http://www.sivakasiteacherkaruppasamy.blogspot.com
* சிவகாசி பட்டாசுகடை தீ விபத்தில் முதலாளி மற்றும் ஒப்பந்தாரர் மிது வழக்கு பதிவு செய்து கைது செய்யப்பட்டுள்ளனர்.மேலும் அருகே பாதிப்புக்குள்ளான தேவகி ஸ்கேன் நிறுவனர் மீது வழக்கு பதிவு செய்து போலிஸ் தேடிவருகின்றனர்.நகர்பகுதியில் பட்டாசு கடை வைக்க உரிமம் வழங்கியவர்கள் மீது எந்த விதமான நடவடிக்கை இல்லை என்பாதால் பொதுமக்கள் மத்தியில் அரசு நிர்வாகத்தின் மீது அதிருப்தியடைந்துள்ளனர்.
*மத்தியப் பிரதேசத்தில் உலகளாவிய முதலீட்டாளர்கள் உச்சி மாநாடு நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியில் பல நாட்டில் இருந்து இருந்து முதலீட்டாளர்கள் கலந்துகொண்டுள்ளனர். இந்த மாநாட்டில் சட்ட அமைச்சர் ரவி சங்கர் பிரசாத், மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி, முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் ஆகியோர் கலந்து கொண்டனர்*
*ஜம்மு-காஷ்மீர் மாநிலம் சூசெட்க்கார் எல்லைப்பகுதியில் பாகிஸ்தான் ராணுவத்தினர் பீரங்கிகள் மூலம் நேற்று இரவு தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 6 கால்நடைகள் உயிரிழந்தனர். இதனால் இந்த பகுதியில் வசிப்பது அச்சத்தை ஏற்படுத்துகிறது என்று பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்*
*சிவகாசி பட்டாசு விபத்தில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் வழங்க வேண்டும் என மதிமுக வலியுறுத்தியுள்ளது. சென்னையில் இன்று நடந்த மதிமுக உயர்நிலைக்குழு மற்றும் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் நிவாரணம் கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது*
*நாமக்கல்லில் முட்டை கொள்முதல் விலை 9 காசுகள் உயர்ந்துள்ளது. இதனால் ஒரு முட்டையின் விலை 3.90 காசுகளாக உள்ளது*
*சாலை மறியல் நடத்திய சட்டப்பேரவை காங்கிரஸ் உறுப்பினர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டனர். சாலையை செப்பனிட கோரி குமரி மாவட்டம் நித்திரா விளையில் காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் மறியலில் ஈடுபட்டனர். சாலை மறியல் நடத்திய காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் ராஜேஷ் குமார், ஆஸ்டின் உட்பட 400 பேர் கைது செய்யப்பட்டனர்*
*திருமங்கலம் அருகே வாகன சோதனை: ரூ. 3 லட்சம் பறிமுதல்*
*டில்லி மருத்துவமனையில் தீ விபத்து*
*காஷ்மீர் எல்லையில் பாக்., உளவாளி கைது*
*லண்டன் நகரின் மையப்பகுதியில் லண்டன் சிட்டி விமான நிலையத்தில் ரசாயன கசிவு ஏற்பட்டதாக கிளம்பிய வதந்தியை அடுத்து அங்கு பீதி ஏற்பட்டது. பலர் அவசரமாக அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர்*
*ஜெயலலிதாவின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், அவர் பேசி வருவதாகவும் அப்பல்லோ மருத்துவமனை நேற்று அறிக்கை வெளியிட்டது. இதனையடுத்து இன்று 2வது முறையாக ஜெயலலிதாவின் உடல்நலம் குறித்து விசாரிக்க கவர்னர் வித்யாசாகர் ராவ் வந்தார்*
*சைபீரியாவில் ஹெலிகாப்டர் விபத்து : 19 பேர் பலி*
*காஷ்மீர் பகுதியில் மேற்கொண்ட கூட்டுப் போர் பயிற்சி வேறு எந்த மூன்றாவது நாட்டையும் குறிவைத்து நடைபெறவில்லை என்று சீனா தெரிவித்துள்ளது. இது குறித்து சீன வெளியுறவுத் துறை செய்தி தொடர்பாளர் ஹூ சுன்யிங் கூறுகையில், “இது வழக்கமாக இந்தியா - சீனா படைகள் இடையே நடைபெறும் சாதாரண போர் பயிற்சி என்பதை தெளிவுப்படுத்திக் கொள்ள விரும்புகிறேன். எல்லை ஒத்துழைப்பு ஒப்பந்தத்தின் படி நடைபெறுகிறது. காஷ்மீர் விவகாரத்தில் எந்தவொரு நாட்டையும் குறிவைத்து இந்த போர்ப் பயிற்சி நடைபெறவில்லை” என தெரிவித்தார்*
*இந்த ஆண்டு தீபாவளி ரயில் டிக்கெட் புக்கிங் 12 சதவீதம் குறைந்துள்ளது. இந்த ஆண்டு அக்டோபர் மாதத்தின் முதல் 10 நாட்களில் 16.5 லட்சம் பயணிகள் மட்டுமே ரயிலில் பயணம் செய்துள்ளனர். சுமார் 13,000 ரயில்கள் ரயில்வே நிர்வாகத்தால் நாள்தோறும் இயக்கப்படுகின்றன. இவற்றில் இதுவரை இல்லாத அளவிற்கு ஏறக்குறைய 10 லட்சம் பயணிகள் வேறு வழியாக பயணத்தை தேர்வை செய்துள்ளனர்.டிக்கெட் கட்டண உயர்வு :இந்த ஆண்டு செப்டம்பர் 9ம் தேதி முதல் அதிக கட்டணத்துடனான புதிய ரயில்களை ரயில்வே அறிமுகம் செய்தது. அதிகப்படியான டிக்கெட் கட்டணத்தால் 3ம் வகுப்பு ஏசி., பெட்டிகளில் 3 லட்சம் பேரும், 2ம் வகுப்பு ஏசி பெட்டிகளில் 1.5 லட்சத்திற்கும் குறைவானவர்கள் மட்டுமே பயணம் செய்துள்ளனர். வருவாய் இழப்பு :கட்டண .யர்வின் காரணமாக டிக்கெட் விற்பனையால் கிடைக்கும் வருவாய் 7.45 சதவீதம் சரிவடைந்துள்ளது. அக்டோபர் மாதத்தின் முதல் 10 நாட்களில் ரூ.57.6 கோடி மட்டுமே வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. இதனால் ரயில்வே துறைக்கு எதிர்பார்த்ததை விட 7 சதவீதம் குறைவான வருவாய் கிடைத்துள்ளது. இந்த ஆண்டு பண்டிகை காலங்களில் ரயில் டிக்கெட் விற்பனையின் மூலம் நிர்ணயித்த இலக்கை விட அதிக வருவாயை ஈட்ட வேண்டும் என்பதற்காக கடந்த சில மாதங்களாக ரயில்வே நிர்வாகம் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வந்தது. அவை அனைத்தும் தற்போது வீணாகி போயுள்ளது*
*விவசாயிகள் தோட்டத்திலுள்ள கறவை மாடுகளைத் திருடினால் குண்டர் சட்டம் பாயும்: கலெக்டர் எச்சரிக்கை.ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று மாதாந்திர வேளாண் குறைகேட்புக் கூட்டம் ஆட்சியர் எஸ்.பிரபாகர் தலைமையில் நடைபெற்றது*
*ஆசைக்கு இணங்க மறுத்ததால் பெண்ணை தீ வைத்து எரித்த
கூலித் தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை: கோவை கோர்ட்*
*பிரசவத்தின் போது தாயும், குழந்தையும் உயிரிழப்பு: பொதுமக்கள் சாலை மறியல்: போக்குவரத்து பாதிப்பு.கரூர் மாவட்டம் கடவூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட மாவத்தூர்*
http://www.sivakasiteacherkaruppasamy.blogspot.com
*இன்று நடக்கிறது கபடி உலக கோப்பை பைனல்.. ஈரானை வீழ்த்துமா இந்தியா?*
*'தலாக்' முறை விவாகரத்தை ஏற்க முடியாது என்றும் நீதிமன்றம் மூலம் விவாகரத்துப் பெற விரும்புவதாக மகாராஷ்டிர மாநிலம் புனேயைச் சேர்ந்த முஸ்லீம் பெண் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது*
*மத்திய அமைச்சர் மேனகா காந்தியின் மகனும், எம்.பியுமான வருண் காந்தி மீது பரபரப்புப் புகார்களைக் கூறியுள்ள அமெரிக்க வழக்கறிஞர் எட்மாண்ட்ஸ் ஆலன், இந்திய விமானப்படை அதிகாரிகள் கும்பலாக உஸ்பெகிஸ்தான் அழகியுடன் உல்லாசமாக இருந்ததாக கூறி மேலும் பரபரப்பைக் கூட்டியுள்ளார். கிட்டத்தட்ட ரூ. 7000 கோடி மதிப்பிலான பாதுகாப்பு ஒப்பந்தத்தை இதுபோல வெளிநாட்டு அழகிகளை வைத்து ஆயுத வியாபாரி அபிஷேக் வர்மா மடக்கியதாகவும் இதற்குத்தான் வருண் காந்தியை அவர் பயன்படுத்திக் கொண்டதாகவும் ஆலன் கூறியுள்ளார். பல விமானப்படை அதிகாரிகளுக்கு இதில் தொடர்புள்ளதாக கூறியுள்ள ஆலன், இதுதொடர்பாக பிரதமர் மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில் அவர்களின் பெயர்களையும் வெளியிட்டுள்ளார்.
+++++++++++++++++++
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக