இரவு செய்திகள் 08/10/2016 - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

இரவு செய்திகள் 08/10/2016

★*★**★*★**★*★★*★★*★
http://www.sivakasiteacherkaruppasamy.blogspot.com
++++++++++++++++++++++++
*தமிழ்நாடு கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் பி.பாலகிருஷ்ண ரெட்டியின் தனிச் செயலாளர் சத்தியா என்கிற சத்தியநாராயனா பெங்களூரில் கைது* downnews

*அப்பல்லோவுக்கு திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் மற்றும் புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர். க.கிருஷ்னசாமி ஆகியோர் தனித்தனியே வருகை*

*முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தனர் .

♈🇮🇳🌴1] *விளையாட்டு போட்டிக்களின் போது செய்யப்படுகின்ற போதை மருந்து பயன்பாடு பற்றிய முழுமையான சோதனையை மேற்கொள்வது பற்றிய கலந்தாய்வை சர்வதேச ஒலிம்பிக் குழு சுவிட்சர்லாந்திலுள்ள லேஸாண் நகரில் நடத்துகிறது*
+++++++++++++++
♈🇮🇳🌴2] *நாங்கள் பேச மாட்டோம்; செயல்படுவோம் : இந்திய விமான படை தளபதி அருப் ரஹா* - *அரசு சொல்வதை கேட்பதுதான் எங்கள் பணி, கருத்துக் கூறுவது அல்ல என்று இந்திய விமானப்படை தளபதி அருப் ரஹா கருத்து தெரிவித்துள்ளார். இந்திய விமானப்படை தளபதி அருப் ரஹாவிடம் கருத்து தெரிவித்த போது “சர்ஜிகல் ஸ்டிரைக் பற்றி பரவலாக பேசப்படுகிறது. எல்லோரும் இதுபற்றி கருத்து தெரிவிக்கிறார்கள். தேசம் எதை விரும்புகிறதோ, அதை வெளிப்படுத்துவதுதான் விமான படையின் வேலை. அது பற்றி நாங்கள் பேசப் போவதில்லை. செயல்படுவதுதான் எங்கள் வேலை”    என்று அவர் கருத்து தெரிவித்தார்*

++++++++++++++++
♈🇮🇳🌴3] *சீனாவில் சிறுவர்கள் ஆன்லைன் கேமிற்கு அடிமையாவதை தடுப்பதற்கு இரவு நேரங்களில் இணையதளத்தை பயன்படுத்த சீன அரசு தடை விதித்துள்ளது*

♈🇮🇳🌴4] *வங்காளதேசத்தின் டாக்கா நகரில் விடுதி ஒன்றில் நடந்த தாக்குதலில் தொடர்புடையவர்கள் என குற்றம் சாட்டப்பட்ட இஸ்லாமிய தீவிரவாத அமைப்பினை சேர்ந்த 4 உறுப்பினர்கள் அந்நாட்டின் பாதுகாப்பு படையினரால் இன்று சுட்டு கொல்லப்பட்டனர்.  அவர்கள் 4 பேரும் ஜமாத்-உல்-முஜாகிதீன் அமைப்பினர் என நம்பப்படுகிறது*
++++++++++++++++
♈🇮🇳🌴5] *முதல் அமைச்சர் ஜெயலலிதாவின் உடல்நிலை தொடர்ந்து கண்காணிக்கப்படுகிறது; அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் தகவல்*
++++++++++++++++
♈🇮🇳🌴6] *சேலம்: மேட்டூர் அணையில் நீர் இருப்பை உயர்நிலை தொழில்நுட்பக் குழு நாளை காலை ஆய்வு செய்ய உள்ளது. மேட்டூரு் அணையை ஆய்வு செய்த பிறகு பவானிசாகர் அணையை மத்திய குழுவினர் ஆய்வு செய்கி்ன்றனர்*
++++++++++++++++
♈🇮🇳🌴7] *பண்ருட்டி ஆர்.எஸ்.மணி நகரில் வீட்டில் தனியாக இருந்த பெண் பட்டப்பகலில் கொலை செய்யப்பட்டுள்ளார். யாஸ்மின் என்ற பெண்ணை கொன்றவர்களை பண்ருட்டி போலீசார் தேடி வருகின்றனர்*
++++++++++++++++
♈🇮🇳🌴8] *சென்னை: தற்காலிக பட்டாசு கடைகள் அமைப்பவர்கள் வணிகவரித்துறையில் பதிவு செய்வது அவசியம். மாவட்ட தலைமை அலுவலகங்களில் பதிவுச் சான்று பெறாலம் என்று வணிகவரித்துறை ஆணையர் அறிவித்துள்ளார். வாடிக்கையாளர்களுக்கு விற்கப்படும் பட்டாசுகளுக்கு பில் அளிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது*

++++++++++++++++
♈🇮🇳🌴9] *லோக் அதலாத்: 1,00,549 வழக்குகளுக்கு தீர்வு*
++++++++++++++++
♈🇮🇳🌴10] *மைசூரு தசரா விழா துவங்கியது*
++++++++++++++++
♈🇮🇳🌴11] *அரியலூர்: விபத்தில் தந்தை, மகள் உயிரிழப்பு*
+++++++++++++++++++++++++++
♈🇮🇳🌴12] *இந்தியா - பாகிஸ்தான் இடையேயான மோதல்போக்குக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக உளவுத்துறை தலைவர் பதவியில் விரைவில் மாற்றம் மேற்கொள்ள பாக்., பிரதமர் நவாஸ் ஷெரீப் தீர்மானித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது*
+++++++++++++++++++++++++++
♈🇮🇳🌴13] அரசியல் கட்சிகள் பொது நிதியை தங்களின் கட்சிக்காக பயன்படுத்தினால் அந்த கட்சியின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது.அரசியல் கட்சிகளுக்காக புதிய வழிகாட்டுதலை தேர்தல் கமிஷன் வெளியிட்டுள்ளது. இதன்படி, எந்த ஒரு அரசியல் கட்சியும் பொது நிதியை தங்கள் கட்சிக்கு பயன்படுத்தவோ அல்லது பயன்படுத்த அனுமதிக்கவோ கூடாது. வேட்பாளர்கள் பிரசாரத்தின் போது தன்னை அல்லது தனக்கு வழங்கப்பட்ட சின்னத்தை பிரபலப்படுத்த பொது இடங்கள் அல்லது அரசு இயந்திரங்களை பயன்படுத்தக் கூடாது. இந்த வழிகாட்டுதல்களை எந்த வகையிலாவது மீறினால் அது சட்டத்திற்கு புறம்பானதாக கருதப்படும்.அதன் பிறகு அக்கட்சி சஸ்பெண்ட் செய்யப்படும் அல்லது கட்சியின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது*
+++++++++++++++++++++++++++
♈🇮🇳🌴14] *தமிழ்நாடு கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் பி.பாலகிருஷ்ண ரெட்டியின் தனிச் செயலாளர் சத்தியா என்கிற சத்தியநாராயனா பெங்களூரில் கைது செய்யப்பட்டார்.பெண்களை வைத்து விபச்சார தொழில் நடத்தி வந்த சத்தியா,  பெங்களூர் பானசவாடியில் பிடிபட்டார்.  அவருடன் 9 பேர் மத்திய குற்றப்பிரிவு போலிசாரால் கைது செய்யப்பட்டனர் . இவர்களிடம் பிடியில் இருந்த தமிழகம், ஆந்திராவை சேர்ந்த பல பெண்கள் மீட்கப்பட்டனர்*

+++++++++++++++++++++++++++

♈🇮🇳🌴15] *புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர். க.கிருஷ்னசாமி அப்பலோ மருத்துதுவமனை சென்று முதல்வர் ஜெயலலிதா உடல்நலம் பற்றி கேட்டறிந்தார்.விரைவில் நலம்பெற வாழ்த்தினார்.
++++++++++++++++++++++++
♈🇮🇳🌴16] தெலுங்கானா மாநிலத்தில் கனமழை காரணமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது. அதாவது, உயிரிழந்தவர்களில் மேடக் மாவட்டத்தில் 8 பேரும் மற்றும் வாரங்கல் மாவட்டத்தில் 3 பேரும் ஆவர்
+++++++++++++++++++++++++
♈🇮🇳🌴17] மும்பையில் நேற்றிரவு ஒரு ஆட்டோவில் வாயு கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 9 பேர் காயமடைந்தனர் மற்றும் காயமடைந்த அனைவரும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்
++++++++++++++++++++++++
♈🇮🇳🌴18] ஒடிசா மாநிலம், காளஹண்டி மாவட்டத்தில் அம்மாவின் இறுதி சடங்கிற்கு சில மர கட்டுமானங்கள் தேவைப்பட்டன. அதற்காக பெண்கள், தங்கள் வீட்டின் கூரையை அகற்றி, அம்மாவின் இறுதி சடங்கிற்காக உடலை தூக்கிச் சென்றனர்
+++++++++++++++++++
♈🇮🇳🌴19] மால்ம, ஸ்வீடனில் ஆடி காரில் வந்த ஒரு மர்மநபர் திடீரென ஒரு கூட்டத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தினார். இந்த துப்பாக்கிச் சூட்டில் பலர் இறந்திருக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது
++++++++++++
♈🇮🇳🌴20] கோல்ஃப் விளையாட்டில் முடி சூடா மன்னராக திகழ்ந்த 87 வயதான அர்னால்டு பால்மர் காலமானார்
++++++++++++
♈🇮🇳🌴21] * 8 செயற்கை கோளுடன் பிஎஸ்எல்வி -சி 35 ராக்கெட், இன்று விண்ணில் பாய்கிறது. ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளத்தில் இருந்து இன்று காலை 9.12 மணிக்கு பிஎஸ்எல்வி ராக்கெட் விண்ணில் பாய்கிறது. கடல் ஆராய்ச்சி மற்றும் பருவ நிலை ஆய்வுக்காக 377 கிலோ எடை கொண்ட ஸ்கேட் சாட் 1 செயற்கை கோளுடன் பிஎஸ்எல்வி -சி 35 ராக்கெட் அனுப்பப்படுகிறது. அல்ஜிரியா, கனடா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் தயாரித்த 5 செயற்கைகோள்களும் ஏவப்படுகின்றன. மேலும் இந்திய பல்கலைக்கழகங்கள் உருவாக்கியுள்ள 2 செயற்கைகோள்களும் இதில் இடம்பெற்றுள்ளன*
+++++++++++++++
♈🇮🇳🌴22] சென்னையில் தொடர் குற்ற சம்பவங்களை தடுக்க ரவுடிகள், பழைய குற்றவாளிகள், தலைமறைவு ரவுடிகள் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். மேலும், இரவு ரோந்து பணியும் முடுக்கி விடப்பட்டுள்ளது. அதன்படி, நேற்று முன்தினம் இரவு சென்னை முழுவதும் போலீசார் வாகன சோதனை மற்றும் தங்கும் விடுதிகளில் நடத்திய சோதனையில் சந்தேகத்தின் அடிப்படையில் 387 பேரையும், குற்ற பின்னணி கொண்ட 3 பேரையும் என மொத்தம் 400 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும், போதையில் வாகனம் ஓட்டியதாக 60 பேரையும் போலீசார் பிடித்து விசாரித்து வருகின்றனர்
++++++++++++++
♈🇮🇳🌴22] தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்தி குறிப்பில், ‘சென்னை சென்ட்ரலில் இருந்து நிஜாமுதினுக்கு இன்று காலை 6.40 மணிக்கு புறப்பட வேண்டிய துரந்தோ எக்ஸ்பிரஸ் அதன் இணைப்பு ரயில் வருவதில் ஏற்பட்டுள்ள காலதாமதம் காரணமாக இன்று மாலை 6.20 மணிக்கு புறப்படும்’ என்று கூறப்பட்டுள்ளது
++++++++++++++
♈🇮🇳🌴23] அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே கண்டெய்னர் லாரி-மினி லாரி மோதி 10 பேர் உயிரிழந்தனர். ஜெயங்கொண்டம் அருகே உள்ள உடையார்பாளையம் சாலையில் கட்சிப்பெருமாள் கிராமத்தில் விபத்து நிகழ்ந்தது. கட்சிப்பெருமாள் கிராமத்தில் நடந்த விபத்தில் காயமடைந்த 15 பேர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்
++++++++++++++
♈🇮🇳🌴24] தேங்காய்பட்டினத்தில் நாட்டுப்படகு மீனவர்கள் வேலை நிறுத்தம்
+++++++++++++++++++++++++++
♈🇮🇳🌴25] ஹிலாரி - டிரம்ப் இடையே முதல் நேரடி விவாதம்; இந்திய நேரப்படி நாளை காலை துவக்கம்
++++++++++++
♈🇮🇳🌴26] இந்திய எல்லையில் முள்வேலி அமைக்கிறது வங்கதேசம்
♈🇮🇳🌴27] ஐதராபாத், ஜம்மு உள்பட ஐந்து பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகளிடம் பிரதமர் நரேந்திர மோடி வெப்காஸ்ட் மூலம் இன்று(செப்.,26) கலந்துரையாடுகிறார்
++++++++++++++++++
பிரதமரின் புதிய பாதுகாப்பு செயலாளராக ராதாகிருஷ்ண கினி தேர்வு

++++++++++++++++++++++++

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here