கேரளாவில் ஊழியர் ஒருவர் பள்ளி மாணவி ஒருவரை ஆபாச படம் பார்க்கும் படி வற்புறுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரளாவின் செர்தலா பகுதியில் பெண்கள் அரசுப் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இங்கு சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவிகள் படித்து வருகின்றனர்.
இப்பள்ளியில் அரசு ஊழியராக பணிபுரியும் நபர் ஒருவர், அப்பள்ளியில் படிக்கும் மாணவி ஒருவரை கணனியில் ஆபாசப்படத்தை ஓடவிட்டு,அதனை காணுமாறு வற்புறுத்தியுள்ளார்.
இதனால் பெரிதும் பாதிக்கப்பட்ட மாணவி புகார் ஒன்றை குற்றவியல் பதிவுப்பிரிவுக்கு அனுப்பிவைத்துள்ளார். குற்றப் பிரிவு அதிகாரிகள் இது தொடர்பாக அருகில் உள்ள காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து அந்த பள்ளிக்கு வந்த பெண் ஆய்வாளர் ஒருவர், இந்த சம்பவம் குறித்து பள்ளி ஆசிரியர்களிடம் வாக்குமூலம் வாங்கிச் சென்றுள்ளார்.
புகாரளித்த நபர் குறித்த விபரங்களை தெரிவிக்க காவல்துறையினர் மறுத்துவிட்டனர். குற்றச்சாட்டப்பட்டுள்ள பள்ளி அலுவலக ஊழியர் மீது ஏற்கனவே இது போன்ற ஒரு குற்றச்சாட்டு இருந்துள்ளது என கூறப்படுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக