உலக போர் மூளப்போகிறது:அனைவரும் நாடு திரும்ப புடின் அழைப்பு, சீனப்பொருட்களை புறக்கணிக்க பிரச்சாரம் தீவிரம், ஜனவரி 22நெட் தேர்வு மற்றும் பல செய்திகள் - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

உலக போர் மூளப்போகிறது:அனைவரும் நாடு திரும்ப புடின் அழைப்பு, சீனப்பொருட்களை புறக்கணிக்க பிரச்சாரம் தீவிரம், ஜனவரி 22நெட் தேர்வு மற்றும் பல செய்திகள்

http://www.sivakasiteacherkaruppasamy.blogspot.com
**உலக போர் மூளப்போகிறது: அனைவரும் நாடு திரும்புங்கள்: புடின்* [9]

*சீன பொருட்களை புறக்கணிக்க பிரச்சாரம் தீவிரம்; நட்புறவை பாதிக்கும் இந்தியாவிற்கு சீன அரசு மீடியா எச்சரிக்கை*

*உயிரியல் பூங்காவில் 2 முறை கண்ணாடியை உடைத்து கொண்டு வெளியேறிய சைக்கோ கொரில்லா* [15]

*ஜனவரி 22ல் நெட் தேர்வு: சிபிஎஸ்இ அறிவிப்பு* [26]

♈🇮🇳🌴1] *லஞ்சம் கொடுக்க வழிவகுக்கும் ஹெல்மெட் வழக்கு* - ஹெல்மெட் போடாமல் செல்பவர்களை மடக்கி ஹெல்மெட்டை கொண்டுவர சொல்வதுடன் அதற்கு ரசீதை காட்டும்படி கேட்பதால் கடைகளுக்கு சென்று 100ரூ அல்லது 200 ரூ லஞ்சம் கொடுத்து போலி ரசீதை பெற்று வந்து காண்பிக்கின்றனர் பலர். அது உண்மை என்று நம்பி நீதிமன்றமும் அபராதம் வசூலித்து அனுப்பிவிடுகிறது. இது மக்களை லஞ்சம் கொடுத்து வாழ கற்று கொடுப்பது போல் உள்ளது. ஒரு ரசீதை எவ்வளவு காலம் பாதுகாக்க முடியும். நடைமுறையில் இது சாத்தியப்படாத ஒன்று. ஹெல்மெட் அணியாமல் சென்றால் அதற்கு அபராதம் மட்டும் விதித்து அனுப்பிவிடலாம். ரசீதை கேட்டு மக்களை தவறான நடவடிக்கைகளில் பயணிக்க வைப்பது நல்லதல்ல*    *விஸ்வரூபம்*  
♈🇮🇳🌴2] *சாம்சங் கேலக்ஸி நோட் 7 திறன்பேசி தீ பிடிக்கும் பாதிப்புக்கு உள்ளாவதை அடுத்து , அந்தப் போன்கள் திரும்பப் பெறப்படுவதால், அடுத்த ஆறு மாதங்களில் தனது லாபத்தில் சுமார் மூன்று பில்லியன் டாலர்களை, தான் இழக்க உள்ளதாக சாம்சங் தெரிவித்துள்ளது*

♈🇮🇳🌴3] *தமிழக முதல்வர் ஜெயலலிதா மருத்துவமனையில் உள்ள நிலையில் அவரது துறைகள் நிதியமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்துக்கு ஒதுக்கப்பட்டது. தற்போது தமிழக அரசை ஓ.பன்னீர் செல்வம் இயக்குவதற்கான அனைத்து வாய்ப்புகளும் அவருக்கு உருவாக்கப்பட்டு கொடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழக எதிர் கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் நிதியமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்தை இன்று தலைமை செயலகத்தில் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது காவிரி விவகாரம் தொடர்பாக ஆலோசிக்கப்பட்டதாக தகவல்கள் வருகின்றன. விவசாயிகளுடனான கூட்ட தீர்மானம் அடங்கிய அறிக்கையை வழங்கி உள்ளதாக தகவல்கள் வருகின்றன.காவிரியில் இருந்து இன்னமும் தண்ணீர் வராத நிலையில் தமிழக விவசாயிகள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டவும் இந்த சந்திப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளதாக தெரிகிறது.எதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலினுடன் எதிர்கட்சி துணை தலைவர் துரை முருகன்,திமுக எம்.எல்.ஏ.க்கள் சேகர் பாபு, மா.சுப்பிரமணியன், ஜெ.அன்பழகன் ஆகியோரும் தலைமை செயலகத்தில் நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்தனர்.எதிர்கட்சி தலைவரின் இந்த திடீர் சந்திப்பு காவிரி விவகாரத்தி மீண்டும் தமிழக அரசு அதிக அழுத்தம் கொடுக்க வழிவகுக்கும் என கூறப்படுகிறது*

♈🇮🇳🌴4] *உடல் நலக்குறைவு காரணமாக, முதல்வர் ஜெயலலிதா, கடந்த மாதம் 22ம் தேதி முதல் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
அவர் இன்னும் சில நாட்கள் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை எடுத்துக் கொள்வார் என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் அவருக்கு சிகிச்சை அளிக்க, மீண்டும் லண்டன் மருத்துவர் ரிச்சர்ட் வந்துள்ளதாக தெரிகிறது.  அவரின் வருகைக்கு பின் முதல்வரின் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாம். இதனால் மருத்துவமனை நிர்வாகமும், சசிகலா தரப்பும் மகிழ்ச்சியில் இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.மருத்துவர்களின் ஆலோசனைப்படி, முதல்வருக்காக பிரத்யோக உணவு மருத்துவமனையிலேயே தயார் ஆகிறதாம். உறக்கம் வரும் வரை சசிகலாவின் கைகளை பிடித்துக் கொள்வதாகவும், இதனால் சசிகலா அவரின் அருகிலேயே இருப்பதாகவும் சமூக வலைத்தளங்களில் செய்திகள் உலா வருகிறது.
முதல்வர் நன்றாக பேசுகிறார்... சிரிக்கிறார் என்று தகவல் வெளியாகியுள்ளதால் அவர் விரைவில் வீடு திரும்புவார் என்று அதிமுக தொண்டர்கள் மகிழ்ச்சியிடன் காத்திருப்பதாக தெரிகிறது*

♈🇮🇳🌴5] *சேலம் மாவட்டம் தம்மம்பட்டியைச் சேர்ந்தவர் வெங்கடாச்சலம் இவரது மனைவி அல்லி (22) இவர்களுக்கு சதாசிவம் (4), சிவா (3) என்ற 2 மகன்கள் உள்ளனர். வெங்கடாச்சலம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு குடும்பத்துடன் விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகேயுள்ள திருவக்கரைக்கு வந்து குடியேறி உள்ளார்.பிறகும் அங்குள்ள கல் உடைக்கும் நிறுவனத்தில் கணவன், மனைவி இருவரும் வேலை பார்த்து வந்தனர். இந்நிலையில் வெங்கடாசலத்திற்கு மனைவி அல்லியின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.இதனால், தினமும் குடித்து விட்டு வந்து மனைவியுடன் அடிக்கடி சண்டை போட்டு வந்துள்ளார். இதனையடுத்து கணவன் - மனைவி இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.இந்தநிலையில், வெங்கடாச்சலம் நேற்று இரவு குடித்து விட்டு வந்து, குழந்தைகளுடன் தூங்கிக் கொண்டிருந்த அல்லியை எழுப்பி சண்டை போட்டுள்ளார். ஆத்திரத்தில், அல்லியின் தலையை சுவற்றில் பலமுறை மோதினார்.இதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்ட அல்லி சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பரிதாபமாக இறந்தார்*

♈🇮🇳🌴6] *முதலமைச்சர் ஜெயலலிதா குறித்த மருத்துவமனை அறிக்கையை அரசியல் கட்சி தலைவர்கள் நம்பலாம். சிலர் நம்பாமல் இருக்கலாம். இது அவர்களின் விருப்பம் என்றும் நாங்கள் முதலமைச்சர் உடல் நிலையை அரசியலாக்க விரும்பவில்லை என்றும் ஜி.கே.வாசன் கூறியுள்ளார்*

♈🇮🇳🌴7] *ரஷ்ய பெண்களை தேடும் சீன ஆண்கள்: காரணம் என்ன??* -சீன நாட்டில் மணப்பெண்கள் பற்றாக்குறை அதிகமாக இருப்பதால், ரஷ்ய மணப் பெண்களை சீன ஆண்கள் தேடிச் செல்கிறார்கள். இதற்காக சைபீரியாவில் ‘மணப்பெண் சுற்றுலா’ ஆண்டுதோறும் நடைபெறுகிறது. பெறும்பாலும், இளம் தொழிலதிபர்கள் சைபீரியாவில் நடைபெறும் ‘மணப்பெண் சுற்றுலா’வில் கலந்துகொண்டு, அந்த நிகழ்ச்சியின் இறுதியில் தங்களுக்குப் பிடித்த மணமகளைத் தேர்ந்தெடுத்து, திருமணம் செய்துகொள்கிறார்கள். இந்த ஆண்டு பெய்ஜிங், ஹாங்காங், ஷாங்காய், ஷென்ஜென் பகுதிகளைச் சேர்ந்த 5 தொழிலதிபர்களும் ரஷ்யாவைச் சேர்ந்த 25 பெண்களும் நிகழ்ச்சியில் பங்கேற்றனர். 25-45 வயது ஆண்களும் 25-35 வயது பெண்களும் கலந்துகொண்டனர்.முதலில் சம்பிரதாயச் சந்திப்பு, மணமகன், மணமகள் குறித்த விவரங்கள் பரிமாற்றம், குடும்பம், தொழில், பிடித்தவை, பிடிக்காதவை, எதிர்பார்ப்புகள், திருமணம் செய்துகொண்டால் வாழ்க்கை எப்படி இருக்கும் போன்ற விஷயங்களை எல்லாம் ஆண்களும் பெண்களும் பரிமாறிக்கொள்கிறார்கள். இறுதியில் தங்கள் இணையைத் தேர்ந்தெடுக்கிறார்கள்.சீன ஆண்கள், பெண்களை மிகவும் மதிக்கிறார்கள் என்று ரஷ்யப் பெண்கள் குறிப்பிட்டுள்ளனர். மிதமான அழகுடன் அமைதியாகப் புன்னகையுடன், ஆண்களுடன் போட்டிப் போடாமல் ரஷ்ய பெண்கள் இருப்பதாக சீன ஆண்கள் குறிப்பிட்டுள்ளனர்.சீனாவில் 120 ஆண்களுக்கு 100 பெண்கள்தான் இருக்கிறார்கள். சீனாவின் ஒரு குழந்தைத் திட்டமும் ஆண் குழந்தைகள்தான் வேண்டும் என்று நினைப்பதும் பெண்களின் எண்ணிக்கை குறைந்து வருவதற்கான முக்கியக் காரணங்கள் என்பது குறிப்பிடதக்கது http://www.sivakasiteacherkaruppasamy.blogspot.com

♈🇮🇳🌴8] *நடிகை நயன்தாரா, தன்னுடைய காதலர் விக்னேஷ் சிவனின் அம்மாவை எப்படி சரி செய்தார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.நயன்தாராவும், இயக்குனர் விக்னேஷ் சிவனும் காதலர்கள் என்பது ஊருக்கே தெரிந்த விஷயம். நயன் எங்கு சென்றாலும், அவரில்லாமல் செல்வதில்லை. விக்னேஷ் சிவனின் அம்மா முன்னாள் காவல்துறை அதிகாரியாம். சென்னை வடபழனி காவல் நிலையத்தில் பணி புரிந்தவராம்.  அப்போது அந்த ஏரியாவில் சண்டித்தனம் செய்த பல ரவுடிகளை அடக்கியவர் என்று கூறப்படுகிறது.இதனால், ஆரம்பத்தில் நயனுக்கு அவர் மேல் பயம் இருந்ததாம். ஆனால், பழக பழக அவர் இனிமையானவர் என்று புரிந்து கொண்டாராம். மேலும், தனது அன்பை வெளிப்படுத்தும் விதமாக, வருங்கால மாமியாரை, சென்னையில் தான் தங்கியிருக்கும் வீட்டிற்கு அழைத்து விருந்தும் கொடுத்தாராம்*

♈🇮🇳🌴9] *உலக போர் மூளப்போகிறது: அனைவரும் நாடு திரும்புங்கள்: புடின்* -உலக போர் அச்சத்தால், வெளிநாட்டில் வாழும் ரஷ்ய மக்களை நாடு திரும்புமாறு விளாடிமிர் புடின் அவசர ஆணை ஒன்றை பிறப்பித்துள்ளார். ரஷ்ய நாட்டு நிர்வாக ஊழியர்கள், அரசியல்வாதிகள் மற்றும் பொது துறை தொழிலாளர்கள் உடனடியாக வெளிநாட்டு பாடசாலைகளில் படித்து வரும் பிள்ளைகளையும் தாய் நாட்டுக்கு அழைத்து வருமாறு உத்தரவிட்டுள்ளார்.
ரஷியன் அரசியல் ஆய்வாளர் ஸ்டானிஸ்லாவ் பெல்கோவ்க்ஸ்கி, இந்த முன் ஏற்பாடு நடவடிகைகள் அனைத்தும் உலக போர் அச்சத்தின் காரணமாகவே என கூறினார்.மேலும், விளாடிமிர் புடின் இந்த காரணத்தால் அவர் மேற்கொள்ள இருந்த பிரான்ஸ் சுற்று பயணத்தை ரத்து செய்துள்ளது குறிப்பிடதக்கது.முன்னதாக, சிரியா போர் பிரச்சனையில், அமெரிக்கா ரஷ்யாவிடம் சமரசம் பேசும் என கூறி வந்த புடின், தற்போது ஒருவருக்கொருவர் நலன் கருதி பங்காளிகளாக நடந்து கொள்ள வேண்டும் என தெரிவித்தார்

♈🇮🇳🌴10] *ஜீ.வி.பிரகாஷ் நடிக்கும் புதிய படத்துக்கு 4ஜி என்று பெயர் வைத்துள்ளனர்*

♈🇮🇳🌴11] *’சர்ஜிக்கல் ஆப்ரேஷன்’ தொடர்பான பாகிஸ்தான் மீடியாவின் செய்தியை இந்தியா, ‘ போலியாகத் தயாரிக்கப்பட்டது மற்றும் அடிப்படையற்றது’ என்று நிராகரித்துவிட்டது*

♈🇮🇳🌴12 *மும்பையில் போராட்டம்: ‘சிவசேனா தொண்டர்கள் என்னை கொல்ல முயன்றனர்’ பா.ஜனதா எம்.பி. குற்றச்சாட்டு*
♈🇮🇳🌴13] *பாகிஸ்தானுக்கு முக்கிய தகவல்களை பகிர்ந்து கொண்ட ஜம்மு காஷ்மீர் மாநில மூத்த போலீஸ் அதிகாரி சஸ்பெண்ட் செய்யப்பட்டார்*
♈🇮🇳🌴14] *நூற்றுக்கணக்கான அப்பாவி மக்கள் உயிரிழப்பிற்கு லஷ்கர்-இ-தொய்பா காரணம் – அமெரிக்கா*

♈🇮🇳🌴15] *லண்டன் உயிரியல் பூங்காவில் கொரில்லா கூண்டு கண்ணாடியை உடைத்துக் கொண்டு தப்பியுள்ளது. இதனால் அங்கு பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது. பாதுகாப்பு காரணங்கள் கருதி பார்வையாளர்கள் மற்றும் பணியாளர்கள் கட்டிடங்களுக்குள் வைத்து பூட்டப்பட்டுள்ளனர்.தப்பியோடிய கொரில்லாவால் மற்றவர்களுக்கு ஆபத்து ஏதும் ஏற்பட்டுவிடக் கூடாது என்று பூங்கா ஊழியர்கள் மயக்க மருந்துடன் கொரில்லாவை பிடிக்க தீவிரமாக சுற்றி வருகின்றனர்.இருப்பினும் துப்பாக்கியில் இருப்பது மயக்க மருந்தா அல்லது துப்பாக்கி குண்டுகளா என்பதை பூங்கா செய்தி தொடர்பாளர் தெரிவிக்க மறுத்துவிட்டார்.சில மாதங்களுக்கு முன்பு அமெரிக்கா சின்சினாட்டி உயிரியல் பூங்காவில் தவறி விழுந்த சிறுவனை காப்பாற்ற கொரில்லாவை சுட்டுக் கொன்றனர். அந்த சம்பவத்தை தொடர்ந்து தற்போது லண்டன் உயிரியல் பூங்காவில் கொரில்லா தப்பியுள்ளது.மாலை 5.30 மணி அளவில் தப்பியோடிய கொரில்லாவை 6.30 மணியளவிலே பிடித்து விட்டதாக ஊழியர் ஒருவர் தெரிவித்துள்ளார்.அது ஒரு சைக்கோ கொரில்லா என்றும், ஏற்கனவே 2 முறை கண்ணாடியை உடைத்துக் கொண்டு வெளியேறியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.இருப்பினும் கொரில்லா தப்பியோடிய சம்பவத்தில் யாருக்கும் ஆபத்து ஏற்பட்டதா என்பது குறித்த தெளிவான தகவல்கள் இல்லை*

♈🇮🇳🌴16] *டிரம்ப் போன்றவர்களுக்கு எதிராகப் பெண்கள் வாக்களிக்க வேண்டும் ஒபாமா மனைவி வேண்டுகோள்*
♈🇮🇳🌴17] *வல்லரசுகளை மிரளவைக்கும் எஸ்-400 ட்ரையுஃம்ப் ரக ஏவுகணைகளை ரஷியாவிடம் இருந்து இந்தியா வாங்குகிறது*
♈🇮🇳🌴18] *சென்னை: தீபாவளியை முன்னிட்டு  26, 27, 28ம் தேதிகளில்  சென்னையில் இருந்து 11,125 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தீபாவளிக்கு 26, 27, 28ம் தேதிகளில் மொத்தம் 21,289 பேருந்துகள் அரசுப்பேருந்துகள் இயக்கப்படவுள்ளன*
♈🇮🇳🌴19] *அடுத்தாண்டு தமிழகத்தில் ஜல்லிக்கட்டு கண்டிப்பாக நடைபெறும் என எம்பியாக பதவியேற்றுக் கொண்ட இல.கணேசன் தெரிவித்த்துள்ளார். தமிழகம், தமிழக மக்களின் நலுனுக்காக எம்பியாக தொடர்ந்து பாடுபடுவேன் என பதவியேற்ற பின் பேட்டியளித்த இல.கணேசன் கூறினார்*

♈🇮🇳🌴20] *ஆகஸ்ட் மாதத்தில் 3.74 சதவீதமாக இருந்த மொத்த விலை பணவீக்கம் செப்டம்பர் மாதத்தில் 3.57 சதவீதம் சரிந்துள்ளதாக மத்திய நிதித்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது*

♈🇮🇳🌴21] *உத்தரப் பிரதேச மாநிலம் ஜலான் மாவட்டத்தில் இரண்டு இரு சக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் இரண்டு பேர் உயிரிழந்தனர்*
♈🇮🇳🌴22] * மத்தியப் பிரதேச மாநிலம் ரத்லம் என்ற இடத்தில் 40-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் சென்ற பேருந்து குளத்தில் விழுந்து விபத்து ஏற்பட்டது. பேருந்தில் இருந்தவர்களை மீட்கும் பணியில் மீட்பு குழுவினர் ஈடுபட்டுள்ளனர்*
♈🇮🇳🌴23] *சேலத்தில் அர்ச்சகரிடம் லஞ்சம் வாங்கிய அறநிலையத்துறை உதவி ஆணையருக்கு சிறை தண்டனை அளிக்கப்பட்டுள்ளது. உதவி ஆணையர் விஜயகுமாருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சேலம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2009ம் ஆண்டு லஞ்சம் வாங்கிய வழக்கில் உதவி ஆணையர் விஜயகுமார் கைது செய்யப்பட்டார்*

♈🇮🇳🌴24] *சென்னை: கிண்டி ரேஸ்கோர்ஸ் அருகே போராட்டத்தில் ஈடுபட்ட எஸ்டிபிஐ கட்சியினர் கைது செய்யப்பட்டனர். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி எஸ்டிபிஐ கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்*

♈🇮🇳🌴25] *கோவாவில் நடைபெறும் உச்சிமாநாட்டில் கலந்து கொள்ள சீன அதிபர் ஜி ஜின்பிங் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் உள்ள சீன தூதரகத்திற்கு வெளியே திபெத் சமூக மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி அப்புறப்படுத்தினர்*
♈🇮🇳🌴26] *சிபிஎஸ்இ நடத்தும் தேசிய தகுதித் தேர்வு 2017 ஜனவரி 22ல் நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்வுக்கு அக்டோபர் 16ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என்றும் ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி நவம்பர் 16ம் தேதி என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வங்கிகளில் விண்ணப்ப கட்டணம் செலுத்த கடைசி நாள் நவம்பர் 17ம் தேதி என தெரிவிக்கப்பட்டுள்ளது*
♈🇮🇳🌴27 *மும்பையில் விமான நிலைய சுங்க அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையில் 199 நட்சத்திர ஆமைகளை கடத்தி வந்த ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாட்டை சேர்ந்த 2 பேரை கைது செய்தனர். அவர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருவதக தகவல்கள் தெரிவிக்கின்றனர்*
♈🇮🇳🌴28] *மதுரையில் திராவிட விடுதலை கழகத்தினர் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மறுக்கும் மத்திய அரசை கண்டித்து திராவிட மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். போராட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர், தமிழ் புலிகள் அமைப்பினரும் பங்கேற்றுள்ளனர். போராட்டத்தின் போலீசாருக்கும் திராவிட விடுதலை கழகத்தினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது*

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here