சிவகாசி பைபாஸ் பஸ் ஸ்டாப்பில் தேவகி ஸ்கேன் சென்டர் அருகில் பட்டாசு குடோனில் தீ விபத்து 6 பேர் பலி - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

சிவகாசி பைபாஸ் பஸ் ஸ்டாப்பில் தேவகி ஸ்கேன் சென்டர் அருகில் பட்டாசு குடோனில் தீ விபத்து 6 பேர் பலி

சிவகாசி புறவழிச்சாலையில் உள்ள பட்டாசுக் கிடங்கில் தீ விபத்து : 6 பேர் உயிரிழப்பு
விருதுநகர்: சிவகாசி புறவழிச்சாலையில் உள்ள பட்டாசுக் கிடங்கில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் 6 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தீபாவளி விற்பனைக்காக கடையில் வைக்கப்பட்டிருந்த பட்டாசுகள் வெடித்து சிதறியதால் தீயணைப்பு வீரர்கள் பக்கத்தில் நெருங்க முடியவில்லை. பட்டாசுகள் வெடிக்க தொடங்கியதை அடுத்து கிடங்கில் உள்ள தொழிலாளர்கள் வெளியேற்றப்பட்டனர். இரண்டு வாகனங்களில் வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்க போராடி வருகின்றனர். கிடங்கில் இருந்து பட்டாசு ஏற்றப்பட்ட சரக்கு லாரி முற்றிலும் எரிந்து சாம்பலாகியது.

மேலும் கிடங்கில் தீப்பிடித்ததில் பல லட்சம் மதிப்பிலான பட்டாசுகள் எரிந்து நாசமாகின.
தீப்பிடித்துள்ள பட்டாசு கிடங்கின் அருகே உள்ள ஸ்கேன் மையத்தில் ஏரளாமானோர் சிக்கித் தவித்தனர். இந்த தீ விபத்தால் ஏற்பட்ட தீப்பிழம்பு அருகிலிருந்த ஸ்கேன் சென்டருக்கும் பரவியது. இதனால் அங்கிருந்தவர்கள் அலறித்துடித்தனர். இதில் 30 பேருக்கு தீக்காயம் ஏற்பட்டது. பின்னர் ஸ்கேன் சென்டரின் பின்பக்க ஜன்னலை உடைத்து நோயாளிகள் வெளியேற்றப்பட்டனர். இதேபோல் கிடங்கிற்கு அருகே இருந்த 20-க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் மற்றும் லாரிகள் தீயில் எரிந்து சாம்பலாகின. படுகாயமடைந்து சிவகாசி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட 6 பேர் உயிரிழந்துள்ளதாக மருத்துவ அதிகாரி பிரகாலநாதன் தகவல் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here