A] *நவ.2017 வரை சி.ஐ.எஸ்.எப்., பாதுகாப்பு: சென்னை ஐகோர்ட்*
B] *பத்திரிகை சுதந்தரம் குறித்த குறீயீட்டு எண் பட்டியலில் இந்தியாவின் நிலை மோசமாக உள்ளது. இந்த பட்டியலில் பின்லாந்து முதலிடத்தில் உள்ளது.
*இங்கிலாந்து 38 வது இடத்தில் உள்ளது.
*அமெரிக்கா 41வது இடத்தில் உள்ளது.
*பூடான் 94வது இடத்தில் உள்ளது.
*நேபாளம் 105வது இடத்தில் உள்ளது.
*இந்தியா 133வது இடத்தில் உள்ளது.
*பாகிஸ்தான் 147 வது இடத்தில் உள்ளது.
*சீனா 176வது இடத்தில் உள்ளது.
இந்த பட்டியலில் 180 நாடுகள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டன.10வது இடம்:பத்திரிகையாளர்கள் அதிகம் பேர் இறப்பது தொடர்பான பட்டியலிலும் இந்தியா முதல் 10 இடத்தில் உள்ளது. இந்த பட்டியல் 1992 முதல் 2016 வரை கணக்கில் எடுத்து கொள்ளப்பட்டுள்ளது.
1.ஈராக்கில் 175 பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டுனர்.
2.சிரியாவில் 101 பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டுனர்.
3.பிலிப்பைன்சில் 77 பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
4.அல்ஜீரியாவில் 60 பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
5.சோமாலியாவில் 59 பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
6.பாகிஸ்தானில் 59 பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
7.ரஷ்யாவில் 56 பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
8.கொலம்பியாவில் 47 பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
9.இந்தியாவில் 40 பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
10.பிரேசிலில் 39 பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.தண்டனை இல்லை:கடந்த 1992ம் ஆண்டு முதல் 2016 ஜூலை வரை இந்தியாவில் 40 பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்ட நிலையில், இந்த சம்பவத்தில் யாருக்கும் தண்டனை வழங்கப்படவில்லை. அதேநேரத்தில், பலியான பத்திரிகையாளர்களில் 56 சதவீதம் பேர் மீது முறைகேடு புகார் கொடுக்கப்பட்டுள்ளது.பத்திரிகையாளர்கள் முன் உள்ள சவால்:இந்தியாவில் பத்திரிகையாளர்களுக்கு உள்ள சவால்களாக இந்த பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ள விஷயங்கள்.
* சில மதவாத சக்திகளால், பத்திரிகையாளர்கள் தொடர்ந்து தாக்குதலுக்கு ஆளாகின்றனர்
* காஷ்மீர் உள்ளிட்ட பதற்றமிக்க பகுதிகளில், பத்திரிகையாளர்கள் செய்தி சேகரிக்க முடியவில்லை
* மீடியா மீது அரசு ஆதிக்கம் செலுத்தி வருகிறது.
* பத்திரிகையாளர்களை பாதுகாப்பு குறித்த விஷயத்தில் நடவடிக்கை இல்லை.
அதேநேரத்தில், சென்சார் செய்யாமல் செய்தி வெளியிட மீடியாவுக்கு உரிமை உள்ளது என இந்தியாவில் 44 சதவீதம் பேர் மட்டுமே ஆதரவு தெரிவித்துள்ளனர். ஆனால் இது சர்வதேச அளவில் 56 சதவீதமாக உள்ளது.
C] *சொன்னது தவறுதான்: வைகோ பதில்* - *மதுரை விமான நிலையத்திற்கு இன்று காலை வந்த வைகோவிடம், பிரேமலதா பதில் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.அதற்கு பதில் அளித்த வைகோ, கால சூழ்நிலைக்காக அப்படி ஒரு முடிவு எடுக்கப்பட்டது என்றும் நான் கூறியிருந்தேன். அதனை யாரும் பெரிதாக போடவில்லை. தவறாக சொல்லிவிட்டார்கள். சகோதரி பிரேமலதாவின் பேட்டியை பத்திரிகை வாயிலாகவும், தொலைக்காட்சி வாயிலாகவும் அறிந்தேன். திமுக கூட்டணியில் பணமும், அதிக தொகுதிகளையும் தருவதாக கூறியும் அங்கு செல்லாமல் மக்கள் நலக் கூட்டணிக்கு வந்த விஜயகாந்த் மனதை நான் பாராட்டுகிறேன். நான் சொன்னது தவறுதான் என்றார்*
D] *தலைவராக சோனியாவே நீடிப்பார்: காங்கிரஸ் காரிய கமிட்டியில் முடிவு* *ராகுல் காந்தி காங்கிரஸ் கட்சியின் தலைவராக காரியகமிட்டி உறுப்பினர்கள் ஒருமனதாக ஆதரவு* *காங். தலைவர் பொறுப்பை ராகுல் ஏற்க இதுவே சரியான தருணம்: ஏகே ஆண்டனி பேச்சுக்கு செம ஆதரவு!!
ஆண்டனியின் கோரிக்கைக்கு மன்மோகன்சிங் உள்ளிட்டோர் ஆதரவு. ஓராண்டுக்குப் பிறகு உட்கட்சித் தேர்தல் நடத்த காங். காரிய கமிட்டி தீர்மானம்*
*ஜல்லிக்கட்டு தொடர்பான அனைத்து வழக்குகள் மீது நாளை மறுநாள் உச்சநீதிமன்றத்தில் விசாரணை*
E] *வெடித்துச் சிதறியது ரிலையன்ஸ் - ஜியோ ’லைஃப் மொபைல்'* [15]
♈🇮🇳🌴1] *சிதம்பரம் அருகே மாமியாரை கொன்ற மருமகளுக்கு மகளிர் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியது.சிறகேந்தநல்லூரில் 2014ல் மீனாட்சி என்பவரை கொன்ற மருமகள் அம்சவள்ளிக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது*
♈🇮🇳🌴2] *ஆந்திர மாநிலம் கடப்பாவில் செம்மரம் கடத்திய 7 பேர் போலீசாரின் வாகன சோதனையின் போது கைது செய்யப்பட்டனர். 7 பேரிடமிருந்து ரூ.1 கோடி மதிப்பிலான செம்மரக்கட்டைகள், வேன்கள் பறிமுதல் செய்யப்பட்டது*
♈🇮🇳🌴3] *சசிகலா புஷ்பாவை கைது செய்ய விதிக்கப்பட்ட தடையை நீட்டிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை மறுப்பு தெரிவித்துள்ளது. வக்கீல் சுகந்தி வீட்டை தாக்கிய வழக்கில் சசிகலா புஷ்பா கைது செய்ய தடை விதிக்கப்பட்டிருந்தது*
♈🇮🇳🌴4] *தமிழக கோயில்களை புனரமைப்பது தொடர்பாக முடிவெடுக்க 5 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. மூத்த பொறியாளர் உள்பட 5 பேர் கொண்ட குழுவை தாமாக முன்வந்து சென்னை ஐகோர்ட் அமைத்தது. பொறியாளர்கள் சத்தியமூர்த்தி, அருண்மேனன் உள்ளிட்டோர் குழுவில் இடம்பெற்றுள்ளனர்*
♈🇮🇳🌴5] *அரசு முறை பயணமாக இங்கிலாந்து பிரதமர் இந்தியா வந்துள்ளார். டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்து இரு நாட்டு உறவுகள் குறித்து பேசினார். ஐ.நா பாதுகாப்புக் கவுன்சிலில் இந்தியா இடம்பெறுவதை ஆதரிப்பதாக தெரசா மே கூறினார். இந்தியாவில் 12000 கோடி டாலர் முதலீடு செய்யப்படும் என இங்கிலாந்து பிரதமர் அறிவித்துள்ளார். பிரதமர் மோடியுடன் நடத்திய பேச்சுவார்த்தை ஆக்கபூர்வமாக இருந்ததாக அவர் தெரிவித்தார்*
♈🇮🇳🌴6] *பயங்கரவாதம் ஒழிப்பில் இந்தியா- பிரிட்டன் இணைந்து செயல்படும்*
♈🇮🇳🌴7] *நக்மா - குஷ்பு இடையே மோதல் இல்லை: திருநாவுக்கரசர்*
♈🇮🇳🌴8] *தனுஷ்கோடியில் கடல் சீற்றம்: தேசிய நெடுஞ்சாலை சேதம்*
♈🇮🇳🌴9] *சென்னையில் பல இடங்களில் பரவலாக மழை*
♈🇮🇳🌴10] *கிரிக்கெட்: ஆஸி.,யை வீழ்த்தியது தென் ஆப்ரிக்கா*
♈🇮🇳🌴11] *பிரபல ரவுடி மர்ம நபர்களால் வெட்டி படுகொலை!நாகை மாவட்டம் மயிலாடுதுறை தாலுக்கா ஆத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் செஞ்சித்தேவர் மகன் மனோகர் (43). என்கவுன்டரில் சுட்டுக்கொல்லப்பட்ட மணல்மேடு சங்கரின் கூட்டாளியான இவர் 2002ம் ஆண்டு ஆத்தூர் கண்ணையன், 2005-ம் ஆண்டு ஆத்தூர் வீரமணி கொலை வழக்குகளில் தொடர்புடையவர். மேலும் இவர் மீது பல்வேறு கொள்ளை, வழிப்பறி வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதனால் வீரமணி மகன் சுமனுக்கும், மனோகருக்கும் நேரடி விரோதம் ஏற்பட்டது. மணல்மேடு சங்கரின் சாவுக்கு பின்னர் மனோகர் தன்னை காத்துக்கொள்ள ரவுடி வெள்ளப்பள்ளம் வினோத்தின் கூட்டாளியானார்.கடந்த ஆண்டு குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்த மனோகர் சம்பத்தில் ஜாமீனில் வெளிவந்து ஆத்தூரில் இருந்தார். இந்நிலையில் இன்று காலை ஆத்தூர் பாலம் அருகே வந்த மனோகரை ஒரு மர்ம கும்பல் அரிவாளால் வெட்டியது. இதில் தலை, கழுத்து, முதுகு பகுதியில் பலத்த காயமடைந்த மனோகர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்*
♈🇮🇳🌴12] *கடந்த வாரத்தில், சிறுபான்மை இந்து சமூகத்தினரின் கோவில்கள் மற்றும் வீடுகள் மீது வங்கதேசத்தில்நடந்த தொடர் தாக்குதல்கள் தொடர்பாக, மேலும் 21 பேரை அந்நாட்டின் போலீஸார் கைது செய்துள்ளனர்*
♈🇮🇳🌴13] *இலங்கையின் தலைமன்னார் கடற்பரப்பில் படகொன்றில் இந்தியாவுக்குக் கடத்திச் செல்லப்படயிருந்ததாகத் தெரிவிக்கப்படும் 5 கிலோ தங்கத்தை கடற்படையினர் ஞாயிறன்று கைப்பற்றியுள்ளனர்*
♈🇮🇳🌴15] *'ரிலையன்ஸ் - ஜியோ' நிறுவனம் மூன்று மாத இலவச அழைப்பு மற்றும் '4ஜி' இலவச இன்டர்நெட் சேவை வழங்குவதாக அறிவித்தது. மேலும், ‘ரிலையன்ஸ் லைஃப் மொபைல்' மற்றும், 'சாம்சங், எல்.ஜி., பேனாசோனிக், அசுஸ்' ஆகிய நிறுவனங்களின் மொபைல் போன்களை வாங்கு வோருக்கும், 'ஜியோ 4ஜி' சிம் கார்டுகளை, இலவசமாக வழங்கி வருகிறது.அதன் மூலமும், அனைத்து தொலைபேசி மற்றும் மொபைல் போன்களுக்கும், மூன்று மாதங்கள் இலவச அழைப்பு வசதியும், இலவச இன்டர்நெட் சேவையும் வழங்கப்படும் என அறிவித்தது.இந்நிலையில், ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் தயாரிப்பான ’லைஃப் மொபைல்’ போன் வெடித்து சிதறியதாகவும், ஆனால், தனது குடும்பத்தினர் மயிரிழையில் உயிர் தப்பியதாகவும் தன்விர் சாதிக் என்பவர் மூன்று புகைப்படங்களுடன் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். ஆனால், அவர் எந்த மாடல் போனை பயன்படுத்தினார் என்றோ எப்படி வெடித்துச் சிதறியது என்பது குறித்தோ தகவல்கள் வெளியிடவில்லை.இதற்கடுத்து, அவருடைய பதிவிற்கு ரிலையன்ஸ் லைஃப் மொபைல் நிறுவனம் பதிலளித்துள்ளது. ”இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்துவது தொடர்பாக விவாதித்து வருகிறோம். இதன் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து பிறகு உங்களுக்கு பதிலளிக்கிறோம்; என்று தெரிவித்துள்ளது*
♈🇮🇳🌴16] *சென்னைக்கு கட்டிங் பிளேயரில் வைத்து காரில் கடத்தி வரப்பட்ட ரூ.1.80 கோடி மதிப்புள்ள தங்கத்தை மத்திய வருவாய் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். சென்னைக்கு திருச்சியில் இருந்து காரில் தங்கம் கடத்தப்படுவதாக மத்திய வருவாய் புலனாய்வுப் பிரிவுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன்பேரில், செங்கல்பட்டு அருகே ஜி.எஸ்.டி. சாலையில் வாகனச் சோதனையில் ஈடுபட்டனர்.இதில் ஒரு காரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த தங்க கட்டிகளையும், தங்க நகைகளையும் பறிமுதல் செய்தனர். மேலும், அந்தக் காரில் இருந்த கட்டிங் பிளேயர் சந்தேகத்தை ஏற்படுத்தும் வகையில் இருந்துள்ளது.இதையடுத்து கட்டிங் பிளேயரை ஆய்வு செய்தபோது கட்டிங் பிளேயரின் கைப்பிடியின், ரப்பர் உறைக்குள் தங்கத்தை மறைத்து வைத்து கடத்தி வருவது தெரியவந்தது.இதில் இரும்பு கைபிடியை எடுத்துவிட்டு, அதற்கு பதிலாக தங்க கம்பிகளைப் பொருத்தி, அதன் மேல் ரப்பர் உறையைப் பொருத்தியிருப்பதும் தெரியவந்தது.இதையடுத்து, காரில் வந்த நான்கு பேரையும் விசாரித்து அவர்களிடமிருந்து மொத்தம் ரூ.1.80 கோடி மதிப்புள்ள 5.9 கிலோ எடையுள்ள தங்க நகைகளையும், தங்க கட்டிகளையும் அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.இந்தத் தங்க கடத்தல் தொடர்பாக இது வரை மொத்தம் 8 பேரை கைது செய்யப்பட்டிருப்பதாக மத்திய வருவாய் புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது*
♈🇮🇳🌴17] *போபால் என்கவுண்டர்: ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணைக்குழு அமைப்பு*
♈🇮🇳🌴18] *இந்தியாவிற்கு திருமணத்திற்கு வர பாகிஸ்தான் மணமகளுக்கு சுஷ்மா சுவராஜ் உதவி*
♈🇮🇳🌴19] *டெல்லியில் ஏற்பட்டுள்ள மாசு பிரச்சினையை கண்காணிக்க கோரி மனு: நாளை விசாரிக்கிறது சுப்ரீம் கோர்ட்டு*
♈🇮🇳🌴20] *வர்த்தக முடிவில் இந்திய பங்குச்சந்தையில் சென்செக்ஸ் 184 புள்ளிகள் உயர்ந்து 27,458 புள்ளிகளாக உள்ளது. நிஃப்டி 63 புள்ளிகள் உயர்ந்து 8,497 புள்ளிகளாக உள்ளது*
♈🇮🇳🌴21] **
♈🇮🇳🌴22] *தமிழக மீனவர்கள் தொடர்பான பேச்சுவார்த்தை பெயரளவுக்கே நடைபெறுகின்றன என ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். மீனவர்களின் மீன்பிடியை உரிமையை நிலைநாட்ட மத்திய அரசுக்கு தமிழக அரசு அழுத்தம் தர வேண்டும் என திமுக பொருளாளர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். தேவைப்பட்டால் பேச்சுவார்த்தைக்கு மீன்வளத்துறை அமைச்சருக்கு பதில் பன்னீர்செல்வம் செல்ல வேண்டும் என ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்*
♈🇮🇳🌴22] *கொல்கத்தா விமான நிலையத்தில் இடநெருக்கடி காரணமாக டெல்லியில் இருந்து கொல்கத்தா சென்ற இண்டிகோ விமானம் புவனேஸ்வருக்கு திருப்பிவிடப்பட்டது. இடநெருக்கடி காரணமாக இந்த மாற்று ஏற்பாடு செய்யபப்ட்டுள்ளதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்*
♈🇮🇳🌴23] *புதுச்சேரியை அடுத்த கோட்டக்குப்பத்தில் லாட்டரி சீட்டு விற்ற 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள லாட்டரி சீட்டுக்கள் மற்றும் 2 பைக்குகள் பறிமுதல் செய்யப்பட்டது*
♈🇮🇳🌴24] *சிவகங்கையில் பள்ளிக்கு சென்ற சிறுமியை கடத்தி மர்ம நபர்கள் நகையை பறித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பள்ளி அருகே 3ம் வகுப்பு மாணவி திவ்யாவை கடத்திய கும்பல் சிறிது தூரம் சென்று இறங்கிவிட்டது. சிறுமியை கடத்தியது யார் என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்*
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக