முலாயம்சிங் யாதவ் -- அகிலேஷ்யாதவ் மோதல் வெடித்தது.....போட்டி கூட்டம்....அகிலேஷ் யாதவ் தனிக்கட்சி - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

முலாயம்சிங் யாதவ் -- அகிலேஷ்யாதவ் மோதல் வெடித்தது.....போட்டி கூட்டம்....அகிலேஷ் யாதவ் தனிக்கட்சி


பலத்தை காட்டிய அகிலேஷ் யாதவ் - போட்டி கூட்டத்தை கூட்டுகிறார் 
முலாயம் சிங் உத்தரபிரதேசத்தில் சமாஜ்வாடி கட்சியின் ஆட்சி நடந்து வருகிறது. கட்சியின் தலைவர் முலாயம் சிங் மகன் அகிலேஷ் யாதவ் முதல் அமைச்சராக உள்ளார். இந்த நிலையில் கட்சியில் அகிலேஷ் யாதவ் ஒரு தரப்பாகவும், முலாயம் சிங் மற்றும் அவரது சகோதரர்கள் ஒரு தரப்பாகவும் செயல்பட்டு வருகின்றனர். இதனால் கட்சியில் உட்பூசல் நாளுக்கு, நாள் வளர்ந்து வருகிறது. இந்த நிலையில் 300க்கும் மேற்பட்ட சமாஜ்வாடி கட்சி எம்எல்ஏக்கள் மற்றும் எம்எல்சிக்கள் பங்கேற்ற கூட்டம் நேற்று அகிலேஷ் யாதவ் தலைமையில் லக்னோவில் நடைபெற்றது. முலாயம் சிங் மற்றும் அவரது சகோதரர் சிவபால் யாதவ், அவர்களுக்கு ஆதரவான 75 எம்எல்ஏக்களுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. தம்மை முழுமையாக ஆதரிக்கும் 175 எம்எல்ஏக்களுக்கு மட்டுமே இந்தக் கூட்டத்தில் பங்கேற்க அகிலேஷ் யாதவ் அழைப்பு விடுத்திருந்தார்.கிளிக்கு இறகு முளைத்ததாக கிளி நம்புகிறது .. ஆனால் நிலைமை அப்படி அல்ல .
கட்சியில் தனக்குள்ள பலத்தை காட்டி தனி அரசியல் பயணத்தை தொடங்கவே இந்தக் கூட்டத்தை அகிலேஷ் யாதவ் கூட்டியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த பரபரப்பான சூழ்நிலையில் நாளை முலாயம் சிங் தனது ஆதரவு எம்எல்ஏக்கள் கூட்டத்தை கூட்டியிருக்கிறார். கட்சியில் யாருக்கு ஆதரவு அதிகம் என்பது இந்தக் கூட்டத்திற்கு பிறகு தெரிவிக்கப்படும் என்று கூறப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here