தமிழக முதல்வர் ஜெயலலிதா விரைவில் நலம்பெற வேண்டி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் இன்று 25 ஆயிரம் பெண்கள் பால்குடம் எடுத்து வழிபாடு செய்யவுள்ளனர்.
தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல்நலக் குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகிறார்.
http://www.sivakasiteacherkaruppasamy.blogspot.com
இந்நிலையில் அவர் விரைவில் குணமடைய வேண்டும் என்று அதிமுக தொண்டர்கள் தொடர்ந்து பிரார்த்தனை செய்து வருகின்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அமைச்சர் பாலகிருஷ்ணரெட்டி தலைமையில் 2008 பெண்கள் பால்குடம் எடுத்து முதல்வர் விரைவில் வீடு திரும்ப வேண்டும் என்று வேண்டிக் கொண்டனர்.
இந்த நிலையில் முதல்வர் ஜெயலலிதா விரைவில் குணமடைய வேண்டும் என்று தேனியில் இன்று அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் 25000 பெண்கள் பால்குடம் எடுத்து வழிபாடு நடத்துகின்றனர்.
இதற்காக தேனி மாவட்டத்தின் 4 தொகுதிகளில் இருந்தும் 25000 பெண்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவர்களுக்கு நேற்றே சில்வர் குடமும், சேலையும் வழங்கப்பட்டுள்ளது.
முதல்வர் விரைவில் குணமுடைய நாமும் வேண்டுவோமாக
http://www.sivakasiteacherkaruppasamy.blogspot.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக