்பத்திரிகள், கடைகள், அலுவலகங்கள், வீடுகள் என பல இடங்களில் பணியில் அமர்த்தப்பட்டுள்ளன.இந்த நிலையில் குழந்தை இல்லா தம்பதிகளின் குறையை போக்க  குழந்தை ரோபோக்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
இதற்கு ‘கிரோபோ மினி’ என பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த ரோபோவை பியூமோனோரி கடயாகோ என்ற நிபுணர் வடிவமைத்துள்ளார்.
இந்த குழந்தை ரோபோ அழகாக கண் சிமிட்டுகிறது. குழந்தை போன்று மழலை குரலில் பேசுகிறது. சிரிக்கிறது, அழுகிறது. இதன் விலை ரூ.25,000 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது அடுத்த ஆண்டு விற்பனைக்கு வருகிறது

+++++++++++++++++++++++++++
14] *நடிகையும், இயக்குனரும், டி.வி தொகுப்பாளருமான லட்சுமி ராமகிருஷ்ணன், தான் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி குறித்து கூறியதாவது:-நான் என்ன கட்ட பஞ்சாயத்து நடத்துறேனா? என் நிகழ்ச்சியில் வரும் ஒவ்வொருவரையும் என்னுடைய குடும்ப உறுப்பினர்களாவே நினைக்கிறேன். என்னால் முடிஞ்ச உதவிகளை செய்து வருகிறேன்.பப்ளிசிட்டிக்காக நான் எதுவும் செய்வதில்லை. எனக்கு சமூகம் மீது அக்கறை உள்ளது. சுமுகமான முறையில் பிரச்சனையை தீர்த்து வைத்து உதவி செய்கிறேன். இரண்டு நாட்களுக்கு முன் சாலையோரத்தில் ஒரு பாட்டி, தன்னம்பிக்கையுடன் இருப்பதை எனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டேன்.உடனே, பப்ளிசிட்டிக்காக செய்யறீங்களான்னு கேட்டால், என்ன சொல்வது?நான் என் படத்துக்காக நயன்தாரா காலை பிடிச்சு, என் படத்தின் டிரைலரை ரிலீஸ் பண்ணுங்கமா என்றும் அவங்களோட சேர்ந்து புகைப்படம் எடுத்து வெளியிட்டு இருந்தாள், அது பப்ளிசிட்டி என்று கூறினார்*

+++++++++++++++++++++++++++
15] *கோவையில் கைதுக்கு அஞ்சி இந்து முன்னணி பிரமுகர் ஆனந்த் என்பவர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார். சசிகுமார் கொலை வழக்கில் தன்னைக் கைது விடுவார்களோ என்ற அச்சத்தில் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார். தற்கொலைக்கு முயன்ற ஆனந்த் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்*
++++++++++++++++++++++++
16] *காவிரி விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடியை நாளை சந்தித்து பேசவுள்ளதாக மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். அதேபோல் மத்திய நீர்வளத்துறை அமைச்சர் உமாபாரதியையும்  நாளை சந்தித்து பேசவுள்ளதாகவும் பொன்.ராதாகிருஷ்ணன் தகவல் தெரிவித்துள்ளார். மேலும் 8, 9ம் தேதிகளில் தமிழக பாஜக நிர்வாகிகளுடன் பிரதமரை சந்திக்க திட்டம் உள்ளதாக பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்*
+++++++++++
17] *சமூகவலைத்தளங்களில் சசிகலா புஷ்பா எம்.பி.யை தவறாக சித்தரிக்கும் படங்களை நீக்க வேண்டும் என சசிகலா புஷ்பா வழக்கு தொடுத்திருந்தார். இதனை விசாரித்த நீதிமன்றம் வாட்ஸ் அப், பேஸ்புக், டுவிட்டர் நிறுவனங்களுக்கு நீக்க டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சசிகலா புஷ்பா பற்றி தவறாக படம் வெளியிடுவோர் மீது நடவடிக்கை எடுக்க மத்திய அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது*
+++++++++++++
18] *ஸ்ரீபெரும்புதூர் தாலுகா அலுவலகத்தில் ஏற்பட்ட தீவிபத்தில் வாக்காளர் விவரங்கள் முற்றிலும் எரிந்து நாசமாகின. தேர்தல் பிரிவு அலுவலகத்தில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக தீவிபத்து ஏற்பட்டது என அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர். 8 கணினிகள், 1 லேப்டப் உள்ளிட்ட இயந்திரங்கள் எரிந்து கருகின*
+++++++++++++
19] *வெப்பச்சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் ஒரு சில இடங்களில் மழை பெய்யும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதிகபட்சமாக கடவூரில் 4 செ.மீ. மழை பதிவாகியுள்ளது என்றும் வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது*
+++++++++++
20] *ஜாமீன் நிபந்தனையை தளர்த்தக்கோரி பச்சமுத்து தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. பைனான்சியர் போத்ராவுக்கு கொலை மிரட்டல் விடுத்த வழக்கில் பச்சமுத்துவுக்கு முன்ஜாமீன் தரப்பட்டது. அதன்படி பச்சமுத்து சென்னை போலீசில் கையெழுத்திட்டு வருகிறார். இந்நிலையில் தினமும் கையெழுத்திடும் நிபந்தனையை தளர்த்த கோரி பச்சமுத்து தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது*
+++++++++++
21] *கோவையில் பிரதமர் மோடியின் உருவ பொம்மை எரித்த த.பெ.தி.க.வினர் கைது செய்யப்பட்டனர்.  காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மறுப்பு தெரிவித்த மத்திய அரசைக் கண்டித்து போராட்டம் நடத்தினர். புதுச்சேரியில் பிரதமர் மோடி உருவ பொம்மையை எரிக்க முயன்ற தமிழ் அமைப்பினர் கைது செய்யப்பட்டனர்*
+++++++++++
22] *யாழ்பாணம் அருகே தமிழக மீனவர்கள் 5 பேர் இலங்கை மீனவர்களால் சிறைபிடிக்கப்பட்டுள்ளனர். சிறை பிடிக்கப்பட்ட மீனவர்கள் கடற்படை முகாமுக்கு கொண்டு செல்லப்பட்டனர்*
+++++++++++
23] *சென்னை சூப்பர் கிங்ஸ் மீதான தடையை நீக்க கோரிய வழக்கின் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் மீதான தடையை நீக்க கோரி பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி வழக்கு தொடர்ந்திருந்தார். வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் தீர்ப்பை ஒத்திவைத்தது*
++++++++++
24] *காங்., செய்த தவறு பா.ஜ., செய்கிறது: தம்பிதுரை குற்றச்சாட்டு*
++++++++++++++++++++
25] *காவிரி விவகாரம்: தமிழக லாரி உரிமையாளர் ஸ்டிரைக் தள்ளிவைப்பு*
+++++++++++++++++++
26] *கரூர் குளித்தலையில் விவசாயிகள் தண்ணீர் கேட்டு சாலைமறியல்.
++++++++++++++++++++++++

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here