மாலை நேர செய்திகள் 17/10/2016 - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

மாலை நேர செய்திகள் 17/10/2016

http://www.sivakasiteacherkaruppasamy.blogspot.com
*சிசிடிவி கேமராவில் பதிவான பேய் ; வாகனங்கள் மோதியும் எதுவும் ஆகவில்லை*
*தஞ்சாவூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் ஆகிய மூன்று தொகுதிகளுக்கும் வருகிற நவம்பர் மாதம் 19ம் தேதி தேர்தல் நடைபெறும் என தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது*
*திருநங்கையாக பிறக்க ஆசைப்படும் மிஷ்கின்: போட்டுடைத்த தமிழச்சி
தங்கபாண்டியன்!*
*AAA வில் அஸ்வின் தாத்தாவுடன் நடிக்கும் தமன்னா?*

*கலேயில் உள்ள தற்காலிக குடியேறிகள் முகாம் இடித்து தள்ளப்படுவதற்குமுன், அங்குள்ள ஆதரவற்ற அகதிக் குழந்தைகளை பிரான்ஸிலிருந்து பிரிட்டனுக்கு கொண்டுவர அவசர முயற்சிகளை எடுக்கக்கோரி கேன்டர்பெர்ரியின் முன்னாள் பேராயர் ரோவான் வில்லியம்ஸ் அழைப்பு விடுத்துள்ளார். அதிகபட்சமாக, இந்த ஆண்டின் இறுதிக்குள் முகாம் மூடப்பட வேண்டும் என்று பிரெஞ்சு அரசாங்கம் கூறுகிறது*
*சிரியாவின் கிழக்கு அலெப்போவில் நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 14 உறுப்பினர்கள் கொல்லப்பட்டுள்ளதாக 'வைட் ஹெல்மெட்ஸ்' என்றழைக்கப்படும் அந்நாட்டிலுள்ள சிவில் பாதுகாப்பு ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்*

*தன்னுடைய வீட்டில் 30 மில்லியனுக்கு மேலான டாலர்பணத்தைமறைத்து வைத்திருந்த முன்னாள் சீன அதிகாரி ஒருவருக்கு இடைநிறுத்தப்பட்ட மரண தண்டனை வழங்கப்பட்டுள்ளது*

*மியான்மரிலுள்ள சின்டிவின் நதியில் ஒரு படகு கவிந்துவிட்டதால் குறைந்தது 14 பேர் பலியாகியுள்ளதாக மீட்புதவி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்*

*பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் நாளரு வேடம் பொழுதொரு நடிப்பு என்ற கபட நாடகமாடும் செயல்களை ஊக்குவிப்பதைத் தவிர்த்து  நாட்டு மக்கள் பிரச்சினைகளில் நாள்தோறும் கவனம் செலுத்துவது நல்லது என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்*

*பொதுவாக கடவுள் நம்பிக்கைப் போலத்தான் ஆவி,பேய் மற்றும் பிசாசு ஆகியவற்றின் மீது நம்பிக்கைக் கொண்டிருப்பது. அது அவர் அவர் நம்பிக்கையைப் பொறுத்தது.ஆவி வீடியோக்கள் யூடியூப்பில் கொட்டிக் கிடக்கின்றன. சிலவற்றை பார்க்கும் போதே அது பொய்யாக ஜோடித்தது என்று நமக்கு தெரிந்து விடும். ஆனால், சில வீடியோக்கள் நிஜத்திற்கு அருகில் இருப்பது போல் தெரியும். அதுபோல் டில்லியில் உள்ள சாலையில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவான ஒரு ஆவி உருவம் தொடர்பான வீடியோ இணையத்தில் உலா வருகிறது.டில்லியில் உள்ள ஒரு சாலையில், அதிகாலை 2.11 மணி அளவில் ஒரு கருப்பு உறுவம் நடந்து செல்கிறது. அப்போது அந்த சாலை வழியாக செல்லும் ஒரு லாரி, அந்த உருவத்தின் மீது மோதுகிறது. ஆனால், அந்த உருவத்திற்கு எதும் ஆகவில்லை. அதன்பின்னும் அந்த உருவம் தொடர்ந்து நடக்கிறது. அதன்பின் 2 கார்கள் மற்றும் மோட்டார் சைக்கிள் ஆகியவை அந்த உருவத்தின் மீது மோதி கடந்து செல்கிறது.ஆனாலும், எதுவும் ஆகாமல் நடந்து செல்லும் அந்த உருவம் சட்டென மறைந்து விடுகிறது. அந்த சிசிடிவி வீடியோவில் தேதி 15.08.2016 என்று காட்டுகிறது. அதை, தற்போது யாரோ இணையத்தில் பதிவு செய்துள்ளார்கள்*

*ஏர்செல்-மேக்சிஸ் முறைகேடு வழக்கில் மாறன் சகோதரர்கள் சகோதரர்கள் தாக்கல் செய்திருந்த மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து சிபிஐ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது*

*ராஜஸ்தான் மாநிலத்தில் என்ஜினீயரிங் ஒருவர் காதலுடன் திருமணம் செய்ய தாய்மாமன் மகனை கடத்தி ரூ.50 லட்சம் கேட்டுள்ளார்* -ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரை சேர்ந்த புர்னிஷா(22) என்ற என்ஜினீயரிங் மாணவியும் அவரது காதலன் மயாங்மேத்தா என்பவரும் திருமணம் செய்ய முடிவு செய்தனர்.திருமணத்துக்கு பிறகு வாழ பணம் தேவைப்படும், எப்படி பணம் திரட்டுவது என்று சிந்தித்து வந்தனர். அப்போது தொலைக்காட்சி நாட்கத்தில் குழந்தையை கடத்தி பணம் பறிப்பது போன்ற காட்சியை பார்த்துள்ளனர்.அதன்படி புர்னிஷா தனது தாய்மாமன் குழந்தையை கடத்த முடிவு செய்தார். புர்னிஷா காதலுடன் சேர்ந்து குழந்தையை கடத்த பக்கவாக திட்டம் போட்டார். புர்னிஷா அவரது தாய்மாமன் வீட்டிற்குள் யாருக்கும் தெரியாமல் சென்று, அந்த 4 வயது ஆண் குழந்தையிடம் நைசாக பேசி, வண்டியில் போகலாம் என்று கூறி வெளியே அழைத்து வந்துவிட்டார்.திட்டத்தின்படி புர்னிஷாவின் காதலன் அவரது நண்பருடன் சேர்ந்து குழந்தையை கடத்தி சென்றனர். குழந்தையின் தந்தையான ரித்தேஷ்க்கு போன் செய்து, உங்கள் குழந்தையை நாங்கள் கடத்தி இருக்கிறோம், ரூ.50 லட்சம் பணம் வேண்டும். இல்லையென்றால் குழந்தையை கொன்று விடுவோம் என்று கூறியுள்ளனர்.ரித்தேஷ் உடனே காவல்துறையினரிடம் புகார் செய்தார். இதையடுத்து காவல்துறையினர் கண்காணிப்பில் ஈடுப்பட்டனர். இரண்டாவதுமுறை போன் வந்ததை காவல்துறையினர் அதை பதிவு செய்தனர்.அதைக்கொண்டு அவர்களை டிரேஸ் செய்து அவர்கள் பதுங்கி இருந்த இடத்தை கண்டுப்பிடித்தனர். குழந்தையை அவர்களிடம் இருந்து மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர். அதோடு புர்னிஷா மற்றும் அவரது காதலனை கைது செய்தனர். பிர்னிஷா காதலின் நண்பன் தப்பி ஓடிவிட்டார்.மேலும் குழந்தை கடத்தப்பட்ட 4 மணி நேரத்தில் மீட்கப்பட்டது குறிப்பிடத்தக்கது

*மூளைச்சாவடைந்த பிரபல நடிகர் மனைவியின் உடல் உறுப்புகள் தானம்* - *பிரபல மலையாள நடிகர் வின்சென்ட். இவர் 1991-ம் ஆண்டு மரணம் அடைந்தார். இவரது மனைவி மேரி (54). சென்னை முகப்பேரில் வசித்து வந்தார். இவருக்கு ராபின், ரிச்சர்டு ஆகிய மகன்கள் உள்ளனர். மேரி அண்ணாநகரில் உள்ள தனியார் பள்ளியில் தலைமை ஆசிரியையாக பணியாற்றி வந்தார்.இந்நிலையில் கடந்த 13ம் தேதி திருமங்கலத்தில் சாலையை கடக்க முயன்ற மேரி மீது வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் மோதியதில் பலத்த காயம் அடைந்தார். உடனடியாக சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தனர்.
இந்நிலையில் மேரி நேற்று முன்தினம் நள்ளிரவில் மூளைச்சாவு அடைந்தார். இதையடுத்து அவரது உடல் உறுப்புகளை தானமாக வழங்க மகன்கள் முடிவு செய்தனர். அதன்படி மேரியின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டன.திருமங்கலம் போக்குவரத்து புலனாய்வு போலீஸார் வழக்கு பதிவு செய்து பைக்கை ஓட்டிவந்த முகப்பேரை சேர்ந்த பாலாஜி (18) என்பவரை கைது செய்தனர்*

*கல்யாண பேச்சு வந்தும், முன்னணி ஹீரோயின்கள் லிஸ்டில் தான் இன்னமும் நீடிக்கிறார் சம்ந்தா. ஆனால், வரும் வாய்ப்புகளுக்கு அவர் போடும் ஒரே கண்டிஷன் நீண்ட காலத்துக்கு படபிடிப்பை இழுக்காமல் சீக்கிரம் முடிக்க வேண்டும். அப்படிபட்ட படமாக இருந்தால் மட்டும் வாங்க.இல்லனா வேண்டாம் என்று சொல்லிவிடுகிறாராம்.அதாவது அடுத்த ஆண்டு மத்தியில் திருமணம். தனது எந்தவொரு கமிட்மெண்டும் திருமணத்தை பாதித்துவிடக்கூடாது என்பது தான் இந்த கண்டிஷனுக்கு காரணம்.இந்த காரணத்தால் தான் நீண்ட கால தயாரிப்பான வடசென்னை படத்தில் இருந்து விலகினார். ஆனால் சிவகார்த்திகேயன் ஜோடியாக பொன்ராம் இயக்கும் படத்தில் நடிக்கிறார். காரணம் பொன்ராம் விரைவில் படத்தை முடித்துவிடுவார் என்பதால்*

*பாட்டிலில் சுய இன்பம் செய்ததால் ஆணுறுப்பையே நீக்கிய விபரீதம்!* -சுய இன்பம் செய்வது என்பது மனித வாழ்க்கையில் பெரும்பாலும் பலர் ஈடுபடுவது தான். தங்களின் இச்சைகளை மற்றுவர்களை அனுகாமல் தாங்களே தீர்த்துக்கொள்ளும் செயல் இது. ஆனால் வழக்கத்துக்கு மாறாக யாராது செயல்பட்டால் அந்த விளைவு விபரீதமாக தான் முடியும் என்பது நிதர்சனம். இதே போல தான் பிரிட்டனில் ஒரு 50 வயது மதிக்கத்தக்க திருமணம் ஆகாத ஆண் ஒருவர் சுய இன்பம் செய்துள்ளார். ஆனால் இந்த மனிதர் வழக்கமான முறையில் சுய இன்பம் செய்யாமல் பிளாஸ்டிக் பாட்டிலில் தன்னுடைய ஆண்குறியை விட்டு சுய இன்பம் செய்துள்ளார்.இதில் நான்கு நாட்களுக்கு முன்னர் அவரது ஆணுறுப்பு அந்த பாட்டிலில் சிக்கியுள்ளது. வெளியில் சொல்ல வெட்கப்பட்ட அந்த நபர் தானே பாட்டிலில் இருந்து ஆணுறுப்பை எடுக்க முயற்சித்துள்ளார், ஆனால் அது பாட்டிலில் மேலும் இறுகியுள்ளது.4 நாட்கள் ஆனாதால் அவரது ஆணுறுப்புக்கு போக வேண்டிய ரத்த ஓட்டம் தடைபட்டு ஆணுறுப்பின் செல்கள் அனைத்தும் இறந்து, அவரது உறுப்பு கருப்பு நிறமாக மாறி அழுகும் நிலைக்கு வந்துள்ளது.இதனையடுத்து அவர் துடிதுடிக்க மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் மருத்துவர்கள் அவரது ஆணுறுப்பை அறுவை சிகிச்சை செய்து அகற்றினர். அவரால் சிறுநீர் கழிக்க முடியும் ஆனால் இனிமேல் அவரால் செக்ஸ் உறவு வைத்துக்கொள்ள முடியாது*

*சத்தீஷ்கர் மாநிலத்தில் ஒரு பெண்ணை வலுகட்டாயமாக தூக்கிட்டு போய், ஓடும் காரில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்த 3 இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர். காவல்துறைனர் கூறியதாவது:-கடந்த வாரம் செவ்வாய்கிழமை அந்த 36 வயது பெண்ணை 3 இளைஞர்கள் சேர்ந்து, வீட்டின் பின்புறாமான தூக்கிச் சென்று காருக்குள் வலுக்கட்டாயமாக ஏத்தி கடத்தி சென்றனர். ஓடும் காரில் வைத்து அந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.அதை வீடியோவாக பதிவு செய்து அந்த பெண்ணை மிரட்டியுள்ளனர். வெளியே யாரிடமாவது சொன்னால் இணையதளத்தில் வெளியீடுவோம் என்று கூறி மிரட்டியுள்ளனர்.இதையடுத்து மறுநாள் அந்த பெண் காவல்துறையினரிடம் கூறினார். அதைத்தொடர்ந்து அந்த மூன்று இளைஞர்கள் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்யப்பட்டது, என்றனர். சத்தீஷ்கர் மாநிலம், மகாசமுந்த் மாவட்டத்தில் கடந்த வாரம்*

*இயக்குனர் மிஷ்கின், தான் திருநங்கையாக பிறந்திருக்கலாம் என அடிக்கடி சொல்வார் என திரைப்படம் ஒன்றின் டிரைலர் வெளியீட்டு விழாவில் பேசிய தமிழச்சி தங்கபாண்டியன் கூறியுள்ளார். இயக்குனர் ராம் ஹீரோவாகவும், இயக்குனர் மிஷ்கின் வில்லனாகவும் நடிக்கும் படம் சக்ரவர்த்தி. இயக்குனர் ஆதித்யா இயக்கும் இந்த படத்தின் டிரைலர் வெளியிட்டு விழாவிற்கு தமிழச்சி தங்கபாண்டியன் வந்தார்.அப்போது பேசிய அவர், தான் இந்த படத்தில் பணிபுரிந்தது மகிழ்ச்சியாக இருக்கிறது என்றார். மேலும் இந்த படத்தின் வில்லன் மிஷ்கினை எந்தவிதமான அடையாளத்துக்குள்ளும் அடக்கிவிட முடியாது.மிஷ்கின் ஒரு தனிமையின் சாண்டாகிளாஸ். நான் ஒரு திருநங்கையாக பிறந்திருக்கனும் என அவர் அடிக்கடி சொல்வார். அவர் ஒரு ஆணையோ பெண்ணையோ அணைக்கும் போது அவ்வளவு பாதுகாப்பாக உணரலாம் என பேசி அனைவருக்கும் வாழ்த்து கூறினார்*

*தமிழகம் முழுவதும் அதிமுக தொண்டர்கள் சிறப்பு பூஜைகள் செய்து நேர்த்திக்கடன் செலுத்தி வருகின்றனர். இதனை தொடர்ந்து நடிகை வரலட்சுமி சரத்குமார் தனது அம்மாவுடன் கேரளாவில் உள்ள கன்னூர் அகத்தியர் ஆசிரமத்தில் ஜெயலலிதா விரைவில் குணமடைந்து நலமுடன் வீடு திரும்ப வேண்டுமென்று பூஜை நடத்தியுள்ளார்.*

*ஆதிக் ரவிச்சந்திரனின் அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படத்தில் அறுபது வயது தாத்தா கெட்டப்பில் சிம்பு நடிக்கிறார். அஸ்வின் என்ற அந்த கதாபாத்திரம் வழக்கமான தாத்தா கதாபாத்திரங்களிலிருந்து மாறுபட்ட விதத்தில் உருவாக்கப்பட்டுள்ளது*

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here