இரவு செய்தி 14/10/2016 - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

இரவு செய்தி 14/10/2016

http://www.sivakasiteacherkaruppasamy.blogspot.com
*தாய்லாந்து: முடிசூட்டிக்கொள்ள அவகாசம் கேட்டு ஆச்சரியமூட்டியுள்ள பட்டத்து இளவரசர்-தாய்லாந்து மன்னர் பூமிபோன் அடூன்யடேட் மறைந்ததை தொடர்ந்து,தாற்காலிக பிரதிநிதி ஒருவர் உயர்நிலை அரச ஆலேராசகராக நியமிக்கப்பட்டுள்ளதாக தாய்லாந்து ஊடகங்கள் தெரிவித்துள்ளன.புதிய மன்னர் முடிசூடுவதற்கு முன்னால், எதிர்பார்க்கப்படாத வகையில், முன்னாள் பிரதமர் பிரேம் டின்சுலாநோன்டா அரச குடும்ப ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார்.பட்டத்து இளவரசர் மஹா வஜிரலோங்கோன் அடுத்த மன்னராக முடிசூடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.ஆனால், தன்னுடைய தந்தையின் இழப்பினால் ஏற்பட்டுள்ள துக்கத்தை அனுசரிக்க, அதிக நேரம் தேவைப்படுவதால், அரியணை ஏறும் வழிமுறையை தொடங்குவதை சற்று தாமதப்படுத்த வேண்டுமென அவர் கேட்டுள்ளதாக தோன்றுகிறது.அவருடைய இந்த வேண்டுகோள் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது* - *வியாழக்கிழமை காலமானதாய்லாந்து மன்னர் பூமிபோன் அடூன்யடேட்டின் உடல் எடுத்து செல்லப்படுவதை காண்பதற்கு கறுப்பு நிற உடைகள் அணிந்து பல லட்சக்கணக்கான மக்கள் பாங்காக் சாலையோரமாக அணிவகுத்து காணப்படுகின்றனர்*

♈🇮🇳🌴1] *சமீபமாக தமிழில் க்ரைம் த்ரில்லர் படங்கள் அதிகம் வருகின்றன. அந்த வரிசையில் மிரட்ட வருகிறது, 8 தோட்டாக்கள்* ஸ்ரீ கணேஷ் இயக்கும் இந்தப் படத்தில் வெற்றி, அபர்ணா பாலமுரளி நடிக்கின்றனர். அபர்ணா பாலமுரளி மலையாள நடிகை. அவரது மகேஷின்டெ பிரதிகாரம் படத்தைப் பார்த்துவிட்டு ஸ்ரீ கணேஷ் தனது படத்தில் ஒப்பந்தம் செய்துள்ளார். ரிப்போர்ட்டராக இதில் அபர்ணா வருகிறார்.இந்தப் படத்தில் நாசர், எம்.எஸ்.பாஸ்கர் உள்ளிட்டோரும் நடிக்கின்றனர்

♈🇮🇳🌴2] *இருமுகன் படத்தின் போது, அடுத்து நடிப்பதற்கு கதையும், இயக்கனரும் தேர்வு செய்து வைத்திருந்தார் விக்ரம். பிரம்மன் படத்தை இயக்கிய சாக்ரடீஸ் தான் அந்த அதிர்ஷ்டசாலி*
♈🇮🇳🌴3] *டெல்லி மெட்ரோ ரயிலில் இன்று முதல் பயணிகள் இலவச வைஃபை வசதி துவக்கப்பட்டுள்ளது*

♈🇮🇳🌴4] *தமிழக முதல்வர் ஜெயலலிதா விரைவில் பொறுப்புகளை ஏற்பார் என்று அதிமுக செய்தித் தொடர்பாளர் பண்ருட்டி ராமச்சந்திரன் கூறியுள்ளார்*

♈🇮🇳🌴5] *பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமபாத்தில் கடவுளை அவமதித்ததாக குற்றம் சாட்டப்பட்ட ஆசியா பிபி என்ற இளம்பெண்ணை உடனடியாக தூக்கிலிடவேண்டும் என்று வலியுறுத்தி ஏராளமானோர் போராட்டத்தில் பங்கேற்றனர்*

♈🇮🇳🌴6] *இளம் வயது ஆண் மற்றும் பெண், தங்களது உடல் எடையை குறைக்க சிகரெட் பிடிப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது*அமெரிக்காவில் இளம் வயதினரிடையே புகைப்பழக்கம் அதிகமாகி கொண்டிருக்கும் நிலையில் அங்கு இளம் வயது ஆண் மற்றும் பெண்களிடம் சிகரெட் பிடிப்பது தொடர்பாக ஆய்வு நடத்தப்பட்டது.ஆய்வில் அதற்கான காரணத்தை வெளியிட்டுள்ளனர். இளம் வயது ஆண் மற்றும் பெண் தங்களது எடையை குறைத்து மெலிந்த உடலை பராமரிக்க சிகரெட் பிடிப்பதாக தெரியவந்துள்ளது.20க்கும் உட்பட்டவர்கள் சிகரெட் பிடிப்பதற்கு பழகினால், அவர்கள் தங்கள் முதுமை வயதில் அதை தொடர்வார்கள் என்று தெரிவித்துள்ளனர்

♈🇮🇳🌴7] *மாணவர்களை அடித்த தலைமை ஆசிரியை பள்ளிக்கு செல்லவிடாமல் தடுப்பு* - *தேனி மாவட்டம், போடி அருகே கரட்டுபட்டியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்ளது. இங்கு, சுமார் 250 மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். தலைமையாசிரியையாக மகாலட்சுமி மற்றும் 10 ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர்.தலைமையாசிரியை, ஆசிரியர்களை தரக்குறைவாக பேசுவதாகவும், மாணவ, மாணவிகளை அடித்து காயப்படுத்துவதாகவும் கரட்டுப்பட்டி மக்கள் புகார் தெரிவித்தனர். இவரை பணியிட மாற்றம் செய்யக்கோரி மாவட்ட கல்வித்துறை அதிகாரிகளிடம் புகார் செய்தனர்.ஆனால் தலைமை ஆசிரியர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படாததால் ஆத்திரம் அடைந்த கரட்டுப்பட்டி மக்கள் நேற்று பள்ளியின் கேட்டை பூட்டினர். இதனால் தலைமையாசிரியை மகாலட்சுமி, ஆசிரியர்கள் பள்ளிக்கு செல்ல முடியாமல் வாசலில் நின்றிருந்தனர்*
♈🇮🇳🌴8] *முதல்வர் ஜெ. குறித்து தவறாக வதந்தி பரப்புவதாக சைபர் கிரைம் பிரிவு திமுகவினரின் முகநூல் மற்றும் வலைதளங்களை முடக்கி, வழக்குப்பதிவு செய்வதாக அற்றுத்துல் போன்ற நடவடிக்கைகளை தடுத்து நிறுத்த வேண்டும் என்று சென்னை மாநகர காவல்துறை, சைபைர் கிரைம் பிரிவு துணை ஆணையாளர், சைபர் க்ரைம் பிரிவு உதவி ஆணையாளர் ஆகியோரிடம் திமுக சட்டத்துறை இணைச் செயலாளர் பரந்தாமன், திமுக தலைமைக் கழக வழக்கறிஞர் சூர்யா வெற்றி கொண்டான் ஆகியோர் புகார் அளித்துள்ளனர்*

♈🇮🇳🌴9] *ராயபுரத்தில் நடந்தது போல பழிக்குபழி வாங்கிய அதே போன்று ஒரு கொலை* *18 ஆண்டுகளுக்கு பிறகு பழி தீர்த்த மகன்* -  *பூந்தமல்லி அருகே உள்ள மேல்மனம்மேடு கிராமத்தைச் சேர்ந்தவர் மனோகரன். இவர் முன்னாள் பஞ்சாயத்து தலைவர். 1998ம் ஆண்டு வெள்ளவேடு காவல்நிலையம் அருகில் தங்கராஜின் தரப்பினரால் வெட்டி கொலை செய்யப்பட்டார். அப்போது மனோகரனுக்கு ராஜேஷ் என்ற ஒரு மகன் இருந்தார். சிறு வயதில் தன் தந்தை கொலை செய்யப்பட்டது மாறாத காயமாக இருந்ததால் மனோகரனை கொலை செய்ய கடந்த 5 ஆண்டுகளாக திட்டம் தீட்டி வந்தார். தங்கராஜை கொலை செய்ய சென்னையில் உள்ள பிரபல கூலிப்படையில் ராஜேஷ் சேர்ந்தார். அங்கு பயிற்சி பெற்ற பிறகு நண்பர்கள் துணையுடன் 6 பேர் கொண்ட குழுவுடன் தன் தந்தை எந்த இடத்தில் கொலை செய்யப்பட்டாரோ அதே இடத்தில் இன்று தங்கராஜ் வெட்டி கொலை செய்யப்பட்டார். இறந்துபோன தங்கராஜுக்கு 100 கோடி ருபாய் அளவிற்கு சொத்துக்கள் உள்ளன. இரண்டு செங்கல் சேம்பர், இரண்டு ஜெ.சி.பி. இயந்திரம் மற்றும் 3 கார்கள் உள்பட சென்னையில் பல இடங்களில் வீடுகளும் உள்ளன. மேலும், தங்கராஜ் ரியல் எஸ்டேட் தொழிலில் பல கோடி ருபாய் சம்பாதித்துள்ளார். இன்று காலை செல்போன் மூலம் தங்கராஜை வேவு பார்த்த கூலிப்படையினர் அவருடன் ஆட்கள் இல்லாத நேரத்தில் நேரம் பார்த்து தங்கராஜை வெட்டி கொலை செய்துள்ளனர்* சென்னை ராயபுரத்திலும் பல வருடங்களுக்கு முன்னாள் இதே போன்று ஒரு கொலை நடந்தது.கர்ணன் என்பவரை ஹரி என்பவரின் தம்பி பல ஆண்டுகள் கழித்து போட்டு தள்ளினார்.

♈🇮🇳🌴10] *சென்னை : ராமர் பிள்ளைக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து சென்னை சிபிஐ நீதிமன்றம் உத்தரவிட்டது. மூலிகை பெட்ரோல் தயாரிப்பதாக கூறி பலரிடம் ரூ.2.27 கோடி மோசடி செய்ததாக வழக்கு தொடரப்பட்டது குறிப்பிடத்தக்கது*

♈🇮🇳🌴11] *கூடங்குளம் 2-வது அணுஉலையில் மாலை 6.14 மணிக்கு மின் உற்பத்தி தொடங்கப்பட்டது. 2-வது அணு உலையில் ஆகஸ்ட் 21-ம் தேதி முதன்முதலாக மின்உற்பத்தி தொடங்கப்பட்டது. மின்உற்பத்தி 300 மெகாவாடை எட்டியவுடன் பராமரிப்பு பணிக்காக உற்பத்தி நிறுத்தப்பட்டிருந்தது தற்போது மீண்டும் மின்உற்பத்தி தொடங்கப்பட்டது*

♈🇮🇳🌴12 *திருவண்ணாமலை: ஆரணியை அடுத்த வடபாதிமங்கலத்தில் தனியார் பள்ளி வாகனத்தை சிறைபிடித்துள்ளனர். மாணவர்களை வாகனத்தில் ஏற்றி வந்த ஓட்டுனர் குடிபோதையில் இருந்ததால் வாகனத்தை பொதுமக்கள் சிறைபிடித்தனர். குடிபோதையுடன் வாகனத்தை ஒட்டி வந்த ஓட்டுனர் சக்தி கைது செய்யப்பட்டார்*

♈🇮🇳🌴13] *விருதுநகர், சாத்தூர் சிவகாசி மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில் பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது. அரைமணி நேரத்திற்கும் மேலாக மழை பெய்து வருவதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்*

♈🇮🇳🌴14] *குடிநீர் திட்டப்பணிகளை விரைந்து முடிக்குமாறு ஆவடி நகராட்சிக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குடிநீர் திட்டப்பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என பாபுகணேஷ் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார். குடிநீர் திட்டப்பணிகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது*

♈🇮🇳🌴15] *கிண்டியில் தண்ணீர் லாரி மோதி 3 மாணவிகள் உயிரிழந்த வழக்கில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட மாயக்கண்ணன் சென்னை சைதாப்பேட்டை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார். நீதிபதி மேனகா கிளீனர் மாயக்கண்ணனை 15 நாள் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்*

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here