இரவு செய்திகள் 28/11/2016 (சித்து காங்கிரஸ் பக்கம் சாய்கிறாரா? /சிவகாசி வெடிவிபத்திற்கு இழப்பீடு வழங்க தமிழக அரசு ஒப்புதல்/கோவை தொடக்ககல்வி அலுவலரை கண்டித்து தொடர் உண்ணாவிரதம்/பிடல் காஸ்ட்ரோ இறுதி ஊர்வலத்தில் ராஜ்நாத்சிங் கலந்து கொள்கிறார்/பயணஅட்டை இல்லாத மாணவரை பஸ்ஸில்இருந்து இறக்கிவிட மேலாளர் உத்தரவு/திண்டுக்கல்லில் 3 மாணவிகள் காணவில்லை/மதுரையில் அல்கொய்தா இயக்கமா? /புதிய 3சட்டப்பேரவை உறுப்பினர்கள் நாளை பதவியேற்பு மேலும் பல செய்திகள்) - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

இரவு செய்திகள் 28/11/2016 (சித்து காங்கிரஸ் பக்கம் சாய்கிறாரா? /சிவகாசி வெடிவிபத்திற்கு இழப்பீடு வழங்க தமிழக அரசு ஒப்புதல்/கோவை தொடக்ககல்வி அலுவலரை கண்டித்து தொடர் உண்ணாவிரதம்/பிடல் காஸ்ட்ரோ இறுதி ஊர்வலத்தில் ராஜ்நாத்சிங் கலந்து கொள்கிறார்/பயணஅட்டை இல்லாத மாணவரை பஸ்ஸில்இருந்து இறக்கிவிட மேலாளர் உத்தரவு/திண்டுக்கல்லில் 3 மாணவிகள் காணவில்லை/மதுரையில் அல்கொய்தா இயக்கமா? /புதிய 3சட்டப்பேரவை உறுப்பினர்கள் நாளை பதவியேற்பு மேலும் பல செய்திகள்)

இரவு செய்திகள் 28/11/2016

தமிழ் இணைய செய்திகள்
http://sivakasiteacherkaruppasamy.blogspot.com

):)பெங்களூரு பெண்ணிடம் கணக்கில் வராத ரூ 79 லட்சம் பணம்... அத்தனையும் ரூ 2000 நோட்டு!

பெங்களூரு : பனஸ்வாடி பகுதியைச் சேர்ந்த பெ ண் ஒருவர் உரிய ஆவணங்கள் இன்றி வைத்திருந்த 79 லட்சம் ரூபாய் பணத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். அவை அத்தனையும் புதிய 2000 ரூபாய் நோட்டுகளாக உள்ளதால் போலீசால் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.


):)சித்துவும் வருவார்: காங்., கட்சியில் இணைந்த மனைவி நவ்ஜோத் கவுர் நம்பிக்கை

சண்டிகர்: தனது கணவர் சித்துவும் காங்., கட்சிக்கு வருவார் என அவரது மனைவி நவ்ஜோத் கவுர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்



):)கோவை மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலரைக் கண்டித்து டிச-10, முதல் தொடர் உண்ணாவிரதப் போராட்ட அறிவிப்பு

):)இறக்குமதி, ஏற்றுமதி ஆவணங்களுக்கு விலக்கு: நிதி அமைச்சகம் அறிவிப்பு

இறக்குமதி, ஏற்றுமதி ஆவணங்களுக்கு விலக்கு அளிக்கப்படும் என நிதி அமைச்சகம் அறிவித்துள்ளது. டிசம்பர் 1ம் தேதி முதல் அமலுக்கு வரும் எனவும் நிதி அமைச்சகம் அறிவித்துள்ளது.

http://www.sivakasiteacherkaruppasamy.blogspot.com

):)ராமநாதபுரத்தில் தடை செய்யப்பட்ட மீன்பிடி வலைகளை பயன்படுத்தியதாக காரைக்கால் மீனவர்கள் தொண்டி மீனவர்களால் சிறைபிடிப்பு.



):)புதுச்சேரியில் வங்கி ஏ.டி.எம் முன் வரிசையில் நின்றவர்களிடம் முதலமைச்சர்  நாராயணசாமி குறைகளை கேட்டறிந்தார்.


):)பொதுமக்கள் வங்கியில் உள்ள பணத்தை எடுப்பதை தடுக்க பிரதமருக்கு உரிமை இல்லை: ஆனந்த் சர்மா

பொதுமக்கள் வங்கியில் உள்ள பணத்தை எடுப்பதை தடுக்க பிரதமருக்கு உரிமை இல்லை என்று அரசியல் சட்டத்தின் 300வது பிரிவை சுட்டிக்காட்டி காங்கிரஸ் உறுப்பினர் ஆனந்த் சர்மா மேலவையில் கூறியுள்ளார்.


):)சிவகாசி வெடி விபத்தில் இறந்த ஒன்பது பேர் குடும்பத்தினருக்கு தலா, மூன்று லட்சம் ரூபாய், இரண்டு வாரங்களில் வழங்கப்படும்' என, உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தமிழக அரசு உறுதி அளித்துள்ளது.

):)வங்கிப்பணம் ரூ.25 லட்சம் கொள்ளை வழக்கில் ஒருவர் சரண்

சென்னை: அடையாறு வங்கிப்பணம் ரூ.25 லட்சம் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் ஒருவர் சரணடைந்துள்ளார். வழக்கில் தொடர்புடைய முக்கிய குற்றவாளி தினேஷ் தாம்பரம் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார். கடந்த 10ம் தேதி அடையார் மைசூர் எஸ்டேட் வங்கிப்பணம் ரூ.25 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டது.

):)குஜராத்தில் தனியார் அருங்காட்சியகத்தில் உள்ள சோழ மன்னன் ராஜராஜனின் தங்க சிலையை மீட்க கோரிய வழக்கை, சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது

http://www.sivakasiteacherkaruppasamy.blogspot.com

):)ரூபாய் நோட்டு விவகாரத்தில் திமுக,அதிமுக ஒன்றாக குரல் கொடுப்பது மகிழ்ச்சி: நீதிபதி கிருபாகரன்

ரூபாய் நோட்டு விவகாரத்தில் திமுக,அதிமுக ஒன்றாக குரல் கொடுப்பது மகிழ்ச்சி அளிப்பதாக உயர்நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் தெரிவித்துள்ளார். முல்லை பெரியார், காவிரி விவகாரம் ,ஜல்லிக்கட்டு போன்ற பிரச்சனைகளில் ஒன்று சேராத கட்சிகள் ரூபாய் நோட்டு விவகாரத்தில் சேர்ந்திருப்பதாக தெரிவித்துள்ளார்.




):)ஃபிடல் காஸ்ட்ரோவின் இறுதி ஊர்வலத்தில் பங்கேற்கிறார் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்

கியூபாவின் முன்னாள் அதிபர் ஃபிடல் காஸ்ட்ரோ சனிக்கிழமை காலமானார் . அவரின் இறுதி ஊர்வலம் வரும் டிசம்பர் 4ம் தேதி நடைபெறும் என அந்நாட்டு அதிபர் ராவுல் காஸ்ட்ரோ தெரிவித்தார். இந்த இறுதி ஊர்வலத்தில் இந்தியாவின் சார்பில் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்துகொள்வார் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.


):)ஜெயலலிதா உடல்நிலை குறித்து விளக்கம் கேட்ட இவரது மனு தள்ளுபடி ஆனது.ஆட்சியை கலைக்க சமீபத்தில் ஒரு மனு தாக்கல் செய்திருந்தார்.
இம்மனுவை விசாரித்த நீதிமன்றம், மனுவை தள்ளுபடி செய்தது டிராஃபிக் ராமசாமிக்கு கண்டனமும் தெரிவிக்கப்பட்டுள்ளது.



):)கிருஷ்ணகிரி மாவட்டம் சானமாவு வனப்பகுதியில் 66 யானைகள் முகாமிட்டுள்ளதால் பொதுமக்கள் யாரும் கால்நடைகள் மேய்க்க வனப்பகுதிக்கு செல்ல வேண்டாம் எனவும் காலை பொழுதில் பனி மூட்டம் அதிகமாக இருப்பதால் யானைகள் இருப்பது தெரியாரு ஆகவே வனப்பகுதி ஒட்டி செல்ல வேண்டாம் எனவும் பொதுமக்கள் அனைவரும் பத்திரமாக இருக்குமாறு வனத்துறை சார்பில் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
மேலும் யானைகள் வனப்பகுதியை விட்டு வெளியில் வராமல் வனத்துறையினர் தொடர்ந்து ரோந்து பணியில் ஈடுபட்டு உள்ளனர்.


):)மாணவர்களிடம் பயண அட்டை இல்லையென்றால் இறக்கி விடுங்கள் என்றும், பள்ளி சீருடையில் வந்தாலும் பஸ்சில் செல்ல அனுமதிக்க கூடாது என்று போக்குவரத்து எம்டி சுற்றிக்கை அனுப்பியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

http://www.sivakasiteacherkaruppasamy.blogspot.com

):)கருணாஸின் காரை உடைத்த ரித்திஷின் ஆதரவாளர் கைது!

நேற்று நடிகர் சங்க வளாகத்தில் ஏற்பட்ட தகராற்றில், சங்கத்தின் துணைத் தலைவர் கருணாஸின் கார் கண்ணாடி உடைக்கப்பட்டது.
இது தொடர்பாக பிரபு என்பவரைப் போலீசார் கைது செய்துள்ளனர்.
ராமநாதபுரத்தைச் சேர்ந்த பிரபு, நடிகர் ரித்திஷின் ஆதரவாளர் ஆவார். கடந்த சட்டசபைத் தேர்தலின்போது கருணாஸுக்காக பிரச்சாரம் செய்தவர் ரித்திஷ் என்பது குறிப்பிடத்தக்கது!


):)மத்திய அரசு அறிவிப்பு இந்திய அரசியல் சாசனத்திற்கு எதிரானது என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ரூபாய் நாட்டுக்கு தடை விதிக்க மத்திய அரசுக்கு அதிகாரம் உள்ளதா அல்லது ஆர்பிஐக்கு அதிகாரம் உள்ளதா என தெளிவுபடுத்த வேண்டும் எனவும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.



):)கரூர் வைஸ்யா வங்கியை வாடிக்கையாளர்கள்முற்றுகை
காஞ்சிபுரம் மாவட்டம் சிங்கப்பெருமாள் கோவில் தனியார் வங்கி மேளாளரை கண்டித்து  வங்கியை முற்றுகையிட்டு 100-க்கும் மேற்பட்டோர் போராட்டம். பணபறிமாற்றம் இரவில் நடப்பதாக குற்றசாட்டு.



):)மலப்புரம் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை அன்று கமாண்டோ படையினரால் சுட்டுக் கொல்லப்பட்ட இரண்டு மாவோயிஸ்ட்டுகளின் உடல்களை நாளை வரை பாதுகாத்து வைக்குமாறு மஞ்சேரியில் உள்ள நீதிமன்றம் ஒன்று காவலதுறைக்கு உத்தரவிட்டுள்ளது.



):)திருப்பூர்: அவிநாசிபாளையம் பகுதியில் அரசு பேருந்தும் காரும் மோதிக் கொண்ட விபத்தில் 3பேர் உயிரிழந்தனர்


):)இலங்கை யாழ்பாணம் சிறையில் உள்ள ராமேஸ்வரம் மீனவர்கள் 4 பேரின் காவல் டிச.9 வரை நீட்டிப்பு.


):)திண்டுக்கல் அருகே சித்தியன்கோட்டையில் தனியார் பள்ளியில் 7ஆம் வகுப்பு மாணவிகள் காவ்யா, லோசினி, கிருஷ்ணப்ரியா ஆகிய மூன்று மாணவிகள் காணவில்லை என பெற்றோர் புகார்

):)மணப்பாக்கத்தை சேர்ந்த ஷர்மிளா(20) தற்கொலை செய்துகொண்டார்.தி.நகர் ராஜாபாதர் தெருவில் உள்ள ஒரு வணிக வளாகத்தின் 4வது மாடியிலிருந்து குதித்துள்ளார்.சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.காரணம், காதலனுடன் ஏற்பட்ட மோதல் என கூறப்படுகிறது.


):)மத்திய அரசை கண்டித்து டெல்லியில் காங்கிரஸ் போராட்டம்

மத்திய அரசை கண்டித்து டெல்லியில் காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும் நாடாளுமன்றத்தை நோக்கி காங்கிரஸ் கட்சியினர் பேரணி மேற்கொண்டுள்ளனர். முன்னதாக மத்திய அரசை கண்டித்து நாடு முழுவதும் எதிர்க்கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

):)தென்கிழக்கு வங்க கடலில் காற்றழுத்த தாழ்வுநிலை வரும் 2ஆம் தேதிக்கு பின் தமிழகத்தில் கன மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்.



):)மர்ம காய்ச்சலுக்கு 9 வயது சிறுவன் பலி

தேனி: பெரியகுளம் அருகே ஜெயமங்கலத்தைச் சேர்ந்த 9 வயது சிறுவன்  மர்ம காய்ச்சலால் உயிரிழந்தார். தேனி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுவன், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.



):)மத்திய அரசை கண்டித்து நாடு முழுவதும் நடைபெற்ற போராட்டம் வெற்றி: மு.க ஸ்டாலின்

மத்திய பாஜக அரசை கண்டித்து நாடு முழுவதும் நடைபெற்ற போராட்டம் வெற்றி என திமுக பொருளாளர் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னையில் நடைபெற்ற போராட்டத்தின் போது கைதாகி விடுதலை ஆன பின் ஸ்டாலின் பேட்டி அளித்துள்ளார்.


):)குவெட்டா: புக்தி கொலை வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷரப்பை கைது செய்ய பலூசிஸ்தான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.



):)இறக்குமதி, ஏற்றுமதி ஆவணங்களுக்கு விலக்கு அளிக்கப்படும் என நிதி அமைச்சகம் அறிவித்துள்ளது. டிசம்பர் 1ம் தேதி முதல் அமலுக்கு வரும் எனவும் நிதி அமைச்சகம் அறிவித்துள்ளது.


):)புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டப்பேரவை உறுப்பினர்கள் 3 பேர் நாளை பதவியேற்பு

சென்னை: புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டப்பேரவை உறுப்பினர்கள் 3 பேர் நாளை பதவி ஏற்பர் என அறிவிக்கப்பட்டுள்ளது. சட்டப்பேரவை சபாநாயகர் அறையில் நாளை மாலை 4 மணிக்கு பதவியேற்பு விழா நடைபெறவுள்ளது என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தஞ்சை எம்எல்ஏ ரெங்கசாமி, அரவக்குறிச்சி எம்எல்ஏ செந்தில்பாலாஜி மற்றும் திருப்பரங்குன்றம் எம்எல்ஏ போஸ் ஆகியோர் நாளை பதவியேற்கின்றனர்.



):)சென்னை, எக்மோரிலிருந்து தென் மாவட்டங்களுக்கு 10 சிறப்பு ரயில்களை இயக்கப்பட உள்ளது.கால அட்டவணை விரைவில் தயார் செய்யப்பட்டு வெளியிடப்படும்.


):)சென்னை கேளம்பாக்கத்தில் லட்சுமிநாராயணன் என்பவரது வீடடின் பூட்டை உடைத்து 100 சவரன், 4.5 கிலோ வெள்ளி கொள்ளையடிக்கப்பட்டது. லட்சுமிநாராயணன் குடும்பத்துடன் வெளியூர் சென்றிருந்த போது மர்மநபர்கள் கைவரிசை காட்டியுள்ளனர். மேலும் இந்த சம்பவம் குறித்து கேளம்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



):)மேற்கு வங்காளத்தில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெறுகிறது.அங்கு நடந்த பேரணியில் முதல்வர் மம்தா பானர்ஜி, மத்திய அரசை வன்மையாக கண்டித்து பேசினார்.இந்திய அரசியலிலிருந்து மோடியை விரட்டாமல் விடமாட்டேன் என அவர் கர்ஜித்தார்.



):)ரொக்கமற்ற பணப்பரிவர்த்தனை என்பது மிகவும் எளியது: அருண் ஜேட்லி

ரொக்கமற்ற பணப்பரிவர்த்தனை என்பது மிகவும் எளியது என்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி கூறியுள்ளார். எப்போதும் பணத்தை எடுத்து செலவிடுவதை  விட  மொபைல் வேல்ட் முறை எளிமையானது என்று அவர் தெரிவித்துள்ளார்.



):)டிசம்பர் 31க்குள் உள்ளாட்சித் தேர்தலை நடத்த இயலாது சென்னை ஐகோர்ட்டில் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது குற்றப்பின்னணி உள்ளவர்கள் வேட்பாளராக நிறுத்தக்கூடாது என அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் அறிவுறுத்த வேண்டும் ஐகோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது.




):)ஈரோடு-சென்னை பகல் நேர சிறப்பு ரயில் டிச-30 வரை நீடிப்பு

ஈரோடு-சென்னை எழும்பூர் வரையிலான பகல் நேர சிறப்பு ரயில் டிசம்பர் 30 வரை இயக்கப்படும் என  தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. பொதுமக்கள் கோரிக்கை ஏற்று சிறப்பு ரயில் இயக்க காலம் நீடிக்கப்பட்டுள்ளது. மேலும் வியாழன், சனி தவிர ஐந்து நாள்கள் சேலம் விருத்தாசலம் வழியாக இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது


):)காவேரி மேலாண்மை வாரியம் அமைக்க கர்நாடக அரசு எதிர்ப்பு தெரிவித்து தொடர்ந்த மறுசீராய்வு மனு உச்ச நீதிமன்ற நீதிபதிகள்  அறையில் நாளை விசாரணை.

http://www.sivakasiteacherkaruppasamy.blogspot.com

):)குற்றப்பின்னணி உடையவர்களை வரும் உள்ளாட்சி தேர்லில் முன்னிருத்த கூடாது என அரசியல் கட்சிகளுக்கு சுற்றிக்கை அனுப்ப வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.



):)சென்னையில் மேலும் ஒரு பயங்கரவாதி சிக்கினான்

மதுரையில் கைதான பயங்கரவாதிகள் கொடுத்த தகவலின் பேரில் தாவூத் சுலைமான் கைது
சென்னையில் சிக்கிய பயங்கரவாதி ஐ.டி. நிறுவன ஊழியர் என தகவல்

):)தங்கம், வெள்ளி விலைகள்: மாலை நிலவரம்
22 கேரட் தங்கம் ஒரு கிராம் - ₹2,822
22 கேரட் தங்கம் ஒரு சவரன் - ₹22,576
24 கேரட் தங்கம் 10 கிராம் - ₹23,632
வெள்ளி: ஒரு கிராம் - ₹43.30
வெள்ளி கட்டி: ஒரு கிலோ - ₹41,410

):)இறக்குமதி, ஏற்றுமதி ஆவணங்களுக்கு விலக்கு: நிதி அமைச்சகம் அறிவிப்பு

இறக்குமதி, ஏற்றுமதி ஆவணங்களுக்கு விலக்கு அளிக்கப்படும் என நிதி அமைச்சகம் அறிவித்துள்ளது. டிசம்பர் 1ம் தேதி முதல் அமலுக்கு வரும் எனவும் நிதி அமைச்சகம் அறிவித்துள்ளது.


):)மதுரையில் அல்கொய்தா அடிப்படை இயக்கத்தை நடத்தி வந்ததாக 3 பேர் கைது

மதுரையில் அல்கொய்தா அடிப்படை இயக்கத்தை நடத்தி வந்ததாக 3 பேர் கைது செய்யப்பட்டனர். தேசிய புலனாய்வு மற்றும் போலீசார் இணைந்து 3 பேரை கைது செய்தனர். 6 நாட்டு தூதரகங்களுக்கும் மிரட்டல் விடுத்த பயங்கரவாத குழு சிக்கியது


):)சஹாரா குழும தலைவர் சுப்ரதா ராய்க்கு இடைக்கால ஜாமீன்

புதுடெல்லி: மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட, சஹாரா குழும தலைவர், சுப்ரதா ராய், உச்ச நீதிமன்றம் உத்தரவுப் படி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். மேற்கு வங்க மாநிலம், கோல்கட்டாவை தலைமையிடமாக வைத்து, சஹாரா நிதி நிறுவனம், செயல்பட்டு வந்தது. இந்த நிறுவனம், முதலீட்டாளர்களுக்கு பணத்தை தராமல், பல ஆயிரம் கோடி ரூபாய் மோசடி செய்ததாக, புகார் எழுந்தது.இதையடுத்து, சஹாரா குழுமத்தின் தலைவர், சுப்ரதா ராயை 2014 மார்ச்சில் சி.பி.ஐ., கைது செய்து டெல்லி திஹார் சிறையில் அடைத்தது. சஹாரா குழுமத்தின் இயக்குனர்கள், அசோக் ராய் சவுத்ரி, ரவி சங்கர் துபே ஆகியோரும், திஹார் சிறையில் அடைக்கப்பட்டனர். சுப்ரதா ராயின் தாய் மே மாதம் இறந்தார். இறுதி சடங்கில் பங்கேற்க சுப்ரதா ராய்க்கு ஒரு மாதம் பரோல் வழங்கி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில் மீண்டும் அவருக்கு 2017-ம் ஆண்டு பிப்ரவரி 6-ம் தேதி வரை இடைக்கால ஜாமீன் வழங்கி உச்ச நீதிமன்றம் உத்தரைவிட்டுள்ளது


):)ஸ்வைப் மிஷின்கள் தயாரிக்க விதிக்கப்படும் 12.5% கலால் வரி நீக்கம்

பணமில்லா வர்த்தகத்தை ஊக்குவிக்கும் விதமாக ஸ்வைப் மிஷின்கள் தயாரிக்க விதிக்கப்படும் 12.5% கலால் வரியும் 4% கூடுதல் வரியும்  மத்திய அரசு நீக்கியுள்ளது.


):)கணக்கில் காட்டாத வருமானத்துக்கு 73% வரி விதிக்க சட்டத்தில் திருத்தம்

கணக்கில் காட்டாத வருமானத்துக்கு 73% வரி விதிக்க சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. 30% வரி, 10% அபராதம், 33% கூடுதல் வரி என மொத்தம் 73% வரிவிதிக்க சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
http://www.sivakasiteacherkaruppasamy.blogspot.com
-----/-----/-----/-----/-----/-----/----/----/----/

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here