சினிமா துறையில் முத்திரைபதிக்க காத்திருக்கும் இளைஞர்படை: சினிமாவை கைப்பற்றும் சமூகத்திற்கு மதிப்புக்கூடுகிறது........ - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

சினிமா துறையில் முத்திரைபதிக்க காத்திருக்கும் இளைஞர்படை: சினிமாவை கைப்பற்றும் சமூகத்திற்கு மதிப்புக்கூடுகிறது........

சினிமா துறையில் நம் சமூக உறவுகள் இல்லை என்ற கவலை இனி வேண்டாம்... நம் சமூகத்தின் மீது தீவிர பற்று கொண்ட ஒரு குழு அமைதியாக பட்டை தீட்டி கொண்டு உள்ளது. 80% படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்த நிலையில் விரைவில் திரைக்கு வர உள்ளது... திருநெல்வேலியை சேர்ந்த அண்ணன் ரித்தீஷ் அவர்களை நேற்று வளசரவாக்கத்தில் சந்தித்தேன் வாஞ்சையோடு என்னை அழைத்து படத்தின் பாடல்களையும் சில காட்சிகளையும் போட்டு காட்டினார்... படம் எதார்த்தமாகவும் எதிர்பார்ப்போடும் இருந்தது... பாடல்கள் மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டும் வகையில் இருந்தது... இதில் என்ன ஆச்சரியம் என்றால் இசை அமைப்பாளர், பாடகர், பாடல் ஆசிரியர், நடிகர்கள், உதவி இயக்குநர் என அனைவரும் நம் சமூக மக்களே.. விரைவில் வெற்றி படமாக வெளிவர இருக்கிறது... விடிய விடிய அதிகாலை நான்கு மணி வரை நம் சமூகம் நம் மக்கள் முன்னேற்றம் பற்றியே பேசினார்கள். அப்போது நம் சமூகத்தை சேர்ந்தவர்களை மிகப்பெரிய தயாரிப்பாளர்களாகவும் இயக்குனர்களாகவும் உருவாக்க வேண்டும், மேலும் ஆர்வமும் திறமையும் உள்ள நம் மக்களை அழைத்து வாருங்கள் அனைவருக்கும் வாய்ப்புகள் கொடுப்போம் என்றார்... இந்த படத்தில் எல்லா பாடல்களிலும் காட்சிகளிலும் நடிகர்களின் உடை மற்றும் பேக் கிரவுண்டில் நம் சமூக கொடியின் நிறமான சிவப்பு பச்சை நிறங்களை அதிகமாக பயன்படுத்தி உள்ளார்... சினிமா துறையில் ஆர்வம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளவும்... இனி நாமும் களம் இறங்கியாச்சு ஏறும் போரும் எம் குல தொழில் என்று....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here