இன்றைய செய்தித்தாள் 07/10/2016 - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

இன்றைய செய்தித்தாள் 07/10/2016

         
http://www.sivakasiteacherkaruppasamy.blogspot.com
🌍மழை தொடரும்; வெயில் குறையும்: வானிலை மையம்

சென்னை : 'வங்க கடலில், இரண்டு இடங்களில் மேல் அடுக்கு சுழற்சி ஏற்பட்டுள்ளதால், தமிழகத்தில் மழை பெய்யும், வெயில் குறையும்' என, வானிலை மையம் தெரிவித்துள்ளது.

📡தீபாவளிக்கு சீன பட்டாசு வாங்காதீர்!: நடிகர் விவேக் வேண்டுகோள்
சீனா அரசோ பாகிஸ்தான் நாட்டுக்கு ஆதரவு தெரிவித்து வருகிறது. சீனாவில் உற்பத்தியாகி இந்தியா வரும் பிரம்மபுத்திரா நதியின் குறுக்கே அணை கட்டி, இந்தியாவுக்கு வரும் நீரைத் தடுக்க திட்டமிட்டு வருகிறது.

இதனால் சீனாவின் நடவடிக்கைக்கு எதிராக பலரும் கருத்து வெளியிட்டு வருகிறார்கள். இந்த நிலையில், நடிகர் விவேக், "சீன பொருட்களை புறக்கணிக்க வேண்டும். குறிப்பாக வரும் தீபாவளிக்கு சீன பட்டாசுகளை வாங்காதீர்கள்" என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.

" விழித்துக்கொள்வோம் நாம்! இனி சீனா பொருட்கள் வேண்டாம்! இந்திய உற்பத்திகளையே உபயோகிப்போம்!" என்று தனது ட்விட்டர் பக்கத்தில் விவேக் பதிவிட்டுள்ளார்.

📡சிதம்பரம் அருகே கட்டுப்பாட்டை இழந்து வீட்டுக்குள் புகுந்த லாரி

சிதம்பரம்: சிதம்பரம் அருகே பு.முட்லூரில் கட்டுப்பாட்டை இழந்த லாரி விஜயா என்பவரின் வீட்டுக்குள் புகுந்தது. மோதிய வேகத்தில் லாரி தீப்பிடித்து எரிந்தது, இதனையடுத்து விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர் தீயை அணைத்தனர். அதிஷ்டவசமாக இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. 

🌍முப்படை தளபதிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை

இந்திய விமானப்படை தினத்தை முன்னிட்டு, விமானப்படை தளபதி அருப் ராஹா வியாழக்கிழமை டெல்லியில் விருந்து அளித்தார். அதில், ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, துணை ஜனாதிபதி ஹமீத் அன்சாரி, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் முக்கிய பிரமுகர்கள் பலர் கலந்துகொண்டனர்.

📡காஷ்மீரில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

காஷ்மீரில் மீண்டும் ராணுவ முகாமை தாக்க முயன்ற 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
அவர்கள் கொண்டு வந்திருந்த 3 ஏ.கே. ரக துப்பாக்கிகள், வரைபடங்கள், ரேடியோ கருவிகள், உணவு பொருட்கள், ஏராளமான வெடிபொருட்கள் மற்றும் ஆயுதங்கள் என ஏராளமான பொருட்கள் கைப்பற்றப்பட்டன.

🌍ராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம்

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை தொடங்கினர். இலங்கை சிறையில் வாடும் 5 மீனவர்களையும், 115 விசைப்படகுகளையும் விடுவிக்க கோரி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ராமேஸ்வரத்தில் உள்ள 800 மீனவர்களும் மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை. 

📡17, 18 தேதிகளில் தொடர் ரெயில் மறியல்: விவசாயிகள் நடத்திய அனைத்துக்கட்சிகள் கூட்டத்தில் தீர்மானம்

காவிரி நதிநீர் விவகாரத்தில் தமிழகத்தின் உரிமையை நிலைநாட்டுவதற்கு மேற்கொள்ள வேண்டிய அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசிப்பதற்காக தமிழக விவசாயிகள் சங்கங்களின் கூட்டியக்கத்தினர் அனைத்துக் கட்சிகள் கூட்டத்துக்கு நேற்று ஏற்பாடு செய்திருந்தனர்.

அதன்படி, சென்னை எழும்பூரில் உள்ள இக்சா மையத்தில் அனைத்துக்கட்சிகள் கூட்டம் நேற்று காலை 11.15 மணியளவில் தொடங்கியது. கூட்டத்துக்கு தமிழக விவசாயிகள் சங்கங்களின் கூட்டியக்கத்தின் தலைவர் தெய்வசிகாமணி தலைமை தாங்கினார்.

கூட்டத்தில், தி.மு.க. துணை பொதுச்செயலாளர் வி.பி.துரைசாமி, தமிழக பா.ஜ.க. தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், காங்கிரஸ் கட்சி முன்னாள் எம்.பி., பீட்டர் அல்போன்ஸ், விவசாய பிரிவு தலைவர் பவன்குமார், ம.தி.மு.க.

🌍மேட்டூருக்கு நீர் வரத்து அதிகரிப்பு..

மேட்டூர்: கர்நாடக அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் திறந்து விடப்படும் தண்ணீரின் அளவு அதிகரித்து வருவதால் மேட்டூர் அணைக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. கர்நாடகத்தின் கபிணி, கேஆர்எஸ் அணைகளிலிருந்து காவிரியில் நீர் திறந்து விடப்பட்டதால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

📡மத்தேயு சூறாவளி: உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 339 ஆக உயர்வு

ஹெய்ட்டி: கரீபியன் நாடுகளில் ஒன்றான ஹெய்ட்டியை மத்தேயு சூறாவளி தாக்கியுள்ளது. இந்த மத்தேயு சூறாவளியில் சிக்கி இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 339 ஆக அதிகரித்துள்ளது. இந்நிலையில் அமெரிக்காவில் உள்ள தேசிய புயல் மையம், மத்தேயு சூறாவளி படிப்படியான குறைந்து வருகிறது என்றும், அடுத்த 48 மணி நேரத்தில் முழுமையாக நின்றுவிடும் என்றும் தெரிவித்துள்ளது. 

🌍பாக்., ராணுவத்திற்கு பொது மக்கள் கடும் எச்சரிக்கை

இஸ்லாமாபாத் : பாகிஸ்தான் ராணுவ தலைமைக்கு முன் எப்போதும் இல்லாத அளவிற்கு அந்நாட்டு மக்கள் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளனர். பயங்கரவாதிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் அல்லது சர்வதேச நாடுகள் தனிமைப்படுத்துவதை பாக்., எதிர்கொள்ள வேண்டி இருக்கும் என தெரிவித்துள்ளனர். சமீபத்தில் பொது மக்கள் மற்றும் ராணுவ தலைமை இடையே ஆலோசனை கூட்டம் ஒன்று நடந்தது. இதில் பொது மக்கள் தரப்பில், பயங்கரவாத அமைப்புக்களை தடை செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல நடவடிக்கைகளை எடுக்க ராணுவத்திடம் கேட்கப்பட்டது. மேலும் பதன்கோட் தாக்குதல் மற்றும் மும்பை தாக்குதல் தொடர்பாக புதிதாக விசாரணையை துவக்க வேண்டும் என பாக்., பிரதமர் நவாஸ் ஷெரீப், ராணுவத்தின் தலைமையிலான உளவுத்துறையை அறிவுறுத்த வேண்டும் எனவும் கேட்கப்பட்டுள்ளது.

📡பயங்கரவாத தாக்குதல் அச்சுறுத்தல்: 22 விமான நிலையங்களுக்கு பலத்த பாதுகாப்பு

புதுதில்லி: இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றமான சூழல் நிலவி வருவதையொட்டி, எல்லைப் பகுதிகளில் உள்ள மாநிலங்களில் உள்ள விமான நிலையங்களுக்கு பயங்கரவாத தாக்குதல் அச்சுறுத்தல் உள்ளதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதையடுத்து 4 மாநிலங்களில் 22 விமானநிலையங்களுக்கு பாதுகாப்பை பலப்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

🌍4 மாநில முதல்வர்களுடன் ராஜ்நாத் சிங் இன்று ஆலோசனை

புதுடில்லி : பாகிஸ்தான் எல்லையை ஒட்டிய 4 மாநிலங்களின் முதல்வர்களுடன் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று ஆலோசனை நடத்த உள்ளார்.காஷ்மீர், பஞ்சாப், குஜராத், ராஜஸ்தான் ஆகிய மாநில முதல்வர்கள் மற்றும் உள்துறை அமைச்சர்களை சந்தித்து பேசிய பிறகு, பாதுகாப்பு படையினரையும் அழைத்து எல்லையோர பாதுகாப்பு குறித்து ராஜ்நாத் சிங் ஆலோசனை நடத்த உள்ளார்

📡எல்லையில் தொடர்ந்து பாக்., ராணுவம் அத்துமீறல்

ஜம்மு : யூரி தாக்குதலுக்கு பிறகு சர்வதேச நாடுகள் பாகிஸ்தானிற்கு கடும் கண்டனம் தெரிவித்த பிறகு, இந்திய எல்லையில் பாக்., படைகள் அத்துமீறி தாக்குதல் நடத்துவதை தொடர்ந்து வருகின்றன. இன்று அதிகாலை மல்தி மற்றும் பூஞ்ச் பகுதிகளில் அத்துமீறி ஊடுருவிய பாக்., படைகள், இந்திய ராணுவ நிலைகளை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகின்றன.இந்த தாக்குதலில் உயிரிழப்புக்கள் ஏதும் ஏற்படவில்லை. கடந்த 10 நாட்களில் பாகிஸ்தான் படைகள் அத்துமீறி நடத்தும் 25வது தாக்குதல் இதுவாகும். பாக்., படைகளின் தாக்குதலுக்கு இந்திய ராணுவமும் பதிலடி கொடுத்து வருகிறது. இதனால் எல்லையில் துப்பாக்கிச் சண்டையும், அதன் காரணமாக பதற்ற நிலையும் தொடர்ந்து வருகிறது.

📡தஞ்சையில் ஸ்டாலின் தலைமையில் உண்ணாவிரதம்

தஞ்சாவூர் : மத்திய அரசை கண்டித்து திமுக சார்பில் தஞ்சையில் உண்ணாவிரத போராட்டம் நடந்து வருகிறது. திமுக பொருளாளர் ஸ்டாலின் தலைமையில் நடக்கும் இந்த போராட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டுள்ளனர்.காவிரி நதிநீர் விவகாரத்தில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசு மறுத்து வருவதை கண்டித்து திமுக சார்பில் தஞ்சையில் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. திமுக பொருளாளர் ஸ்டாலின் தலைமையில் நடக்கும் இந்த உண்ணாவிரத போராட்டத்தில் துரைமுருகன், பொன்முடி உள்ளிட்ட திமுக.,வினர் கலந்து கொண்டுள்ளனர்.

🌍கூலிப்படையினரை பிடிக்கச் சென்ற காவல் ஆய்வாளருக்கு அரிவாள் வெட்டு: துப்பாக்கியால் சுட்டதால் பரபரப்பு

மதுரை காமராஜர் புரத்தில் கொலை முயற்சியில் ஈடுபட்ட கூலிப்படையினரை பிடிக்கச் சென்ற காவல் ஆய்வாளர் அரிவாளால் வெட்டப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டம், கீழ்மதுரை அருகே உள்ள காமராஜர் புரத்தில் திமுக பிரமுகர் குருசாமி என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவருக்கும் இதே பகுதியைச் சேர்ந்த அதிமுக பிரமுகருக்கும் முன் விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் 7 பேர் கொண்ட கும்பல் ஒன்று நேற்று இரவு குருசாமி வீட்டிற்கு வந்துள்ளது. அப்போது குருசாமி வீட்டில் இல்லாததால் சாலையில் சென்றவர்கள் மீததும, சாலை ஓரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்கள் மீதும் தாக்குதல் நடத்தி உள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்து. இதுகுறித்து தகவல் அறிந்த கீரத்துறை காவல் நிலைய ஆய்வாளர் சூரக்குமார் தலைமையிலான போலீசார் அந்த கும்பலை விரட்ட முயற்சித்துள்ளனர். அப்போது அந்த கும்பலால் காவல் ஆய்வாளர் சூரக்குமார் அரிவாளால் வெட்டப்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து சூரக்குமார் துப்பாக்கியால் வானத்தை நோக்கி சுட்டுள்ளார்.

இதனால் பயத்தில் அந்த கும்பல் 4 பேர் தப்பியோடினர். 3 பேரை போலீசார் பிடித்தனர். அவர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

📡மதுரையில் மின்சாரம் தாக்கி கட்டிடக் தொழிலாளர்கள் இருவர் பலி

மதுரை: மதுரையில் மின்சாரம் தாக்கி கட்டிடக் தொழிலாளர்கள் இருவர் உயிரிழந்தனர். மதுரை எஸ்.எஸ்.காலனியில் வேலை செய்தபோது மின்கம்பி உரசி சண்முகம், ராமச்சந்திரன் உயிரிழந்த்னர் . 

🌍பாகிஸ்தான் நடிகர்களை வெளியேறச் சொல்வது தேவையற்ற ஒன்று: அகிலேஷ் யாதவ்

பாகிஸ்தான் நடிகர்களை வெளியேறச் சொல்வது தேவையற்ற ஒன்று என உத்திரப்பிரதேச மாநில முதல் அமைச்சர் அகிலேஷ்யாதவ் கூறியுள்ளார்.

📡காவிரி உயர்மட்ட தொழில்நுட்பக் குழு ஆலோசனை

பெங்களூரு: பெங்களூருவில் காவிரி உயர்மட்ட தொழில்நுட்பக் குழு ஆலோசனை நடத்தி வருகிறது. மத்திய நீர்வள ஆணையர் தலைவர் சி.எஸ்.ஜா தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது. 

🌍ஐ.நா. பொதுச் செயலர் பதவி: அன்டோனியோ குட்டெரெஸ் தேர்வுக்கு இந்தியா வரவேற்பு

நியூயார்க்: ஐ.நா. சபையின் புதிய பொதுச் செயலராக போர்ச்சுகல் நாட்டு முன்னாள் பிரதமர் அன்டோனியோ குட்டெரெஸ் தேர்வு செய்யப்படுவதை இந்தியா வரவேற்றுள்ளது.
இதுகுறித்து ஐ.நா.வுக்கான இந்தியத் தூதர் சையது அக்பருதீன் சுட்டுரை (டுவிட்டர்) வலைதளத்தில் பதிவிட்டுள்ளதாவது:
ஐ.நா.வின் புதிய பொதுச் செயலராக அன்டோனியோ குட்டெரெஸ் தேர்ந்தெடுக்கப்படுவதை இந்தியா வரவேற்கிறது.

📡பலாத்கார வழக்கில் சிக்கிய ஆர்ஜேடி எம்எல்ஏ - லாலு சந்திப்பு

பாட்னா: பலாத்கார வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள ராஷ்ட்ரீய ஜனதா தளக் கட்சி எம்எல்ஏ ராஜ் வல்லப யாதவ், அக்கட்சித் தலைவர் லாலு பிரசாத்தை சந்தித்தார்.
அவரது ஜாமீனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை இன்று வெள்ளிக்கிழமை நடைபெறுவதையொட்டி இந்தச் சந்திப்பு நடந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக நவாடா தொகுதி எம்எல்ஏ வல்லப யாதவ் கடந்த சில மாதங்களுக்கு முன்பு போலீஸாரால் கைது செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து, அவர் ராஷ்ட்ரீய ஜனதா தளக் கட்சியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டார்.
இந்த வழக்கில் அவருக்கு பாட்னா உயர் நீதிமன்றம் கடந்த வாரம் ஜாமீன் வழங்கியது.

இதையடுத்து, அவரது ஜாமீனை எதிர்த்து பிகார் அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவானது வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வரவுள்ளது.
இந்நிலையில், ராஷ்ட்ரீய ஜனதா தளக் கட்சித் தலைவர் லாலு பிரசாத்தை அவரது இல்லத்தில் வல்லப யாதவ் வியாழக்கிழமை காலை சந்தித்துப் பேசினார். இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், "மாநில அரசு மீது எந்தவித வருத்தமும் இல்லை. துர்கா பூஜையையொட்டி வாழ்த்து தெரிவிக்க வந்தேன்' என்றார்.
எனினும், இந்தச் சந்திப்பு குறித்து செய்தியாளர்களிடம் லாலு பிரசாத் எதுவும் கூறவில்லை.


🌍இந்திய ரூபாய் மதிப்பில் கடும் சரிவு : 66.75

மும்பை : வாரத்தின் இறுதி வர்த்தக நாளான இன்று (அக்.,07) சர்வதேச அந்நிய செலாவணி சந்தையில் இந்திய ரூபாயின் மதிப்பு 18 காசுகள் சரிவடைந்துள்ளது. இன்றைய வர்த்தக நேர துவக்கத்தின் போது அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 18 காசுகள் சரிந்து 66.75 ஆக இருந்தது. முன்னதாக நேற்றைய வர்த்தக நேர முடிவில் ரூபாயின் மதிப்பு 66.69 ஆக இருந்தது. ரிசர்வ் வங்கி அறிவித்த வட்டி விகித குறைப்பை அடுத்து சர்வதேச சந்தையில் டாலரின் மதிப்பு வலுவடைந்துள்ளது. இதன் காரணமாகவும், டாலருக்கு எதிரான பிற நாடுகளின் நாணய மதிப்பு சரிவடைந்ததன் காரணமாக இந்திய ரூபாய் மதிப்பில் சரிவு ஏற்பட்டுள்ளது.

📡லஷ்கர் பயங்கரவாதிகள் மிரட்டல்: காஷ்மீர் அமைச்சருக்கு கூடுதல் பாதுகாப்பு

ஸ்ரீநகர்: பதற்றம் நீடித்து வரும் ஜம்மு- காஷ்மீர் மாநிலத்தில் மூடப்பட்ட பள்ளிகளை மீண்டும் இயக்குவதற்கான நடவடிக்கைகளை எடுக்க முயன்ற கல்வித் துறை அமைச்சருக்கு லஷ்கர்-ஏ-தொய்பா பயங்கரவாத அமைப்பினர் மிரட்டல் விடுத்ததைத் தொடர்ந்து, அவரது பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

🌍மலேஷியா ஏர்லைன்ஸ் விமானத்தின் பாகங்கள் கண்டுபிடிப்பு

மலேசியா: காணாமல் போன மலேஷியா ஏர்லைன்ஸ் விமானம் MH370 பாகங்கள் மொரிஷியஸில் கண்டுபிடிக்கப்பட்டது. மொரிஷியஸில் கண்டுபிடிக்கப்பட்ட பாகங்கள் மலேஷியா ஏர்லைன்ஸ் விமானம் MH370 பாகங்கள் தான் என்றும் உறுதியாகியுள்ளது. 2014ம் ஆண்டு மார்ச் 8ம் தேதி கோலாலம்பூரில் இருந்து பெய்ஜிங்க்கு சென்ற மலேஷியா ஏர்லைன்ஸ் விமானம் MH370, 239 பேருடன் காணாமல் போனது குறிப்பிடத்தக்கது. 

📡உள்ளாட்சி தேர்தல் தடை: நன்னடத்தை விதிகள் ரத்து! தேர்தல் ஆணையர்

சென்னை:

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டதில் இருந்து நன்னடத்தை விதிகள் அமலுக்கு வந்தன. தற்போது அது ரத்து செய்யப்பட்டுள்ளதாக தமிழக தேர்தல் ஆணையர் தெரிவித்து உள்ளார்.

📡அதிகமான சத்தம் எழுப்பும் காலி பாத்திரம்: பாரிக்கர்

எதிரிகள் அத்துமீறினால் தக்க பதிலடி கொடுக்க ராணுவத்திற்கு சுதந்திரம் கொடுக்கப்பட்டுள்ளது என்று மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் கூறியுள்ளார்.

உத்திரப்பிரதேச மாநிலம் லக்னோவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர்,

நாட்டின் பாதுகாப்பு தொடர்பான விஷயத்தில் எந்தவிதமான சமரசத்துக்கும் இடமில்லை. பிரதமர் நரேந்திர மோடி அரசின் கீழ் நாடு மிகவும் பாதுகாப்பாக இருக்கிறது. தீவிரவாதிகள் தாக்கினால் சரியான பதிலடி கொடுக்கப்படும். எதிர்காலத்தில் தீவிரவாதிகள் எந்தவொரு விபரீத முயற்சியை மேற்கொண்டாலும் அது அவர்களுக்கு எதிராகவே திரும்பும். இந்த பதிலடிக்கு முடிவே கிடையாது.

🌍ஜெய்சால்மர் வந்தடைந்தார் ராஜ்நாத் சிங்

ஜெய்சால்மர்: ராஜஸ்தானுக்கு இரண்டு நாள் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தற்போது ஜெய்சால்மர் வந்தடைந்தார். ராஜஸ்தான் முதல்வர் வசுந்தரா ராஜே. ஜெய்சால்மர் விமான நிலையத்திற்கு சென்று அவரை வரவேற்றார். 

📡சிவகாசி அருகே பேராபட்டி கிராமத்தில் பட்டாசு கிடங்கில் பயங்கர தீ விபத்து

பேராபட்டி: சிவகாசி அருகே பேராபட்டி கிராமத்தில் உள்ள பட்டாசு கிடங்கு ஒன்றில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் அருகே செல்ல முடியாத படி பட்டாசுகள் வெடித்து சிதறுகின்றன. தீபாவளிக்காக தயார் செய்து வெளியூர்களுக்கு அனுப்ப வைத்திருந்த பட்டாசுகள் இந்த தீ விபத்தில் பற்றி எரிகின்றன. பேராபட்டியில் பட்டாசு கிடங்கு தீப்பற்றி எரிவதால் அப்பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்துள்ளது. 

🌍பருவநிலை மாற்றம் அதிகரிப்பதைக் கட்டுப்படுத்தி, நாட்டில் வளமான சமூகத்தை உருவாக்குதை இலக்காக கொள்ள வேண்டும் என ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி வலியுறுத்தினார்.

📡இளைஞரின் உடலில் இருந்த 18 செ.மீ. நீள வால் அறுவை சிகிச்சையில் அகற்றம்

நாக்பூரைச் சேர்ந்த 18 வயது இளைஞனின் உடலின் பின்பகுதியில் வளர்ந்திருந்த 18 செ.மீ. நீளமுள்ள வால் பகுதியை, நரம்பியல் சிகிச்சை நிபுணர்கள் அறுவை சிகிச்சை மூலம் அகற்றினர்.

* ZZZZzrWwwdx

🌍வங்க கடலில், இரண்டு இடங்களில் மேல் அடுக்கு சுழற்சி ஏற்பட்டுள்ளதால், தமிழகத்தில் மழை பெய்யும், வெயில் குறையும்' என, வானிலை மையம் தெரிவித்துள்ளது.

📡மதுரை கீரைத்துறையில் போலீஸ் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளது. குருசாமி என்பவரது வீட்டில் தாக்குதல் நடத்திய 6 பேர் கும்பலை பிடிக்கச் சென்றபோது போலீஸ் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளது. அந்த 6 பேர் கொண்ட கும்பல் கீரைத்துறை இன்ஸ்பெக்டர் சூரக்குமாரை அரிவாளால் தாக்க முயன்றது. அப்போது கும்பலை நோக்கி போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர்.

🌍கோயம்பேடு தக்காளி மார்க்கெட்டில் மதுபாட்டிலால் தொழிலாளி அடித்துக் கொலை

சென்னை கோயம்பேடு தக்காளி மார்க்கெட்டில் கண்ணன் என்ற தொழிலாளி அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார். கண்ணன் தலையில் மதுபாட்டிலால் அடித்துக் கொலை செய்த சக தொழிலாளி ஆனந்தன் கைது செய்யப்பட்டுள்ளார். மது அருந்தும் போது ஏற்பட்ட தகராறே கொலைக்கு காரணம் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

🌍தமிழக மீனவர்களுக்கு பாதுகாப்பு அளிக்க இந்திய கடலோரக் காவல் படைக்கு உத்தரவிடக் கோரும் மனுவை தள்ளுபடி செய்து, சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை வியாழக்கிழமை உத்தரவிட்டது

📡கரீபியன் நாடுகளில் ஒன்றான ஹெய்ட்டியை மத்தேயு சூறாவளி தாக்கியுள்ளது. இந்த சூறாவளியில் சிக்கி 98 உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் மத்தேயு சூறாவளியில் சிக்கி இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 102 ஆக அதிகரித்துள்ளது.

📡🌍📡🌍📡🌍📡🌍📡🌍📡

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here