எனதருமை CPS பங்காளியே!
அக்டோபர் 27-உடன் முடிந்துவிட்ட காலநீட்டிப்பு செய்யப்பட்ட வல்லுநர் குழுவிடமிருந்து பதிலோ இதுவரை வரக்காணாம்!
இடைநிலை ஆசிரியர் ஊதிய முரண்பாடு களைந்த ஊதியக்குழுவிற்கான அறிவிப்போ இதுவரை விடக்காணாம்!
ஆட்சி மாறியவுடன் காட்சியைப் பாருங்கள் என சாட்சி கொடுத்தவர்களிடம் கூறுங்கள், 5 மாதங்கள் முடிந்துவிட்டது என்று.
பதில் வருமென காத்திருப்பது இயக்கங்களுக்கு அழகல்ல. பதிலை வர வைக்கும் நோக்கில் அடுத்த கட்ட இயக்கத்தில் இறங்குவதே இயக்கங்களுக்கான அழகு.
எனவே, இன்றைய தேவை இயங்கும் இயக்கங்களே!
நாம் சார்ந்த சங்கங்கள் வேறாக இருக்கலாம். ஆனால், நமது தேவை ஒன்றாகவே இருக்கிறது.
1சிங்கம் - 4மாடுகள் கதையில் கூட மாடு தனது உயிரைக் காக்கவே போராடியது. ஆனால், CPS-ற்கான போராட்டம் என்பது அனைத்து அரசூழியர் & ஆசிரியர்களின் ஒட்டுமொத்த நலன் சார்ந்தது.
ஊதிய முரண்பாடு என்பதும் ஒட்டுமொத்த இடைநிலை ஆசிரியர்கள் நலன் சார்ந்தது.
ஒட்டுமொத்தத்தினரின் நலன் சார்ந்த கோரிக்கைகளை ஓட்டுக் கணக்கில் அதிகார வர்க்கம் பார்க்கையில், ஒட்டுமொத்த நலனுக்காக ஒருசிலர் மட்டும் போராடுவது ஏற்புடையதோ!?
எந்தவொரு இயக்கம் இயங்கத் தயாராகிவிட்டதோ அதனோடு நாம் அனைவரும் உடன் களம் சேர்வதே நமக்கான கோரிக்கையை விரைவில் வென்றேடுக்க வழிவகுக்கும்.
அவ்வகையில்,
🚩CPS நீக்கம்
🚩இ.நி.ஆ ஊதிய முரண்பாடு களைந்த ஊதியக்குழு
உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி,
04.11.2016:
*கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டம்*
20.11.2016:
*மாவட்ட தலைநகரில் உண்ணாவிரதம்*
28.12.2016:
*சென்னையில் தொடர் முழக்க போராட்டம்*
உள்ளிட்ட தொடர் போராட்டங்களை அறிவித்து களத்தை அனல் மூட்டியுள்ளது, *```TNPTF.```*
இயக்கம் பார்த்து தூர நில்லாது, இயங்குவதைப் பார்த்து உடன் நிற்க அழைக்கிறேன்.
உண்மையான போராட்டத்திற்கு உமது சங்கமும் துணியுமானால், உடன் நிற்கவும் காத்திருக்கிறேன்.
*இயங்காத் தலைமைக்கு உணர்வூட்டு!*
*இயங்கும் தோழனுடன் வலுகூட்டு!!*
_கோடிக்கைகள் ஒன்றானேலே,_
_கோரிக்கைகள் வென்றிடலாம்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக