):)தமிழ் இணைய செய்திகள்(:(
மதிய செய்திகள்
(29/11/2016)
@*வங்கி கணக்கில் இருந்து வாடிக்கையாளர்கள் தற்போது வாரத்துக்கு ரூ.24 ஆயிரம் வரை எடுக்க அனுமதிக்கப்படுகிறார்கள். இந்த கட்டுப்பாடு காரணமாக வங்கியில் பணத்தை ‘டெபாசிட்’ செய்ய வாடிக்கையாளர்கள் தயங்கியதாக தெரியவந்தது.
எனவே பல்வேறு அம்சங்களையும் கருத்தில் கொண்டு பணப்புழக்கத்தை அதிகரிக்கும் வகையில், வங்கி கணக்கில் இருந்து வாடிக்கையாளர்கள் பணம் எடுப்பதற்கான கட்டுப்பாட்டை தளர்த்தி ரிசர்வ் வங்கி நேற்று அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது.
அதன்படி, தற்போது வரையறுக்கப்பட்டுள்ள தொகையை (ரூ.24 ஆயிரம்) விட கூடுதல் தொகையை எடுத்துக்கொள்ள அனுமதிப்பது என்று முடிவு செய்யப்பட்டு இருக்கிறது. அப்படி எடுக்கும் போது அந்த தொகை 2,000 மற்றும் 500 ரூபாய் நோட்டுகளாக கிடைக்கும் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்து இருக்கிறது.
http://www.sivakasiteacherkaruppasamy.blogspot.com
*கொலம்பியாவில் விமான விபத்து : பிரேசில் கால்பந்துக் குழுவினர் உட்பட 72 பேர் கதி என்ன ?பொலிவியாவிலி்ருந்து கொலம்பியா வந்து கொண்டிருந்த தனியார் விமானம் ஒன்று விழுந்து நொறுங்கிவிட்டதாக கொலம்பியாவிலிருந்து வரும் செய்திகள் கூறுகின்றன*
@ *இந்திய நிர்வாகத்திற்கு உட்பட்ட காஷ்மீரின் ஜம்மு பகுதியில் செவ்வாய் அன்று அதிகாலை நேரத்தில், பலத்த ஆயுதமேந்திய தற்கொலைப் படையினரைக் கொண்ட ஒரு குழு, இந்திய ராணுவ முகாம் மீது தாக்குதல் நடத்தியுள்ளது என அதிகாரிகளும், சம்பவத்தை நேரில் பார்த்தவர்களும் கூறுகின்றனர்*
@ *கால்பந்து விளையாட்டு ஊதியத்திலும் சிலர் சிரிப்பார் பலர் அழுவார் கதைதான்!கால்பந்து விளையாட்டில் மிக உயர்மட்டத்தில் இருக்கும் விளையாட்டு வீரர்களின் வாழ்க்கை நிலைக்கு முற்றிலும் மாறுபட்ட ஒரு உலகை, உலகம் முழுவதும் உள்ள தொழில்முறை கால்பந்து விளையாட்டு வீரர்களின் நிலை குறித்த ஒரு ஆய்வு வெளிப்படுத்தியுள்ளது. கால்பந்து விளையாட்டு வீரர்களின் சம்பளம் பற்றிய கேள்விக்கு பதில் அளித்த, சுமார் 14,000 விளையாட்டு வீரர்களில் பாதிப் பேர் தாங்கள் மாதம் வெறும் 1,000 டாலர்களுக்கும் குறைவாக பெறுவதாகத் தெரிவித்தனர்.10 வீரர்களில் நான்கு பேர் தங்களின் சம்பளம் தாமதித்து வழங்கப்பட்டது என்று தெரிவித்தனர்.14 வீரர்களில் ஒருவர், தன்னை சூதாட்டக்காரர்கள் அணுகியதாகத் தெரிவித்தார்.மிகப் பெரிய மற்றும் மிகவும் இலாபகரமான கால்பந்தாட்டக் குழுக்கள் இருக்கும் நாடுகளான இங்கிலாந்து, ஜெர்மனி, ஸ்பெயின் போன்ற நாடுகளைத் தவிர்த்து மற்ற நாடுகளில் தொழில்முறை கால்பந்து விளையாட்டு வீரர்களுக்கான சர்வதேச கூட்டமைப்பு மூலம் 54 நாடுகளில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில் இந்தத் தகவல்கள் வெளியாகியுள்ளன*
@*19ம் நூற்றாண்டில் பிறந்து, 21ம் நூற்றாண்டையும் பார்த்துக்கொண்டிருக்கும் இத்தாலியப் பெண்மணி.உலகில் 19ம் நூற்றாண்டில் பிறந்து இன்னும் உயிருடன் இருக்கும் ஒரே நபராக அறியப்படும் ஒரு பெண்மணி தனது 117வது பிறந்த நாளை இன்று கொண்டாடுகிறார். இத்தாலியில் உள்ள மிலன் என்ற இடத்தில் பிறந்த எம்மா மொரானோ தான் வாழும் காலத்தில் இத்தாலியின் மூன்று அரசர்களின் ஆட்சிக்காலம், 11 போப்பாண்டவர்கள் மற்றும் இரண்டு உலகப் போர்களை பார்த்துவிட்டார்.அவர் வாழும் மேகியோர் ஏரிக்கரைப் பகுதியில் உள்ள பலான்ஸா என்ற இடத்தில் உள்ள மக்கள், இந்தத் தருணத்தை நினைவுகூரும் வகையில், மூன்று நூற்றாண்டுகளின் வரலாறுகளை உள்ளடக்கிய ஒரு அலங்கார அணிவகுப்பை நடத்தினர்*
@ *சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸ் முன்பு எஸ்ஆர்எம் நிறுவனர் பச்சமுத்து ஆஜராகியுள்ளார். மருத்துவ சீட்டு மோசடி வழக்கு விசாரணைக்காக பச்சமுத்து ஆஜராகியுள்ளார். மதன் கொடுத்த வாக்கு மூலத்தின் அடிப்படையில் பச்சமுத்துவிடம் விசாரணை நடைபெற்று வருகிறது*
@*நடிகர் சங்கத்தில் இருந்து சரத்குமார், ராதாரவி நீக்கப்பட்டது பொதுக்குழு எடுத்த முடிவு என்று நடிகர் சங்க பொருளாளர் கார்த்திக் சென்னையில் பேட்டி அளித்துள்ளார். உரிய சாட்சியங்கள் இருப்பதாலேயே சரத்குமார், ராதாரவி நீக்கப்பட்டதாக விளக்கம் அளித்துள்ளார். மேலும் நட்சத்திர கிரிக்கெட்டில் முறைகேடு நடந்ததாக எழுந்த புகாரை சட்டரீதியாக சந்திக்க தயார் என்றும் கார்த்திக் தெரிவித்துள்ளார்*
http://www.sivakasiteacherkaruppasamy.blogspot.com
@ *புதுச்சேரியில் தமிழரசன் என்பவரிடம் ரூ. 3.5 லட்சம் வழிப்பறி செய்துள்ளனர். புதிய 2000 ரூபாய் நோட்டுகளுடன் நண்பர் வீட்டுக்கு சென்றபோது மர்மநபர்கள் கைவரிசை காட்டியுள்ளனர்*
@ *நெல்லை மாவட்டம் ஆலங்குளம் தாலுகா முன் பீடி சுற்றும் தொழிலாளர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். பணத் தட்டுப்பாட்டால் பீடி நிறுவனம் தங்களுக்கு இன்னும் கூலி வழங்கவில்லை என குற்றம் சாட்டி போராட்டம் நடத்தி வருகின்றனர்*
@ *மதுரையில் மேலும் ஒருவரிடம் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர். பேஸ் இயக்கத்துடன் தொடர்புடையதாக கூறப்படும் சம்சுதீன் என்பவரிடம் என்.ஐ.ஏ விசாரணை நடத்துகிறது. பேஸ் இயக்கத்தைச் சேர்ந்த 2 பேர் மதுரையிலும், ஒருவர் சென்னையிலும் நேற்று கைது செய்யப்பட்டனர்*
@*துபாயில் நடைபெறும் உலக சூப்பர் சீரிஸ் பேட்மிட்டன் தொடரில் விளையாட இந்திய வீராங்கனை பி.வி.சிந்து தகுதி பெற்றுள்ளார். இதேபோல் டிசம்பர் 14 - 18 வரை நடைபெறும் உலக சூப்பர் சீரிஸ் பேட்மிட்டன் தொடரில் விளையாடும் வாய்ப்பை சைனா நேவால் நழுவ விட்டுள்ளார்*
@ *பஞ்சாப் மாநிலம் ஜலந்தரில் ஜம்மு-பாட்னா எக்ஸ்பிரஸ் ரயிலில் வெடிகுண்டு புரளியால் பரபரப்பு ஏற்பட்டது. பயணிகள் அனைவரும் பத்திரமாக கீழே இறக்கி விடப்பட்டனர். போலீசார் ரயிலில் தீவிரமாக சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்*
http://www.sivakasiteacherkaruppasamy.blogspot.com
@ *வேந்தர் மூவிஸ் மதன் ரூ.80 கோடி மோசடி வழக்கை சி.பி.ஐ விசாரிக்க மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மதனை கைது செய்த காவல்துறை ஒருதலைப்பட்சமாக விசாரிப்பதாக குற்றம் சாட்டியுள்ளனர். சென்னை உயர்நீதிமன்றத்தின் வழக்கு விசாரணையின் போது மாணவர்களின் வக்கீல் பால்கனகராஜ் வாதிட்டார். மாணவர்கள் கொடுத்த பணம் பச்சமுத்துவிடம் உள்ளதா? மதனிடம் உள்ளதா என்று வக்கீல் கேள்வி எழுப்பினார். பணத்தை பெற 14 மாணவர்கள் தாக்கல் செய்த வழக்கை சி.பி.ஐ விசாரிக்க கோரிக்கை விடுத்துள்ளனர்*
@ *டெல்லி ஜந்தர்மந்தரில் அனைத்திந்திய ஆசிரியர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மத்திய அரசின் புதிய பென்ஷன் திட்டத்தை எதிர்த்து ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம் செய்து வருகின்றனர்*
@*எதிர்க்கட்சிகள் அமளியால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் பிற்பகல் 2 மணிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ரூபாய் நோட்டு விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் தொடர் அமளியில் ஈடுபட்டுள்ளனர்*
@ *பள்ளிகளில் 6 வயது முதல் 14 வயது வரை உள்ள மாணவர்களுக்கு யோகா கட்டாயமாக்க உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு கட்டாய யோகா பற்றி முடிவு எடுக்க மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது*
@* சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.56 குறைந்துள்ளது. ஆபரணத் தங்கம் ஒரு கிராம் விலை ரூ.2,815-ஆகவும் சவரன் ரூ.22,520-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை ஒரு கிராம் ரூ.43.90-க்கும் கட்டி வெள்ளி கிலோ ரூ.41,065-ஆகவும் உள்ளது*
@ *ஹரியானா மாநிலம் குருகிராமில் பழைய 1000 நோட்டுகள் வைத்திருந்த நபரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து ரூ.35 லட்சம் மதிப்புள்ள நோட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர்*
@*சிலை கடத்தல் தீனதயாளன் அப்ரூவராகிறார்: நீதிமன்றத்தில் மனு தாக்கல்*
@ *பண பரிவர்த்தனைகளை தாக்கல் செய்யுங்க: பாஜ எம்பி.,க்களுக்கு அமித்ஷா உத்தரவு*
@*கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு மனு: பசுமை தீர்ப்பாயம் தள்ளுபடி*
@ *நான் அரசியலில் இல்லை: அரசியல் கேள்விகள் வேண்டாம்': அழகிரி பேட்டி*
@ *சம்பாவில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை*
@ *பிலிப்பைன்சில் குண்டுவெடிப்பு:2 ராணுவ வீரர்கள் காயம்*
@ *திருவள்ளூர்: ஊத்துக்கோட்டை அருகே அரசு பஸ் கண்ணாடி உடைப்பு*
@ *பஞ்சாப் மாநிலத்தில் டாக்ஸி டிரைவர் ஒருவருக்குச் சொந்தமான ஜன் தன் வங்கிக் கணக்கில், ரூ.9,806 கோடி டெபாசிட் செய்யப்பட்ட சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமிர்தசரஸ் பகுதியை சேர்ந்தவர் பல்வீந்தர் சிங். பிரதான் மந்திரி ஜன் தன் யோஜனா திட்டத்தின் கீழ், சில மாதங்களுக்கு முன்பு வங்கி சேமிப்புக் கணக்கை தொடங்கியுள்ளார். ஸ்டேட் பேங்க் ஆஃப் பாட்டியாலா கிளையில் அவர், சேமிப்புக் கணக்கை நிர்வகித்து வந்தார்.சில நாட்கள் முன்பாக, திடீரென பல்வீந்தர் சிங்கின் வங்கிச் சேமிப்புக் கணக்கில் ரூ.9,806 கோடி டெபாசிட் செய்யப்பட்டது தெரியவந்தது. தனது வங்கிக்குச் சென்று, இதுபற்றி விளக்கம் கேட்டுள்ளார்.ஆனால், வங்கியின் மேலாளர் பல்வீந்தர் சிங்குக்குப் புதிய பாஸ்புக் வழங்கும்படி உத்தரவிட்டுள்ளார். அதை வாங்கிப் பார்த்த பல்வீந்தர் அதிர்ச்சியடைந்தார். காரணம், ரூ.9,806 கோடியை காணவில்லை. வெறும் ரூ.200 மட்டுமே இருந்தது.இதன் உண்மை பின்னணி என்னவெனில் வங்கியின் அக்கவுண்ட் மேலாளர் தவறுதலால், பல்வீந்தர் சிங் சேமிப்புக் கணக்கில் ரூ.9,806 கோடி டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. இதில் ஒரு திருப்பும் என்னவென்றால் அது பணம் டெபாசிட் தொகை அல்ல. வங்கியின் கணக்கு விவர எண் ஆகும்*
@ *விடுதலை புலிகள் அமைப்பில் முக்கிய பொறுப்பில் இருந்த கருணா, பிரபாகரனிடம் ஏற்பட்ட மனக்கசப்பால் அங்கிருந்து விலகி இலங்கை அரசுக்கு ஆதரவாக செயல்பட்டார். அதுமட்டுமின்றி ராஜபக்சே அரசில் அமைச்சராகவும் செயல்பட்டு வந்தார்.இந்நிலையில் சிறிசேன ஆட்சி பொறுப்பேற்றதும் ராஜபக்சே ஆட்சியில் செய்த மோசடிகள் பலவும் வெளியே வர ஆரம்பித்தன. இது தொடபாக அவரது குடும்பத்தினர் பலரும் கைது செய்யப்பட்டும், விசாரணை வளையத்திலும் உள்ளனர்.இதனைத்தொடர்ந்து அரசு வாகனங்களை முறைகேடாக பயன்படுத்தியதாகவும் நிதி மோசடி செய்ததாகவும் முன்னாள் அமைச்சர் கருணா மீது குற்றம்சாட்டப்பட்டது. மேலும் அரசு வாகனத்தை இன்னும் ஒப்படைக்கவில்லை என்றும் கூறப்படுகிறது. இதையடுத்து நிதி மோசடி குற்றச்சாட்டின் கீழ் இன்று கருணாவை அந்நாட்டு போலீசார் கைது செய்தனர்*
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக