மூர்க்க குணத்தோடு திரிந்தவன்
முதுமையின் அனுபவத்தோடு பேசுகிறான்.
உருப்படமாட்டான் எனக் கருதியவன்
குரூப்2ல் தேர்வாகி
அரசு அதிகாரியாகிவிட்டான்.
நல்லா வருவான் என நினைத்தவன்
குடிக்கு அடிமையாகி
குப்பையாகிக் கிடக்கிறான்.
ஒற்றுமைக்கு
அடையாளமாக விளங்கிய குடும்பம்
சிதறுண்டு கிடக்கிறது.
காதல் மணம் புரிந்தவள்
காதல் பொய் என்கிறாள்.
உள்ளூரில் பிழைக்க முடியாது என
வெளியூர் சென்றவன்,
ஊருக்குள்லேயே
தேநீர் கடை நடத்துகிறான்.
சாதிப் பெருமை பேசியவன்
கலப்புத் திருமணம் செய்துகொண்டான்.
அரசுப் பணியே சிறந்தது என
அங்கலாய்த்தவன்
ஊரிலேயே பெரும் விவசாயி.
என் பார்முலா தேடாதே
ஒருபோதும் புரியாது
கற்றுக்கொடுக்கவும் மாட்டேன்
என்கிறது வாழ்க்கை!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக