இன்றைய செய்திகள் 14/11/2016 (அமெரிக்காவில் 30 லட்சம் பேர் வெளியேற்றப்படுவர்/அரவக்குறிச்சியில் பணப்பட்டுவாடா/நீயூஸ்லாந்தில் முதல் நிலநடுக்கம்/முதல்வரின் முதல் அறிக்கை/குழந்தைகள் தின விழா/60ஆண்டு நிச்சயதார்த்த திருமணம் /புதிய 500 நோட்டு டெல்லியில் புழக்கம்/மழையில்லாததால் ஈரோடு விவசாயி தற்கொலை மேலும் பல செய்திகள்) - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

இன்றைய செய்திகள் 14/11/2016 (அமெரிக்காவில் 30 லட்சம் பேர் வெளியேற்றப்படுவர்/அரவக்குறிச்சியில் பணப்பட்டுவாடா/நீயூஸ்லாந்தில் முதல் நிலநடுக்கம்/முதல்வரின் முதல் அறிக்கை/குழந்தைகள் தின விழா/60ஆண்டு நிச்சயதார்த்த திருமணம் /புதிய 500 நோட்டு டெல்லியில் புழக்கம்/மழையில்லாததால் ஈரோடு விவசாயி தற்கொலை மேலும் பல செய்திகள்)



*அமெரிக்காவில் குடியேறியவர்களில் 30 லட்சம் பேர் வெளியேற்றப்படுவர்: டிரம்ப்*

*அரவக்குறிச்சியில் பணப்பட்டுவாடா: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றசாட்டு* புதிய நோட்டா , பழைய நோட்டா ப்ரோ

*வெளிநாடுகளில் குற்றம் செய்துவிட்டு, நம் நாட்டில் ஊடுருவும் இந்தியர்களுக்கு எதிராக, சட்ட நடவடிக்கை எடுக்கும் அதிகாரம், சி.பி.ஐ.,க்கு வழங்கப்பட்டுள்ளது*  இந்தியாவில் குற்றம் செய்தவர்கள் வெளிநாடு எளிதாக செல்லலாமா
♈🇮🇳🌴1] * நியூஸிலாந்தில் ஏற்பட்டுள்ள முதல் நிலநடுக்கத்தால் இரண்டு பேர் பலியாகிய சில மணி நேரங்களில், அந்நாட்டின் தெற்கு தீவு ஒன்றில் 6.1 என்ற அளவில் மற்றொரு பலமான நிலநடுக்கம் தாக்கியுள்ளது*
♈🇮🇳🌴2] * கடந்த ஒரு மாதத்துக்கு மேலாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தமிழக முதல்வர் ஜெயலலிதா ஞாயிற்றுக்கிழமை இரவுவெளியிட்ட ஓர் அறிக்கையில், அனைவரது பிரார்த்தனைகளால் தான் மறுபிறவி எடுத்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்*
♈🇮🇳🌴3] *அந்த குளத்தில் முதலை ஒன்று இருப்பதை  கேள்விப்பட்ட அதிகாரிகள்  முதலையை பிடிக்க அந்த குளத்தை கொஞ்சம் கொஞ்சமாக வற்றச் செய்தனர்.தண்ணீர் வற்றியது.முதலையை காணவில்லை.
முதலைகள் நிலத்திலும் நீரிலும் வாழும் என்பது அதிகாரிக்கு தெரிந்திருந்தும் அவர் குளத்தை வற்றச் செய்தார்.அங்கு சில மீன்கள் தன் வாழ்நாளை நீட்டித்துக் கொள்ள மிச்சமிருந்த சிலச் சொட்டு நீரைத் தேடி துடித்துக் கொண்டிருந்தது.இதுதான் இன்றைய இந்தியாவின் நிலை.*குளம் குட்டை கோடை காலத்தில் வற்றி தான் செய்ய போகிறது.. ஆனால் இப்போது குலம் செயற்கை முறையில் வற்ற படுகிறது மீன்கள் தற்காலிக குளங்களுக்கு மாற்ற படுகிறது, முதலைகள் நிலத்தில் வெகு காலம் வாழமுடியாது! நீர் அவசியம் எனவே அவை சில காட்டு ஆமைகளை அனுப்பி இது போன்ற அனுதாப செய்திகளை பரப்பி மக்களை குழப்பி எப்படியும் வாழ்ந்து விடலாம் என்று கனவு காண்கிறது**எனவே மீன்களுக்காக முதலை கண்ணீர் விடும் பண முதலைகளையும் அவர்களுக்கு ஒத்து ஊதும் காட்டு ஆமைகளையும் மக்கள் நம்பமாட்டார்கள்* விஸ்வரூபம்
♈🇮🇳🌴4] *காலத்தால் அழியாத காதல்*
65 ஆண்டுகளுக்கு முன்னர் நடைபெற இருந்த நிச்சயதார்த்தத்தை நிறுத்த கட்டாயப்படுத்தப்பட்ட பிரிட்டன் ஜோடி ஒன்று இறுதியில் திருமணபந்தத்தில் இணைந்திருக்கிறது.குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சனையால் இப்போது 82 வயதாகும் டாவி மோவாகெஸூக்கும் 86 வயதான டெர்பிஷீருக்கும் 1951 ஆம் ஆண்டு திருமணம் நடக்காமல் போயிற்று.அன்ரெவின் மகள் டெபியே வில்லியம்ஸ், மோவாக்கெஸை தேடிக் கண்டுபிடித்து மீண்டும் ஒன்றிணைத்து வைக்கப்பட்ட இந்த ஜோடி "தீவிர காதலில்" திழைத்திருக்கிறது.அவர் ஓவிய கலைஞராக இருந்ததால் மணமகளின் தாய் திருமணத்திற்கு ஒப்புக் கொள்ளாததால், அந்த ஜோடி தொடக்கத்தில் பிரிய வேண்டியதாயிற்று. "1950-களில் ஓவிய கலைஞராக ஒரு மருமகன் இருப்பது மதிக்கப்படும் எதிர்கால தொழிலாக கருதப்படவில்லை" என்று டெபியே வில்லியம்ஸ் கூறியிருக்கிறார்.அந்நாட்களில் பெற்றோர் சொல்வதை போல நடந்து கொண்டதால், இந்த இணை மனமுடைந்து போனது".தன்னுடைய தாய் மூன்றாவது முறையாக விதவை ஆனபோது, மோவாகெஸை தேடிக் கண்டுபிடிக்க தீர்மானித்ததாக டெபியே வில்லியம்ஸ் குறிப்பிட்டுள்ளார்."அவர்கள் பேசத் தொடங்கினர். உறவை புதுப்பித்து கொண்டனர். தீவிர காதலில் விழுந்தனர். அவர்களை நினைத்து மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன்" என்று அவர் தெரிவிக்கிறார். இந்த ஜோடிகள் அவர்களுக்கு இடையே 5 துணைவர்கள் வந்து போய் வாழ நேரிட்ட பிறகு, வெள்ளிக்கிழமை மதியம் ரிபிலெ பதிவு அலுவலகத்தில் திருமணம் செய்திருக்கின்றனர் என்று டெபியே வில்லியம்ஸ் குறிப்பிட்டுள்ளார்."நாங்கள் காதலிப்பது போல நீங்களும் யாரையாவது காதலித்தால், அது பயனில்லாமல் போகாது" என்று மோவாகெஸ் கூறியிருக்கிறார்."நான் அவரை வாழ்நாள் முழுவதும் காதலித்திருக்கிறேன். இப்போது அளவற்ற மகிழ்ச்சி அடைந்திருக்கிறேன். இறுதியில் நாங்கள் ஒன்றாகியிருக்கிறோம்" என்று மோவாகெஸின் புதிய திருமதி தெரிவித்திருக்கிறார்.
♈🇮🇳🌴5] *பழைய ரூ.500, ரூ.1000 நோட்டுகளை மாற்ற விதி விலக்குகள் நவம்பர் 24ம் தேதி நள்ளிரவு வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என்று பொருளாதார விவகாரங்களுக்கான செயலாளர் கூறியுள்ளார். நவம்பர் 24 வரை வங்கிகளில் ரூ.500, ரூ.1000 நோட்டுகளை மாற்றி ரூ.4000 வரை பெற்றுக் கொள்ளலாம். நவம்பர் 24-ந் தேதிக்கு பிறகு இந்த உச்சவரம்பு மேலும் அதிகரிக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்*
♈🇮🇳🌴6] *கேரள மாநிலம் ஆரியங்காவு சோதனைச் சாவடியில் ரூ.30 லட்சம் மதிப்புள்ள போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. மினி லாரியில் காயகறிகளுடன் மறைத்து கடத்திய தமிழகத்தைச் சேர்ந்த மகேந்திரன், கணேசன் கைது செய்யப்பட்டுள்ளது*
♈🇮🇳🌴7] *டெல்லியில் முன்னாள் பிரதமர் பண்டித ஜவஹர்லால் நேரு நினைவிடத்தில் தலைவர்கள் மரியாதை செலுத்தி வருகின்றனர். நேருவின் 128வது பிறந்தநாளையொட்டு குடியரசு துணைத்தலைவர் அமீது அன்சாரி, காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங், குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி ஆகியோர் மரியாதை செலுத்தினார்கள்*
♈🇮🇳🌴8] *திருவள்ளூர் மாவட்டம் வல்லூர் அனல்மின் நிலையத்தில் இரண்டாம் அலகில் மின்உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. கொதிகலனில் ஏற்பட்ட பழுது காரணமாக 500 மெகாவாட் மின்உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது*
♈🇮🇳🌴9] *மேல்மருவத்தூர் அருகே சோத்துப்பாக்கத்தில் அடுத்தடுத்த 3 வீடுகளில் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. கிரிவலத்துக்காக வீட்டின் உரிமையாளர்கள் வெளியூர் சென்ற நிலையில் மர்மநபர்கள் கொள்ளையடித்துள்ளனர். 3 வீடுகளின் பூட்டை உடைத்து 10 சவரன் நகை மற்றும் ரூ.60,000 பணத்தையும் திருடிய மர்மநபர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்* http://www.sivakasiteacherkaruppasamy.blogspot.com 
♈🇮🇳🌴10] *குமரி மாவட்டம் சின்னமடம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் மிதமான சாரல் மழை பெய்து வருகிறது*
♈🇮🇳🌴11] *அந்தமான் தீவுகளில் மிதமான நிலநடுக்கம் இன்று அதிகாலை 2.52 மணிக்கு உணரப்பட்டது. இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவில் 4.6 ஆக பதிவாகியுள்ளது. அதிஷ்டவசமாக, இந்த நிலநடுக்கத்தால் எந்த உயிரிழப்போ, காயமமோ ஏற்படவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது*
♈🇮🇳🌴12] *இன்று குரு நானக் ஜெயந்தியை முன்னிட்டு அமிர்தசரஸ் பொற்கோயிலில் சிறப்பான கொண்டாட்டங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 1469ம் ஆண்டு பிறந்த குரு நானக் சீக்கிய மதத்தின் நிறுவனர் மற்றும் பத்து சீக்கிய குருக்களுள் முதல் குரு ஆவார்*
♈🇮🇳🌴13] *உளுந்தூர்பேட்டை அருகே ஆசனூரில் லாரி மீது கார் மோதியது. இந்த விபத்தில் 5 பேர்  உயிரிழந்தனர். விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். படுகாயமடைந்த கார் ஓட்டுநர், உளுந்தூர்பேட்டை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். திருச்சியில் இருந்து சென்னை வரும்போது ஆசனூரில் குறுக்கே வந்த லாரி மீது மோதியது*
♈🇮🇳🌴14] *வங்கிகளில் இருந்து பணம் எடுப்பதற்கான வாராந்திர உச்சவரம்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சகம் அறிவித்துள்ளது.  வாரத்துக்கு ரூ.20,000 மட்டுமே எடுக்கலாம் என்ற உச்சவரம்பு ரூ.24,000ஆக உயர்த்தப்பட்டுள்ளது. ஏ.டி.எம்.களில் ரூ.2,000க்குப் பதில் ரூ.2,500  வரை எடுக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. 500, 1000 ரூபாய் நோட்டுக்களுக்குப் பதில் ரூ.4000 பெறலாம் என்பதாக இருந்த வரம்பு ரூ.4500ஆக  மாற்றப்பட்டுள்ளதாக நிதி அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது*

♈🇮🇳🌴15] *அர்ஜென்டினாவில் ரிக்டர் அளவுகோலில் 6.2 என நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. அர்ஜென்டினாவின் பெமடினா நகரத்தில்  நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது*
♈🇮🇳🌴16] *டெல்லியில் புதிய 500 ரூபாய் நோட்டுக்கள் மக்களிடம் விநியோகிக்கப்பட்டது. பழைய ரூ.500 நோட்டுகளை வங்கியில் செலுத்தி  பொதுமக்கள் புதிய 500 ரூபாய் நோட்டை பெற்றுச் சென்றனர்*
♈🇮🇳🌴17] * பயிர் கருகியதால் ஈரோடு விவசாயி தற்கொலை*
♈🇮🇳🌴18] *பிரதமரின் முடிவு வரலாற்று சிறப்பு மிக்கது: இந்திய தொழில் கூட்டமைப்பு*
♈🇮🇳🌴19] * பார்லி., குளிர்காலக் கூட்டத் தொடர் நாளை மறுநாள் துவங்க உள்ளதையடுத்து லோக்சபா சபாநாயகர் சுமித்ரா மகாஜன் அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார்*

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here