இன்றைய செய்திகள் 17/11/2016(நோட்டு செல்லாது முடிவுக்கு முன்பே அம்பாணி, அதானிக்கு தெரியும் சொல்கிறார் பாஜக எம்பி/ஆவடி ரானுவ மைதானத்தில் கிடந்த 1 கோடி /ரஸ்டம் 2 ஆளில்லா விமானம் சோதனை வெற்றி/சுஸ்மா உடல்நலம் பெற ஸ்டாலின் வாழ்த்து/கட்டிட தொழிலாளி வங்கி கணக்கில் 62லட்சம்/டிஎஸ்பி விஷ்ணுபிரியா வழக்கை விசாரித்த அதிகாரிகள் பட்டியலை கேட்டது சிபிஐ மேலும் பல செய்திகள் உள்ளே) - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

இன்றைய செய்திகள் 17/11/2016(நோட்டு செல்லாது முடிவுக்கு முன்பே அம்பாணி, அதானிக்கு தெரியும் சொல்கிறார் பாஜக எம்பி/ஆவடி ரானுவ மைதானத்தில் கிடந்த 1 கோடி /ரஸ்டம் 2 ஆளில்லா விமானம் சோதனை வெற்றி/சுஸ்மா உடல்நலம் பெற ஸ்டாலின் வாழ்த்து/கட்டிட தொழிலாளி வங்கி கணக்கில் 62லட்சம்/டிஎஸ்பி விஷ்ணுபிரியா வழக்கை விசாரித்த அதிகாரிகள் பட்டியலை கேட்டது சிபிஐ மேலும் பல செய்திகள் உள்ளே)

🌍📡🌍📡🌍📡🌍📡🌍📡🌍

📡📡📡📡📡📡📡📡📡📡📡

🌍🌍🌍🌍🌍🌍🌍🌍🌍🌍🌍

🌍திருச்செங்கோடு டிஎஸ்பி விஷ்ணுபிரியா தற்கொலை வழக்கை விசாரித்த சிபிசிஐடி அதிகாரிகள் பட்டியலை சிபிஐ கேட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

📡60 பவுன் நகை கொள்ளை

உளுந்தூர்பேட்டை அடுத்த வெள்ளையூர் கிராமத்தைச் சேர்ந்த சையத்சர்புதீன் வீட்டை பூட்டி விட்டு கள்ளக்குறிச்சியில் உள்ள உறவினர் வீட்டுக்கு 13ம் தேதி சென்றுவிட்டு நேற்று திரும்பினார். தன் வீட்டின் கதவு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்து 60 பவுன் நகை கொள்ளைபோயிருப்பதை கண்டு அதிர்ந்தார். உளுந்தூர்பேட்டை போலீசார் விசாரித்து வருகின்றனர்.
http://www.sivakasiteacherkaruppasamy.blogspot.com
🌍நெல்லையப்பர் கோயில் உண்டியல் வசூல் ரூ.9 லட்சம்.. ரூ.500, 1000 மட்டும் 2 லட்சம்!

நெல்லை: பழைய ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டதால் நெல்லையப்பர் கோயில் உண்டியல் திறக்கப்பட்டது. இதில் பல நோட்டுகள் பழைய நோட்டுகளாக இருந்ததால் அதிகாரிகள் திகைத்தனர்.

📡இந்திய வீரர்கள் சாகவில்லை.. பாகிஸ்தான் ராணுவ தளபதி பேட்டிக்கு இந்திய ராணுவம் மறுப்பு

டெல்லி: பாகிஸ்தான் ராணுவத்தால் இந்திய ராணுவ வீரர்கள் 11 பேர் கொல்லப்பட்டதாக வெளியான தகவலை இந்திய ராணுவம் மறுத்துள்ளது.

🌍யூனியன் அலுவலக வளாகத்தில் காட்சிப் பொருளான குப்பை அள்ளும் வண்டிகள்

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி யூனியன் அலுவலக வளாகத்தில் குப்பை அள்ளும் வண்டிகள் பஞ்சாயத்துக்களுக்கு வழங்கப்படாமல் வெயில், மழையில் காய்ந்து வீணாகி வருவதால் பொது மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்

📡ஆவடி ராணுவ மைதானத்தில் கேட்பாரற்று கிடந்த ரூ.1 கோடி.. வாக்கிங் சென்றவர்களுக்கு ஜாக்பாட்

சென்னை: சென்னையின் புறநகர் பகுதியான ஆவடியில் சுமார் 1 கோடி ரூபாய் சாலையோரத்தில் கண்டெடுக்கப்பட்டதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.
ஆவடியில் உள்ள ராணுவத்துறைக்கு சொந்தமான மைதானத்தில் நேற்று, காலை குவியல் குவியலாக கொட்டப்பட்டிருந்த 500 ரூபாய், 1000 ரூபாய் நோட்டுக்களை வாக்கிங் சென்றவர்கள் பார்த்து இன்ப அதிர்ச்சியடைந்தனர். தங்களால் முடிந்த பணத்தை அள்ளிக்கொண்டு 'அப்பீட்' ஆகினர். தகவல் பரவியதும் அருகேயுள்ள, வெங்கடேசபுரம், அம்பேத்கர் நகர், உழைப்பாளர் நகர், கரிமேடு, முத்தாபுதுப்பேட்டை பகுதிகளை சேர்ந்த மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து பணத்தை அள்ளிச்சென்றதாக கூறப்படுகிறது.

🌍நண்பரிடம் இருந்து மனைவியை மீட்டு தரக்கோரி தமிழக அமைச்சரின் பாதுகாவலர் அபிராமபுரம் காவல் நிலையத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

📡ரஸ்டம் 2 ஆளில்லா விமானம் வெற்றிகரமாக விண்ணில் பறந்தது

பெங்களூரு: நீண்ட தூரம் சென்று அதிக சக்தி வாய்ந்து தாக்கும் திறன் கொண்ட உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ஆளில்லா விமானம் தான் ரஸ்டம் 2 என்ற உளவு விமானத்தின் முதலாவது சோதனை வெற்றிகரமாக விண்ணில் பறந்தது.
மத்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பால், ரஸ்டம் 2 "TAPAS 201 (RUSTOM - II)" என்ற குண்டு வீசும் ஆளில்லா விமானம், பெங்களூரிலிருந்து 250 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சித்ரதுர்கா விமான சோதனை மையத்தில் (ஏரோநாட்டிக்கல் டெஸ்ட் ரேஞ்ச் (ஏடிஆர்)) வெற்றிகரமாக நேற்று பரிசோதிக்கப்பட்டது.
நம்முடைய முப்படைகளின் நுண்ணறிவு, கண்காணிப்பு மற்றும் உளவுப் பணிகளுக்கு (ISR) இதனை பயன்படுத்த முடியும்.
24 மணி நேரம் நீடித்து உழைக்கும் ஆற்றல் கொண்டது. எலக்ட்ரோ ஆப்டிக் (MREO), லாங் ரேஞ்ச் எலக்ட்ரோ ஆப்டிக் (LREO), செயற்கை ராடார் (SAR), மின்னணு புலனாய்வு (ELINT), புலனாய்வு தொடர்பியல் (COMINT) மற்றும் சூழ்நிலை விழிப்புணர்வு விண்கலங்கள் (எஸ்ஏபி) போன்ற பல்வேறு தகவல்களை தாங்கிச் செல்லும் திறன் கொண்டது. பகல் மற்றும் இரவு என நாள் முழுவதும் பயணங்கள் செய்ய ஏதுவானது. இரண்டு டன் எடைக்கொண்டது.

"TAPAS 201 (RUSTOM - II)" என்று அழைக்கப்படும் இந்த விமானம் பெங்களூருவில் உள்ள வானூர்தி மேம்பாட்டு அமைப்பு, பாதுகாப்பு ஆய்வு மற்றும் ஆராய்ச்சி மையத்தில் இளம் விஞ்ஞானிகளால் தயாரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்.

🌍விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் ஓடை தடுப்புச் சுவரில் கார் மோதியதில் ஆந்திரத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழந்தனர்

📡சிறிய அளவிலான ஜவுளிப்பூங்கா அமைக்க முன்வரும் தொழில் முனைவோருக்கு தமிழக அரசு சார்பில், அதிக பட்சம், 2.50 கோடி ரூபாய் நிதியுதவி வழங்கப்படுகிறது- சேலம் கலெக்டர் சம்பத்

🌍9 விவசாயிகளின் குடும்பத்தினருக்கு தமிழக அரசு நிதியுதவி வழங்காதது வேதனைக்குரியது-ஸ்டாலின் 

📡அப்பல்லோ ஐசியுவில் 57வதுநாளாக ஜெ.,.... டிஸ்சார்ஜ் செய்ய தேதி குறித்த கேரள ஜோதிடர்

சென்னை: செப்டம்பர் 22ம் தேதி இரவில் அப்பல்லோ மருத்துவமனைக்கு கொண்டு போய் அட்மிட் செய்தது போல மீடியாக்களுக்கு தெரியாமல் இரவில் தான் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் ஜெயலலிதா என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. 

📡உத்தரப்பிரதேச மாநிலத்தில் கட்டிட தொழிலாளி வங்கி கணக்கில் திடீரென வந்த ரூ.62 லட்சம் டெபாசிட் : அரசு எடுத்துக்கொள்ளும்படி கடிதம் கொடுத்தார்

🌍பிபா கால்பந்து தகுதி சுற்றில் கொலம்பியாவை வீழ்த்தியது அர்ஜென்டினா

பிபா உலக கோப்பை கால்பந்து தகுதி சுற்றில் அர்ஜென்டினா அணி 3-0 என்ற கோல் கணக்கில் கொலம்பியாவை வீழ்த்தியது.
ரஷ்யாவில் 2018ம் ஆண்டு நடைபெற உள்ள உலக கோப்பை தொடருக்கான தகுதிச் சுற்று ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன. தென் அமெரிக்க பிரிவில் நடந்த லீக் ஆட்டத்தில் அர்ஜென்டினா - கொலம்பியா அணிகள் நேற்று மோதின. மிகவும் விறுவிறுப்பாக அமைந்த இப்போட்டியில், அர்ஜென்டினா கேப்டன் மெஸ்ஸி பிரீ கிக் வாய்ப்பில் அபாரமாக கோல் அடித்து 1-0 என முன்னிலை ஏற்படுத்தினார்.
மெஸ்ஸி கொடுத்த துல்லியமான பாஸ்களை பயன்படுத்தி லூகாஸ் பிராட்டோ, ஏஞ்சல் டி மரியா கோல் அடிக்க, அர்ஜென்டினா 3-0 என்ற கணக்கில் வென்று உலக கோப்பை தொடருக்கு தகுதி பெறும் வாய்ப்பை தக்கவைத்துக் கொண்டது.

📡கடந்த செப்டம்பர் வரையிலான 9 மாதங்களில் 105 தீவிரவாதிகள் இந்தியாவுக்குள் ஊடுருவியுள்ளதாக மாநிலங்களவையில் மத்திய உள்துறை இணையமைச்சர் ஹன்ஸ்ராஜ் அகிர் தெரிவித்தார்

🌍வேதாரண்யம் பகுதி மீனவர்கள் 3,000 பேர் கடலுக்கு செல்லவில்லை

கடல் சீற்றம் காரணமாக வேதாரண்யம் பகுதி மீனவர்கள் 3,000 பேர் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. கோடியக்கரை, ஆறுகாட்டுத்துறை, புஷ்பவனம் உள்ளிட்ட பகுதி மீனவர்கள் இன்று கடலுக்கு செல்லவில்லை. ட்டுத்துறை, புஷ்பவனம் உள்ளிட்ட பகுதி மீனவர்கள் இன்று கடலுக்கு செல்லவில்லை.

📡பாண்டி காங். பிரமுகர் வீட்டில் வருமாவரி ரெய்டு

புதுச்சேரி:

புதுச்சேரி காங்கிரஸ் முன்னாள் எம்.எல்.ஏ.,ஜான்குமார் வீடு மற்றும் அலுவலகங்களில்,இன்று வருமானவரி துறையினர் சோதனை நடத்தி வருகிறார்கள்.

புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தேர்தலில் போட்டியிடுவதற்காக தனது தொகுதியை விட்டு கொடுத்து ராஜினாமா செய்தவர், ஜான்குமார் என்பது குறிப்பிடத்தக்கது.

🌍500, 1000 ரூபாய் நோட்டுகள் வாபஸ் பெற்றதை போல், 'பினாமி' சொத்துகளுக்கு எதிராகவும் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிகார் முதல்வர் நிதிஷ் குமார் தெரிவித்துள்ளார்.

📡நோட்டு செல்லாது முடிவு முன்பே அம்பானி, அதானிக்கு தெரியும்!: சொல்கிறார் பாஜக எம்.எல்.ஏ.

பிரதமர் மோடி கடந்த 8ம் தேதி இரவு, "500 மற்றும் 1000 ரூபாய் நோட்டு செல்லாது" என்று அறிவித்தார். இந்த முடிவு கருப்பு மற்றும் கள்ளப்பணத்தை ஒழிப்பதற்கான நடவடிக்கை என்றும் தெரிவித்தார்.

இந்த முடிவு நாட்டின் நலனுக்காக ரகசியமாக வைக்கப்பட்டு அறிவிக்கப்பட்டதாக பா.ஜ.கவினர் சொல்கிறார்கள். ஆனால், பா.ஜ.க.வுக்கு நெருக்கமானவர்களுக்கு இந்த முடிவு பற்றி ஏற்கெனவே தகவல் கசியவிடப்பட்டது என்று காங்கிரஸ் உட்பட எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.

🌍நாட்டின் தங்கம் இறக்குமதி, கடந்த அக்., மாதத்தில், 350 கோடி டாலராக அதிகரித்து உள்ளது. சர்வதேச அளவில், தங்கத்தின் பயன்பாட்டில், சீனாவுக்கு அடுத்து, இரண்டாவது இடத்தில் இந்தியா உள்ளது.

📡பள்ளி வாகனம் மோதி சிறுமி உயிரிழப்பு

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உள்ள மூங்கில் ஊரணி பகுதியில் தனியார் பள்ளி வாகனம் மோதி சிறுமி உயிரிழந்தார்.

🌍சுஷ்மா நலம் பெற டுவிட்டரில் ஸ்டாலின் வாழ்த்து

சென்னை : டில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் பூரண நலன் பெற திமுக பொருளாளர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார்.

📡டில்லியில் நிலநடுக்கம்! கட்டிடங்கள் குலுங்கின! மக்கள் பீதி!

இந்திய தலைநகர் டெல்லியில் இன்று அதிகாலை 4.30 மணியளவில் திடீரென நிலநடுக்கம் உணரப்பட்டது. இது ரிக்டர் அளவில் 4.2 ஆக பதிவாகி உள்ளது.
இந்த நிலநடுக்கம், டில்லிக்கு அருகே உள்ள அரியானா மாநிலம் பவால் நகர் பகுதியில் இருந்து 13 கி.மீ. தொலைவில் மையம் கொண்டிருந்தது. பூமிக்கடியில் 10.கி.மீ ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கத்தால் வீடுகளில் தூங்கிகொண்டிருந்த மக்கள் அலறி அடித்து கொண்டு வெளியே ஓடி வந்தனர். கட்டிடங்கள் குலுங்கியதால் பொதுமக்கள் பீதியடைந்தனர்.

🌍விஜய்மல்லையா கடன் தள்ளுபடி இல்லை!: மத்திய நிதி அமைச்சர்

டில்லி:

தொழில் அதிபர் விஜய் மல்லையா உள்ளிட்டோரின் கடன் தள்ளுபடி செய்யப்படவில்லை என்று பாராளுமன்ற மேல்-சபையில் மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி அறிவித்தார்.
கடன் தள்ளுபடி என தகவல்
பாரத ஸ்டேட் வங்கியில் கடன் பெற்று, திரும்ப செலுத்த மனமில்லாத பெரும்கோடீசுவரர்களின் ஏழு ஆயிரம் கோடி ரூபாய் கடன் தள்ளுபடி செய்யப்படுவதாக தகவல் வெளியானது. .
இதில் வாங்கிய கடனை வட்டியுடன் திரும்ப செலுத்தாமல், நாட்டை விட்டு இங்கிலாந்துக்கு ஓடிவிட்ட தொழில்திபர் விஜய் மல்லையாவின் ரூ.1,201 கோடியும் அடங்கும் என தகவல் வெளியானது
இந்த விவகாரம் நாடாளுமன்ற மேல்-சபையில் எதிரொலித்தது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் தலைவர் சீத்தாராம் யெச்சூரி ''ரூ.7 ஆயிரம் கோடி வராக்கடனை பாரத ஸ்டேட் வங்கி தள்ளுபடி செய்திருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறதே?'' என்று கேள்வி எழுப்பினார்.
அப்போது நிதி மந்திரி அருண்ஜெட்லி ''ரிட்டன் ஆப் என்ற வார்த்தைக்கு அர்த்தம், தள்ளுபடி என்பது அல்ல. இது தவறாக எடுத்துக்கொள்ளப்பட்டு விட்டது. ரைட்-ஆப் (பதிவு அழித்தல்) என்பதை அப்படியே பொருள் எடுத்துக்கொள்ள வேண்டாம். அந்த அர்த்தத்தில் கூறப்படவில்லை. ரைட்-ஆப் என்பது கடன் தள்ளுபடி அல்ல. கடன் இன்னும் தொடர்கிறது. கடனாளிகளை அரசு பின்தொடர்கிறது'' என்று தெரிவித்தார்.
பாரத ஸ்டேட் வங்கியின் தலைவர் அருந்ததி பட்டாச்சார்யாவும் இதை உறுதி செய்தார். அவர், ''விஜய் மல்லையா உள்ளிட்டவர்களின் ரூ.7 ஆயிரம் கோடி கடன்கள் வேறு ஒரு தலைப்பில் கடன்களாக வைக்கப்பட்டிருக்கும். அவற்றை வசூலிக்க முயற்சி எடுக்கப்படுகிறது. இந்தக் கடன்கள் 'வசூலின் கீழான கணக்குகள்' என வைக்கப்படும். கடனாளிகளை விட்டு விடமாட்டோம். கடனை முழுமையாக வசூலிக்க அனைத்து நடவடிக்கையும் எடுக்கப்படும்'' என்று தெரிவித்தார்.

📡இன்றுடன் ஓய்கிறது 4 தொகுதி தேர்தல் பிரசாரம்

சென்னை : தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தேர்தல் நடைபெற உள்ள 4 தொகுதிகளில் இன்று மாலையுடன் பிரசாரம் ஓய்கிறது.தஞ்சை, அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், புதுச்சேரி நெல்லித்தோப்பு தொகுதிகளுக்கான தேர்தல் நவம்பர் 19ம் தேதி நடைபெற உள்ளது. அன்றைய தினம் காலை 7 மணிக்கு துவங்கி, மாலை 5 மணி வரை ஓட்டுப்பதிவு நடைபெற உள்ளது. அன்று பதிவாகும் ஓட்டுக்கள் நவம்பர் 22 ம் தேதி எண்ணப்பட்டு, அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. இதற்கான தேர்தல் பிரசாரம் இன்று மாலை 5 மணியுடன் ஓய்கிறது. இதனால் அரசியல் கட்சிகள் தீவிர ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.இறுதி கட்ட பிரசாரம் சூடுபிடித்து வருவதால், பாதுகாப்பு கருதி போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை தடுக்க தேர்தல் பறக்கும் படையினரும், போலீசாரும் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். கருத்துக்கணிப்புக்களை வெளியிட தேர்தல் கமிஷன் தடை விதித்துள்ளதால், மீடியா ஒளிபரப்புக்களை கண்காணிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

🌍இந்தியாவில் 2 கோடி சட்டவிரோத வங்கதேசத்தினர்

புதுடில்லி : இந்தியாவில் 2 கோடி வங்கதேசத்தினர் சட்டவிரோதமாக தங்கி இருப்பதாக ராஜ்யசபாவில் நேற்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.இந்தியாவில் இருக்கும் வங்கதேசத்தினர் குறித்து ராஜ்யசபாவில் நேற்று எம்.பி., ஜர்னா தாஸ் பாய்டியா எழுப்பிய கேள்விக்கு மத்திய இணையமைச்சர் கிரண் ரிஜிஜூ எழுத்து மூலம் பதிலளித்தார். அதில், உரிய ஆவணங்கள் இன்றி வங்கதேசத்தினர் பலர் இந்தியாவிற்குள் நுழைந்து வருவதாக அறிக்கை விபரங்கள் தெரிவிக்கின்றன. இவர்களில் பலர் ரகசியமாக இந்திய எல்லைக்குள் வந்து விடுகின்றனர். இதனால் இந்தியா முழுவதிலும் வசிக்கும் வங்கதேசத்தினரின் எண்ணிக்கை பற்றிய சரியான புள்ளிவிபரத்தை பெறுவது சாத்தியமற்றது. நமக்கு கிடைத்துள்ள புள்ளிவிபரத்தின்படி இந்தியாவில் தற்போது 2 கோடி வங்கதேசத்தினர் சட்ட விரோதமாக வசித்து வருகின்றனர் என தெரிவித்துள்ளார்

📡ரூ.50,100 நோட்டுக்களை வாபஸ் பெறும் திட்டமில்லை : மத்திய அரசு

டெல்லி : ரூ.50 மற்றும் ரூ.100 நோட்டுகளும் செல்லாது என்ற அறிவிப்பு வெறும் கட்டுக்கதை. அதுபோன்ற திட்டம் எதுவும் இல்லை' என்று மத்திய அரசு விளக்கம் அளித்தது.

🌍2வது டெஸ்ட்: டாசில் வென்ற இந்தியா முதலில் பேட்டிங்.. கம்பீர், மிஸ்ரா வெளியே, ராகுல், ஜெயந்த் உள்ளே!

விசாகபட்டினம்: விசாகபட்டினத்தில் தொடங்கியுள்ள இங்கிலாந்துக்கு எதிராான 2வது டெஸ்ட் போட்டியில் டாசில் வென்ற இந்தியா முதலில் பேட்டிங்கை தேர்ந்தெடுத்தது.
இந்திய டெஸ்ட் அணியில் சுழற்பந்து ஆல்-ரவுண்டர் ஜெயந்த் யாதவ் முதல் முறையாக இடம் பிடித்துள்ளார். இவருக்காக, லெக் ஸ்பின்னர் அமித் மிஸ்ரா அணியிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளார்.

📡புதிய அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளை தேர்வு செய்யும் குழுவில் புதிய அதிபர் டிரம்ப் மருமகன் தலையீட்டால் மோதல் ஏற்பட்டு இருப்பது தெரிய வந்துள்ளது.

🌍ஜல்லிக்கட்டு தடை - தேர்தல் புறக்கணிப்பு?

ஜல்லிக்கட்டுக்கு தடை நீங்காததால் கோபத்தின் உச்சத்தில் அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் மக்கள் இருக்கிறார்கள். திருப்பரங்குன்றம் தொகுதிக்குள் அவனியாபுரம் வருகிறது. இங்குள்ள இளைஞர்கள் இடைத்தேர்தலை புறக்கணிக்கப்போவதாக அறிவித்து இன்று போராட்டம் நடத்த உள்ளனர். அதிமுகவும், பி.ஜே.பி.யும் தங்களை ஏமாற்றி விட்டதாக கூறி வருகிறார்கள். இவர்களை சமாதானப்படுத்த முடியாமல் அரசியல் கட்சியினர் முழிக்கிறார்கள்.

📡புதிய ரூபாய் நோட்டுகளை கொண்டு சென்ற வாகனம் மீது துப்பாக்கிச்சூடு

கவுகாத்தி : அசாம் மாநிலத்தில் புதிய ரூபாய் நோட்டுகளை கொண்டு சென்ற வாகனம் மீது மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் டிரைவர் பலியாகி உள்ளார்.அசாம் மாநிலம் தின்சுகியா மாவட்டத்தில் உள்ள தேயிலை தோட்டத்தில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு வாராந்திர ஊதியம் வழங்குவதற்காக வங்கியில் இருந்து புதிய ரூபாய் நோட்டுகள் எடுக்கப்பட்டது. பின்னர் அந்த பணத்தை ஒரு வாகனத்தில் ஏற்றி பாதுகாப்பாக அங்குள்ள ஒரு போலீஸ் நிலையத்தில் வைக்கப்பட்டது. தேயிலை தோட்டத்துக்கு, பணம் இருந்த வாகனத்தை டிரைவர் ஓட்டிச்சென்றார். அவருடன் பாதுகாவலர், தோட்ட தொழிலாளி ஆகியோரும் சென்றனர். திடீரென வழியில் அடையாளம் தெரியாத நபர், பணம் கொண்டு சென்ற வாகனத்தின் மீது துப்பாக்கியால் சரமாரியாக சுட்டார்.இதில் டிரைவர் சம்பவ இடத்திலேயே இறந்தார்.
உடன் சென்ற 2 பேரும் படுகாயம் அடைந்தனர். துப்பாக்கி சத்தம் கேட்டு மக்கள் கூடியதால் அடையாளம் தெரியாத நபர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். இதுபற்றி தகவல் அறிந்த அசாம் முதல்வர் சர்பானந்தா சோனோவால் உரிய விசாரணை நடத்தி குற்றவாளியை கைது செய்யுமாறு போலீஸ் உயர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். மேலும் இறந்தவரின் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் எனவும் அறிவித்துள்ளார்.

🌍உலகின் அதிவேகத் திறனுள்ள சூப்பர் கம்ப்யூட்டர் பட்டியலில் தொடர்ந்து எட்டாவது முறையாக சீனாவின் கணினி முதலிடத்தைப் பிடித்துள்ளது.
சன்வே தாய்ஹுலைட் என்ற அந்தக் கணினி, சீனாவின் தேசிய இணைவரிசைக் கணினிப் பொறியியல் தொழில்நுட்ப ஆராய்ச்சி மையத்தால் உருவாக்கப்பட்டது

📡புதுக்கோட்டை மீனவர்களின் வேலைநிறுத்தம் வாபஸ்

கோட்டைபட்டினம் மீனவர்களின் வேலைநிறுத்தம் தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டுள்ளது. மேலும் அவர்கள் வரும் 24-ம் தேதி வரை கடலுக்கு மீன்பிடிக்க செல்ல உள்ளதாக தெரிவித்துள்ளனர். ரூபாய் நோட்டு பிரச்சினையால் கடந்த ஒரு வாரமாக கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை.

📡மீனவர்கள் மீது இலங்கை கடற்படை துப்பாக்கிச் சூடு

நாகை: கோடியக்கரை அருகே மீன் படித்துக் கொண்டிருந்த நாகை மற்றும் காரைக்கால் மீனவர்கள் மீது இலங்கை கடற்படை துப்பாக்கி சூடு நடத்தியதில் 2 மீனவர்கள் படுகாயம் அடைந்தனர்.

நாகை மாவட்டம் கோடியக்கரைக்கு தென்கிழக்கே 8 மீனவர்கள் சேர்ந்து, கிளிஞ்சல்மேடு கிராமத்தைச் சேர்ந்த செல்லப்பா என்ற மீனவரின் விசைப்படகில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கே வந்த இலங்கை கடற்படையினர் மீனவர்களின் விசைப்படகு நோக்கி சரமாரியாக துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர்.
இதில் படகில் இருந்த காரைக்கால் கிளிஞ்சல்மேடு கிராமத்தைச் சேர்ந்த பாலமுருகன் மற்றும் நாகை மாவட்டம் நம்பியார் நகரைச் சேர்ந்த அரவிந்த் என்பவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது.
காயமடைந்த இருவரையும் புதுச்சேரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தி இலங்கை கடற்படையினரின் அத்துமீறியச் செயலை கண்டிக்க வேண்டும் என அப்பகுதி மீனவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

🌍கள்ள நோட்டுகளை இந்தியாவிற்குள் புழக்கத்தில் விட ஐஎஸ்ஐ திட்டம்

புதுதில்லி: போலி ரூபாய் நோட்டுகளை நேபாளம் வழியாக இந்தியாவிற்குள் புழக்கத்தில் விட பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

📡🌍📡🌍📡🌍📡🌍📡🌍📡

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here