காலை செய்திகள் 06/10/2016 - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

காலை செய்திகள் 06/10/2016

           

http://www.sivakasiteacherkaruppasamy.blogspot.com

A.30 நாட்களுக்கு பின்பு பெங்களூருக்கு வாகனங்கள் இயக்கம்

தமிழகத்தில் இருந்து கர்நாடக மாநிலத்துக்குச் சென்ற தமிழக வாகனங்கள்.

ஒசூர்: கடந்த ஒரு மாதத்துக்குப் பிறகு தமிழக பதிவெண் கொண்ட லாரிகள், கார்கள் கர்நாடக மாநிலம், பெங்களூருக்கு புதன்கிழமை முதல் இயக்கப்பட்டன. அதேபோல, கர்நாடகா மாநில அரசுப் பேருந்துகளும் ஒசூர் வந்தன.

B.நெஞ்சை நிமிர்த்தி தற்பெருமை பேசுவதை நிறுத்துங்கள்: கட்சியினருக்கு மோடி அறிவுரை

பாகிஸ்தான் தீவிரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் நடத்திய தாக்குதல் குறித்து நெஞ்சை நிமிர்த்தி தற்பெருமை பேசுவதை நிறுத்திக்கொள்ளுமாறு தமது அமைச்சர்களுக்கும், கட்சியின் முன்னணி தலைவர்களுக்கும் பிரதமர் நரேந்திர மோடி அறிவுறுத்தியுள்ளார்.

C.ஐதராபாத்தில் ரூ.230 கோடி போதை மருந்து பறிமுதல் போதை மருந்து கடத்தலில் ஈடுபட்ட பெங்களூரு விஞ்ஞானி–மனைவி கைது விமானப்படை அதிகாரியும் சிக்கினார்!!

D.உள்ளாட்சித்தேர்தல் தொடர்பான அனைத்து நடவடிக்கைகளையும் நிறுத்தி வைக்க, மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு மாநில தேர்தல் ஆணையம் உத்தரவு

E.குளிர்க்கால கூட்டத்தொடருக்கான தேதியை இறுதி செய்ய அக்டோபர் 13 ந்தேதி அரசியல் விவகாரங்களுக்கான அமைச்சரவை கூடி ஆலோசிக்க உள்ளது..

F.காஷ்மீர் மாநிலம் ஹந்த்வாராவில் ராணுவ முகாம் அருகே தீவிரவாதிகள் தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். தீவிரவாதிகள்- பாதுகாப்பு படையினர் இடையே கடும் துப்பாக்கிச் சண்டை நீடித்து வருகிறது.
http://www.sivakasiteacherkaruppasamy.blogspot.com
G.பாகிஸ்தானுடனான எல்லைப் பகுதியின் பாதுகாப்பு குறித்து மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், ராஜஸ்தான் மாநிலம், ஜெய்சல்மரில் வரும் 7, 8 ஆகிய இருதினங்கள் ஆய்வுக் கூட்டம் நடத்துகிறார்

H.மத்திய நீர் ஆணையத்தின் தலைவர் ஜி.எஸ்.ஜா தலைமையில் காவிரி உயர் தொழில்நுட்பக் குழுவை மத்திய நீர் வளத் துறை அமைச்சகம் நேற்று நியமித்தது

I.தீவிரவாதி இம்ரான் என்கிற பிலாலுக்கு பெங்களூரு அமர்வு நீதிமன்றம் இரண்டு ஆயுள் மற்றும் 30 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

J.மஹாராஷ்டிராவில், 'கால் சென்டர்'கள் மூலம், அமெரிக்க நாட்டினரை ஏமாற்றி, கோடிக் கணக்கான ரூபாய் மோசடி செய்த, 70 பேரை போலீசார் கைது செய்தனர்; 600க்கும் மேற்பட்டோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு உள்ளது.

K.காவிரி பிரச்னைக்குப் பின் ஒசூர் வழியாக கர்நாடகாவுக்கு தமிழக அரசு பஸ்கள் இயக்கப்பட்டன.

L.கோவையில் கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பை பலப்படுத்தும் நோக்கில், அனைத்து பஸ்களிலும், கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த, கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.

M.தசரா பண்டிகையை முன்னிட்டு, வரும் 8 -ஆம் தேதி முதல் 16 -ஆம் தேதி வரை உயர் நீதிமன்றத்துக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது

N.கோவையில் வருமானவரித்துறை அதிகாரிகள் போல் நடித்து 150 சவரன் நகை, 40 லட்சம் கொள்ளை

O.மேட்டூர் வனப் பகுதியில் நக்சலைட்டுகள் ஊடுருவியுள்ளனரா என்பது குறித்து க்யூ பிரிவு போலீஸார் ரகசிய விசாரணை நடத்தி வருகின்றனர்.

P.நாட்டிலேயே முதல் முறையாக செங்கல்பட்டில் மருத்துவப் பூங்கா (மெடி பார்க்) அமைக்க 330 ஏக்கர் அரசு நிலத்தை "துணை குத்தகை' அடிப்படையில் வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் தெரிவித்தது

Q.வாணியம்பாடி - ஜோலார்பேட்டை இடையே ரயில்வே பணிகள் நடைபெறுவதால் நவம்பர் 12 ஆம் தேதி வரை செவ்வாய்க்கிழமை மற்றும் சனிக்கிழமை தவிர மற்ற நாள்களில் விரைவு ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது

R.ராயக்கோட்டை அருகே சொத்துத் தகராறில் சப்பாத்தி மாவில் அரளி விதையைக் கலந்து 2 குழந்தைகள், ஒரு முதியவரைக் கொன்ற விவசாயியை போலீஸார் கைது செய்தனர்

S.சென்னையில் அரசு பொது மருத்துவமனையில் நோயாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீஸார் நடத்தி வருகின்றனர்.

T.சேத்துப்பட்டு அருகே நகை அடகுக் கடையில் துளையிட்டு 20 பவுன், 6 கிலோ வெள்ளி கொள்ளை

U.இந்து அமைப்புகளைச் சேர்ந்த பிரமுகர்கள் தொடர்ந்து தாக்கப்பட்டு வருவதற்கும், கொலை செய்யப்படுவதற்கும் ஆர்எஸ்எஸ் அமைப்பு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது

V.காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டி, உச்ச நீதிமன்றத்தில் புதுச்சேரி அரசு தொடர்ந்து வலியுறுத்தும் என்று புதுச்சேரி முதல்வர் வி.நாராயணசாமி தெரிவித்தார்

W.அடுத்த ஆண்டின் (2017) தேசிய அளவிலான உயர் கல்வி நிறுவனங்கள் தரவரிசைப் பட்டியலுக்காக, அனைத்து உயர் கல்வி நிறுவனங்களும் பதிவு செய்ய கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதன்படி வரும் 10 -ஆம் தேதி வரை கல்வி நிறுவனங்கள் பதிவு செய்யலாம். மேலும் விவரங்களைப் பதிவேற்றம் செய்வதற்கான கால அவகாசம் நவம்பர் 15 -ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது

X.நாட்டிலேயே முதல் முறையாக செங்கல்பட்டில் மருத்துவப் பூங்கா (மெடி பார்க்) அமைக்க 330 ஏக்கர் அரசு நிலத்தை "துணை குத்தகை' அடிப்படையில் வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் தெரிவித்தது

Y.ரயில்வே துறையின் அனைத்துவிதமான சேவைகளையும் முன்பதிவு செய்வதற்கென பிரத்யேக செயலி ஒன்றை அறிமுகப்படுத்த ரயில்வே நிர்வாகம் திட்டமிட்டுள்ளது

Z.2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்ததாக சிபிஐ தொடுத்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள மாநிலங்களவை திமுக உறுப்பினர் கனிமொழி தரப்பு புதன்கிழமை தொடங்கிய இறுதி வாதத்தை வியாழக்கிழமையும் (அக்டோபர் 6) தொடர்வதற்கு தில்லி சிபிஐ நீதிமன்ற சிறப்பு நீதிபதி ஓ.பி.சைனி அனுமதி அளித்தார்

1.காவிரி விவகாரத்தில் மத்திய அரசை வலியுறுத்த தமிழக பாஜக குழு தில்லி செல்லவிருப்பதாக அந்தக் கட்சியின் மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார

2.தேசப் பாதுகாப்பு விவகாரங்களை வைத்து பாஜக அரசியல் செய்வதாக மும்பை காங்கிரஸ் கமிட்டி தலைவர் சஞ்சய் நிருபம் குற்றம்சாட்டியுள்ளார்
http://www.sivakasiteacherkaruppasamy.blogspot.com
3.இந்தியா-பாகிஸ்தான் இடையே பதற்றமான சூழல் நிலவிவரும் வேளையில், தேசப் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு பாகிஸ்தானிலிருந்து சிமென்ட் இறக்குமதி செய்வதற்கு பிரதமர் நரேந்திர மோடி தடை விதிக்க வேண்டும் என்று பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி வலியுறுத்தியுள்ளார்

3.ராஜஸ்தானில் இளம்பெண் ஒருவருக்கு இரண்டு தலைகளுடன் பிறந்த ஆண் குழந்தை 32 மணி நேரத்தில் பரிதாபமாக உயிரிழந்தது.

5.ஐ.நா., சபையின் புதிய பொதுச்செயலராக போர்ச்சுகல் நாட்டைச் சேர்ந்த ஆன்டோனியோ கட்டரஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

6.திருப்பதி அருகே உள்ள பாக்ரா பேட்டை வன பகுதியில் செம்மரம் வெட்டி கடந்த முயன்ற 4 தமிழர்கள் கைது அவர்களிடமிருந்து 15 லட்சம் மதிப்பிலான 20 செம்மர கட்டைகள் பறி முதல் திருப்பதி செம்மர கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் நடவடிக்கை

7.துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் மகன் பிரவீன் மீது வாகனத்தை அதிவேகமாக இயக்கியது உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்கு பதிவு

8.விரைவு ரயில் தாமதம் திருவனந்தபுரத்தில் இருந்து செங்கல்பட்டு வழியாக சென்னைக்கு செல்லும் அனந்தபுரி விரைவு ரயிலில் செங்கல்பட்டு ரயில் நிலையம் அருகே வடமாநில பெண்ணுக்கு ஆண் குழந்தை பிறந்தது இதனால் செங்கல்பட்டில் இருந்து சென்னை செல்லும் அனைத்து ரயில்களும் 30-நிமிடம் தாமதமாக செல்கின்றது.

9.தேனி மாவட்டம் கும்பக்கரை அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அருவியில் நீர் வரத்து குறைவாக உள்ளதால் 2 நாட்களுக்கு வனத்துறை தடை விதித்துள்ளது. 

10.இந்தியா வந்துள்ள சிங்கப்பூர் பிரதமர் லீ சியான் லூங், ராஜஸ்தான் முதல்வர் வசுந்தரா ராஜேவை இன்று சந்திக்கவுள்ளார். இந்த சந்திப்பில் ராஜஸ்தான் அமைச்சர்களும் பங்கேற்கவுள்ளனர் என செய்திகள் தெரிவிக்கின்றன. 

11.இமாசலப் பிரதேசத்தில் குளிர்காலம் தொடங்கியதை அடுத்து சாலையெங்கும் பனிமூட்டமாக காணப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் வாகனங்களில் முகப்பு விளக்கை எரிய விட்டு செல்கின்றனர். அங்கு பருவமழை முடிந்த நிலையிலும் சில பகுதிகளில் மழை பெய்து வருகிறது.

12.துபாய் சர்வதேச விமான நிலையம் பயணிகள் போக்குவரத்தில் பெரும் சாதனை படைத்துள்ளது. அதாவது ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் துபாய் சர்வதேச விமான நிலையத்தில் 7.7 மில்லியன் பயணிகள் போக்குவரத்து செய்துள்ளனர். போக்குவரத்து செய்த நாட்டின் பட்டியலில் அதிகபட்சமாக இந்தியாவிற்கு மட்டும் 9 லட்சம் பயணிகள் போக்குவரத்து செய்துள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது என்று போக்குவரத்து அறிக்கையை வெளியிட்டுள்ளது.

13.தீவிரவாதிகள் மூன்று முறை இந்தியாவிற்குள் ஊடுருவ முயன்றது முறியடிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் உதவியுடன் நடந்த ஊடுருவல் முயற்சியை ராணுவம் முறியடித்துள்ளது. ஜம்மு-காஷ்மீரின் நம்காம், ராம்பூரில் ஊடுருவல் முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளது. 

14.திருவாரூரில் கடந்த மாதம் கார் ஓட்டுநர் அய்யனாரை கடத்திக் கொன்ற வழக்கில் 3 பேர் கைது செய்யப்பட்டனர். ஓட்டுநரை கொன்று காரை கடத்திய செல்வம், கண்மணி, மஜித் ஆகிய மூன்று பேரையும் போலீசார் கைது செய்தனர். காரை திருடுவதற்காக மூன்று பேரும் பயணிகள் போல் காரில் சென்று கொடைக்கானலில் அய்யனாரை கொன்றனர். 

15.காவிரி விவகாரம் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க நேரம் கேட்டிருக்கிறோம் என புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்தார். சென்னை விமான நிலையத்தில் நாராயணசாமி இதனை செய்தியாளர்களிடம் தெரிவித்தார். மேலும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசிடம் வலியுறுத்துவோம் எனவும் நாராயணசாமி கூறினார். 

16.கிருஷ்ணகிரி மாவட்டம் ராயகோட்டையில் தனியார் ஆயில் மில் நிறுவனத்தில் திடீர் தீ விபத்து. 3 க்கும் மேற்ப்பட்ட தீயணைப்பு வாகனங்கள் பல மணி நேரமாக தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

17.குடியாத்தம் புதிய பேருந்து நிலையம் அருகில் தனியார் பள்ளி பேருந்து மோதி விபத்து பஸ் சக்கரம் ஏறி குழந்தை பலி.

18.3 நாட்களுக்கு தீபாவளி சிறப்பு பேருந்துகள் இயக்கம்... சென்னையில் தற்காலிக பேருந்து நிலையங்கள் அறிவிப்பு

தீபாவளி பண்டிகையையொட்டி வரும் அக்டோபர் 26, 27, 28 ஆகிய தேதிகளில் தமிழகம் முழுவதும் சென்னை, கோவை, மதுரை, நெல்லை உள்பட முக்கிய ஊர்களுக்கிடையே சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. சென்னையில் இருந்து இயக்கப்படும் சிறப்பு பேருந்துகள் இயக்கத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சிறப்பு பேருந்துகள் கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு பதிலாக , சென்னை நகரின் தற்காலிக பேருந்து நிலையங்களில் இருந்து புறப்படும் என்று அரசு போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது.

காஞ்சிபுரம். புதுச்சேரி, கடலூர் பகுதி சிறப்பு பேருந்துகள் கோயம்பேடு தேர்தல் ஆணையப் பேருந்து நிலையத்தில் இருந்து புறப்படும். விக்ரவாண்டி, பண்ருட்டி, கும்பகோணம், தஞ்சை, வழித்தடத்தில் செல்லும் சிறப்பு பேருந்துகள் தாம்பரம் சாணிட்டோரியம் பேருந்து நிலையத்தில் இருந்து புறப்படும். ஓசூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர் சிறப்பு பேருந்துகள், பூவிருந்தவல்லி பேருந்து நிலையத்தில் இருந்து புறப்படும். ஆந்திரா செல்லும் சிறப்பு பேருந்துகள் அண்ணா நகர் மேற்கு பேருந்து நிலையத்தில் இருந்து புறப்படும். பிற ஊர்களுக்கு செல்லும் பேருந்துகள், வழக்கம் போல் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து புறப்படும். அக்டோபர் 26 முதல் 28 வரை சிறப்பு பேருந்துகளுக்கு முன்பதிவு செய்பவர்கள், அறிவிக்கப்பட்டுள்ள தற்காலிக பேருந்து நிலையங்களுக்கு செல்ல வேண்டும். அனைத்து பேருந்து நிலையங்களுக்கும் இணைப்பு பேருந்துகள் இயக்கப்படும். இவ்வாறு அரசு போக்குவரத்துக்கழகம் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

19.திண்டுக்கல்  பழனி  சாலை ஒட்டன்சத்திரம் அருகே  கோட்டைபட்டியில் கோவையில் இருந்து தேவகோட்டைக்கு சென்றதனியார் பேருந்தும் சிவகாசியில் இருந்து கோவை சென்ற. அரசு பேருந்து  நேருக்கு நேர் மோதியதில் அரசு பேருந்து  ஒட்டுனர் சிதம்பரநாதர் சம்பவ இடத்திடல்  பலி திண்டுக்கல்  அரசு மருத்துவ மனையில் 20 க்கும் மேற்பட்டோர் அனுமதி

20.ஜிசாட் 18 செயற்கைகோள் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.

இந்தியாவின் ஜிசாட் 18 செயற்கைகோள் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. தகவல்தொடர்பு மற்றும் ஒளிப்பரப்பு சேவைக்கு 15 ஆண்டுகள் வரை தன் உழைப்பை செலுத்த தயாராகிறது.இந்தியாவின் இஸ்ரோவிற்கு சொந்தமான ஜிசாட் 18 தகவல் தொடர்பு செயற்கைகோளை விண்ணில் ஏவ முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து பிரெஞ்ச் நாடு கயானா கொருவில் இருந்து ஏரியன் 5 வி.ஏ. 231 ராக்கெட் மூலம் விண்ணில் ஏவ முடிவு எடுக்கப்பட்டது. இந்த ராக்கெட் நேற்று விண்ணில் ஏவப்படுவதாக கூறப்பட்டது.

வெற்றிகரமாக ஏவப்பட்டது இந்நிலையில் நேற்று அதிக காற்றழுத்தம் காரணமாக ராக்கெட்டை விண்ணில் ஏவும் நிகழ்வு 24 மணி நேரம் ஒத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில் இன்று செயற்கைகோள் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.

21.வார்னர், ஸ்மித் சதம்; ஆஸி. 371 ரன்கள் குவிப்பு

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3-ஆவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 371 ரன்கள் குவித்தது.
தென் ஆப்பிரிக்காவின் டர்பன் நகரில் புதன்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணியில் டேவிட் வார்னர்-ஆரோன் ஃபிஞ்ச் ஜோடி முதல் விக்கெட்டுக்கு 13.1 ஓவர்களில் 110 ரன்கள் குவித்து அதிரடி தொடக்கம் ஏற்படுத்தியது.
ஃபிஞ்ச் 53 ரன்களில் வெளியேற, வார்னருடன் இணைந்தார் கேப்டன் ஸ்டீவன் ஸ்மித். அதிரடியாக ஆடிய வார்னர் 96 பந்துகளில் சதம் கண்டார். அவர் 107 பந்துகளில் 2 சிக்ஸர், 3 பவுண்டரிகளுடன் 117 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

22.இராணுவ முகாம் மீது தீவிரவாதிகள் தாக்குதல்

ஜம்மு காஷ்மீரில் லாங்கேட்டில் உள்ள ராணுவமுகாம் மீது தீவிரவாதிகள் தாக்குதல், பாதுகாப்பு படை மற்றும் தீவிரவாதிகள் இடையே கடும் துப்பாக்கி சண்டை நடைபெற்று வருகிறது.

23.ராமேஸ்வரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல்

ராமேஸ்வரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படை அத்துமீறி தாக்குதல் நடத்தியுள்ளது.கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல் நடத்தியது. இலங்கை கடற்படை கப்பலால், மீனவர்களின் விசைப்படகு மீது மோதி கடலில் மூழ்கடிக்கப்பட்டது. நடுக்கடலில் ஆபத்தான நிலையில் தத்தளித்த 5 மீனவர்களை சக மீனவர்கள் மீட்டுள்ளனர்.
http://www.sivakasiteacherkaruppasamy.blogspot.com
24.ஹந்த்வாராவில் ராணுவ முகாம் அருகே துப்பாக்கிச் சண்டை : 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் ஹந்த்வாராவில் ராணுவ முகாம் அருகே தீவிரவாதிகள் மற்றும் பாதுகாப்பு படையினரிடையே நடந்த துப்பாக்கிச் சண்டையில் 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். தீவிரவாதிகள்- பாதுகாப்பு படையினர் இடையே தொடர்ந்து  துப்பாக்கிச் சண்டை நீடித்து வருகிறது.

--------------+++++++----------++++++---------

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here