📡🌍காலை செய்திகள் 📡🌍
🌍📡16\11\16📡🌍
🌍📡🌍📡🌍📡🌍📡🌍📡🌍
📡📡📡📡📡📡📡📡📡📡📡
🌍🌍🌍🌍🌍🌍🌍🌍🌍🌍🌍
📡ஜனாதிபதி மாளிகை நோக்கி இன்று எதிர்க்கட்சிகள் பேரணி
புதுடில்லி : ரூபாய் நோட்டுக்கள் வாபஸ் பெறப்பட்ட விவகாரம் தொடர்பாக மத்திய அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் இன்று பேரணி செல்ல உள்ளன. ஊர்வலமாக சென்று இவர்கள் ஜனாதிபதியை சந்திக்க உள்ளனர். எதிர்க்கட்சிகள் பேரணி இன்று பார்லி., கூட்டத்தொடர் துவங்க உள்ள நிலையில், ரூ.500, 1000 நோட்டுக்கள் வாபஸ் பெறப்பட்ட விவகாரம் தொடர்பாக இருஅவையிலும் புயலை கிளப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன. அத்துடன் அவைக்கு வெளியே, மத்திய அரசுக்கு எதிராக பேரணி நடத்தவும் எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன. ரூபாய் நோட்டு வாபஸ், வாடிக்கையாளர்கள் கையில் மை வைக்கும் விவகாரம் ஆகியவற்றிற்கு எதிராக பேரணியாக சென்று ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை சந்திக்க எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளன.மம்தா தலைமை மேற்குவங்க முதல்வரும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவருமான மம்தா பானர்ஜி தலைமையில் இந்த பேரணி நடக்க உள்ளது.
🌍ரூ.13 கோடி லஞ்சம் வாங்கிய ரஷ்ய அமைச்சர் அதிரடி கைது : புலனாய்வு துறை விசாரணை
மாஸ்கோ: எண்ணெய் நிறுவன ஒப்பந்தத்திற்கு அனுமதி வழங்க, 13 கோடி ரூபாய் லஞ்சம் பெற்றதற்காக, ரஷ்ய பொருளாதார அமைச்சர் அலெக்சிஸ் உல்யுகாயேவ் கைது செய்யப்பட்டு உள்ளார்.
📡எகிப்து முன்னாள் அதிபரின் மரண தண்டனை ரத்து
கெய்ரோ: எகிப்தின் முன்னாள் அதிபர் மொர்சிக்கு, சிறை உடைப்பு தொடர்பான வழக்கில் கிரிமினல் கோர்ட் விதித்த மரண தண்டனையை, அந்நாட்டு தலைமை கோர்ட் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.
🌍சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து: இருவர் காயம்
விருதுநகர்: சிவகாசி அருகே செவல்பட்டியில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் இருவர் காயமடைந்துள்ளனர்.
📡பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.1.46, டீசல் விலை லிட்டருக்கு ரூ.1.53 குறைப்பு
டெல்லி: பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.1.46, டீசல் விலை லிட்டருக்கு ரூ.1.53 குறைக்கப்பட்டுள்ளதாக எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. இந்த புதிய விலை மாற்றம் நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தன.
🌍ஐகோர்ட்டின் புதிய நீதிபதிகள் 3 பேர் இன்று பதவி ஏற்பு
சென்னை ஐகோர்ட்டில் புதிய நீதிபதிகளாக 3 பேர் இன்று பதவி ஏற்கின்றனர். இவர்களுக்கு தலைமை நீதிபதி சஞ்சய்கிஷன் கவுல் பதவி பிரமாணம் செய்துவைக்கிறார்.
📡ஏ.டி.எம்.களில் எடுக்கும் பணத்தை ரூ.4 ஆயிரமாக உயர்த்தும் முடிவு நிறுத்தம்
ரூ. 500, ரூ.1,000 நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்ட நிலையில், ஏ.டி.எம்.களில் நாள் ஒன்றுக்கு ரூ.2 ஆயிரம்வரை எடுக்கலாம் என்று உச்சவரம்பு நிர்ணயிக்கப்பட்டது. கடந்த 13-ந் தேதி இரவு, இப்பிரச்சினை பற்றி பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை நடத்தினார். அதையடுத்து, ஏ.டி.எம்.களில் எடுப்பதற்கான பண உச்சவரம்பு ரூ.2,500 ஆக உயர்த்தப்பட்டது.
புதிய ரூ.500 மற்றும் ரூ.2,000 நோட்டுகளை கையாளும் வகையில் தொழில்நுட்ப மாற்றம் செய்யப்பட்ட ஏ.டி.எம்.களில் ரூ.2,500 வரையும், மற்ற ஏ.டி.எம்.களில் ரூ.2 ஆயிரம் வரையும் எடுத்துக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டது.
அதுபோல், வங்கிகளில் காசோலை மூலம் ஒரு வாரத்தில் பணம் எடுப்பதற்கான உச்சவரம்பு ரூ.20 ஆயிரத்தில் இருந்து ரூ.24 ஆயிரமாக உயர்த்தப்பட்டது.
நடப்பு கணக்கில் ஒரு வாரத்தில் பணம் எடுப்பதற்கான உச்சவரம்பு ரூ.50 ஆயிரமாக நிர்ணயிக்கப்பட்டது.
அதே சமயத்தில், வருகிற 19-ந் தேதியில் இருந்து, ஏ.டி.எம்.களில் ஒரு நாளில் பணம் எடுப்பதற்கான உச்சவரம்பை ரூ.4 ஆயிரமாக உயர்த்துவது என்றும் மத்திய அரசு ஏற்கனவே முடிவு செய்திருந்தது. ஆனால், தற்போது அந்த முடிவை நிறுத்தி வைத்துள்ளது.
🌍பரபரப்புக்காக செய்தி வெளியிடுவதை தவிருங்கள்: வெங்கையா நாயுடு
புதுடில்லி : ஊடகங்கள் பரபரப்புக்காக செய்தி வெளியிடுவதை தவிர்க்க வேண்டும் என மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சர் வெங்கையா நாயுடு வலியுறுத்தினார்
📡வங்கிக்கு பணம் மாற்ற சென்ற முதியவர் மரணம்
ஈரோடு மாவட்டம், சிவகிரி அருகேயுள்ள, பூலாவலசை சேர்ந்தவர் குப்புசாமி கவுண்டர் (வயது-72). இவர் மனைவி சுப்பாத்தாள், மகன் இறந்து விட்டார். நேற்று காலை சிவகிரி அருகிலுள்ள கந்தசாமிபாளையத்தில் உள்ள ஸ்டேட் வங்கியில், 3,500 ரூபாய் பணத்தை மாற்றுவதற்கு, நேற்று காலை, 9:00 மணிக்கு சென்றார்.
அப்போது, சாலையை கடக்க முயன்ற நேரத்தில். அதிவேகத்தில் வந்த ஸ்கார்பியோ வாகனம் மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவரை, அக்கம் பக்கத்தினர் மீட்டு, கொடுமுடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், செல்லும் வழியில் குப்புச்சாமிக்கவுண்டர் இறந்தார். சிவகிரி போலீசார் வழக்குப்பதிந்து, ஸ்கார்பியோ காரை தேடி வருகின்றனர்.
🌍மாஜிஸ்திரேட்" கையெழுத்தை போட்டு ரசீது கொடுத்து மோசடி; நீதிமன்ற இளநிலை உதவியாளர் கைது
சேலம் மாவட்டத்திலுள்ள ஒருங்கிணைந்த நீதிமன்றக் கட்டுப்பாட்டின் கீழ் நடமாடும் நீதி மன்றம் செயல்பட்டு வருகிறது. இதில் சிறு வழக்குகள் உள்ளிட்டவைகளை விசாரித்து தீர்ப்பு வழங்கப்பட்டு அபராதம் வசூலிக்கப்படும். அபராதத் தொகைக்கு ரசீது வழங்கப்பட்டு, பணத்தை கருவூலத்துக்கு அனுப்பி வைக்கப்படுவது வழக்கம்.
இந்த நிலையில், கடந்த நவம்பர் 3-ஆம் தேதி நடமாடும் நீதிமன்ற மாஜிஸ்திரேட் (பொறுப்பு) லிங்கம், அபராதம் வசூலிக்கும் ரசீதுகளை ஆய்வு செய்தார். அந்த ரசீதுகளில் உள்ள கையெழுத்து சந்தேகத்தை ஏற்படுத்துவதாக இருந்துள்ளது.
இதுகுறித்த விசாரணையில், நடமாடும் நீதிமன்றத்தில் இளநிலை உதவியாளராக இருந்த தாதாகபட்டியைச் சேர்ந்த இளங்கோவன் (வயது-46), என்பவர், மாஜிஸ்திரேட் போல போலியாக கையெழுத்து போட்டு ரசீதுகளை வழங்கி அபராதத் தொகையை வசூல் செய்து அதை கணக்கில் காட்டாமல் கையாடல் செய்தது தெரியவந்தது.
இதில், சுமார் ரூ.31 ஆயிரம் அளவுக்கு மோசடியில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இதையடுத்து, மாவட்ட முதன்மை நீதிமன்ற தலைமை நிர்வாக அலுவலர் செங்கோட்டையன், மத்திய குற்றப் பிரிவு போலீஸில் புகார் செய்தார். அதன் பேரில், மத்திய குற்றப் பிரிவு போலீஸார் இளங்கோவனை திங்கள் கிழமை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
📡கார்த்திகை மாதம் பிறந்தது... ஐயப்ப பக்தர்கள் சரணகோஷத்துடன் மாலை அணிந்தனர்
சென்னை: கார்த்திகை பிறந்துள்ளதை முன்னிட்டு அதிகாலையிலேயே கோவில்களில் சரணகோஷமும், அரோகரா கோஷமும் முழங்கியது. ஐயப்பன், முருகன் பக்தர்கள் மாலை அணிந்து விரதத்தை தொடங்கினர்.
🌍ஏழைகளின் ஜன்தன் அக்கவுண்டில் குவியும் கறுப்பு பணம்... கண்காணிக்கும் மத்திய அரசு
டெல்லி: அனைவருக்கும் வங்கிச் சேவை கிடைக்க வேண்டும் என்பதற்காக 2014ம் ஆண்டில் பாஜக அரசு ஜன்தன் யோஜனா எனும் திட்டத்தைக் கொண்டு வந்தது. அரசின் மானிய உதவிகள் அனைத் தும் இதன் மூலம் மக்களுக்குச் சென்றடைவதற்காக இந்தக் கணக்கு தொடங்கப்பட்டது. ஆனால் கடந்த இரண்டு ஆண்டு களாக இந்தக் கணக்கில் பெரும்பாலானவை செயல் பாட்டில் இல்லாமல் இருந்தன.
நவம்பர் 8ம் தேதி நள்ளிரவு முதல்,பழைய,500,1,000 ரூபாய்நோட்டுகள் செல்லாது என பிரதமர் மோடி அறிவித்தார். இதனையடுத்து கறுப்பு பணத்தை வெள்ளையாக்க ஏராளமானோர் முயற்சி செய்து வருகின்றனர்.
பழைய ரூ.500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகளை வங்கிக் கணக்கில் போட்டு மாற்றிக் கொள்ளலாம் என மோடி அறிவிக்கவே, ஜன்தன் வங்கிக் கணக்கில் பணத்தைப் டெபாசிட் செய்வது அதிகரித்துள்ளது.
இது அனைத்து அவர்களின் பணமல்ல என்பதுதான் உண்மை. இது அனைத்து அவர்களின் பணமல்ல என்பதுதான் உண்மை.
கறுப்பு பணம் வைத்துள்ளவர்கள் ஏழை மக்களுக்கு ஆசைவார்த்தை கூறி கமிஷன் தந்து அவர்களது, ஜன்தன் வங்கி கணக்கில் பணத்தை டெபாசிட் செய்து வருகின்றனர். இதனையடுத்து ஜன்தன் வங்கி கணக்கு களில், திடீரென சில நாட்களாக முதலீடு குவியத் தொடங்கியது. இதனை தடுக்க முடியாததால், அது பற்றி மத்திய நிதி அமைச்சகத்தின் கவனத்திற்கு, வங்கிகள் கொண்டு சென்றன.
இதையடுத்து ஜன்தன் வங்கிக் கணக்குகளில், அதிக பட்சம், 49 ஆயிரம் ரூபாய் மட்டுமே செலுத்த முடியும் என, மத்திய அரசு உச்சவரம்பு நிர்ணயித்துள்ளது. 50 ஆயிரம் ரூபாய் க்கு மேல் டெபாசிட் செய்ய விரும்புவோரிடம், பணத்திற்கான ஆதாரங்கள் கேட்கப்படும் என்று பொருளாதார விவகாரங்கள் துறை செயலர் சக்தி காந்த தாஸ் கூறியுள்ளார். ஏழை மக்களின் 23 கோடி, ஜன்தன் வங்கிக் கணக்குகளும் மத்திய அரசின் கண்காணிப்பு வளையத்திற்குள் வந்துள்ளன. எவ்வளவுதான் கண்காணித்தாலும் கறுப்பை வெள்ளையாக்க பல வழிகளில் முயற்சி செய்து வருகின்றனர் பண முதலைகள்.
📡பொருளாதார நெருக்கடிக்கு உதவுவது கறுப்புப் பணம் தான் - அகிலேஷ் யாதவ்
500, 1000 ரூபாய் நோட்டுகளை மத்திய அரசு தடை செய்ததை அடுத்து பொதுமக்கள் பலரும் கடும் துன்பத்திற்கு உள்ளாகி வருகின்றனர். இப்படி மக்களை துன்புறுத்தும் எந்த அரசையும் மக்கள் விட்டு வைப்பதில்லை. சர்வதேச அளவில் இந்தியப் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டபோதெல்லாம் கறுப்புப் பணம் தான் அதை சமாளிக்க உதவியது.
இந்திய பொருளாதார பாதிப்புக்கு கொக் கொடுத்தது கறுப்புப் பணம் தான் என வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.' இவ்வாறு லக்னோவில் நேற்று நடந்த கார் பந்தய நிகழ்ச்சி தொடக்கவிழாவில் அகிலேஷ் யாதவ் பேசி பரபரப்பை ஏற்படுத்தினார்.
🌍ஏடிஎம்மில் பொதுமக்கள் காத்திருக்க... ரூ.6.98 லட்சத்துடன் ஓட்டம் பிடித்த வங்கி உதவி மேலாளர்
சென்னை பெரியமேடு இந்தியன் வங்கி ஏடிஎம் முன்பு வெள்ளிக்கிழமை பணம் எடுக்க நீண்ட வரிசையில் காத்திருக்கும் வாடிக்கையாளர்கள்.
சண்டிகர்: ஏடிஎம் இயந்திரத்திற்கு முன்பு பொதுமக்களை காத்திருக்க வைத்திவிட்டு ரூ.6.98 லட்சத்துடன் தப்பியோடிய பஞ்சாப் மற்றும் சிந்த் வங்கி மேலாளர் தேஜ் பிரதாப் சிங் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர்.
📡வங்கி முன் நிர்வாணப் போராட்டத்தில் இறங்கிய முதியவர்! அதிர்ச்சி வீடியோ
பிரதமர் மோடி அறிவித்த 500-1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்புக்கு பின் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் மக்கள் ஏ.டி.எம்களின் முன்னால் க்யூவில் நின்றவாறு உள்ளார்கள். பெரும்பாலான தனியார் வங்கிகள் கைவிட்ட நிலையில் பொதுத்துறை வங்கிகள் மட்டும் நிலைமையை சமாளிக்கும் வகையில் தங்களால் முடிந்த அளவு 'கரன்சி ரீ ஃபில்லிங்' செய்து வருகிறார்கள்.
பொதுமக்கள் எங்கள் வங்கிகளில் வைத்திருக்கும் பணத்தை திரும்ப கொடுக்க முடியவில்லை என தமிழ்நாட்டில் கூட்டுறவு வங்கி ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபடுகிறார்கள்.
பல்வேறு அரசியல் கட்சிகளும் மத்திய அரசின் இந்த அறிவிப்புக்கு எதிராக பல்வேறு கட்ட போராட்டங்களை அறிவித்து வருகின்றன. இந்நிலையில் தலைநகர் டெல்லியில் ஒரு தனியார் வங்கி முன் பணம் எடுக்க காத்திருந்த முதியவர் நீண்ட நேரம் காத்திருந்தும் பணம் எடுக்க முடியாததால் விரக்தியாகி விபரீத போராட்டத்தில் இறங்கினார்.
நீண்ட நேர காத்திருப்புக்கு பின் பணம் எடுக்கமுடியாததால் வீட்டுக்கு சென்று தேசியக்கொடியை எடுத்துவந்த அவர் முழு நிர்வாணமாக அந்த வங்கியின் முன் படுத்து போராட்டத்தில் இறங்கினார். காவல்துறை வந்து அவரை சமாதானப்படுத்திய போது "என்னை கொன்று விடுங்கள். என் பணத்தை அரசே திரும்ப அளிக்க மறுக்கும் போது இந்த உயிர் எனக்கு எதற்கு" என கோபத்துடன் தெரிவித்தார். அதன் பின்னர் வங்கியின் காவலர்களும் காவல்துறையும் இணைந்து அவரை சமாதானப்படுத்தினர்.
பணம் செல்லாது என அறிவித்த பின்னரும் நாளும் புதுப்புது அறிவிப்புகளும் வந்த வண்ணம் உள்ளது. ரூபாய் மாற்றுபவர்களின் விரலில் மை வைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படியான அறிவிப்புகளினால் எழும் இதுபோன்ற கோபமான சூழலை சமூகவிரோதிகளும் பயன்படுத்துகின்றனர் என்பது கவலை தரும் விஷயமாகும். சில தினங்களுக்கு முன் டெல்லி மெட்ரோ நிலையத்தில் உள்ள டிப்பார்ட்மென்டல் ஸ்டோர் ஒன்று சூறையாடப்பட்டது. இத்தனைக்கும் அங்கு காவலர்கள் போதுமான அளவு இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
🌍மழை காரணமாக ஊட்டியில் 100-க்கும் மேற்பட்ட பயணிகள் அவதி!
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை பரவலாக பெய்து வருகிறது. இதனை அடுத்து நேற்று முன் தினம் குன்னூரை சுற்றியுள்ள பகுதிகளில் பலத்த மழை பெய்ததை அடுத்து, ஊட்டி மலை ரயில் பாதையில் நான்கு இடங்களில் மண் சரிவு ஏற்பட்டது.
இந்த மண் சரிவால் ரயில் தண்டவாளத்தில் மரம், செடிகள், கற்கள் என வேரோடு சாய்ந்து கிடந்தன. இதனால் ரயிலானது கல்லாறு ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டது.
இதனால் 100 க்கும் மேற்பட்ட உள்நாட்டு, வெளிநாட்டு பயணிகள் பெரிதும் அவதிக்கு உள்ளாயினர். இதனை அடுத்து ரயில்வே தொழிலாளர்கள் அந்த இடத்திற்கு சென்று செடிகள், மரங்கள் அனைத்தையும் அகற்றினர். பல மணி நேர காத்திருப்புக்குப் பிறகே ரயில் இயக்கப்பட்டது.
📡எல்லையில் துப்பாக்கிச்சண்டை : வீரர் ஒருவர் பலி
ஜம்மு : காஷ்மீரின் சோப்பூர் பகுதியில் பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடந்து வருகிறது. இதில் போலீஸ் ஒருவர் பலியாகி உள்ளார்.
🌍நாளையுடன் ஓய்கிறது 4 தொகுதி தேர்தல் பிரசாரம்
சென்னை : தமிழகம், புதுச்சேரியில் 4 தொகுதி தேர்தலுக்கான பிரசாரம் நாளையுடன் ஓய்கிறது. இதனால் அரசியல் கட்சிகள் ஓட்டு சேகரிக்கும் பணியில் தீவிரமாக இறங்கி உள்ளன.4 தொகுதி தேர்தல் தஞ்சை, அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் மற்றும் புதுச்சேரி நெல்லித்தோப்பு ஆகிய 4 தொகுதிகளுக்கான தேர்தல் நவம்பர் 19ம் தேதி நடக்க உள்ளது. அன்றைய தினம் காலை 7 மணி துவங்கி, மாலை 5 மணி வரை ஓட்டுப்பதிவு நடைபெற உள்ளது. இதற்காக தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. நவம்பர் 19ம் தேதி பதிவாகும் ஓட்டுக்கள், நவம்பர் 22 ம் தேதி எண்ணப்பட்டு, அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. பிரசாரம் ஓய்கிறது 4 தொகுதி தேர்தலுக்கான பிரசாரம் நாளை (நவ.,17) மாலை 5 மணியுடன் ஓய்கிறது.
இதனால் அரசியல் கட்சிகள் தீவிர ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளன. தேர்தல் அதிகாரிகள் மற்றும் பறக்கும் படையினரும், வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கப்படுவதை தடுக்கும் பணியில் தீவிரம் காட்டி வருகின்றனர். கண்காணிப்பு மற்றும் வாகன சோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
🌍சேலம் மாவட்டம், ஆத்தூரில் உள்ள சுபத்ராதேவி என்ற அங்கன்வாடி பணியாளர் ஒருவரிடம் 5,000 - பணம் கேட்டு மிரட்டிய, கிரைம் எக்ஸ்பிரஸ் என்ற மாத இதழின் நிருபர் பாண்டிதுரை என்பவரை கைது செய்துள்ள ஆத்தூர் போலீசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
📡பைக் வாங்க ஆசைப்பட்டு மூதாட்டியைக் கொன்ற மாணவர் கைது
நாமக்கல் மாவட்டம் செங்கப்பள்ளியில் 80 வயது மூதாட்டி சமீபத்தில் கிணற்றில் இறந்து கிடந்தார். விசாரணையில், அவருடைய தூரத்து உறவினரான தினேஷ்குமார் என்ற இளைஞர் அவரைக் கொலை செய்தது தெரியவந்தது. பைக் வாங்குவதற்காக அம்மூதாட்டியை உருட்டுக் கட்டையால் அடித்துக் கொன்று, அவரிடமிருந்து நகையைத் திருடியுள்ளார் தினேஷ்
🌍ஓய்வூதியம் பெறுவோருக்கு ஓர் நற்செய்தி
ஓய்வூதியதாரர்கள் தங்களது வங்கி கணக்கில் இருந்து ஒரே நாளில் 10,000 ரூபாய் வரை எடுக்கலாம்.தற்போது நடைமுரையில் இருக்கும் எவ்வித வரையறைகளும் இவர்களுக்கு பொருந்தாது.கூடுதல் தகவல்: இந்தியாவில் மொத்தம் 34 லட்சம் நபர்கள் ஓய்வூதியம் பெற்று வருகின்றனர்.
📡பொலிவியா நாட்டில் 4 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த இளைஞனை பொதுமக்கள் ஒன்று திரண்டு தாக்கிய பின்னர் தூக்கிலிட்டப்பட்டார்
🌍மதபோதகர் ஜாகீர் நாயக்கின் அமைப்புக்கு 5 ஆண்டுகள் தடை
இஸ்லாமிய மதபோதகர் ஜாகீர் நாயக் "இஸ்லாமிக் ரிசர்ச் பவுண்டேஷன்" (ஐஆர்எப்) கல்வி அறக்கட்டளை, `பீஸ் டிவி` ஆகியவற்றை நிறுவியுள்ளார். இவர் தீவிரவாதத்தை தூண்டும் வகையில் மதப் பிரச்சாரம் செய்து வருவதாகவும், பிற மதங்களை இழிவுப் படுத்தி, முஸ்லிம்கள் அனைவரும் தீவிரவாதிகளாக மாற வேண்டும் என்றும் சர்ச்சைக்குரிய கருத்துகளை கூறி வருவதாக ஜாகீர் நாயக் மீது சரமாரியாக குற்றச்சாட்டுகள் எழுந்தது. அதை தொடர்ந்து, இந்த விவகாரம் தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம் விசாரணை நடத்தியது.
📡செல்லாத நோட்டுக்கள்: பயணிகளின் பசியை ஆற்றிய நபர்
கர்நாடகா மாநிலம் மங்களூரு ரயில் நிலையத்தில் பயணிகள் பணத்தட்டுப்பாடு காரணமாகத் தவித்துக் கொண்டிருந்தனர். அவர்கள் உணவிற்குக் கூட வழியின்றி தவித்ததைக் கண்ட பல்வீந்தர் சிங் என்பவர் உடனே அவர்களுக்கு உணவளிக்க ஏற்பாடு செய்தார். பசியால் தவித்த சுமார் 2,000 பயணிகளுக்கு இலவசமாக உணவு அளிக்கப்பட்டது
🌍அமெரிக்கா பாராளுமன்ற சபாநாயகராக பவுல் ரையான் மீண்டும் தேர்வு
📡தஞ்சையில் உரிய ஆவணமின்றி எடுத்துச் சென்ற ரூ.2.40 லட்சம் பறிமுதல்
தஞ்சையில் உரிய ஆவணமின்றி எடுத்துச் சென்ற ரூ.2.40 லட்சம் பறக்கும் படையால் பறிமுதல் செய்யப்பட்டது. தஞ்சை புறவழிச்சாலையில் பட்டுக்கோட்டை அருகே எடுத்துச் செல்லப்பட்ட பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இடைத்தேர்தலை முன்னிட்டு தஞ்சை, அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் உள்ளிட்ட இடங்களில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
🌍திருப்போரூர் அருகே பள்ளி கல்லூரி மாணவர்கள் சாலை மறியல் போக்குவரத்து பாதிப்பு
திருப்போரூர் அருகே சிறுதாவூர் மற்றும் அதனை சுற்றி உள்ள பள்ளி கல்லூரி மாணவர்கள் சரியான நேரத்தில் பள்ளி கல்லூரிக்கு செல்ல பேருந்து வசதி இல்லாததால் 100 க்கும் மேட்பட்ட மாணவர்கலும் மற்றும் பெற்றோர்களும் திருப்போரூர் - திருக்கழுக்குன்றம் சாலையில் சுமார் 1 மணி நேரமாக சாலை மறியலில் ஈடுபட்டனர் இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது
📡நீதிமன்றத்தில் ஆஜராக மும்பையில் இருந்து புறப்பட்டார் ராகுல் காந்தி
மும்பை: ஆர்எஸ்எஸ்-ஐ அவதூறாக பேசியதாக கூறப்பட்ட வழக்கில் இன்று பிவாண்டி நீதிமன்றத்தில் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி ஆஜராக உள்ளார். இதனையடுத்து பிவாண்டி நீதிமன்றத்தில் ஆஜராவதற்காக தற்போது மும்பையில் இருந்து புறப்பட்டார்.
🌍ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுகள் விவகாரம்: பூ வியாபாரிகள் வேதனை
லக்னோ: ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுகள் செல்லாது என மத்திய அரசின் அறிவிப்பை தொடர்ந்து பூ வியாபாரிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். பழைய நோட்டுகள் தடை செய்யப்பட்டதால் வியாபாரம் மந்த நிலையில் காணப்படுகிறது, இதன் காரணமாக எங்களுடைய பூ அனைத்தும் வீனாகி குப்பையில் கொட்டப்படுகிறது என்று லக்னோவில் உள்ள பூ வியாபாரி ஒருவர் கூறியுள்ளார்.
📡மேற்கு வங்கத்தில் சிறுத்தை குட்டி மீட்பு
மேற்கு வங்கம்: மேற்கு வங்க மாநிலம் சிலிகுரி மாவட்டத்தில் தேயிலை தோட்டத்தின் நீர்த் தேக்கங்களில் இருந்து ஒரு சிறுத்தை குட்டியை வனத்துறை அதிகாரிகள் மீட்டுள்ளனர்.
📡நகையை அடகு வைக்க முடியாமல் பொதுமக்கள் கடும் அவதி
சென்னை: நகையை அடகு வைத்து அவசர தேவைக்கு பணம் பெற முடியாமல் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். தேசிய மற்றும் கூட்டுறவு வங்கிகளில் நகை அடகு வைத்தால் பணம் இல்லை என கூறுவதாக புகார் அளித்துள்ளனர். நகை அடகு வைக்க, பணம் மாற்ற, வங்கி கணக்கில் உள்ள பணத்தை எடுக்க முடியாமல் பொதுமக்கள் தவிக்கின்றனர்.
🌍நாடாளுமன்றத்தில் குளிர் கால கூட்டத் தொடர் இன்று தொடக்கம்
நாடாளுமன்றத்தில் குளிர் கால கூட்டத் தொடர் இன்று தொடங்குகிறது. இதில் ரூ.500, ரூ.1000 செல்லாத விவகாரம் உட்பட பல பிரச்னைகளை எழுப்ப காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் திட்டமிட்டுள்ளன. நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் இன்று முதல் டிசம்பர் 16ம் தேதி வரை நடக்கிறது. மொத்தம் 22 நாட்கள் இந்த கூட்டத் தொடர் நடைபெறவுள்ளது. இதில் ஜிஎஸ்டி தொடர்பான சட்டங்கள், எதிரி சொத்து சட்டம், விவாகரத்து சட்டம் உட்பட பல மசோதாக்களை இந்த கூட்டத் தொடரில் நிறைவேற்ற அரசு திட்டமிட்டுள்ளது.
📡சென்னையில் கனமழை; தமிழகத்திற்கு மழை வாய்ப்பு
எழும்பூர், மயிலாப்பூர் உள்ளிட்ட சென்னையின் முக்கிய இடங்களில் அதிகாலை நேரத்தில் கனமழை பெய்தது.
சென்னை -ராயப்பேட்டை, எழும்பூர், மயிலாப்பூர் மற்றும் திருவல்லிக்கேணி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கனமழை பெய்தது
இன்று மழைக்கு வாய்ப்பு:
தமிழகத்தில், வடகிழக்கு பருவமழை துவங்கியுள்ளது; ஆனால், இயல்பை விட மிக குறைவாக பெய்து வருகிறது. இதனால், அணை, ஏரிகளுக்கு நீர்வரத்து குறைந்துள்ளது. இந்நிலையில், நான்கு நாட்களாக, திருநெல்வேலி, துாத்துக்குடி, விருதுநகர், தேனி, திண்டுக்கல் மாவட்டங்கள்; மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியான நீலகிரி மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இன்றும், இந்த பகுதிகளில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக, இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
🌍துறையூர் அருகே கொத்தம்பட்டியில் இருசக்கர வாகனத்தில் சென்ற முன்று பேர் பாலத்தில் மோதி சம்பவ இடத்திலே பலி.இவர்கள் திண்டுகல்லை சேர்ந்தவர்கள்.
📡சபரிமலை ஐயப்பன் கோவில் மண்டல மகரவிளக்கு பூஜைகளுக்காக நடை திறந்திருப்பதால் சபரிமலைக்கு செல்வதற்காக மாலையிட அனைத்து மாவட்டத்தில் உள்ள கோவில்களில் பக்த்தர்கள் கூட்டம் அதிகரிப்பு.
📡🌍📡🌍📡🌍📡🌍📡🌍📡
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக