#ஏழைகளின் தீபாவளி.
ஐப்பசியில் மழை வராமல்
ஆட்டங்காட்டுதடா!-என்
அடுப்பங்கரை மேட்டில் வந்து
பூனைக்குட்டி தூங்குதடா??
தீமையை வென்றதற்காய்
தீபாவளி வந்ததடா-என்
தெனவெடுத்த ஆசை வந்து
என்னை தீக்குழியில் தள்ளுதடா??
லெட்சுமி வெடி வாங்கிவான்னு
மக்க ரெண்டும் கேட்குதுங்க!
ஊசி போன வெடியாட்டம்-என்
உள்மனசு அழுவுதுங்க??
கல் பட்டாசு வேணுமின்னு
கத்துறானே எம்புள்ள!-பட்ட
கடன் தீரலையே பாவம் நான்
என்னத்த சொல்ல??
கம்பி மத்தாப்புகளெல்லாம்
கலர்கலராய் சிரிக்குதுங்க!
வெம்பிப்போன எம்மனச
வெடி வெச்சி தகர்க்குதுங்க??
ராக்கெட்டு வெடி போல
வெலவாசி விக்கிதுங்க!
ராத்திரியில் படுக்கப்போன
பெத்தமனசு கத்துதுங்க??
சந்தைக்கு விற்கப்போன
ஆட்டுக்குட்டி விற்கலையே?
சடையங்கிட்ட கேட்ட பணம்
வீடு வந்து சேரலையே??
கைமாத்து கேட்க போனா
கந்துவட்டி கேட்குறாங்க?
கழுத்து செயினிருந்தா
கழட்டியாரச் சொல்லுறாங்க??
எதிர்வீட்டு மாடிமேலே
சங்குச்சக்கரம் சுத்து துங்க!
எங்க வீட்டு திண்ணையில்
எருக்கஞ்செடி பூக்குதுங்க??
அடுத்தவீட்டு ஜன்னல் வழி
ஆட்டுக்கறி மணக்குதுங்க?
அம்சவேணி பெத்த மக்க
அம்மணமா திரியுதுங்க??
கல்லாக இருக்குமவனை
கடவுளுன்னு சொல்லுறீங்க?
நல்லா யிருக்கும் நெஞ்சில்
நஞ்சத்தானே வெதைக்குறீங்க??
பஞ்சத்த அழிக்கவொரு
பருவமழை வந்திடனும்?
அஞ்சுபோகம் நெல் வெளஞ்சி
பஞ்சத்தைத் தீர்த்திடனும்???
http://www.sivakasiteacherkaruppasamy.blogspot.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக